Thursday, 1 February 2018

பேரானந்த பரம் பொருள்! பேசாலைதாஸ்

பேரானந்த பரம் பொருள்!  பேசாலைதாஸ்
என் சிந்தனைச்சிதறினிலே, சென்ற தடவை, உன்னை நீ அறிந்து கொள், உன்னையே முதலில் நேசி, என்று எழுதி இருந்தேன். இதற்கு காரணம் உனக்குள் இருக்கும் இறைவனை நீ அறிய விரும்பினால், உன்னை முதலில் அறிய வேண்டும் என்று நான் நினைத்தேன். கடவுளை நேசிக்கவேண்டுமா? முதலில் உன்னை நேசி என்று எழுதினேன். உனக்குள் இருக்கும் கடவுலே பரம் பொருள். பரம் பொருள் என்றாலே அது கடவுள் தான்! கடவுளா? அது எது எனக்கேட்டு அலைவோர் பலர், யாரும் கடவுளை இன்னும் கண் முன்னே கண்டதில்லை. அவரவர் தன் இயல்புக்கு ஏற்ற வண்ணம், கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று உருவகமாகவும், உருவமில்லாமாலும், கற்பனையில், எண்ணத்தில் வடிக்கின்றார்கள். சிலர் இயற்கை என்கின்றார்கள், சிலர் கடவுளின் சாயல் மனிதன் என்கின்றார்கள். கவிஞன் ஒருவன், அவன் தான் கண்ணதாசன், கடவுள் என்றால் வாழ்வின் அனுபவமே கடவுள் என்றான்.
அனுபவமே கடவுள் ♥
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் 
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
பாசம் என்பது யாதெனக் கேட்டேன் 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் 
மணந்து பாரென இறைவன் பணித்தான்! 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன் 
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
வறுமை என்பது என்னெனக் கேட்டேன் 
வாடிப் பாரென இறைவன் பணித்தான்! 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! 
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் 
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! 
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!.........  ♥ கண்ணதாசன் 

                                                                   அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன் என்று கண்ணபரமார்த்தாவை குறித்து அவன் எழுதினான். நம் வாழ்வின் மையமாக, நம் வாழ்வின் அனுபவமாக இறைவன் இருக்கின்றான்.இருக்க விரும்புகின்றான். இதனை நாம் கண்டுகொள்வதில்லை.  கடவுள், தெய்வம், பரம்பொருள் இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. சைவ சித்தாந்தம் இப்படிக்கூறுகின்றது. பரம்பொருள்(கடவுள்/இறைவன்) ஒன்றுதான், ஆனால் தெய்வங்கள் பல. பரம் என்றால் ஒரு பொருளின் முந்தைய நிலையை குறிக்கும்.

                                                                              பரம்பொருள் என்றால் பிரபஞ்சம் உருவாதற்க்கு முன் இருந்த ஒரு பொருளாகும். அப்பொருளிலிருந்து உருவானதே அண்டசராசரங்களும் அனைத்து ஜீவராசிகளும். அப்ப ரம்பொருளே ஆதியும் அந்தமும் அற்ற பரமசிவன். பிரபஞ்சம் உருவா வதற்க்கு தேவையான சக்தியே ஆதிபராசக்தி. அ-அரன்(சிவன்), உ-உமை(சக்தி) ம்-பிரம்மம்(படைத்தல்) (அ+உ ம் = ஓம்)சிவமும் சக்தியும் இணைந்து பிரபஞ்சம் உருவாகும் போது ஓம் என்னும் ஒலி உண்டானது. அதனால் சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியி ல்லை. இவ்விருவரும் இல்லையேல் அண்டசராசரங்களும் ஜீவராசிகளும் இல்லை. அதுவே பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம் ஏதுமற்ற ஏகாந்த நிலை.
                                    பரம் என்றால் ENERGY, பொருள் என்றால் MATTER, இரண்டும் தனி தனியாக இருக்கும்போது சும்மா கிடக்கும்,   இரண்டும் ஒன்று சேரும் போது, இயக்கம் நடைபெறுகிறது. "நான் சிவனே என்று சும்மா இருந்தேன். அவன் தான் என்னை தூண்டிவிட்டான்" என்று சிலர் பொலிஸிசில் முறைப்பாடு செய்வதை பார்த்திருப்பீர்கள். சும்மா என்பது சிவனைக்குறிக்கின்றது. பரம் பொருளை நீ உணரவேண்டுமா? சும்மா இரு என்று சித்தர்கள் சொல்லுவார்கள். நான் சின்ன வயதில் கேட்ட ஒரு வாசகம் உண்டு. அது எங்கிருந்து வந்தது என்று எனக்கு விள க்கமில்லை. "கண்மூடி சும்மா மெளனியாய் இருப்பதற்கெண்ணினேண். என் எண்ணமிது சாமி நீ, அறியாயோ? சர்வ பரிபூரண சச்சிதான ந்தனே"! சச்+சித்தம்+ ஆனந்தம்.
                                                                             தெய்வம் என்றால் தெய். அதாவது பரம்பொருளிலிருந்து தேய்ந்து உருவானதே தெய்வம். சிருஷ்டி இயக்கம் சரியாக இயங்க பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. தெய்வ ங்கள் உருவாக்கப்பட்டவை, கோட்பாடுகளை, சித்தாந்தங்களை விளங்க வைக்க, இயற்கையை புரிந்து கொள்ள, தெய்வங்கள் உருவாக்கப்பட்டு ள்ளன. விநாயகர் (பிள்ளையார்) இது ஒரு உருவக தெய்வாம்சம், யாணை களினாலும், எலிகளினாலும், தமது பயிர்ச்செய்கைகளுக்கு பங்கம் விளைகின்றதே என்று கவலைப்பட்ட மனிதன், யானை முகத்தோடு, ஒரு தெய்வத்தை படைத்து, அதற்கு வாகனமாக எலியை உருவாக்கி, லட்டும் கரும்பும் படைத்து, அந்த தெய்வத்தை குளிரவைக்க, வழிபாடு செய்தான். அதுபோலவே, தான் பேசிய மொழிக்காக, அதன் அழகிற்காக, தனது தமிழ் மொழியின் கடவுளாக, முருகன் என்ற தெய்வத்தை தோற்று வித்தான்.

No comments:

Post a Comment