கடவுளை தந்தையாக
கடவுளை தந்தையாக நினைத்து வழிபடுவது சரியானதா ?
எல்லையற்று,
எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள்,
நமது தந்தையா ?
பகவான் ரஜனீஷ் :-
" சரியா, தவறா என்ற வாதத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டு தோன்றிய வழக்கம் இது.
கடவுளை ' தந்தை ' யாக நினைத்து வணங்குவது,
இன்று நேற்று நடந்ததோ,
எதேச்சையாக நடந்த நிகழ்வுகளோ அல்ல.
பல காரணங்களுடன் கூடிய
பழைமையான வழக்கம் அது.
எந்த ஒரு நெருங்கிய உறவும் மற்றும் பழக்க வழக்கமும்
நம் முன்னால்
இருக்கும் வரையில்
அதன் நன்மை தெரியாது.
உறவுகள் பிரிந்த பிறகு,
அடிமனதில் துன்பத்தின் சுழல் ஒன்று உருவாகும்.
இதிலிருந்து மீள்வது
மிக சிரமம்.
அதுபோல்,
அனைவருமே ஒருநாள் தனது தந்தையை
இழந்தாக வேண்டும்.
அந்த இடம் வெற்றிடமாக இருக்கும்.
கடவுள் அந்த இடத்தை நிரப்புவார் என்ற நம்பிக்கையின் அடிப்படைதான் இது.
இந்த கடவுள் என்பவர்,
மக்களை பாதுகாத்து கொள்வதற்காக,
தந்தையை போன்ற ஸ்தானத்தில் ஒருவர் வேண்டும் என்ற நினைப்பின் அடிப்படையில் உருவானவர்.
இந்த தந்தை நிலையில் ஒருவர் இல்லையெனில்,
இந்த பரந்த உலகில்
மக்கள்
தாங்கள் மட்டும் தனியாக வாழ்வது போன்றே பயத்துடன் வாழ்வார்கள்.
ஆனால்,
இது ஒருவிதமான
' மன நோய். ' என்பதை தவிர
இதில்,
வேறு ஒன்றுமில்லை
No comments:
Post a Comment