Monday, 12 December 2022

பெண் ஞானம்

பெண் ஞானம்  பேசாலைதாஸ் 

ஞானிகள் அதிகமாக எல்லாருமே ஆணாக இருப்பதன் மர்மம் என்ன? ஒரு பெண் கூடவா புத்தரைப் போல், மகாவீரரைப் போல் ஞானியாகவில்லை?"

பெண்களோடு நெருங்கிப் பழகும் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.
ஒரு பெண்ணோடு தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள். புரிந்து கொள்ள முடியாது.
அவளது போக்கைப் பார்க்கும் அவள் வேறு கிரகத்தைச் சேர்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.
அதே போல் தான் ஒரு பெண்ணின் நிலையும்.
எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்.
உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள்.
ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை.
தன் மனைவியோடு பல மணிநேரம் செய்யும் வாதத்தைவிட ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள்.உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.
ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்." என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள்.
பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வு பூர்வமானவள். ஓர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது, செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும்.
கணவன் மனைவியிடம் எதையும் தர்க்க ரீதியில் பேசி புரியவைக்க முடியாது.
அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர்கள் மௌனமாகிவிடுகிறார்கள். பின் செவிடுகளாகிவிடுகிறார்கள்.
பெண்களை பேச விடுகிறார்கள். அவள் “ என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?” என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுவார்கள்.
கடவுள் ஏன் முதலில் ஆணைப் படைத்து, சிறிது நேரம் கழித்துப் பெண்ணைப் படைத்தார் தெரியுமா?
பாவம், ஆண் அந்த நேரம் நிம்மதியாகப் இருக்கட்டுமே என்றுதான்.
ஆண்கள் ஏன் பெண்டாட்டி தாசர்களாக, ஆமாம்சாமிகளாக இருக்கிறார்கள்? ஏறக்குறைய எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்.
எவ்வளவு நேரம் தான் மனைவியோடு வாதம் செய்ய முடியும் சொல்லுங்கள். மனைவியோடு வாதம் செய்வதில் பயனேயில்லை.
அப்படி வாதம் செய்யும் போது நீங்கள் முட்டாளைப் போல் காட்சியளிப்பீர்கள். மனைவியோடு வாதிடுவதற்குப் பதிலாக சுவரோடு வாதிடலாம்.
நீங்கள் வாதம் செய்வீர்கள். உங்கள் மனைவி பெருங்குர லெடுத்து அழுவாள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரி யாது.
நீங்கள் அவளிடம், "அமைதி, அமைதி. நாம் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!" என்று அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் போது அவள் சாமான்களைத் தூக்கியெறிய ஆரம்பிப்பாள். பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். கதவை டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் சாத்துவாள்.
அவளோடு பேசி என்ன பயன் என்று விரக்தி வந்துவிடும் உங்களுக்கு. அவளோடு எப்படித் தொடர்பு கொள்வது? அவளை எப்படிப் புரிந்து கொள்ளச் செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.
அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
அதன் பின் பெண்டாட்டி தாசனாகிவிடுவீர்கள். அவளைப் பொறுத்த மட்டில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் எல்லாம் கவைக்கு உதவாத குப்பை.
“நான் என் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறேன்." என்றான் ஒருவன்.
'அதற்கு வலுவான காரணம் வேண்டும்." என்று அவனது வக்கீல் சொன்னார்.
'அவள் சதா எதையாவது தைத்துக் கொண்டேயிருக்கிறாள்.” “ '
அது ஒரு காரணமா? நிறையப் பெண்கள் தைக்கிறார்களே!"...
நாங்கள் உடலுறவு கொள்ளும் போது கூட அவள் தைத்துக் கொண்டிருக்கிறாள்.” "என்றான் கணவன்.
ஆண்மை நிர்மலமாக இருக்கிறது, பெண்மை கலங்கலாக இருக்கிறது
ஆண்மை செயல்பாட்டுடன் இருக்கிறது. பெண்மை செயலற்ற நிலையாகப் பரிமளிக்கிறது.
அதனுடைய வேராக இருக்கும் சாரத்திலிருந்து வெளிப்படும் இறைமை,பிரபஞ்சத்தில் உள்ள கடைசிப் பொருள் வரை ஊடுருவிப் பாய்கிறது. அதுதான் வானத்தையும், பூமியையும், இரண்டுக்கும் இடைப்பட்ட எல்லா பொருள்களையும் அளித்துக் காக்கிறது.
நிர்மலமான தெளிவே தெளிவற்ற கலங்கலை உருவாக்குகிறது.
அசைவுதான் அசைவற்ற இருப்புநிலையை உருவாக்குகிறது.
புத்தர்கள் எப்போதும் ஆண்களாகத்தான் இருப்பார்கள்.
ஞானத்தை அடைய, இறைவனை அடைய ஒரு பெண்ணின் அணுகுமுறை அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கும்.
அதனால் தான் புத்தர்களில் பெண்பாலார் இருக்க மாட்டார்கள். '
ஞானம் பெற்ற பெண்கள் பக்த மீராவாக, மேக்டலீனாக, லல்லாவாக, ரபியாவாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் புத்தர்களாக இருக்க மாட்டார்கள்.
அவர்கள் அணுகுமுறை வேறுபட்டதாகத்தான் இருக்கும். மீரா அறிவுஜீவித்தனமாகப் பேசமாட்டாள். பக்தி ரசம் சொட்டச் சொட்டப் பாடுவாள்.
புத்தரைப் போல் மீரா உபதேசங்கள் செய்ததாக வரலாறு இல்லை. மீராவின் பாட்டும் நடனமும் முற்றிலும் வேறு வகையைச் சேர்ந்தது.
மீரா வாத-பிரதிவாதங்களில் கலந்து கொள்ள மாட்டாள். அது பெண்மையின் வழியல்ல. அவளுடைய வாதம் எல்லாம் அவளுடைய அழகு நடனம் தான்.
பரவசம் பொங்கும் நடனம்தான் அவள் நம் முன் வைக்கும் வலுவான வாதம்.
உங்களால் அவளுடைய நடனத்தைப் பார்க்க முடிந்தால், அதில் பொதிந்திருக்கும் பரவசத்தை உணர முடிந்தால் நீங்கள் ஞானம் பெற்றவர்களாகிவிடுவீர்கள்.
ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள்.
பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.
இருவரும் ஞானமடையலாம் வெவ்வேறு வழிகளில்.
__பேசாலைதாஸ்

Wednesday, 23 November 2022

மனதை அனுபவி....

 மனதை அனுபவி....



நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை.
முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம்
பிடித்து விடும்.
ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு
இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி
செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில்
மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக
கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த
முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.
இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு
முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள்.
மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு
அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது
ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த
இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.
ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை
வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன்
மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ
எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய்
குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின்
சங்கிலியை பார்.
எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு
முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி
செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு
கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ
உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு
அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது
உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து
இருப்பீர்கள்.
எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட
வேண்டும்.
சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும்
அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும்.

150

Thursday, 3 November 2022

பெருத்தன சிறுக்கும்!! சிறுத்தன பெருக்கும்!!

 பட்டினத்தார் சொன்னது...

உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?
இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டதா?
பெருத்தன சிறுக்கும்!!
சிறுத்தன பெருக்கும்!!
என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?
"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.
இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!
நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!
இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!!
அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!!
அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.!!
பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்!!
இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?
சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,
காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,
பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்!!
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு,
மண் என்னைப்பார்த்து, "மகனே!!! நானிருக்கிறேன்....
என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது....
அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம்
வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீ நீயாக இரு...
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது....
அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்....
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது....
எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை...
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன...
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்....
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.....
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.....
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
"நான்" தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.

Friday, 7 October 2022

வடிவமில்லாத சாளரம்

 

வடிவமில்லாத சாளரம்

நாம் மின்சாரத்தைக் கண்டுபிடித்தோம்.
அதனை அறியாத பல சமூகங்களை விடவும் நமது சமுதாயம் மிக முன்னேறியது என்பது உறுதிதான்.
நாம் வானொலி அலைகளைக் கண்டுபிடித்தோம்.
ஒரு வினாடிக்குள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்திகளை அனுப்ப நம்மால் முடியும்.
சில அடி தூரத்திலிருப்பவர்களுக்கும் சத்தம் போட்டுச் சொல்லும் ஒரு சமுதாயத்தினை விடவும் நிச்சயமாக நாம் முன்னேற்றம் அடைந்தவர்களே.
ஆனால் வாழ்வின் மிக உயர்ந்த மூலாதாரத்துடன் தொடர்பு கொள்ளப் பாலம் அமைக்க முடிந்த மக்களோடு ஒப்பிடுகையில் நாம் வெறும் குழந்தைகளே.
நமது மின்சாரமும், வானொலியும் மற்ற கண்டுபிடிப்புகளும் வெறும் விளையாட்டு பொம்மைகள்தான்.
ஒரே திசையில் தீவிரமாக உழைத்தவர்களால்தான் வாழ்வின் இறுதி ரகசியத்தோடு தொடர்பு கொள்ளும் கலையைக் கண்டறிய முடிந்தது.
நான் குறிப்பிட்டதுபோல, விக்கிரகத்தின் ஒரு அம்சத்தைத்தான் மனிதனால் காண முடியும்.
அந்த வடிவத்திற்கு அப்பால், வடிவமற்ற நிலையைக் காண ஒரு சாளரம் திறந்து கொள்கிறது.
ஒரு வீட்டிற்கு வடிவம் இருப்பதுபோலவே வீட்டின் சாளரத்திற்கும் ஒரு வடிவம் இருக்கும்.
வடிவமில்லாத சாளரம் இருக்க முடியாது.
ஆனால் சாளரம் திறந்து வானத்தைப் பார்க்கும்போது நீங்கள் வடிவமற்ற ஒன்றிற்குள் பிரவேசித்துவிடுகிறீர்கள்.
சாளரத்தைத் திறந்து வானத்தைப் பார்த்திராத ஒருவரிடம்,
நான் என் வீட்டு சாளரத்தைத் திறந்து எல்லையற்ற வடிவமில்லா வானத்தைக் கண்டேன் என்று சொன்னால்,
அதனைக் கேட்கும் அவர் உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்பார்.
ஒரு சிறிய சாளரத்தின் மூலம் எல்லையற்றதை எப்படிக் காண முடியும் என்றுதான் நினைப்பார்.
ஏனென்றால் அவரைப் பொறுத்தவரையில் சாளரத்தின் வழியாகத் தெரிவது சாளரத்தின் அளவாக மட்டும்தானே இருக்கமுடியும்?
அதன் வழியாகப் பார்த்தே இராத ஒருவரை நாம் எவ்வாறு நம்ப வைக்க இயலும்?
தர்க்கரீதியிலான கேள்விதான்.
ஆனால், அதன் வழியே பார்த்தே இராத அவரை எவ்வாறு நம்ப வைக்க முடியும்? தன் வழியாகப் பார்க்கக் கூடிய பிரதேசத்திற்கு ஒரு சாளரம் எல்லை வகுத்தது போல,
தன் மூலமாக வடிவிலா பரம்பொருளைத் தரிசிக்க விக்கிரகம் எல்லை வகுப்பதில்லை.
உருவில் வெளிப்படாத பொருளினைக் காண விக்கிரகம் தடையாக இருக்கிறது என நினைப்பது பெரும் தவறு.
சாளரத்தை (சிலைகளை) உடைப்பதன் மூலம் வானத்தை உடைத்துவிடலாம் என நினைப்பவர்கள் இந்த உலகில் ஏகப்பட்ட முட்டாள்தனத்தை உருவாக்கிவிட்டார்கள்.
விக்கிரகங்களை உடைப்பதன் மூலம் உருவ வழிபாட்டை அழித்து விடலாம் என நினைப்பவர்கள் பைத்தியங்களை விடவும் மோசமானவர்கள்.
வழிபாட்டின் கலையையும் வழிபாடு உண்டாக்கும் ரசவாதத்தையும் புரிந்து கொள்ள முடியாதவர்களே விக்கிரகங்களை அழித்துவிட நினைக்கிறார்கள்.
வழிபாடு என்பது உள்ளார்ந்த, அகவயப்பட்ட, தனி மனித விவகாரம். அதனை விளக்கவும் முடியாது; செய்து காட்டவும் முடியாது.
ஏனென்றால் அகவயப்பட்ட வாழ்வின் சொந்த அம்சங்கள் எவையும் செய்துகாட்ட இயலாதவை.
என் இதயத்தை வெட்டிப் பிளந்தால் அதில் நீங்கள் அன்பைக் காண முடியாது.
வெறுப்பையோ, சினத்தையோ, மன்னிப்பையோ அல்லது கருணையையோ அதில் காணவே இயலாது.
இரத்த ஓட்டத்திற்காக அது துடிப்பதனை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.
ஏதோ ஒரு மருத்துவர் என்னை அறுவை சிகிச்சை மேசைமேல் படுக்க வைத்து, என் இதயத்தைச் சோதித்து, நான் என்றுமே அன்பையோ அல்லது வெறுப்பையோ உணர்ந்ததில்லை என சான்றிதழ் தந்தால் அவர் சொன்னது தவறு என மறுக்க எனக்கு எந்த வழியும் இல்லை.
என்னிடம் அன்பிருந்தது என்று நான் சொன்னால் அவர் ஒப்புக் கொள்வாரா என்ன?
அதற்குப் பதிலாக எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக அல்லவா அவர் சொல்வார்?
நான் அவரிடம் "நீங்கள் அன்பு, வெறுப்பு போன்ற உணர்வுகளை அனுபவித்தது உண்டா?" என்று கேட்டால்,
அவர் தர்க்கரீதியானவர் எனில், நேர்மையானவர் எனில்,
தனக்கும் அம்மாதிரியான உணர்வு மயக்கங்கள் உண்டு என ஒப்புக் கொள்வார்.
மற்றபடி, இதயம் என்னவோ இரத்தத்தை உந்திக் கொடுக்கும் உறுப்பு மட்டுமே.
ஆனால் அன்பையோ, வெறுப்பையோ உணரக்கூடியது இதயம் போல வேறு எதுவும் இல்லை.
உங்கள் கண்களை அறுத்து ஆராய்ந்தால் அவற்றில் நீங்கள் கனவுகள் கண்டதற்கான ஆதாரத்தைக் காணமுடியாது.
நாம் எல்லோரும் தினமும் கனவுகள் காண்கிறோம்.
அவை எங்கே வாழ்கின்றன?
கனவு என்பது பொய்யாக இருக்கலாம். ஆனால் அது இருப்பது பொய்யில்லை.
ஒரு கனவானது எவ்வளவு இயல்புக்கு மாறாக இருந்தாலும் அது உள்ளே எங்கோ நிகழ்ந்ததுதான்.
உங்கள் கனவுகள் உங்களுக்குள் ஏதோ நடந்திருக்கின்றது என்பதனை உணர்த்தினாலும் புறவயத்தில் இருக்கும் கண்களால் எதனையும் வெளிப்படுத்த முடிவதில்லை.
அகவயப்பட்ட உள்ளுணர்வு சார்ந்த எதனையும் வெளியில் பார்க்கவே இயலாது.
நாம் விக்கிரகத்தைப் பார்க்க முடியும்.
இதயத்தை, கண்ணைப் பார்ப்பது போல.
ஆனால் வழிபாட்டினக் காண முடியாது. அது காதலைப் போன்றது;
கனவினைப் போன்றது.
ஒரு கோவிலைக் கடந்து செல்லுகையில் உள்ளிருக்கும் விக்கிரகத்தை நாம் பார்க்கலாம்.
ஆனால் வழிபாட்டினைப் பார்க்க முடியாது. வழிபாடு என்பது உள்ளுக்குள் நிகழ்வது.
வழிபாட்டிற்கு விதிமுறைகள் இருந்தால் வழிபாடு செத்துப் போகும்.
காதலுக்கு விதிமுறைகள் இருந்தால் அது செத்துப் போவது போல.
உள்ளுணர்வின் வெளிப் பிராவகமே காதல்.
ஒரு தனிமனிதனின் சொந்த உணர்வு அது.
இதிலுள்ள சர்வதேசிய உண்மையை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
இருவர் காதலிக்கையில் அந்த இருவரும் தத்தமது சொந்தத் தனிவழிகளிலேயே காதலிக்கிறார்கள்.
வெளிப்பாடு முற்றிலும் வேறாக இருந்தாலும் அனுபவத்தில் ஓர் ஒற்றுமை இருக்கிறது.
அவர்களின் காதல் தனித்தன்மை கொண்டதாக இருந்தாலும் இருவரின் காதலுக்குள்ளும் ஒரே ஆத்மாதான் குடியிருக்கிறது.
அதுபோல விக்கிரகத்தைக் காணலாம்; வழிபாட்டினைக் காண இயலாது

Tuesday, 1 March 2022

இணைந்திருங்கள் என்கிறார் கடவுள், இல்லை என்கிறேன் நான்!

இணைந்திருங்கள் என்கிறார் கடவுள், இல்லை என்கிறேன் நான்! பேசாலைதாஸ் 


சூஃபிகள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒருவர் மக்களுடன் இணைந்திருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். 

இல்லையேல் அந்த பற்றுதலே கடவுளுக்குத் தடையாக, முட்டுக்கட்டையாகிவிடும்.

நீங்கள் உங்கள் பெண்ணுடன் இருங்கள் மற்றும் உங்கள் ஆணுடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுடன் இருங்கள். உங்கள் நண்பர்களுடன் இருங்கள். 

ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.  இங்கே நாம் அனைவரும் அந்நியர்கள். நமது ஒற்றுமை என்பது தற்செயலானது.  

நாம் அனைவரும் பயணிகள். சாலையில் சந்தித்தோம்.  சில நாட்களுக்கு  நாம் ஒன்றாக இருப்போம்.  அதற்கு நன்றியுணர்வு கொள்வோம்.

ஆனால் விரைவில் அல்லது அதற்குப் பிறகு உங்கள் மனைவி இறந்துவிடுகிறார். அல்லது அவள் தன் சொந்த வழியில் செல்கிறாள். எங்கே என்று உனக்குத் தெரியாது.  

அல்லது உங்கள் மனைவி உங்களை விட்டு பிரிந்து செல்கிறார்.  அல்லது நீங்கள் வேறு யாரையாவது காதலிக்கிறீர்கள்.  

உங்கள் மகன் வளர்ந்துவிட்டான் அவன் தன் உயிரைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு உங்களை விட்டு விலகிச் செல்கிறான்.  

ஒவ்வொரு மகனும் பெற்றோரை விட்டு நகர ஆரம்பிக்கிறான்.நாம் அனைவரும் இந்த சாலையில் சில நாட்கள் மட்டுமே ஒன்றாக இருக்கிறோம்.  

நாம் ஒன்றாக இருப்பது என்பது தற்செயலானது.  அது என்றென்றும் இருக்கப் போவதில்லை.

எனவே மக்களுடன் இருங்கள். மக்களுடன் அன்பாக இருங்கள், மக்களுடன் கருணையுடன் இருங்கள்.  ஆனால் இணைந்திருக்காதீர்கள்.  

இல்லையெனில், உங்கள் இணைப்பு உங்களுக்கு அப்பால் செல்ல போதுமான சுதந்திரத்தை அனுமதிக்காது.

இருப்பதை கொண்டு,,,,,

இருப்பதை கொண்டு,,,,, பேசாலைதாஸ் 


இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து

சீன ஞானி லாவோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். 

பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை.

 “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

 கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! 

இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!..

இந்த வெறுமையை தான்...சித்தர்கள்

சூனியம்..பரவெளி...பரப்பிரம்மம்

என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்....