சொர்கமும் நரகமும்!
சிதறிச் செல்லும் என் சிந்தனையில், சென்ற தடவை, பரம் பொருள் பற்றி, சற்று சிலாகித்தி ருந்தேன், பரம் பொருள் என்று, என் சிந்தனை சுழன்றவுடன் சட்டென்று என் நினைவில் ஒட்டி க்கொண்டது, சொர்க்கம்தான்! சொர்க்கம் என்று வந்துவிட்டால், கூடவே நரகமும் இணைந்து கொள்வதை தடுக்கமுடியாது, எனவே சொர்க்கம், நரகம் என்ன என்று உங்களோடு, அளவளாவ விரும்புகின்றேன், என் வாழ்வின் பின் புலம், கிறிஸ்தவ கோட்பாடுகளோடு பின்னிப்பிணை ந்தவை, எனவே அடிப்படை எண்ணங்கள், கிறிஸ்தவ மறை சார்ந்தி ருந்தால், அன்பர்கள் என்னை மன்னித்தருள்க!
சொர்க்கம் எங்கே இருக்கின்றது, விண்ணிலா, மண்ணிலா? சொர்க்கம் என்றாலே நம்மை அறியாமல், கண்கள் மேலே, வானத்தை நோக்கும், விண்ணிலே சொர்க்கம் உண்டு, அங்குதான் இறைவன் உறைகின்றான், தேவர்களும், தூதர்களும் உலாவி த்திரின்றனர், புண்ணியம் செய்து மரித்தவர்கள், அதைக் கண்டு மெய்ம றக்கின்றனர் என்று அனேகமாக எல்லா மதங்களும் இதனையே விபரி க்கின்றன. இது உண்மையா என்பதனை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல, அதுதான் அன்னையின் மலர் பாதம் என்றான் புலமைப்பித்தான். அவன் சொல்லவருவது இதுதான், சொர்க்கம் மண்ணில் தான் இருக்கி ன்றது, நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது. அது தாயவள் அன்பில் தேனாகின்றது, அன்னை என்பது வெறும் மானுடம் அல்ல, அதுதான் உலகத்தில் தெய்வம் என்று, தெய்வத்தை முன்னிறுத்துகி ன்றது, வேதங்களாக அன்னையவள் கூறிய உபதேசங்கள் இருக்கின்றன இவை யாவும் ஒருங்கே இருந்துவிட்டால்,,,, அது சொர்க்கம் தானே! நீங்களே சொல்லுங்கள்.
ஒருநாள் நல்ல பக்தியுள்ள போர்வீரன் கௌதம புத்தரிடம் சென்று , குருவே என் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் . புத்தரும் அவனை உட்கார சொல்லி அவனை நோக்கி காரசாரமாக திட்ட ஆரம்பி த்தார் , அந்த போர் வீரனுக்கு கோபம் வந்து விட்டது , உடனே தன் உடை வாலை உருவி புத்தரை நோக்கி கையை ஓங்கினான் , அப்போது புத்தர் சொன்னார் இப்போது நீ நரகத்தை நோக்கி நெருங்கி க்கொண்டு இரு க்கிறாய் என்றார் உடனே அந்த போர் வீரன் சற்று சிந்தித்து பின்பு தன் உடைவாளை தன் உரையில் போட்டன், உடனே புத்தர் அவனை பார்த்து சொன்னார் இப்போது நீ சொர்கத்தை நெருங்கி விட்டாய் என்று சொன்னார் .
சொர்க்கமும் நரகமும் நாம் அன்றாடம் வாழ்வில் இருக்கின்றது. அது நம் உணர்வுகளில், உணர்ச்சி களில் ததும்புகின்றது, கோபம், பொறாமை, அழுக்காறு, வெறுப்பு, ஆத்திரம் இவைகளினால் வாழ்க்கை சூழப்படும் போது அங்கே வாழ்க்கை நரகமாகின்றது! அன்பு, மனோரமியம், இரசனை, கருனை, இரக்கம், பரிவு, பாசம், புரிந்துணர்வு இவைகளால் ஒரு மனிதனின் இதயம் நிரம்பி இருக்குமானல், அவனைச் சுற்றி சொர்க்கம் இருக்கும், அல்லது அவன் வாழும் சூழலை சொர்க்கமா க்கிவிடுகின்றான், அதுவே ஒரு பெண்ணாக இருந்துவிட்டால்? அந்த தேவதை வாழும், இல்லம் சொர்க்கமாகிவிடும். ஆக மொத்தத்தில், எல்லாமே நம் மனதில் தான் உண்டு.
கவிஞர் கண்ணதாஸன் இப்படிச்சொன்னார், சொர்க்கமும் நரகமும் நம் வசமே! நான் சொல்லவதை உன் மனம் கேட்கட்டுமே! சத்தியம், தர்மங்கள் உன் மனதில் நிலைக்கட்டுமே என்று நமது மனங்களுக்குச் சொன்னார். அதே கவிஞன் தான், முரண்பட்டு இன்னுமொரு சந்தர்ப்பத்தில், இப்படிச்சொன்னார்,,,சொர்க்கம் மது விலே, சொக்கும் அழகிலே! மது தரும் சுகம், தினம் தினம் எதில் வரும்? எல்லாம் உடல் உறவுதான், சொர்க்கம் மதுவிலும், மங்கையிலும் என்று, தன் இளமைப்பொழுதை கழித்துவிட்ட அந்த கவிஞன், தன் தவறை உணர்ந்து, முத்தம் என்றும், மோகம் என்றும் சத்தமிட்டு சத்தமிட்டு ,புத்தி கெட்டுப் போனதொரு காலம்! என்றும் பாடியுள்ளான். சுர்க்கமாக சொ ல்லப்போனால், சொர்க்கம் என்பது நாம் வாழும் விதத்தில் உண்டு அது நம் கைகளில் உண்டு.வாழ்கை சொர்க்கமா அல்லது நரகமாக வேண்டுமா முடிவு நம்முடைய கையில் தான் .
யாருக்குத்தான் சொர்க்கம் செல்ல ஆசை இருக்காது? எனக்கில்லையா உங்களுக்கு இல்லையா? எல்லோரும் ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அதற்கான வழியை, சாவியை தொலைத்துவிட்டு அலைகின்றார்கள், சிலர் வழி தெளிவாக தெரிந்தும், அதனை எதிர்கொள்ள, பயப்படுகின்றனர், ஆமாம், மரணத்தைத்தான், இங்கே குறிப்பிடுகின்றேன். சொர்க்கம் போவதற்கு முன்னர் நீ கல்லறையின் படிக்கட்டில், மிதித்தே ஆகவேண்டும், இதில் கடவுளுக்கு கூட விதிவிலக்கு இல்லை என்பதை தெளிவாக, வாழ்ந்து, செய்தும் காட்டி இருக்கின்றார் இயேசு. மரணமே உன் கூர் எங்கே? என மரணத்துக்கு சவால்விட்டவர் இயேசு, மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலமும் உயிரோடு இருக்கின்றேன் என்று நமக்கு நம்பிக்கையூட்டியவர் இயேசு. ஒரு வித்து மடிந்தால் ஒழிய விருட்சமாகாது என்று சொன்னவரும், அவரே! இதனால் தான் இயேசு காட்டிய வழி, போதனை, எல்லா போதனைகளை விட தெளிவாக இருக்கின்றது.
ஆரம்பத்தில் சொன்னதை திரும்பவும் மீட்கின்றேன், இறந்தும், நிரந்தரமாக சொர்க்கம் செல்லலாம், இறவாமலும், உலகத்தில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம். எல்லோரும் சொர்க்கத்திற்கு போவதையே விரும்புகிறார்கள், ஆனால் சாவதற்குத்தான் தயாராக இல்லை. சொர்கத்திற்கும் நரகத்திற்குமான வேறுபாட்டை அறிஞர் பெர்னாட்ஷா இவ்வாறு கூறினார். ஒருவனுக்கு இந்திய மனைவியும், நோர்வே சம்பளமும், சீன உணவும், பிரிட்டிஷ் வீடும் கிடைத்தால் அதுவே சொர்க்கம். மாறாக, இந்திய சம்பளமும், நோர்வே மனைவியும், சீன வீடும், பிரிட்டிஷ் உணவும் இருந்தால் அது நரகம். பெர்னாட்ஷா தமாசாக சொன்னது அன்றாட வாழ்வின் தரத்தை குறித்து கூறியுள்ளார். நான் சொகில்கின்றேன், சொர்க்கம் என்பது உணர்வு நிலைப்பட்டது.
சொர்க்கம் உணர்வு அதாவது psycological feeling சம்பந்தப்பட்டது, இடம் geographyical சம்பந்தப்பட்டது அல்ல. இதற்கு சிவ பெருமான், சித்தர்களுக்கு தந்த விளக்கத்தை உங்களுக்கு தருகின்றேன். ஒரு முறை சிவ பெருமான் தலைமையில் சித்த பெருமக்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது சில சித்தர்கள் '' எம்பெருமானே . மனிதர்கள் புவியிலேயே சொர்க்க வாழ்க்கையையும் நரக வாழ்க்கையையும் அனுபவித்துவிடுகின்றனர் என்று கூறப்படுகிறதே . அது உண்மையா?" என கேட்டனர். ஆம் என்று கூறினார் எம்பெருமான். அது எப்படி என சித்தர்கள் கேட்டபோது " அவர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அவர்கள் புவியில் பிறக்கின்றனர்" என்று கூறினார். எனினும் சித்தர்கள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. தங்களுக்கு இன்னும் விளக்கம் வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொ ண்ட எம்பெருமான் சொர்க்கத்தில் நடைபெரும் காட்சிகளை காட்டிய ருளினார்.அங்கு சிலரின் சொா்க்க வாழ்க்கை முடிவுக்கு வந்து மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வந்திருந்தது. அவர்கள் அனைவரும் தர்ம தேவன் முன்பு நிறுத்தப்பட்டிருந்தனர்.
அங்கு அவர்களின் கடைசி விருப்பங்கள் உள்ளதா என தர்ம தேவன் ஒவ்வரிடமும் கேட்க தொடங்கினார். முதலாமவர் தர்ம தேவனிடம் "தான் எப்போதும் சொர்கத்தில் வாழ விரும்புகிறேன் " என கூறினார்.அதற்கு தர்ம தேவன் "சொர்கத்தில் நீங்கள் வாழும் காலம் முடிந்து விட்டது, எனினும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். பூமியில் உங்களுக்குஅமைதியான இடத்திலும் அன்பு நிறைந்த மனிதர்கள் மத்தியில் செல்வ செழிப்பான குடும்பத்தில் நற்பிறப்பு அமையும். அதனை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். சொர்கத்தில் இருந்த வரையில் நீங்கள் அனைவருடனும் எப்படி இருந்தீர்களோ அதே முறையில் பூமியி லும் வாழுங்கள்.சொர்க்கத்தில் நீங்கள் அனுபவித்த அதே வாழ்க்கையை பூமியி லும் அனுபவிக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.
அடுத்த வந்த நபரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என தர்ம தேவன் கேட்க 2ம் நபர் " நான் இது வரை நரகத்தை பார்த்தது இல்லை. நான் நரகத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்" என கூறினார். அதற்க்கு தர்ம தேவன் "தேவையில்லை .உங்கள் புண்ணிய காலம் முடிந்து நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள் நேரடியாக பூமிக்கு செல்ல லாம்." என கூறி அனுப்பிவிட்டார்.
இப்போது 3ம் நபர் தர்ம தேவனிடம் " நான் சொர்க்க வாழ்க்கையை தொடர்ந்து அனுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்ற இரகசிய த்தை நன்றாக தெரிந்து கொண்டுவிட்டேன். அது மட்டுமன்றி நரக வாழ்க்கையி லிருந்து விடுபடும் தேவ ஞானத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டேன். ஆகையால் நீங்கள் என்னை எங்கு அனுப்பினாலும் எனக்கு சம்மதமே. மேலும் நரக வாழ்க்கை யை உடலாலும் மனதாலும் அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த தேவ ஞானத்தை கற்றுத்தருவதற்க்கு எனக்கு வாய்ப்பும் நல்லாசியும் வழங்குங்கள்." என கேட்டார். அதற்க்கு தர்ம தேவன் மனமகிழ்ச்சியுடன் "எமது பூரண நல்லாசிகள் உமக்கு உண்டு.நீங்கள் பூமிக்கு செல்லுங்கள்" என்று கூறி அனுப்பிவிட்டார்.
இந்த காட்சிகளை கண்ட சிவனாடியார்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். இறைவா இதுஎன்ன விந்தை? தர்ம தேவனின் தீர்ப்புகள் எதுவும் எங்களுக்கு புரியவில்லை? அனைவரையும் அவர் பூமிக்கே அனுப்புகி றாரே? உண்மையில் அவர்கள் பூமியில் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்பது எப்படிதெரிந்து கொள்வது? என கேட்டனர். அதற்க்கு சிவ பெருமான் "மனிதன் உடல் ரீதீயாகவும் மன ரீதீயாகவும் ஏதோ ஒருவகையில் பாதிப்பு அடைகின்றான்.பூமியில் அவன் சோர்த்து வைத்திருக்கும் எந்த சொத்துக்க ளினாலும் அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாது. இதில் மனிதர்கள் அடையும் வேதனைகளையும் வலிகளையும் வார்த்தைகளில் அடுக்க முடியாது. எனினும் மனிதர்கள் பூமியில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கினறனர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சித்தர்களிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் சித்தர் பெருமக்களே மனிதர்களின் மேன்மை க்காக தங்களின் வாழ்க்கையை அர்பணித்தவர்கள்.அவர்களில் சித்தர்களின் தலைவரான அகத்தியனிடம் சென்று மனிதர்கள் பூமியில் எப்படிப்பட்ட வாழ்க்கை யை வாழ்ந்து கொண்டிருக்கினறனர் என்பது பற்றியும் அதற்க்கான அடையாள ங்களை பற்றியும் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் " என்று அனைவரையும் அகத்தியரிடம் அனுப்பி வைத்தார்.
அகத்தியரிடம் சென்று விஷயத்தை கூறிய சிவனடியார்கள் இதற்கு விளக்கம் தரும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட அகத்தியர் எல்லாம் வல்ல பரம்பொருளை தியானித்துக்கொண்டு பூமியில் சொர்க்க மற்றும் நரக வாழ்க்கையின் அறிகுறிகளை விளக்க ஆரம்பித்தார். பூமியில் பிறக்கும் மனிதன் உடல் மற்றும் மனம் என இருவகையாக பாதிப்பை அடைகின்றான்.முதலில் உடல்ரீதீயாக காண்போம்.மனிதன் உடல்ரீதீயாக நரக வாழ்க்கையை அனுபவி த்துக்கொண்டிருப்பது ஆரம்பத்தில் அவர்களுக்கு தெரிவதில்லை. உடலில் வலி வந்த பிறகே அவர்கள் அதை உணரத்தொடங்குகின்றனர். மேலும் ஒருவர் உடல்ரீதீயாக எந்த வாழ்க்கையை வாழ்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஒருவரின் மண்ணிரல் மற்றும் கல்லீரல் அமைந்திருக்கும் பகுதியில் லேசாக அழுத்திப்பாருங்கள்.(இவ்விடங்கள் முன்புற மார்புக்கூட்டின் கீழே உள்ளது)லேசாக அழுத்தும்போதே வலி இருந்தால் உங்கள் உடலானது கடுமையான நரக வாழ்க்கைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!
அகத்தியர் தரும் விளக்கம், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும், இவ்வுலகத்தில் மானிடர்கள் நரகவாழ்வை அனுபவிக்கின்றார்கள் என்பதை தெளிவாக விளக்குகின்றது. மோட்சம், நரகம் என்பது Fear and Greed பயம் , இன்பம் என்ற உணர்வுகளின் அடியில் இருந்து நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது. சின்ன வயதில், சமய பாட புத்தகதில், இரண்டு உள்ளங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும், ஒன்றில் சாத்தான் இருப்பான், அது நரகமாகவும், தூதுதர் இருப்பது மோட்சமாகும், ஆக மோட்சம் நரகம் என்பது நமது உள்ளத்தில் இருக்கின்றது என்பதுதான் அர்த்தம்.
ஒருமுறை, ராபியா என்ற சுஃபி பெண் ஞானி, ஒருகையில், நெருப்பு பந்தத்தையும் இன்னொரு கையில் வாளியில் தண்ணீருடன் வீதியில் அலைந்தாள். பலர் அவளிடம் இதற்கு அர்த்தம் கேட்டார்கள். அவள் சொன்னாள், மனிதர்கள் மனதில் இருக்கும் மோட்சம் என்ற எண்ணத்தை இந்த நெருப்பாள், எரித்து அழிக்கப்போகின்றேன், நரகம் இருக்கும் மனிதரிடம், இந்த தண்ணீர் கொண்டு அணைக்கப்போகின்றேன், மனிதர்களின் மோட்ட்சம், நரகம் என்ற உணர்வு, இருக்கும் வரை, மனிதர்களின் உள்ளத்தில் உறைந்திருக்கும் கடவுளை அவர்களால், கண்டு கொள்ளமுடியாது என்று அவர்களிடம் சொன்னாள். இதில் பெரும் உண்மை இருப்பதாக நான் உணர்கின்றேன். ஆசை மயக்கத்தயோ, பய ஊணர்வையோ காட்டி, மனித மனதில் இறைவனை உணர்த்தமுடியாது, கடவுள் அன்பே உருவானவர், அன்பே கடவுள், பயத்தினால் அவரை அணுக முடியாது, அதை அவர் விருபுவதும் இல்லை.
என் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று, ஞாபகத்துக்கு வருகின்றது, எனது மச்சான் ஒரு அருட்குரு, பெயர் லெம்பேட், நல்ல பிரசங்கி, அவர் லண்டனுக்கு வந்த போது, என் வீட்டுக்கு வந்தார், அப்போது எனது மகன், மதிவாணனுக்கு, எட்டு வயது இருக்கும், சரியான குழப்படி, சூப்பர் மேன் Supper man அவர்தான் இவனது ஹீரோ. எனது மகனின் குழப்படியை பார்த்த, ஜெறோம் லெம்பெர்ட் குரு, அவனை அழைத்து, நீ குழப்படி செய்தால், நரகத்துக்கு போவாய் என்று பயம் காட்டினார். என் மகனுக்கு நரகம் என்றால், என்னவென்று புரியவில்லை, உடனே அவன், நரகம் என்றால் என்ன என திருப்பி கேட்க, குருவோ ஓ அதுவா அது பெரும் நெருப்பு கொண்ட ஒரு குகை என வர்ணித்தார், எனது மகனோ வெகு அலட்சியமாக, நெருப்பா! நான் சூப்பர்மேன் எந்த நெருப்பும் என்னை உன்னும் செய்யமுடியாது என சிரித்தான், என் போன்ற மகனுக்கு நெருப்பை காட்டி, நரகத்தை விளங்க வைக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்! மோட்சம் நரகம் பற்றி அதிகம் கதைத்துவிட்டேன் என நினைக்கின்றேன், விட்டால் இன்னும் கதைக்கலாம், தொடரும் என் சிந்தனை,,,,,,
Tuesday, 6 February 2018
Thursday, 1 February 2018
பேரானந்த பரம் பொருள்! பேசாலைதாஸ்
பேரானந்த பரம் பொருள்! பேசாலைதாஸ்
என் சிந்தனைச்சிதறினிலே, சென்ற தடவை, உன்னை நீ அறிந்து கொள், உன்னையே முதலில் நேசி, என்று எழுதி இருந்தேன். இதற்கு காரணம் உனக்குள் இருக்கும் இறைவனை நீ அறிய விரும்பினால், உன்னை முதலில் அறிய வேண்டும் என்று நான் நினைத்தேன். கடவுளை நேசிக்கவேண்டுமா? முதலில் உன்னை நேசி என்று எழுதினேன். உனக்குள் இருக்கும் கடவுலே பரம் பொருள். பரம் பொருள் என்றாலே அது கடவுள் தான்! கடவுளா? அது எது எனக்கேட்டு அலைவோர் பலர், யாரும் கடவுளை இன்னும் கண் முன்னே கண்டதில்லை. அவரவர் தன் இயல்புக்கு ஏற்ற வண்ணம், கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று உருவகமாகவும், உருவமில்லாமாலும், கற்பனையில், எண்ணத்தில் வடிக்கின்றார்கள். சிலர் இயற்கை என்கின்றார்கள், சிலர் கடவுளின் சாயல் மனிதன் என்கின்றார்கள். கவிஞன் ஒருவன், அவன் தான் கண்ணதாசன், கடவுள் என்றால் வாழ்வின் அனுபவமே கடவுள் என்றான்.
அனுபவமே கடவுள் ♥
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!......... ♥ கண்ணதாசன்
அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன் என்று கண்ணபரமார்த்தாவை குறித்து அவன் எழுதினான். நம் வாழ்வின் மையமாக, நம் வாழ்வின் அனுபவமாக இறைவன் இருக்கின்றான்.இருக்க விரும்புகின்றான். இதனை நாம் கண்டுகொள்வதில்லை. கடவுள், தெய்வம், பரம்பொருள் இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. சைவ சித்தாந்தம் இப்படிக்கூறுகின்றது. பரம்பொருள்(கடவுள்/இறைவன்) ஒன்றுதான், ஆனால் தெய்வங்கள் பல. பரம் என்றால் ஒரு பொருளின் முந்தைய நிலையை குறிக்கும்.
பரம்பொருள் என்றால் பிரபஞ்சம் உருவாதற்க்கு முன் இருந்த ஒரு பொருளாகும். அப்பொருளிலிருந்து உருவானதே அண்டசராசரங்களும் அனைத்து ஜீவராசிகளும். அப்ப ரம்பொருளே ஆதியும் அந்தமும் அற்ற பரமசிவன். பிரபஞ்சம் உருவா வதற்க்கு தேவையான சக்தியே ஆதிபராசக்தி. அ-அரன்(சிவன்), உ-உமை(சக்தி) ம்-பிரம்மம்(படைத்தல்) (அ+உ ம் = ஓம்)சிவமும் சக்தியும் இணைந்து பிரபஞ்சம் உருவாகும் போது ஓம் என்னும் ஒலி உண்டானது. அதனால் சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியி ல்லை. இவ்விருவரும் இல்லையேல் அண்டசராசரங்களும் ஜீவராசிகளும் இல்லை. அதுவே பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம் ஏதுமற்ற ஏகாந்த நிலை.
பரம் என்றால் ENERGY, பொருள் என்றால் MATTER, இரண்டும் தனி தனியாக இருக்கும்போது சும்மா கிடக்கும், இரண்டும் ஒன்று சேரும் போது, இயக்கம் நடைபெறுகிறது. "நான் சிவனே என்று சும்மா இருந்தேன். அவன் தான் என்னை தூண்டிவிட்டான்" என்று சிலர் பொலிஸிசில் முறைப்பாடு செய்வதை பார்த்திருப்பீர்கள். சும்மா என்பது சிவனைக்குறிக்கின்றது. பரம் பொருளை நீ உணரவேண்டுமா? சும்மா இரு என்று சித்தர்கள் சொல்லுவார்கள். நான் சின்ன வயதில் கேட்ட ஒரு வாசகம் உண்டு. அது எங்கிருந்து வந்தது என்று எனக்கு விள க்கமில்லை. "கண்மூடி சும்மா மெளனியாய் இருப்பதற்கெண்ணினேண். என் எண்ணமிது சாமி நீ, அறியாயோ? சர்வ பரிபூரண சச்சிதான ந்தனே"! சச்+சித்தம்+ ஆனந்தம்.
தெய்வம் என்றால் தெய். அதாவது பரம்பொருளிலிருந்து தேய்ந்து உருவானதே தெய்வம். சிருஷ்டி இயக்கம் சரியாக இயங்க பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. தெய்வ ங்கள் உருவாக்கப்பட்டவை, கோட்பாடுகளை, சித்தாந்தங்களை விளங்க வைக்க, இயற்கையை புரிந்து கொள்ள, தெய்வங்கள் உருவாக்கப்பட்டு ள்ளன. விநாயகர் (பிள்ளையார்) இது ஒரு உருவக தெய்வாம்சம், யாணை களினாலும், எலிகளினாலும், தமது பயிர்ச்செய்கைகளுக்கு பங்கம் விளைகின்றதே என்று கவலைப்பட்ட மனிதன், யானை முகத்தோடு, ஒரு தெய்வத்தை படைத்து, அதற்கு வாகனமாக எலியை உருவாக்கி, லட்டும் கரும்பும் படைத்து, அந்த தெய்வத்தை குளிரவைக்க, வழிபாடு செய்தான். அதுபோலவே, தான் பேசிய மொழிக்காக, அதன் அழகிற்காக, தனது தமிழ் மொழியின் கடவுளாக, முருகன் என்ற தெய்வத்தை தோற்று வித்தான்.

Tuesday, 23 January 2018
உன்னை முதலில் நேசி!
உன்னை முதலில் நேசி!
உன்னையறிந்தால், உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றார்கள். உன் நேசிக்குமாப்போல பிறரை நேசி என்றார் இயேசு பிரான். முதலில் உன்னை நீ நேசி, பின்னர் உலகம் உன்னை நேசிக்கத்தொடங்கும் என்றார்கள் தத்துவஞானிகள். என்னை எப்படி நேசிப்பது என்பதில் குழப்பிப்போன ஒருவன், ஒரு ஞானியிடம், என்னை நான் எப்படி நேசிப்பது என்று கேட்டான்.அதற்கு அந்த ஞானி, நீ ஒருவன் மீது ஆத்திரப்பட்டால், அல்லது கடுங்சினம் கொண்டால், முதலில் பாதிக்கப்படுவது யார்? என்று கேட்டார். அதற்கு அவன் சட்டென்று நான் தான் முதலில் பாதிக்கப்படுவேன் என்றான். அதற்கு ஞானி நீ மிகச்சரியாக சொன்னாய்!, முதலில் நீ கோபம், ஆத்திரம் இப்படிப்பட்ட நேர்மறையான பண்புகளில் இருந்து விலகிக்கொள்ள, அன்பு,மகிழ்ச்சி, நிறைவு இப்படியான நேரான எண்ணங்களினால் உன் மனதை நிரப்பு பின்னர் உன்னை நீயாகவே அன்பு செய்ய தொடங்கிவிடுவாய்! என்று ஞானி சொன்னார்.
நம்மில் பலர் தன்னை நேசிப்பது எப்படி என்று தெரி யாமல் தவிக்கின்றனர். நம்மை நாம் நேசித்தால்தானே, நாம் படைக்க ப்படுவதற்கு மூலகாரனமான மெய்ப்பொருளை கண்டு கொள்ளமுடியும். என்னை நான் முதலில் அறிந்து கொள்ளாமல், விட்டுவிட்டு எப்படி பரம் பொருளான மெய்ப்பொருளை கண்டுணர்வது? நம்மை நாம் அன்பு செய்ய தயங்குவதற்கு பல காரனம் நம்மை அறியாமல் நமக்குள்ளே இரு க்கின்றது. நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவது, குறைவாக கனிப்பி ட்டு, தாழ்வு என்கின்ற மனநிலையை வளர்த்து விருட்சமாக்கியுள்ளோம்.
எதற்கெடுத்தாலும், அதனை செய்யும் ஆற்றல் எனக்கு உண்டா? என்ற கேள்வி எழுப்புவதும், அதனை செய்ய நான் தகுதியானவனா? என்று சிந்திப்பதும் நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை சிதறடிக்கின்றது. தீர்வுகளையும், விளைகளையும் பற்றி எண்ணாமல், ஒரு காரியத்தை செய்வதால் வரும் பிரச்சனை பற்றியும், அதானல் வரும் சாவால்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என்று எண்ணைப்பார்க்காமல் இனம் புரியா அச்சத்தில் மூழ்கி செயல்படாமல் முடங்கிவிடுகின்றோம். சாதனையா ளர்களை பார்த்தால், அவர்கள் எல்லோருமே சராசரி மனிதர்களாக இரு ந்து சாதனை படைத்தவர்களே! நான் கட்டையாக இருக்கின்றேனே என எண்ணுகின்றாயா? மாவீரன் நெப்போலியனைப்பார்! தேசியத்த லைவன் பிரபாகரனைப்பார்! அழகு குறைந்த, கவர்ச்சியற்றவனாக எண்ணுகின்றாயா? தனது அவலட்சனத்தையே மூலதனமாக கொண்ட எத்தனையோ சாதனையாளர்கள் இருக்கின்றார்கள். ஊணமுற்றவ்ன் என உணர்கின்றாயா? ஊணமுற்ற பலர் உலகத்தை திரும்ப பார்க்க வைத்த கதை ஏராளமுண்டு.
உன்னையே நீ முதலில் நேசிப்பதற்கு மிக இலகுவான வழி, முதலில் உன்னை நீ அறிதல், நம்மை நாம், அறிவதற்கு தடைக்கல்லாக இருப்பது நான் என்ற அகங்கார உணர்வே! "எழுத்துச் சித்தர் பாலகுமாரன்” அவர்களால் எழுதப்பெற்ற "நல்ல முன் பனிக்காலம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. என்று திரு, ரவிச்சந்திரன் அவர்கள் பதிவு செய்ததை அப்படியே தருகின்றேன்.
,,,,,,,,தான், பிறர் என்ற பேதம் உச்சகட்டத்தில் தலைதூக்குகிறபோது, தான் மற்றவரைவிட எல்லாவிதத்திலும் உயர்வு என்று அகங்காரம் வருகிறபோது, அந்த அகங்காரம் அதிகமாகிறபோது, அந்த அகங்காரத்தால் தனிமைப்பட நேருகிறது.
அப்படி தனிமைப்பட்டபோது தான் யார் என்கிற கேள்வி பெரிதாகிறது. தான் என்பது மனசா, உடம்பா என்று ஆராய முற்படுகிறது. தன் மனதை உற்று பார்க்கத் துவங்கி விடுகிறது.
எண்ணங்கள் இடைவிடாது தோன்றிக் கொண்டிருக்கிற நிலையை, இடத்தை உற்றுப் பார்க்கிறது. எண்ணங்களை உற்றுப் பார்க்க, எண்ணங்கள் தோன்றுவது நிதானப்படுகிறது.
மனம் செயல்படுவதை ஸ்லோமோஷன் படம் போல காண முடிகிறது. அப்போது ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.
ஒரு எண்ணம் தோன்றி அடுத்த எண்ணம் தோன்றுவதை நிறுத்திய பிறகு அந்த இடைவெளி பெரிதாகிறது. எண்ணம் எதுவுமில்லாத, அதே சமயம் இடைவெளியை தான் என்று உணருகிற நிலை வருகிறது.
எண்ணம் எதுவுமில்லை. ஆனால், அதே சமயம் தான் என்ற நிலைமை உண்டு.
ஒருமுறை தெரிந்துவிட்டால் இந்த சுற்றுப்புறம் எல்லாம் மறந்து இந்த தானில் அடிக்கடி மனம் லயிக்கும். தான் என்கிற எண்ணமில்லாத இடைவெளியிலேயே லயித்து கிடக்கும். அதையும் ஆராய்ந்து பார்க்கும்.
சூடு இல்லாத ஒளியும், வடிவமில்லாத சக்தியுமாய் எந்த உவமானமும் வைத்துச் சொல்ல முடியாததாய் எப்படி எல்லாம் விளக்கினாலும் மற்றவர்க்கு, பிறருக்கு புரியாத விஷயமாய் விளக்க வேண்டிய அவசியமே இல்லாத வெறும் அனுபவமாய் அங்கே கிடக்கும்.
நான் யார் என்று நீ தெரிந்து கொள்ளும் நிலை வரும் போது, நீ நீயாக இல்லாமல் இருப்பாய்,, இருப்பதெல்லாம் பரம்பொருள் இறை! என்பதை உணர்வாய். நீ இறைவனுக்குள் உறைந்து, இல்லாமல் போய்விடுவாய்! இருப்பதெல்லாம் ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தம்! இதையே நானும் உய்த்துணர துடிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
தொடரும் என் சிந்தனை தொடர்கள்,,,,,,,,,

Monday, 22 January 2018
எண்ணங்களே அடிப்படைக்காரனம்!
எண்ணங்களே அடிப்படைக்காரனம்!
சென்ற பதிவில், என் சிந்தனை ச்சிதறல்களாக மனம் பற்றி, என் சிந்தனையை தெளித்திருந்தேன். அதிலே மனம் ஒரு குரங்கு என்று சித்தரித்திருந்தேன். மனமானது அங்கும் இங்குமாக, பாய்ந்து அலைந்து திரிவதினால், நமக்கு இன்பம் துன்பங்களை மனம் அடிக்கடி நமக்கு தருகின்றது. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரனம் மனமே, அதை உண்டாக்கு வதும், அதனை தக்க வைத்துக்கொ ள்வதும் இந்த மனமே! இன்ப துன பங்களுக்கு காரனம், புறச்சூழல் அல்ல, உள்மனதின் பிரதிபலிப்புகளே அவை. இன்பம்,துன்பமோ, கடவுளாலோ, சாத்தானாலோ வருவது கிடையாது, அவை எல்லாமே எமது எண்ணங்களினால், மனதில் ஊற்றப்படுகின்றது. எந்தப்பொருள், அல்லது காட்சி ஊடாக, எண்ணங்கள் உருவாகி மனதுக்கு வருகின்றதோ, அதை ஒட்டி இன்பமும் துன்பமும் அமைகின்றது. உதாரணம் கவர்ச்சியான ஒரு பெண்ணின் கண்கள், மார்புகள் மீது எமது எண்ணம் படிகின்றபோது, நமக்கு காம இன்பம் மனதில் பதிகின்றது. அதேபோல, ஒரு அவலச்சாவை எமது கண்கள் கண்டு, அதன் மீதான எண்ணங்கள் சோகத்தை மனதில் பதிக்கின்றது.
நமது மனதில் வேரூன்றும் எண்ணங்கள், எமது பழக்கவழக்கத்தை மாற்றியமைக்கின்றது. இந்த பழக்கம், நடவடிக்கை மூலமாக இன்பதுன்பங்களை அறுவடை செய்கின்றோம். நமது வாழ்வின் கெட்ட சூழ்னிலைகளை மாற்றமுற்பட்டால், அதற்கான பழக்க வழக்கங்களை மாற்றவேண்டும், அப்படி மாற்றும் போது, நமது எண்ணங்களையும் மாற்றவேண்டும். ஏனெனில் நாம் என்ன எண்ணுகின்றோமோ! அதுவாகவே நாமும் மாறிவிடுகின்றோம். பணப்பேராசை எண்ணம் கொண்ட ஒருவனை பாருங்கள்! அவன் எப்படியாவது பணம் தேட வேண்டும் என்றே எண்ணுகின்றான். எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு பணம் வேண்டும் என்பதிலேயே குறியாகிவிடுகின்றான்.
மக்கள் தங்கள் எண்ணங்களின் நிலைக்கு ஏற்ப கீழ் நிலையிலோ மேல் நிலையிலோ வாழ்கிறா ர்கள். இருள் நிறைந்து குறுகிய தாய் அல்லது ஒளி மிகுந்து பரந்து விரிந்ததாய்க் அந்த நிலை காண ப்படுகிறது. காணும் அனைத்திலும் மனிதன் தன் எண்ணத்தின் சாய லையே காண்பான். சந்தேகமும் , பேராசையும் , பொறாமையும் நிறைந்த ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனிடம் தென்படும் உலகம் எந்தச் சிறப்பும் இன்றி சூதுவாது நிறைந்து காணப்படும். தன்னிடம் எந்தச் சிறப்பும் நற்குணமும் இல்லாததால் உலகிலும் மற்றவரிடத்திலும் எந்த சிறப்பையும் நற்குணத்தையும் அவனால் காண இயலாது. தன்னுடைய கடவுளைக் கூட அவனிடம் இலஞ்சம் பெற்று அவனுக்குக் காரியங்களை சாதித்துக் கொடுப்பவராக எண்ணுகிறான்.எந்த உள்ளத் தூய்மையையும் கடவுளை நாடுவதற்குத் தேவையானதாக அவன் எண்ணவில்லை. தன்னைப் போலவே மற்றவர்களும் கேடுகெட்டவர்களாக அவன் பார்வை முடிவுகட்டுகிறது.மிகத் தூய தன்னலமற்ற வார்த்தைகளிலும் செயல்களிலும் களங்கத்தைக் கற்பிக்கிறான்.
சந்தேகக் குணமில்லாத பரந்த மனமும் தாராள குணமும் உடைய மனிதனை இப்பொழுது கருதுங்கள். அவனது உலகம் எவ்வளவு ஆனந்தமாக மகிழ்ச்சியாகக் காட்சி அளிக்கிறது . அனைத்து உயிர்களிலும் மனிதர்களிலும் ஒரு தெய்வீகத்தைக் காண்கிறான். அனைவரையும் உண்மையாக ஏற்கிறான். அவர்களும் அவனிடத்து உண்மையாகவே நடந்து கொள்கிறார்கள். மிகக் கொடியவர்களும் அவன் முன்னிலையில் தங்கள் இயல்பை மறந்து ஒரு கணம் அவனைப் போலவே மாறி விடுகிறார்கள். திடீர் என்று தங்களுக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தை எண்ணி வியந்து தாங்களும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ வாய்ப்பு இருப்பதை எண்ணி மகிழ்கிறார்கள்
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ப உயர்வானவனாகவோ தாழ்ந்தவனாகவோ சான்றோனாகவோ தரங்கெட்டவனாகவோ இருக்கிறான். அவனது நிலைக்கு அவனது எண்ணங்களே இம்மியளவும் குறையாமல் காரணங்களாக உள்ளன. தன்னுடைய எண்ணங்களால் கட்டப்பட்டுள்ள எல்லைச் சுவருக்கு உள்ளே மட்டும் தான் அவனால் உலாவ முடியும். அதுதான் அவனது உலகம். அந்த உலகத்திற்குரிய பழக்கங்களை பழகிக் கொள்கிறான்.அவன் கொண்ட எண்ணங்கள் செயல்வடிவம் பெற அவனது உலகம் அவனுக்கு எல்லா வழிகளிலும் ஒத்திசைவு செய்கின்றது. ஒருவனை எவரும் கட்டாயப்படுத்தி தாழ் நிலையில் கொண்டு சேர்க்க முடியாது. தன் எண்ணங்களைப் பண்படுத்தி சிறகை விரித்து சிகரங்களை அடையலாம்.தீயவற்றைப் பற்றாமல் உறுதியுடன் அவற்றின் பிடியை உதறி, நன்மையைக் கடைப்பிடித்து, குறுகிய எண்ணங்களை விட்டொழித்து தன் எண்ண உலகை பரந்து விரிந்ததாக மாற்றி குளுமையான இதமான காற்றின் இடையே வானில் பறக்கலாம்..உங்கள் எண்ணங்களை குறுகிய எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைக்குள் பூட்டிவைத்து, உங்களையே நீங்கள் தாழ்மைபடுத்தி, அவஸ்தைப்படவேண்டாம், உங்கள் எண்ணங்கள் சிறகடித்து விண்ணில் பறக்கட்டும், பரிவு, அன்பு, இரக்கம், கருனை, நட்பு இப்படியான விரிந்த விசாலாமான வானில் பறக்கவிடுங்கள்,,, தொடரும் சிந்தனை சிதறலில் உங்கள் அன்பன் பேசாலைதாஸ்

Wednesday, 17 January 2018
மனம் என்னும் குரங்கு!
மனம் என்னும் குரங்கு
சென்ற பதிவிலே என் சிந்தனை சிதறலில், பக்குவமான மனநிலையா னது இயல்பான வாழ்க்கைக்கு அவசியமா னது என்று பதிவு செய்திரு ந்தேன், தொடரும் என் சிந்தனை சிதறலில், மனம் என்றால் என்ன என்று, நீங்களும் நானும் சேர்ந்தே சிந்திப்போம் என்று சிந்திக்கதோன்றுகி ன்றது. மனம் என்பது எண்ணங்களின் முர ண்பட்ட ஓர் குவியல் என்பது எனது எண்ணம். எண்ணங்கள் அதுவும் கடந்து போன காலங்களில் இருந்து, மனதில் பதிவாகிய பதிவுகளே எண்ணங்களாய் தோன்றுகி ன்றது. கடந்தகாலங்களின் செயல் தொகு ப்பே மனம்! மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று மகான் ரமணர் கூறுவார். எங்கே எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எங்கே அவை தொடங்குகின்ற னவோ, அங்கே உள்ள ஒன்றையே நாம் மனம் என்கிறோம். மனம் என்பது தனியே ஒன்று இருப்பதில்லை அது எண்ண ங்களையே சார்ந்துதிருக்கி றது. நான் என்ற எண்ணத்தையே முதன்மை யாய்க் கொண்டது. அகத்தில் ஆன்மாவையும் , புறத்தில் உலகத்தையும் அது கொண்டிருக்கிறது. அது தனித்திருப்பத்தில்லை அதற்கெண தனி யாக ஒரு இடம் கிடையாது.
மனம் அது அங்கே பாயும் இங்கே தாவும் ஒரு குரங்கைப்போல, புதியதை பசுமை என நினைக்கும், பின்னர் பழயதை திரும்பி பார்த்து ஏங்கவைக்கும். முரண்பட்ட இந்த மனதின் போக்கிற்கு அதை விட்டுவிட்டால், நம் வாழ்வு துன்பகேணி போல மாறிவிடும். மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதை ஆடவிட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மை பாவத்தில் தள்ளிவிடும், நம்மை துண்பத்தில், ஏற்றிவிடும், ஏனெனில் மனம் என்ற குரங்கு,ஆசை என்ற குதிரையில் சவாரி செய்ய ஆசைப்படுகிறது. எனவேதான் ஞானிகள் ஆசைகளை அடக்கி, மனதை ஒருமைப்படுத்தி, சும்மா இருக்கும்படி அடிக்கடி சொல்கின்றார்கள்.மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை. ஆசையை விடவேண்டும். சொல்லற்று செயல்லற்று சும்மாயிருக்கும் நிலையை அடையவேண்டும். தியானத்தின் மூலமே மனதை வசப்படுத்த முடியும். அதனால் தான் சும்மாயிரு என்கிறது பல மகான்களின் நூல்கள். சும்மா இருப்பது என்பதே தவம் அதை வள்ளல் பெருமான் கெஞ்சுவதை பாருங்கள்
இன்று வருமோ? நாளை வருமோ?
அல்லது மற்று என்றுதான் வருமோ?
துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்கு உள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.
அதையே பத்தரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து இப்படி ஏங்குகிறார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
ஐபுலன்களை அடக்கி மனதை கட்டுப்படுத்தல் அவசியமாகின்றது. அப்படி செய்யாவிட்டால் மனித வாழ்வே அவலத்தில்தான் முடியும்.“வாழ்க்கை வெறுத்து விட்டது. வாழ்வ தில் எந்தப் பயனும் தெரியவில்லை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை. எந்தப் பிடிமானமும் தெரியவில்லை. சாவதைப் பற்றி யோசி க்கிறேன்.” இப்படி எண்ணுவோர் எண்ணிக்கை பெருகிவருவது கவலை அளிக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பிடிமானம் தெரியாமல், ஒரு விளிம்பு நிலையில் மக்கள் யோசிப்பது பெருகிவரும் நுகர்வுக் கலாச்சா ரத்தின் பின்விளைவு என்றும் சொல்லலாம். பொருட்களின் மதிப்பு உய ர்ந்தும் மனிதர்களின் மதிப்பு குறைந்தும் ஒரு அசுர வேகத்தில் பொருட் குவிப்பில் மக்கள் ஓடுவதில் முதலில் நசுங்கிப்போவது மனித உறவு களே. இல்லாமையில் வாழும் மக்கள் கூட்டங்கள் மரணத்தை யோசிப்ப தில்லை. சாலையில் தூங்கும் மனிதர்கள் கூட நாளையைப் பற்றிய நம்பி க்கையில்தான் ஆழ்ந்து உறங்குகிறார்கள். பொருள் வசதியும் தனிமை யும் கொண்டோர்தான் அதிகம் மரணம் பற்றி யோசிக்கிறார்கள். அதற்கு காரனம் பொருள் ஆசை பண ஆசை, ஆசைகளை அறுத்தெறி, பற்றுக பற்றற்று!
மனதின் எண்ணப்படி வாழ்ந்தால் இறுதியில் வாழ்வின் மீது வெறுப்பும் சலிப்பும் தான் மிஞ்சும்! “நான் வாழ்ந்து யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்போர் உண்டு. வேலை, குடும்பப் பொறுப்புகள் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய என்று தெரியாத பல பெரியவர்களைப் பார்க்கிறோம். எந்த வயதிலும் வாழ்க்கை அசதியாகவும் அர்த்தமில்லாததாகவும் தோன்றலாம்.
ஆனால் மனித வாழ்க்கை எவ்வளவு மகத்தானது? பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு. நம் உடலும் மனமும் கொண்டுள்ள சக்தி தான் மனித இனத்தை இந்த உலகத்தின் தலைமையாக ஆக்கி உள்ளது.
நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.
‘‘என்னவெல்லாம் இல்லை என்னிடம்’’ என்று பட்டியல் இடுவதற்குப் பதில் ‘‘என்னவெல்லாம் என்னிடம் இருக்கிறது’’ என்று பட்டியல் போட்டால் அது வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும்.
உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க ஒரு வழி ஒன்றை நான் இங்கு சொல்ல ஆசைப்படுகின்றேன். கொடுக்கும் மன எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் . உங்களால் பிறருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். கொடுப்பது தான் மன நலத்தைக் காக்கும் பெருமருந்து. நிலாமதி என்னும் வலைப்பூங்காவில் நான் எழுதிய கதை இங்கு ஞாபகத்துக்கு வருகின்றது.
செல்வம் மிகுந்த ஒரு பெண், மனநல மருத்துவரைத் தேடிச் சென்றார். தன் வாழ்வு மகிழ்வற்றதாக மாறி விட்டதென மருத்துவரிடம் கூறிய அப்பெண், மகிழ் வைக் கண்டடையும் வழிகளை அறிய விரும்பினார். தன் அலுவலகத் தைக் கூட்டி, சுத்தம் செய்துவந்த பெண்ணை, மனநல மருத்துவர் அழைத் தார். அப்பெண் வந்ததும், மருத்துவர், செல்வம் மிகுந்த பெண்ணிடம், "இவர் பெயர் மரியா. இவர் தன் வாழ்வில் மகிழ்வை எவ்விதம் கண்டடைந்தார் என்பதைச் சொல்வார். தயவு செய்து கேளுங்கள்" என்று கூறினார்.
மரியா, அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து, பேசத் துவங்கினார்: "என்னுடைய கணவர் மலேரியா நோயினால் இறந்தார். மூன்று மாதங்கள் சென்று, என் ஒரே மகன் ஒரு கார் விபத்தில் இறந்தார். எனக்கென யாருமி ல்லை, எதுவுமில்லை என்று உணர்ந்தேன். உண்ணவோ, உறங்கவோ முடிய வில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது எழுந்தது. ஒருநாள் நான் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, ஒரு குட்டிப் பூனை தெருவில் என்னைப் பின்தொடர்ந்து வந்தது. வெளியே அதிகக் குளிராய் இருந்ததால், அந்தப் பூனையை வீட்டிற்குள் வர அனுமதித்தேன். பாலை ஒரு தட்டில் ஊற்றி, அதற்கு முன் வைத்தேன். அதை முற்றிலும் குடித்து முடித்த பூனைக் குட்டி, என் கால்களில் தன் உடலைத் தேய்த்தது. அதைக் கண்டு, நான் சிரித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன், நான் சிரித்து பல நாட்கள் ஆகிவிட் டன என்பதை... அவ்வேளையில், எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. இந்தக் குட்டிப்பூனைக்கு நான் செய்த உதவி, இதுவரை என்னிடமிருந்து காணாமற் போயிருந்த புன்னகையை மீண்டும் கொணர்ந்ததே, இதேபோல், மற்றவர்க ளுக்கு உதவிகள் செய்தால், நான் தொலைத்துவிட்ட மகிழ்வை மீண்டும் கண்டடைய முடியுமே என்று சிந்தித்தேன்.
அடுத்தநாள் காலை, கொஞ்சம் பலகாரம் செய்து, என் வீட்டுக்கு அருகில் பல நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்த ஒருவருக்கு அதை எடுத்துச் சென்றேன். கண்களில் கண்ணீர் வழிய, அவர் தந்த புன்னகை, என்னை மீண்டும் மகிழ்வில் நிறைத்தது. ஒவ்வொரு நாளும் யாரா வது ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்யத் துவங்கினேன். அவர்களிடம் நான் கண்ட மகிழ்ச்சி, என்னையும் பற்றிக்கொண்டது. இன்று, என்னைவிட, மகிழ்வோடு உறங்கச் செல்லும் ஒருவர் இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று மரியா பேசி முடித்தார்.
மரியாவின் கதையைக் கேட்ட செல்வம் மிகுந்த பெண், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, மரியாவின் கைகளைப் பற்றி, நன்றி சொன்னார். மருத்துவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, புன்னகையோடு அவ்விடம் விட்டுச் சென்றார். நீ எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாய் என்பது வாழ்வின் அழகை நிர்ணயிக்கப் போவதில்லை; உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்வாய் உள்ளனர் என்பதே வாழ்வின் அழகைக் காட்டும் அளவுகோல்.
என்ன கொடுக்கலாம்? என்னிடம் ஒன்றுமே இல்லையே என நீங்கள் நினைக்கின்றீர்களா? ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.
பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள். உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள். உறுப்பு தானம் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம். ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம். முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்ட. தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம். மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.
வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.
கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.
சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும்.
எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும்தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது. மனதில் எழும் சலிப்பு தன்மையை, அவலத்தை துடைக்க மனதின் போக்கை மாற்றி அமைக்க நமது மனதில் தோன்றும் எண்ணங்களை அர்த்தமுள்ளவைகளாக மாற்றி வெற்றி காணவேண்டுமென்றல் மனம் என்ற குரங்கை அடக்கவேண்டும் தொடரும் சிந்தனை சிதறல்கள் பேசாலைதாஸ்

Tuesday, 16 January 2018
பக்குவமான மன நிலை!
பக்குவமான மன நிலை!
சென்ற பதிவிலே, என் சிந்தனை சிதறலாக, இயல்பான மன நிலை பற்றி, விபரித்திருதேன், இயல்பான நிலை வாழ்வில் தோன்றுவதற்கு பக்குவ மான மன நிலை வேண்டும். பக்குவமான நிலையா? அது எது என்று தெரியவில்லையா? பக்குவமான நிலை என்பது ஏற்றுக்கொள்ள தயா ராக இருக்கும் நிலை என்று பொருள் கொள்ளலாமா? ஆம் அது சரி என்று எனக்கு தெரிகின்றது. சிறுமி ஒருத்தி வயதுக்கு வந்துவிட்டாள், பக்குவ ப்பட்டுவிட்டாள் என்று நாம் சொல்லிக்கொள்வதில்லையா! அதாவது ஒரு குழந்தையை அடைவதற்கான தயார் நிலையில், உடல் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்! அதுபோலத்தான் இயல்பான வாழ்கை வாழ, அத ற்கு ஏற்ற மனப்பக்குவம் தேவை. மனப்பக்குவம் அடைவதற்கு மாபெரும் ஞானியாக, அறிவியல் மேதைகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பைபிள் சொல்கி ன்றது, ஞானிகளும் விவேகிகளும், வெட்கித்துப்போக, பாமரருக்கும், ஏழைகளுக்கும் ஞானத்தை இறைவன் கொடுத்தார் என்று. இயேசு ஒரு ஏழையாக அவதரித்தார். முகம்மது நபி, படிப்பறிவில்லதவர். கண்ணன் ஆடுமேய்த்தவர் இப்படியாக அவதாரமாக வந்தரெல்லாம் சராசரி மனிதனாக பிறந்துள்ளார்கள்.
ஞானம் பெற்ற பலரும் ஆலயங்களிலோ, வழிபாட்டு தலங்களிலோ அன்றாடம் தொழும் பக்திமான்களாக இரு ந்ததே இல்லை. ஆடு மேய்ப்பவன், துணி துவைப்பவன்,விறகு உடைப்ப வன், வேடன் என்று சாதாரண மட்டங்களில் இருந்தவர்களே நாளடைவில் பரம ஞானிக ளாக பரிணமித்துள்ளனர். எதறக்காக இப்படி நடக்கி ன்றது? உண்மை இது தான். இயற்கையானது புறச்சூழ் நிலையை பார்ப்பதில்லை. அது உள்மன வெளியை பார்க்கின்றது. மனமானது வெறூமையாக இருக்கவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நமது மனமானது வெறுமையாகின்றதோ அவ்வள வுக்கவவளவு ஞானம் நிரம்ப சந்தர்ப்பம் உண்டு.
நிறைவானது வரவேண்டுமெனில் குறைவானது நம்மை விட்டு அகழவேண்டும். ஆலயம் செல்வோர்கள், அல்லது குருக்கள் உள்ள குடும்பங்களில், பெருமிதம் நிரம்பி இருப்பதை நாம் அவதானிக்கமுடியும். இதுவும் ஒருவித அகம்பாவம் தானே! தினம் தோறும், ஆலயம் செல்பவர்கள், அல்லது சபைக்கூட்டங்களுக்கு செல்பவ ர்களை நீங்கள் அவதானித்தால் அவர்கள் இறைபக்தி உள்ளவர்கள் என்பது உண்மையே ஆனாலும் தாங்கள் இறைவனுக்கு நெருக்கமானவ ர்கள், தூயவர்கள் என்ற எண்ணப்பெருமிதம் இவர்களிடம் இருக்கின்றது. சமூகத்தில் தரமற்ற வேலை செய்து, பிழைப்பவர்கள் தாழ்மை உள்ளவ ர்களாக உள்ளத்தில் செருக்கற்றவர்களாக இருப்பதினால் ஞானப்பழ த்தின் சுவையை அனுபவிக்கும் சந்தர்ப்பம் இவர்களுக்கு கிடைக்கி ன்றது.
சூஃபி தத்துவத்தில் இதற்கொரு கதை உண்டு. திருடன் ஒருவன், ஞானியின் குகைக்குள் எதாவது கிடைக்குமா என்று திருடச்சென்றான். கும் இருட்டில் குகைக்குள், எதையோ தேடும்போது, குகைக்குள் இருந்த ஞானி, யாரது என்ன தேடுகின்றாய் . எனக்கு சொன்னால் நானும் சேர்ந்து தேடுவேன் என்றார். திருடனோ வெலவெ ளுத்து போனான். நான் திருடன் என்று சொல்ல, ஞானியோ திருடுவதற்கு இங்கு என்ன இருக்கின்றது வேண்டுமானால் என்போர்வை இருக்கி ன்றது எடுத்து செல் என்று, போர்வையை அவனிடம் எறிந்தார் அந்த ஞானி, திருடனோ ஆளைவிட்டால் போதுமென்று அதை எடுத்துக்கொ ண்டு, ஓடிவிட்டான். பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த திருடன், மாளிகை ஒன்றில் திருடும்போது வசமாக மாட்டிக்கொண்டான். நீதி மன்றில் திருடன் நிறுத்தப்பட்டபோது, நீதிபதி உனக்கு தெரிந்த யாரா வது உன்னை சரிரப்பிணையில் எடுக்க இருக்கின்றார்களா எனக்கே ட்டார். திருடனுக்கு யார் வருவார் உதவி செய்ய, ஆனாலும் சட்டென்று திருடனுக்கு குகையில் இருந்த ஞானியின் நினைவு வரவே, அவன் ஞானியின் பெயரைச்சொல்ல, ஞானியும் நீதிமன்றம் வரவழைக்க ப்பட்டு, திருடனை அழைத்துப்போக, நீதிபதி ஞானிக்கு கட்டளை இட்டார்.
திருடனை விடுவித்த ஞானியோ தன் வழியே போனார், திருடனும் அந்த ஞானியை பின் தொடர்ந்தான். உன க்கு என்ன வேண்டும், ஏன் என்னை பின் தொடர்கின்றாய் என ஞானி கேட்க, இனி என்னால் உங்களை விட்டு பிரியமுடியாது!என்றான் திரு டன், சரி வா போகலாம் ஆனால் எனக்கு கிடைப்பதை உனக்கு தருகி ன்றேன். ஆனால் அது நீ திருடும் பொருளாக இருக்காது, கண்ணுக்கு புலப்படாத பொருளாக இருக்கும் என்றார். திருடன் சொன்னான் நீங்கள் சொல்லும் அந்த கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை என்னால் உண ரமுடியும், ஏனெனில் என் உள்மனதில் நீங்கள் கோபுரமாக உயர்ந்து நிற்கின்றீர்கள். நீங்கள் தரும் அந்த பொருளை நானும் சுவைக்க ஆசி க்கின்றேன் என்றான் அதுமுதல் திருடன் அவரது சீடானாகி ஞானம் பெற்றான்.
இதில் இருந்து நீங்கள் என்ன விளங்கிக்கொள்கி ன்றீர்கள்? திருட வந்த திருடனின் மனதில், ஞானியை தன் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைக்கும் மனப்பக்குவம் அவனுக்கு ஏற்பட்டதை ஞானி உணர்ந்து, அந்த திருடனுக்கு ஞானம் மிகடைக்கும் என்ற எண்ண த்தில் சீடனாக ஏற்றுக்கொள்கின்றார். நகை பணம் என்று திருடி வந்த திருடன், ஞானப்பொருளை, மெய்ப்பொருளை கண்டுணரும் பக்கியம் பெற்றவனாகின்றான். மெய் அனுபவத்தையும் மனத்திருப்தியும் நாம் அடையவேண்டுமாயின் முதலில் நமது வாழ்வு இயல்பானதாக இருக்க வேண்டும், அந்த இயல்பு நிலைக்கு மனம் பக்குவப்படவேண்டும். மனதை பக்குவப்படுத்தும் வழிகளை நாம் தான் கண்டு உணரவேண்டும்,,,,,, இன்னும் தொடரும் என் சிந்தனை சிதறல்கள்,,,, அன்புடன் பேசாலைதாஸ்

Friday, 12 January 2018
இயல்பாக வாழ்வை கழிப்பது எப்படி?
இயல்பாக வாழ்வை கழிப்பது எப்படி? பேசாலைதாஸ்
வாழ்வில் எந்த மன உளைச்சல் இன்றியும், திருப்தியாக வாழவேண்டுமா? எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. அதுதான் இயல்பாக இருப்பது! பேருந்தில் அல்லது ரெயில் பயணத்தில், பயணம் செய்யும்போது, பக்கவாட்டில் பார்த்தால், மரங்கள் கட்டிடங்கள் பின்னோக்கி ஓடுவதை உணர்கின்றோம். உண்மையில் அவை நகரவில்லை, இயல்பாக அதே இடத்தில் நிற்கின்றன. நாம் தான் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். அதுபோலத்தான் வாழ்க்கை எண்ணும் பயணத்தில், நாம் இயல்பாக இருப்பதில்லை. எனவேதான் நமக்கு எல்லாமே வினோதமாக தெரிகின்றன. வினோதமாக எண்ணுகின்றோம். அதற்கு காரனம் நாம் இயல்பாக இல்லாமல், எண்ணற்ற முரண்பாடுகள், நம்மை சூழ அதற்குள் வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிக்குப்பட்டு கிடக்கின்றோம். எது எப்படி இருக்கின்றதோ! அதை அப்படியே நமது மனம் ஏற்றுக்கொள்ளவேண்டும், அதுதான் இயல்பு நிலை, வேறுவிதமாக சொல்லப்போனால், அதுவே யதார்த்தம் உண்மை நிலை! பிரச்சனை என்னவென்றால் இயல்பு நிலையை, யதார்த்த நிலையை. உண்மையை, மெய்ப்பொருளை, நமது மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றது. அதற்கு காரணம், நமது மனதின் மையைப்பொருளில் நான் என்ற சுயம் ஒட்டிக்கிடக்கின்றது. இந்த நான் என்பது நமது மனதில் இருக்கும் வரை, அந்த நான் என்பது ஒவ்வொன்றையும் தனக்கு விரும்பியபடியே கற்பனை செய்யும். ஆனல் நியமான உண்மை, மெய்ப்பொருள் அந்த கற்பனைக்கு முரணாக அமைகின்றது. என்வே தான் சிக்கல் ஆரம்பிக்கின்றன.
இதற்கு நான், அன்றாட வாழ்வில் இருந்து பல உதாரணங்களை காட்ட முடியும். நமக்கு பிடித்தமான நபர்கள் இருப்பார்கள், அம்மா,அப்பா, சகோதரங்கள், உற்ற நண்பர்கள், மனைவி, பிள்ளைகள், காதலன், காதலி இப்படிப்பட்டவர்களுடன் நாம் நெருங்கி பழகுகின்றோம். அவர்களுடன் தான் நமது வாழ்க்கை நகர்கின்றது. அவர்கள் பலவீனமானவர்கள், குறைபாடு உள்ளவர்கள். அதேவேளை அவர்களிடம் பலமான பக்கங்களும் உண்டு, அதுதான் இயல்பு, ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம். அவர்களின் பலத்தை,அவர்களின் நன்மையான பண்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் இருந்து நன்மைகளை மட்டுமே மனம் கற்பனை பண்ணுகின்றது. அவர்களின் பல்வீனமான பண்புகளினால் வரும் எதிர்மறையான விளைவுகளை நாம் ஏற்றுகொள்ள தயங்குகின்றோம். மறுவலத்தில் சொன்னால், பலவீனத்தோடு ஏற்றுக்கொள்ள, உறவை ஒத்துக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. இது இயல்பு நிலைக்கு மாறானது ஆகும்.
இயல்பான வாழ்கை என்பது இருப்பதை அதாவது இயல்பாக இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது, மனம் கற்பனை பண்ணும் ஆசைகளை, கனவுகளை வாழ்க்கை மீது ஏற்றிவிட்டு. அந்த கனவுகளும் கற்பனைகளும் நடக்காது போனால் மனம் வேதனைப்படும். அதற்காக கனவு காணவேண்டாம் , எதற்கும் ஆசைப்படாதே என்று நான் வாதாடவரவில்லை. ஆசைகள், கற்பனைகள் வாழ்வில் ஒட்டிக்கொள்ளாமல், தாமரையிலை தண்ணிபோல ஒட்டியும் ஒட்டாமலும் நமது ஆசைகளை வைத்துக்கொள்ளவேண்டும். ஆசைகள் நிறைவேறினால் நல்லதுதான், ஆனந்தம் தான் அதேவேளை அத்தனை ஆசைகளும் நிறைவேறுமா என்ன? வாழ்க்கை என்னும் ஆற்று பயணத்தில் புத்தர் சொல்லவது போல, ஆற்றில் இழுபட்டு செல்லும் ம்ரக்கட்டை போல, வாழ்கையையை நகர்த்தினால் வாழ்க்கை நரகமாக தெரியாது. இயல்புக்கு மாறாக ஆசைப்பட்டு கற்பனை பண்ணி வாழ்ந்தால் வாழ்வே மாயமாகவே இருக்கும். பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவுகாணும் அத்தனையும் ஈடேறுமா? என்வே இயல்பாக வாழ்வை நகர்த்துவோம்!
தொடரும்,,,

எனக்குள் நான்!
எனக்குள் நான்! பேசாலைதாஸ்
எனக்குள், என்னை அறியாமல், எழுந்த எத்த னையோ கேள்விகள்? அத்தனைக்கும் என்னால் விடை காணமுடியவில்லை. விடை காணும் அள வுக்கு அறிவோ ஞானமோ என்னிடம் இல்லை. அப்படி இருக்குமோ இல்லை இப்படி இருக்குமோ என்று நான் ஊகித்து, அனுமானித்துக்கொ ண்ட விடயங்கள் சரியோ பிழையோ நான் அறியேன். எண்ணங்களை அலையவிட்டிருக்கின்றேன். அது தன்பாட்டில் மரங்களோடு, மலைக ளோடு காற்றின் அதிர்வுகளோடு, கடல் அலைகளின் தாலாட்டில், தென்ற லின் வருடலில் முட்டி மோதி, திரும்பவும் என்னிடம் வருகின்றன. அவை எல்லாம் எதையோ எனக்கு சொல்கின்றன, அதனை கிரகித்துக்கொ ள்ளும் பக்குவமோ ஞான ப்பார்வையோ என்னிடம் இல்லை. உள்மன உணர்வுகள் என்னவோ எனக்குள் ஒரு மன உழைச்சலை ஏற்படுத்துகின்றது.
வயது அறுபதுகளுக்குள் அனுமதி இன்றி நுழைகின்றது. வாழ்வில் இன்னும் இருப்பது ஒன்றிரண்டு பத்துக்கள்! சிலவேளை அத ற்கும் அவகாசம் இல்லாமல் வாழ்வு முடிந்துவிடக்கூடும்! எதனையும் சாதித்ததில்லை, யாருக்கும் பயண்பட வாழ்ந்ததில்லை. சராசரி மனித ர்கள் போல, அன்றாட வாழ்க்கைப்போராட்டத்தில் காலங்கள் கரைந்தோ டிவிட்டன. திரும்பிப்பார்த்தால் வாழ்வில் சந்தித்த மனமகிழ்ச்சியான நாட்கள் எதுவும் இல்லாதது போல இருக்கின்றது, மாயையின் பிம்பங்க ளைப்போல,,,,
ஏக்கங்கள்,ஏமாற்றங்கள், வஞ்சகங்கள், நிராகரிப்புகள், தோல்விகள், சலிப்புகள் இப்படி சங்கிலி கோர்வை போல வாழ்வில் ஒரு தொடர்கதையாக,,,, நல்ல மனிதர்களை,, நல்ல இதயங்களை,, கருணை உள்ளங்களை, பாசப்பிணைப்புகளை வாழ்க்கையில் தொலைத்துவி ட்டோமோ என்ற இனம் புரியா ஐயம் மேலிடுகின்றது. வாழ்வை திரும்ப தொடங்கவும் முடியாது, வாலிபமும், வசந்தமும் இனி வருவதில்லை, கடந்தவை கடந்தவைதான்!
இனி இருக்கும் காலங்களை எப்படி வாழ்ந்து கழிப்பது? அதுவே எனக்குள் எழும் கேள்விப்பிரவாகம்! ஏழைகளுக்கு
உதவி செய்து வாழ்ந்து கழிக்கலாம், செல்வம் அதற்கு வேண்டுமே! அன்போடு வாழ்ந்து பார்க்காலம் என்றால் அன்பை பகலில் விளக்கு வைத்து தேடவேண்டிய நிலை! வேறு என்னதான் செய்து வாழ்ந்து மன த்திருப்தி அடையாலாம், எல்லாவறையும் விட்டொழித்து இயல்பாக இருப்பதுவே மெய்ப்பொருள் தேட்லுக்கு வழியாக எனக்கு தெரிகின்றது!
இயல்பாக இருப்பது எப்படி? அதுவே ஒரு தேடல்தான்,,,,,,தொடரும் பேசாலைதாஸ்

Subscribe to:
Comments (Atom)