Saturday, 30 December 2023

வைரமாளிகை

 980 களில் யாழ் பஸ்நிலைய பயணிகள் இவரைப் பற்றி அறிவர் .

வைரம் பாய்ந்த ,  ஆறடி உயர உடலும் , கணீர் குரலும் , கனிவான நெஞ்சமும் கொண்ட வைரமாளிகையையின் குருதியை நம்மவன் ஒருத்தன் குடித்தான் .


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


              வைரமாளிகை

############################$####


வைரமாளிகை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையைப் பின்புலமாய்க் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்த நகைக்கடையைவிட ஒரு மனிதனின் பெயராகவே யாழ்குடாநாடு எங்கும் அறியப்பட்டு இருந்தது. வைரமாளிகை (Diamond House)என்று தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் சுவிப் டிக்கற், பத்திரிகை விற்பனை என்பவற்றுடன் விளம்பரமும் செய்யும் மனிதரான வைரமாளிகையையே எமது பேசுபொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை "22 கரட் தங்க நகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது" என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ் நிலையத்தைச் சுற்றி வருவார். கஸ்தூரியார் வீதி ஸ்டான்லி வீதி ஆஸ்பத்தியடி என்று காணப்படுவார். கிட்டத்தட்ட 1960 முதல் 1987வரையில் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் பஸ் நிலையத்தில் அவரைக் கட்டாயம் கண்டிருப்பார்கள். நல்லூர்த் திருவிழாவா சென் பற்றிக்ஸ் பெரிய கோவில் விசேடமா அங்கெல்லாம் அந்த நீலநிற வைரமாளிகை விளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென்படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ் பஸ்நிலையத்தையே சுற்றி வருவார். உரத்த குரலில் திடுக்கிடும்படி பேசுவார். சத்தமிட்டு சிரித்து பற்களை நற நற என்று சத்தம் வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரன் போல நடப்பார். ஓடுவார். ஆடுவார். பாடுவார். வெயில் மழைக்கு ஒதுங்காத ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இடைவிடாத இயக்கமுடையவர் வைரமாளிகை.


தன்னை வியப்புடனும் பயத்துடனும் பார்க்கும் குழந்தைகட்கு அருகே சென்று வைரமாளிகை விளையாட்டுக் காட்டுவார். மேஜிக் காட்டி பொக்கற்றிலிருந்து இனிப்பு வரவழைத்து தருவார். நகருக்குப் புதியவர்களுக்கு போகவேண்டிய இடங்களை விளக்க நேரம் எடுத்துக் கொள்வார். முதியவர்கள், அங்கவீனர்கள், பெண்களுக்கு உதவி செய்வார். தெருக்களைக் கடக்க உதவுவார். வழிகாட்டுவார். யாழ் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்கள் செல்லும் நேரம் இடம் திசை, எந்தெந்தக் கிராமம் தெருக்கள் ஊடாகச் செல்கிறது என்பதெல்லாம் விளக்கிச் சொல்வார். "பருத்தித்துறை 750 இலக்க பஸ் வெளிக்கிடுகிறது. 577 இலக்க தெல்லிப்பழை பஸ் வெளிக்கிடுகிறது ஏறுகிறவர்கள் எல்லாம் ஏறுங்கள்" என்ற அவரின் குரல் யாரும் வேதனம் தராமலே ஒலிக்கும். யாழ் பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்குக் காத்திருக்கும் மக்களுக்கு வைரமாளிகை சிறந்த பொழுதுபோக்கு. எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வைரமாளிகை நகைக்கடை விளம்பரத்துடன் சுவிப் டிக்கற் விற்பார். சிலசமயம் பத்திரிகைகள் சஞ்சிகைகள் கொண்டு திரிவார். பத்திரிகைகளில் வரும் செய்திகளை உரக்கச் சத்தமிட்டு சொல்வார். அந்தக் காலத்தில் கோகிலாம்பாள் வழக்கு நடைபெற்ற சமயம் அமிர்தலிங்கம் கோகிலாம்பாளுக்காக வாதாடியபோதும் அவளுக்குத் தண்டனை கிடைத்தது. அப்போது தீப்பொறி பத்திரிகை அமிர்தலிங்கத்தை கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம் என்று எழுதியது. ஆங்கில மோகமும் மிதப்பும் கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தை சீ சீ பொன்னம்பலம் என்று எழுதியது. இச்செய்திகளை வைரமாளிகை சத்தம் போட்டுச் சொல்வார். வைரமாளிகைக்குப் பின்னால் திரிந்தால் பேப்பர் வாசிக்கத் தேவையில்லை என்று பகிடியாய்ச் சொல்லப்படுவதுண்டு.


அக்காலத்தில் தொலைக்காட்சிகள்; வராத காலம். ஒரு பேப்பரை வாங்கிப் பலர் படிப்பார்கள். வாசிக்கும் பழக்கம் வளரத் தொடங்கிய காலம். அக்காலத்தில் வைரமாளிகை ஊர் உலக நடப்புகளையும் தன் சொந்தக்கதைகளையும் ஒன்றுசேரப் பேசும் மனிதராக மக்கள் தொடர்பாளராக இருந்தார். அவர் ஒரு விளம்பரம் செய்யும் ஆளாக பேப்பர் சுவிப் டிக்கற் விற்கும் ஒரு அலைந்து திரியும் வியாபாரியாக இருந்தார் என்பதையும் மீறி அவருள் மனிதர்களிடம் பேசும் உரையாடும் மக்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவிட முடியாத பண்பு இருந்தது. தனது வியாபார, விளம்பர விடயங்களுக்கு வெளியேதான் அவர் அதிக விடயங்களைப் பேசுவார். வேடிக்கை, சிரிப்பு, முரட்டுத்தனம் இடையறாப் பேச்சுக் கொண்ட உணர்வுபூர்வமான தீவிரமான மனிதன் வைரமாளிகை. பினாட்டு, கூழ், சிவப்புக் குத்தரிசியின் பெருமை பேசி முருங்கைக்காய் கறியோடு தன் தாயிடம் சோறு தின்ற கதை, சனிக்கிழமை உடம்புக்கு எண்ணை தேய்த்து சீயக்காய் அரப்பு வைத்து குளிக்கும் அவசியம் என்பதெல்லாம் யாரும் கேளாமலே அவரின் விபரிப்புகளில் இடம் பிடிக்கும். நல்லூர் கொடியேறி விட்டது சன்னிதியானின் திருவிழா பாசையூர் அந்தோனியார் திருவிழா சென் பற்றிக்ஸ் பெரிய கோயில் கொண்டாட்டம் எல்லாம் அவரிடம் செய்தியாக மக்களுக்கு வரும்.


அவரின் சொந்த இடம் மானிப்பாய். குடும்பம் எதுவும் கிடையாது. கொஞ்சக்காலம் மறியலிலும் இருந்தவர் என்று சனங்கள் அவரைப்பற்றி பேசிக் கொண்டார்கள். அவருக்கு வைர மாளிகை நகைக்கடையிலிருந்து விளம்பரம் செய்வதற்கு கூலியாக மாதம் 60 ரூபாவும் புதுவருடம் தீபாவளி விசேடங்களுக்கு கொஞ்சக் காசும் கிடைத்து வந்தது. அவர் பகல் பொழுதில் கிடைத்ததைச் சாப்பிட்டு பழைய மாக்கற்றுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தானே வாங்கி வைத்திருக்கும் தேயிலை, பால்ரின்னைக் கொண்டு பால் தேத்தண்ணி போட்டுக் குடிப்பார். இரவு படுக்க வைரமாளிகை நகைக்கடைக்குப் போவார். 1980களில் யாழ்ப்பாணம் மாறத் தொடங்கிவிட்டது. பலர் வெளிநாட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகள் விளம்பர சேவைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. வைரமாளிகையின் தொடர்ச்சியாக யாழ் பஸ்நிலையத்தில் மணிக்குரல் விளம்பரச் சேவை தொடங்கிவிட்டது. போர் வந்தபோது வைரமாளிகையினால் பழைய தன் வாழ்வைத் தொடர முடியவில்லை. சுவிப் டிக்கற் பத்திரிகை விற்பனைகள் இல்லை. நகை வாங்குவோர் குறைந்ததுடன் நகைக்கடையான வைரமாளிகையின் ஆதரவும் நெருக்கடியாகிவிட்டது. அவர் 1987ம் ஆண்டில் இந்திய இராணுவத்திடம் உணவுப் பொருட்களை விலைக்கு சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்து தனது வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக் கொள்ள முயன்றார்


வைரமாளிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படையான மனிதன். அவரிடம் இரகசியங்கள் இருந்ததில்லை. மனிதர்களுடன் உறவாடி வாழ்ந்த மனிதன். வைரமாளிகை யாழ் பிரதேச மக்களின் விகடகவி. அவர்களின் தெனாலி ராமன். யாழ் பிரதேச மக்களின் நினைவுகளோடு கலந்தவன். யாழ்ப்பாண நகரின் உயிருள்ள பொது அடையாளங்களில் ஒருவன். யாழ் பஸ் நிலையமும் நூல் நிலையமும் திரும்பி விட்டன. ஆனால் வைரமாளிகையையோ உடைத்தெறியப்பட்ட யாழ்ப்பாண கோட்டையைப் போல என்றும் திரும்பாதவன்.

Wednesday, 13 December 2023

அழுது சுமக்காதே!

அழுது சுமக்காதே! பேசாலைதாஸ்

வருந்தி சுமை சுமப்பவர்களே வாரு ங்கள் என்னிடம் என்கின்றார் இயேசு. உன் சுமையை தன் சுமை என ஏற்றுக்கொண்டு, உனக்காக வாழ மனிதர்கள் இல்லாமல் இருக் கலாம், உன்னை வாழ்த்த மனம் இல்லா தவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்ப டாதே.....நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருப்பா ர்கள்.  அதையும் பெரிது பண்ணாதே

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங் கள், தனித்தனி பிறவிகள்  தனித்தனி ஆன்மாக்கள்.....அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களு க்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன் னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குண ங்களும் செயல்களும் இருக்கும்....அது, உடன் பிறந்தவர்களாக இருந்தா லும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந் தாலும் , பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தா லும், எந்த உறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்க ளுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.......செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன் னிடம் அன்பை காட்டினாலும், தான் யார்? தன் குணம் என்ன? என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்கு வத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண் டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திரு க்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர் ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணை ந்தே இருப்பார்....

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர் கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். 

"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்." தைரியமும் தன்னம்பிக்கையும் தான்  ஒரு மனிதனை உல கத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர் ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."


தனியாக வாழ்கிறோமா ?

தனியாக வாழ்கிறோமா ? பேசாலைதாஸ்

" தனியாக பிறக்கிறோம். தனியாகத்தான் இற ந்து போகிறோம். ஆனால், தனியாக வாழ்கி றோமா? தனியாக வாழ்கிற அந்த திறன், இந்த மக்களுக்கு இருக்கிறதா ? எங்கிருந்து வந்தோ மோ வந்த இடத்தை, சுலபமாக மீண்டும் அடைவ தற்கு தனிமையில் வாழ்வதே உகந்த வழி. ஒரு முழுமையான தனிமை குறித்து  விழிப்புண ர்வை ஏற்படுத்துவது தான், இந்த கூடி வாழ்கிற கூட்டு வாழ்வின் முக்கிய செயல்படாக இருக்கி றது.

ஒரு குடும்பம், ஒருவனுக்கு தனிமையை அனுமதி ப்பது கிடையாது. உறவுகள் என்ற நிலையில் லாத மாயத் தோற்றத்தை  உனது குடும்பம் உனக் குக் கொடுக்கிறது. உறவு என்பது வழிந்தோடி விடுகிற ஒரு நதி. அது ஒரு கானல் நீர். அன்பு என் பது மிக முக்கியமானது.

ஆனால், அதனால் வேதனையை தான் முடிவாக உன்னால் அடைய முடிகி றது‌. ஏன் அப்படி ? அன்பின் தன்மையை நீ உணரவில்லை. அன்பை பயன் படுத்திக் கொள்கிறாய். தவிர, நீ அன்பாக மாறவில்லை. மாறுவதற்கு உன க்கு தெரிவதில்லை.

24 மணி நேரமும் உனது மூளையில் ஒருவரும், அவரது மூளையில் நீயு மாக இருக்கிறீர்கள். ஒருவரை ஒருவர் அழித் துக்கொண்டும் , பொறாமை யில் வெந்து கொண்டும், சண்டையிட்டு துன்புறுத்திக் கொண்டும் இருப் பதே இங்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. தண்ணீரை நினைத்து நெரு ப்பை தொடுகிற உனது செயல்தான்' மாயை ' என்பது .  இதயத்தி ற்கும் ,  மூளைக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியவி ல்லை‌.

நிச்சயமற்ற வாழ்வை நேசிக்கிறாய். நிச்சயமான மரணத்திற்கு பயப்படு கிறாய். அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாய். அனைத்து சொந்தங்கள் அருகில் இருந்தும், வெறுமையை உணர்கிறாய்.  தனிமையை உனக்கு அது  கொடுக்கிறது. அதற்காக, நீ உனது உறவில் இருந்து பிரிந்து விட்டாய் என்பது. அர்த்தமல்ல. கூட்டத்தில் இருந்து கொண்டு உன்னை நீ தனிமை படுத்தி வாழ முயற்ச்சி செய், பற்றுக பற்றற்று! புத்தர் செய்ய தவறியதை பேசாலைதாஸ் உனக்கு சொல்கின்றேன் கேள்!

புத்தர் ஞானம் அடைந்தவுடன், தன் தோழனும் சீடனுமான ஆனந்தாவிடம் தான் யசோதாவை பார்க்க அரண்மனைக்கு செல்லவேண்டும் என்றா ராம், அங்கு போய் யசோதாவை கண்டார். புத்தரை சுற்றி தெய்வீக ஒளி வட்டம் இருப்பதை யசோதா உணர்கின்றாள். புத்தரிடம் கேட்கின்றாள், ஞானவடிவம் காண, காட்டுக்குத்தானா? செல்லவேண்டும், அரண்மனை யில் கூட்டங்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டு, ஞானம் அடைய முடி யாதா என கேட்கின்றாள். அதற்கு புத்தர், ஞானம் பெற்றபின்னர் தான் அது எப்படி என்பது, எனக்கு புலப்பட்டது, மாளிகையில் இருந்தபடி, மக்கள் கூட்டத்தை நேசித்த படியே, அன்பென்ற உத்தியால் அதை பெற முடியும் என்று. மக்கள் கூட்ட த்தில் இருந்து கொண்டு ஒரு துறவி, ஒரு குருவானவர், ஞானம் அடைய முடியும், ஆனால் பெரும்பாலும் குருக்கள் கன்னியாஸ்தி ரிகள் துறவிகள் அதில் தோல்வி அடைகின்றனர். அதற்கு காரணம் பற்று! ஏதோ ஒன்றில் தங்களை அறியாமல் பற்று கொள்கின்றனர், அது உண்மை அன்பை, அதன் சுவையை மறைக்கின்றது. பற்றுக பற்றற்று!

இனிமேல், உறவு என்பது என்ன என்று தெரிந்து கொண்டு விடுவாய்.   அன்பின் உண்மையான வடிவம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு விடுவாய். நீ நீயாக இருப்பாய். அவர், அவராக இருப்பார் . உங்களுக் குள் சொந்தம் இருக்கும். அதில் வேதனைகள் இருக்காது. புரிதல் இருப்ப தால், அங்கு பொறாமைகள் இருக்காது. சொந்தம் என்பது  வேதனைகள் இல்லாத ஒரு இயல்பான விஷயம் என்பதை நீ புரிந்து கொண்டிருப் பாய். உண்மையில் இதை நீ உணரும்போது, அதுதான்  ஒரு பேரானந்த மாக  இருக்கும்.

உனக்கு தேவையான இடத்தை கொடுப்பதும், அதை புரிந்து கொள்ள வைப்பதும், சொந்தத்தில் சிக்கி கொண்டு விடாமல் அதில், உறவாடும் அனுபவத்தை சொல்லிக் கொடுப்பதும், அதனால் ஏற்படுகிற பேரானந்த த்தை உனக்கு உணர்த்துவதும் இந்த பற்றுக பற்றற்று என்கின்ற உத்தி தான். முதலில் உன்னை நீ உனக்குள் மறுத்துவிடு, உன்னில் இருந்து வருகின்ற எனக்கு, என்னுடைய என்ற பற்றும், அதனால் வருகின்ற சொந்தம், உடைய, என்ற உரிமை கோரலும், நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்தும், அதில் முதலில் அழிந்து போவது அன்பின் சுவை, அதன் அருமை. புரிந்து கொள்! இந்த புரிதல் வந்துவிட்டால் உனக்குள் ஒரு அமைதி வரும்,, தொடரும் என் ஞானவேட்டை,,,,,,,,,,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

விடை நீதான்!

  விடை நீதான்! பேசாலைதாஸ்

ஆசையே அலை போலே, நாம் எல் லாம் அதன் மேலே, ஆடிடும் ஓடம் மனித வாழ்வு மாறிப்போய்விட்டது. துன்பத்தில் பிறந்து, துன்பத்தில் வாழ்ந்து மடிவதற்காகவா மனிதன் படைக்கப்பட்டான்? அப்படியென் றால், நான் படைத்தவனை சபிக்கி ன்றேன். அப்படி நான் சபிக்கபோவ தில்லை. ஆண்டவன் அரிய நெஞ்ச் சில் ஒரு துளி வஞ்சம் இல்லை, ஆனாலும் மனிதன் நான் விடை தெரியாமல் மயங்குகின்றேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களு க்கும் புரியாமல், அது பற்றி சிந்திக்காமல் தப்பிக்கலாம் என நினைக்கி ன்றீர்கள். வாழ்வின் யதார்த்த நிலை பற்றி சிந்திக்க முற்பட்டால், மரணத் தில் அது முடிவு பெறுகின்றது. மனிதன் மரணத்தை கண்டு அஞ்சுகின் றான். இருக்கத்தான் நாம் ஆசைபடுகின்றோம், ஆனாலும் இல்லாமல் போகின்றோமே? அது ஏன்?

                                                                                  மனிதர்கள் மேலும் மேலும் துன்பப் படுபவர்களாகவே ஆகிக் கொண்டி ருப்பது ஏன் ? 
அதன் காரணம் என்ன விடை நீதான்! " துன்பத்திற்கான   காரணம்  மிக எளிது. மிக வெளிப்ப டையானது. அந்த காரணம், துன்ப ப்படுபவர்களின் அருகில் நெருக்க மா கவே உள்ளது. அது எளியது என் பதாலும், அருகிலேயே இருப்பதாலும்   துன்பப்படுவோர் அதனை கண்டு கொள்வதில்லை. மனித இனம், இன்று மட்டுமா துன்பப்படுகிறது ? அது எப்போதுமே துன்பப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. துன்பப்படுவது என்பது, மக்களின் இயற்கை குணங்க ளில் ஒன்றாகவே ஆகிவிட்டது. அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிற,   மதிப்பு டன் வணங்குகிற, மதங்களும்,   பக்திநூல்களும்,   இதிகாசங் களும்   மனித னின் துன்பங்களை அழிப்பதற்கு பயன்பட வில்லை.

                                                                          அதற்கு மாறாக, மனிதனுக்கு கீழ் கண்ட வாறு ஆறுதல் கூறுகின்றன. ' அரசு அதிகாரமும், உல்லாசமும் கைக்கு வர வேண்டிய அதே கணத்தில் கை நழுவிப் போய், காட்டிற்கு செல்ல வேண் டிய துன்பம் இறைவனுக்கு வருகிறது. அவன் அதை பெரிதாக நினைக்க வில்லை. ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிறான். நீங்களும்  உங்களது துன்பங் களை பெரிதாக நினைக்காதீர்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். நம்மை காக்க வந்த ஆண்டவர், கடுமையாக தண்டிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட் டார். அவரது பெரிய துன்பத்தை நினைத்து, உங்களது துன்பத்தில் ஆறு தல் கொள்ளுங்கள். 

                                                                        மனிதர்களே, நீங்கள் படுகிற துன்பத்திற் கெல்லாம் காரணம் நீங்கள் அல்ல. அன்று ஆதாம் ஏவால் செய்த  முதல் பாவமே காரணம். முற்பிறவியில் பலாபலன். இவ்வாறாக  அனைத்து மத ங்களும் துன்பத்தை அங்கீகரிக்கின்றன. அதற்கு ஆறுதல் அளிக்கின் றன. துன்பத்திற்கான காரணத்தை உங்களுக்கு சொல்லாமல், அவற்றை,   அழகான விளக்கங்களை கொடுத்து, மூடி மறைத்து விடுகிறார்கள் மத வாதிகள். அதனால், மனிதர்களின் துன்பம் தொடர்கதையாகிப் போகி றது.

                                                                        நான் இப்போது சொல்கிறேன். உங்களது அனைத்துத் துன்பத்திற்கும் முழுமையான காரணம் நீங்கள் மட்டும்தான்.   அந்த காரணம், உங்களுக்கு தெரிந்ததாக வெளிப்படையாகவும் இருக்க லாம். தெரியாமல், மர்மமாகவும் இருக்கலாம். ஆறுதல் அடைவதோ, அடுத் தவர்கள் மீது  பழி போடுவது, முன் பிறவி பாவம் என்பது இவை அனைத் துமே  தேவை இல்லாத வீண் காரணங்கள். நீங்கள்  தீக்குள் விரலை வைத் தால், அடுத்த பிறவியில் பிறக்க போகிறவர்களுக்கு சுடுமா ? அந்த சமயத் தில்,  உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு  கூட சுடாது. தீயில் கை வைப்பவ ர்கள் மட்டுமே, அதன் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்.

                                                                        நீ...துன்பத்திற்கான காரணத்தை கேட்டிரு க்கிறாய். அனைத்து துன்பத்திற்கும் பொதுவான காரணங்களை சொல்லி விட முடியாது. ஆனால், புத்தர் சொன்னார். ' ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ' என்றார். உண்மைதான். அவர் வாழ்க்கையை துறந்தவர்.   அவ ரைப்போலவே துறவியாகும் ஆசையுள்ள தனது சீடர்களுக்கு  அப்படி சொன்னார். ஆனால், இல்லற வாழ்க்கை என்பது ஆசையை விதையாகக் கொண்டது. அந்த விதையிலிருந்து துன்பங்கள் வளரதான் செய்யும். ஆறு தலடைவதோ அடுத்தவர்களை காரணம் காட்டுவதையோ மறந்து விட்டு நீ உள் முகமாக நகர்ந்து செல்வதால் மட்டுமே உன் துன்பத்திலிருந்து விடுத லையடைய முடியும்.

                                                                    நான் மத குருவாக மாற ஆசைப்பட்டேன், எனக்குள் எழுந்த தத்துவ விசாரனை, பல்கலைக்கழகத்தில் நான் சிறப்பு கற்கை நெறியக நான் தேர்வு செய்த மார்க்ஸீச அரச அறிவியல், அரசியல் அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கி, வன்முறையில் ஈடுபடவைத் தது. போராட்ட குழுக்களுக்குள் எழுந்த குருட்டாட்டம், எனது போராட்ட குணத்தை நீர்த்துப்போக வைத்தது, வேறு வழியில்லாமல் இல்லற வாழ் வில் பிரக்ஞையற்று இறங்கினேன், வாழ்வின் கடமையாக அதை ஏற்று, கடமை புரிவதகா, யாகம் நடத்தி, கடமைகளை ஓரளவு சரியாக நடத்திக் கொண்டு இருக்கின்றேன். ஆனாலும் பேரின்ப பெருவாசலை அடை வேனா? அது எங்கே இருக்கின்றது என கவலை என்னை விட்டபாடில்லை. நான் வாழ்வின் துன்பங்களை அதிகமாக சுமந்தவன் இல்லை, நகைச் சுவை ரசனை, கலை ரசனையை எனக்குள்ளே நானே வளர்த்துக்கொண்டு வாழ்வை வாழப்பார்க்கின்றேன். ஆனாலும் ஏதோ கவலைக்கடலில் நீந்து வதாக ஒரு பிரேமை! உங்களுக்கும் அது இருக்கலாம்.

                                                      நல்லவேளை நான் செய்த பிராப்தமோ தெரியாது, நான் ஒரு கிறிஸ்தவனாக பிறந்தது. நான் ஓரளவு எல்லா மதங்களை படித் திருக்கின்றேன். கிருஸ்ணரோ, புத்தரோ, முகம்பது நபியோ, சிவனோ   யாரும் மனிதன் படும் துன்பங்களுக்கு இறைவனும் ஒரு காரனம், என்ற தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அந்த பாவத்தை இறைவன் மனித னாக அவதாரம் எடுத்து, அந்த பாவப்பழியை தான் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒட்டு மொத்த துன்பத்தையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்ட ஒரு தெய்வம் இயேசுவை விட இருந்தால் சொல்லுங்கள், நான் அதை பின்ப ற்றுகின்றேன். நம் கவலைகளுக்கு நாமே விடை அந்த விடை, என் இயேசு தெய்வத்திட்மே உண்டு.  அன்புடன் பேசாலைதாஸ்  பேசாலைதாஸின் ஞான வேட்டை தொடரும்,,,,,,,,,,

                                                                

                                                                       

நினைவுகள் வெறும் சுமைகளே

நினைவுகள் வெறும் சுமைகளே பேசாலைதாஸ்

 


கடந்த கால நினைவுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட வேண்டும்.

அப்போதைக்கு அப்போது நிகழ்காலத்தில் தான்
வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
ஆனால்,
இந்த உலகில் செயலாற்ற
ஒருவனுக்கு வலுவான
மன நிலையும்,
கடந்த கால நிகழ்வுகளின்
அனுபவ பாடமும்,
செறிந்த திறமையான நினைவாற்றலும் தேவைப்படுகிறது.
இது,
உங்களது வார்த்தைக்கு முரண்பாடாக தெரிகிறதல்லவா ?
ஓஷோ :
" பிரேம் குமார்,
எந்த விதமான முரண்பாடும் இதில் இல்லை.
தவறான புரிதல் மட்டுமே உன்னிடம் உள்ளது.
கடந்த கால சிந்தனைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட வேண்டும் ' என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம்
அதை அழித்து விட வேண்டும் என்பதல்ல.
அதை அழிக்கவும் முடியாது.
ஆனால்,
நீங்கள் அனைவருமே எப்போதும் அந்த கடந்த கால நினைவுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதனால்,
நிகழ்காலத்தை தவற விட்டு விடுகிறீர்கள்.
உங்கள் எண்ணம் முழுவதும்
கடந்த கால
சிந்தனையிலும்,
எதிர்கால கற்பனைகளிலுமே சென்று கொண்டிருக்கின்றன.
நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்து கொண்டு எனது உரையை கேட்டு கொண்டிருப்பது போல் தோற்றமளிக்கிறீர்கள்.
ஒரு ஆர்வத்தில் இங்கு வந்து அமர்ந்து விட்டீர்கள்.
ஆனால்,
உங்களது மனம் இங்கே இல்லை என்பது எனக்கு தெரிந்ததுதான்.
உங்கள் வீட்டில் தனியே
உங்கள் அம்மாவிடம் விட்டு விட்டு வந்திருக்கும் உங்களது குழந்தையை பற்றிய சிந்தனை
அல்லது,
வீட்டில் இருக்கும் உங்களது
கணவன் / மனைவி யை பற்றிய சிந்தனை,
அவர் காப்பி சாப்பிட்டிருப்பாரா, இல்லையா ?
அவருக்கு
ஒரு வெந்நீர் (hot water ) கூட
போட்டுக் கொள்ள தெரியாதே.' என்ற சிந்தனை
இது போன்ற சிந்தனையில்
ஒவ்வொறு நிமிடமும் இருப்பதுதான் கடந்த காலத்தில் வாழ்வது என்பது.
இது தேவையற்றது.
அதற்கு நீங்கள் வீட்டிலேயே இருந்து இருக்கலாம்.
அப்போது கூட
உங்களது மனம் வேறு விதமான
சிந்தனையில்தான் இருக்கும்.
வாழ்க்கை என்பது முற்றிலும்
நிகழ்காலமே.
வாழ்க்கையில் கடந்த காலம் என்பது இழந்து விட்ட நேரம்.
எதிர்காலம் என்பது நிச்சயமில்லாதது.
மனம் மட்டும்
தேவை இல்லாத இந்த இரண்டிலும் உங்களை சுழற்றியபடியே வைத்திருக்கிறது.
சற்று விளக்கமாக பார்ப்போம்.
மனித மூளை என்பது,
மருத்துவ விஞ்ஞானிகள்,
மனோ தத்துவ பேராசிரியர்கள் அனைவரும் இன்று வரை வியந்து போகிற அளவிற்கு செயலாற்றும் ஒரு இயந்திரம்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஏற்படுகிற
எண்ணங்களையும்,
செயல் நிகழ்வுகளையும்
ஒலி நாடாவை போல்
தன்னுள் பதிவு செய்தபடியே இருக்கிறது நமது மூளை.
நூறு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஒருவரின் மூளையை ஆராய்ந்து பார்த்ததில்,
அவரது ஒரு நூறாண்டு
கால பதிவும்,
மூளையின் ஒரு சின்ன இடத்தில் மட்டுமே பதிவாகி இருந்ததையும்,
மூளையின் பெரும்பகுதி
உபயோக படுத்த படாமல்
வெறுமையாக (fresh ) இருந்ததை கண்டு வியந்து போனார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மனம் என்பது,
மூளையில் பதிந்த எண்ணங்களுடன் கலந்து,
அதை எடுத்து வந்து,
உங்களுக்கு செயல் வடிவத்தை கொடுக்கிறது.
மூளையை சிந்திக்க விடுவதில்லை உங்களது மனம்.
ஞாபக மறதி அதனால்தான் ஏற்படுகிறது
மனம் மூளையோடு இணைவது என்பது தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வு
மனப் போராட்டம் ' என்று ஒரு வார்த்தையை அனைவரும்
அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த தேவை இல்லாத போராட்டம் இதனால்தான் நிகழ்கிறது.
ஆனால்,
இந்த இயற்கை நிகழ்வே,
வாழ்க்கை அல்ல.
இயற்கை உங்களுக்கு
ஒரு கேடயத்தை கொடுத்திருக்கிறது.
அதுதான் ' விழிப்புணர்வு '
அது
மனித மூளையில் பிறப்பது.
அறிவை சார்ந்தது.
அது கடந்து கால நிகழ்வின்
எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதில் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்.
உங்களது வாழ்க்கையை வீணடிக்க விடாது.
கடந்த கால நிகழ்வுகளில் உங்களுக்கு தேவையான அனுபவப் பாடங்களை மட்டும் அது பதிவு செய்து வைத்திருக்கும்.
தகுந்த நேரத்தில்
அந்த அனுபவ பாடங்களை உங்களுக்கு உணர்த்தி,
உங்களை அதிகத் திறமை உள்ளவர்களாக மாற்றிவிடும்.
நீ அப்போதைக்கு அப்போது
உஷாராக,
விழிப்புணர்வுடன் இருந்து,
கடந்த கால நினைவுகளை பெரும் பாரமாக சுமக்க அனுமதிக்காமல் இருந்தால்,
அதிக திறமை வாய்ந்தவராக,
கவலை என்பது இல்லாமல்
வாழலாம்.
இது உறுதி. ' நினைவுகள் வெறும் சுமைகளே '

சரணாகதி.

சரணாகதி. பேசாலைதாஸ்


 ஒரு வேத புத்தகத்தில் உள்ள கதையை சொல்கிறேன்.

இது உண்மையில் நடந்தது என்று அந்த மதத்தை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

நாம் அதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.

கதையை மட்டும் சொல்கிறேன்.

' தனது ஐந்து வயது மகனை

தானே கொன்று 

பலியிடும் படி இறைவன் தனது கனவில் வந்து சொன்னதாக ஒருவன் நம்பினான்.

அதற்கான நாளில்,

தனது ஐந்து வயது மகனை காட்டிற்குள் அழைத்து சென்று,

 அங்கு அவனை

இறைவனுக்கு பலி கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தான்.

காட்டுக்கு அழைத்து செல்வது குறித்து தனது மகனிடமும் சொன்னான்.

எதற்காக ? என்ற காரணத்தை மட்டும் சொல்லவில்லை.

அந்த குழந்தைக்கு ஒரே ஆச்சர்யம்.

அன்று இரவு தனது தந்தையை எழுப்பி,

' அப்பா, நாம் எப்போது காட்டுக்குள் செல்ல வேண்டும் ? ' என்று ஆவலுடன் கேட்டான்.

அவனுக்கு தர்மசங்கடமாக போய்விட்டது‌.

தனது அன்பு மகனை பார்த்தபடி

தனக்குள் சொல்லிக் கொண்டான்,

' நான் இவனை கொல்வதற்காக காட்டுக்கு அழைத்து செல்ல இருக்கிறேன்.

அது தெரியாமல் இவன் இப்படி கேட்கிறானே ?

என்னுடன் காட்டிற்கு வருவதற்கு மிக ஆர்வமாக இருக்கிறான்.

இவனுக்கு நான் என்ன 

பதில் சொல்வது ?' என்று சிந்தித்த படியே,

' நாளை அதிகாலையில் செல்லயிருக்கிறோம்.

இப்போது நன்றாகத் தூங்கு.'

என்று குழந்தையை தூங்க வைத்தான்.

விடியற்காலையில் தனது அப்பாவிற்கு முன்பாகவே எழுந்து குளித்து விட்டு,

உடைகளை அணிந்து கொண்டு காட்டுக்கு செல்ல தயாராகி விட்டான் மகன்.

அங்கு என்ன 

நடக்கப் போகிறது என்று குழந்தைக்கு தெரியவில்லை.

ஆனால்,

அந்த குழந்தை தனது அப்பாவை நம்புகிறது.

அவர் பின்னால் செல்வதில் ஒரு பாதுகாப்பை உணர்கிறது.

மறுநாள் காலையில், 

தனக்கு முன் கிளம்பி தயாராக இருந்த

தனது மகனை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்.

ஓரிடத்தில் தனது மகனை அமர வைத்து விட்டு,

தன் கையிலிருந்த கத்தியை கூர் தீட்ட ஆரம்பித்தான்.

அவர் அருகில் வந்து குழந்தை கேட்டது,

' எதற்காக இந்த கத்தியை தீட்டுகிறீர்கள் ? '

' நான் இந்த கத்தியால் உனது தலையை வெட்டப் போகிறேன் ' என்று கனத்த மனதோடு சொன்னான் அவன்.

' அதற்கு நான் தயாராக இருக்கிறேன், அப்பா.

கத்தியை தீட்ட நான் 

உங்களுக்கு

உதவி செய்யட்டுமா ? என்றது குழந்தை.

அழுத கண்களோடும்,

கனமாகிப்போன இதயத்தோடும்,

தனது மகனை இழுத்து 

கத்தியை ஓங்கினான்.

வானத்தில் இறைவனது குரல்,

' நிறுத்து ! போதும்.

இந்த பலி எனக்கு

தேவையில்லை.

நீ உன் மகனுடன் வீட்டிற்கு செல்லலாம் ' என்றது.

அந்த குழந்தையை கவனி.

அதற்கு கத்தியை பற்றி தெரிய வில்லை.

கழுத்தை வெட்டுவது என்றால் என்ன என்று தெரியவில்லை.

அது எப்படி வலிக்கும் ?

உயிர்பலி என்றால் என்ன ?

எதுவுமே தெரிய வில்லை.

அந்த குழந்தைக்கு தெரிந்தது எல்லாம்,

அவனது ' அப்பா '.

அவர்மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை

மட்டுமே.

தர்மா....!

நீ இறைவனை சரணடைவது என்றால்,

அதன் அர்த்தம்,

இந்த குழந்தையை போல ஒரு முழுமையான

 மன நம்பிக்கையை அடைவது.

இயற்கை உன்னை எங்கு அழைத்து செல்கிறதோ,

அதை நம்பி

அதன் போக்கிலேயே 

மிக ஓய்வாக அதன் பின்னால் நீ செல்ல வேண்டும்.

அதன் மீது,

உனது வாழ்க்கையின் மீது,

உனது ஆக்கிரமிப்பை வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது.

இயற்கை உன்னை முழுவதும் ஆக்கிரமிக்க

மனப்பூர்வமாக நீ சம்மதிக்க வேண்டும்.

அதுவே சரணாகதி.

நான் மிகவும்
இறை நம்பிக்கை உள்ளவன்.
அவனின்றி ஒன்றும் நடக்காது என்று நம்புகிறவன்.
எப்போதும் அவன் சிந்தனையிலேயே இருப்பவன்.
எனது எண்ணங்கள்,
செயல்கள் அனைத்தும் அவனது அருளே என்று
ஆழமாக நம்புகிறவன்.
இதைதான் சரணாகதி என்று நம்புகிறேன்.
அது,
உண்மைதானே ?
வேறு எண்ண வேண்டும் ?
ஓஷோ :
தர்மா,
நீ அடைந்தது ஒருவிதத்தில்
சரணாகதி தான்.
உன் மதத்தில்,
அதன் கோட்பாடுகளில்,
அவை வழி காட்டும் பக்தி நெறிகளில் நீ சரணாகதி ஆகிவிட்டாய்.
நீ சொல்பவை எல்லாம்
இறைவனிடம் சரணடைவது ஆகாது.
நீ வேறு,
இறைவன் வேறு என்று நினைக்கும் வரையில், சரணாகதி என்பதன் அர்த்தம்
வேறு விதமாக மாறிப்போகும்.
அவனிடம் சரணாகதி அடைவது என்றால்,
அவனுடனே கலப்பது.
அதற்கு ஒரு குழந்தையின் மனது வேண்டும்.
ஒரு குழந்தையை போல
நீ மாறுவது ஒன்றே,
சரணாகதி யின் முதல்படி.
நீ என்ன ஒரு பைத்தியமா ?
உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ? ' என்று உன்னை பார்த்து அனைவரும் கேட்க வேண்டும்.

புல் தானாகவே வளர்கின்றது

புல் தானாகவே வளர்கின்றது பேசாலைதாஸ் 


" எப்போதுமே இயற்கை தன்னை சம நிலையில் வைத்திருக்கும்.

அதன் பிரதிபலிப்பான

நம்மையும் தான்.

அன்பு போன்ற

 ஆக்க பூர்வமான உணர்வுகள் ஒருவனிடம் பொய் வேடம் போட்டிருந்தால்,

அவனது வாழ்க்கையை அசிங்கமாக மாறிவிடும்.

ஒரு குழந்தையின்

 இயல்பு நிலை என்பது,

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.

இருப்பினும், 

அதன் கோபம் கூட யாருக்கும் கெடுதல் செய்யாது.

குழந்தையை இயல்பு நிலையில் வளர்த்தோம் என்றால்,

அதன் வாழ்வில்,

அதற்கு தோல்வி என்பதே கிடையாது.

எந்த ஒரு செயற்கையான பயிற்சியும் அதற்கு

தேவை இல்லை.

 பொம்மை விற்கும் கடைக்கு சென்ற ஒருவர்,

தனது 15 வயது மகனுக்கு

ஏதேனும் பொம்மைகள் இருக்குமா என்று விசாரித்தார்.

பொம்மை கடைக்காரர்,

ஒரு காரின் உதிரி பாகங்கள் 

அடங்கிய பெட்டியை அவரிடம் கொடுத்தார்.

' 15 வயது மகனுக்கு ஏற்ற பொம்மை இதுதான்.

ஒரு காரின் உதிரி பாகங்கள்

இதில் இருக்கிறது.

அவற்றை சேர்த்து 

ஒரு காரை வடிவமைக்கலாம்.' என்றார்.

அதை வாங்கி சென்ற 

அந்த தந்தை,

இரண்டு நாட்கள் கழித்து

மீண்டும் அந்த பொம்மை கடைக்கு அதே பெட்டியுடன் வந்தார்.

' இந்த பெட்டியில் உள்ள காரின் உதிரி பாகங்கள் சரியில்லை.

ஒன்றாக இணைத்து 

ஒரு காரை உருவாக்க முடியவில்லை.

ஒரு பாகத்தை இணைக்கும் போது,

முன்பு இணைத்த 

வேறு ஒரு பாகம்

கழண்டு கீழே விழுந்து விடுகிறது.

அதனால்,

வேறு நல்லதாக ஒன்றை மாற்றி கொடுங்கள் ' என்றார்.

அதற்கு அந்த பொம்மை கடையின் மேனேஜர்,

' உண்மைதான்.

இதை யாராலும் பொருத்த முடியாது.

எதுவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாது.

இதன் உதிரி பாகங்கள் அப்படிதான் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த நாகரீக உலகில்,

வாழ்வின் நிகழ்வுகள்

எதுவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வருவதில்லை.

எந்த உறவும் எவருடனும் 

பொருந்துவதில்லை.

அதற்கு பையன்களை

இப்பொழுது இருந்தே 

தயார் செய்ய வேண்டும் அல்லவா ?

அதனால்தான் அந்த பொம்மை இப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ' என்றார்.

இந்த வாழ்க்கையில்,

நீங்கள் எதை செய்தாலும்,

இயற்கையாகவே

எது நடந்தாலும் 

பெரும்பான்மையான நிகழ்வுகள்

விரக்தியில் தான் 

போய் முடிகின்றன.

ஆனால்,

ஒரு குழப்பமான,

விரக்தியான சூழ்நிலையை,

உங்கள் அறிவு கூர்மையாய் சரி செய்து விடலாம்.

ஆனால்,

அறிவால் இயற்கையாக வளரும் குழந்தைகளை

பெற்றோர்கள்,

தங்கள் மனதால்,

 வளர்த்து விடுகிறார்கள்.

இவைதான் அனைத்து 

குழப்பமான நிகழ்வுகளுக்கும் காரணம்.

எது சமூக சேவை?

 எது சமூக சேவை? பேசாலைதாஸ்



' தாஸ் ' அன்றிரவு ஒரு விலைமாது வீட்டில் தங்கியிருந்து விட்டு விடியற்காலையில் தனது வீட்டிற்கு வந்து தனது மனைவியின் அருகில் நல்ல ஒரு கணவன் போல் படுத்துக் கொண்டான். உடனே, விழித்துக் கொண்ட அவனது மனைவி, தனது கணவனை ஆசையாக அணைத்துக் கொண்டு,' ஆபீஸ் வேலை முடிந்து விட்டதா ? எப்போது வந்து படுத்தீர்கள் ? என்று அக்கறையுடன் கேட்டாள்.' நான் வந்து படுத்து  இரண்டு மணி நேரம் ஆகிறது.  நீ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாய் ' என்று பொய் சொல்லி சமாளித்தான்.     5 நிமிடங்கள் சென்றதும், மனைவி ஆச்சர்யத்துடன் கேட்டாள்,

' எங்கே உங்கள் ஜட்டியை காணோம் ? ' என்றாள்.

அவன் முன்பு சொன்ன பொய் வார்த்தைக்கு

 மனைவியின் இந்த கேள்வியை சுலபமாக சமாளித்திருக்கலாம்.

ஆனால்,

அவளது திடீர் கேள்வியில்

திடுக்கிட்டவன்,

அதை சமாளிக்கத் தெரியாதவனாய்,

' ஆபிஸில் கழட்டி வைத்து விட்டு, 

வரும்போது

மறந்து போய் வந்து விட்டேன். ' என்றான்

பரிதாபமாக. "


சமூக சேவை பற்றி உங்களது கருத்து என்ன ?


" இன்றைய நாட்டின் நிலமைக்கு,

தேவையான ஒன்றுதான்.

அந்த செயல்,

தேவையானது.

ஆனால்

அந்த வார்த்தை ,

ஒரு விளம்பர யுக்தி.

உங்களால் இயன்ற உதவியை,

அது தேவையானவர்களுக்கு

செய்கிறீர்கள்.

உங்களது வசதியை பொருத்து

இது ஒரு நாள் நிகழ்வாக இருக்கலாம், 

அல்லது

தொடர் நிகழ்வாகவும்

இருக்கலாம்.

நீங்கள் அந்த உன்னதமான செயலை,

இந்த வார்த்தை மூலமாக

விளம்பர படுத்திக் கொள்கிறீர்கள்.

' சமூக சேவை ' என்பது

அந்த நல்ல செயல்களை

 மிக படுத்திக் காட்டுகிற 

ஒரு விளம்பர வார்த்தையாகத்தான்

 நான் பார்க்கிறேன்.

இந்த சேவையில்,

யாருடைய நிலையும் மாறப்போவதில்லை.

கொடுப்பவர்,

பெறுபவர் இருவருக்குமே

விழிப்புணர்வு என்பது 

வளராது.

சில சமூக சேவை என்ற கூடாரங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

காலம் முழுவதும்

அவர் அவராகவே இருந்து

கையேந்த‌ வேண்டும்.

இவர் இவராகவே இருந்து

சமூக சேவகர் என்ற பெயரை காத்துக் கொள்ள வேண்டும்.

பசித்தவனுக்கு ஒரு வேளை

உணவளித்து விட்டு,

சென்று விடுகிறீர்கள்.

அவனது அடுத்த வேளை உணவை பற்றி,

 எவரும் சிந்திப்பதில்லை.

பசித்தவனுக்கு 

தனது உணவை

அவனே தயாரித்து கொள்வதை பற்றியும்,

அந்த வறுமையான சூழலில் இருந்து அவன் விடுதலை

அடைவதை பற்றிய விழிப்புணர்வையும்

அவனுக்கு எந்த 

சமூக சேவகரும் ஏற்படுத்துவதில்லை.

அப்படி ஒரு விழிப்புணர்வை அவனுக்கு ஏற்படுத்தினால்,

அதுதான் உண்மையான சமூக சேவை.

ஆனால்,

கையேந்துபவனின் நிலை எப்போதுமே

விழிப்புணர்வு இல்லாத பரிதாபகரமான

நிலை தான்.

கிட்டாதாயின் வெட்டென மற.

 கிட்டாதாயின் வெட்டென மற. பேசாலைதாஸ்


ஞானி கிடைக்க சிரமமானதற்கு மதிப்பு  தருவதில்லை.

சுலபமாக எது கிடைக்குமோ 

அதை மதிக்கிறார் .

கிடைக்க சிரமமானதற்கு நீ மதிப்பு தருகிறாய் .

எந்த அளவுக்கு சிரமமோ அந்த அளவுக்கு மதிப்பு அதிகம் என்கிறாய்.

கோகினூர் வைரத்தின் மதிப்பு அதனுடைய மதிப்பு அல்ல.

கிடைக்க சிரமமானது என்பதற்கு தந்திருக்கும் மதிப்பு தான் அது.

ஒவ்வொரு வீதியிலும் கோகினூர் வைரங்கள் சிதறி கிடக்குமானால் யாரும் அவற்றை பற்றி கவலைப்பட போவதில்லை.

யார் அதை பற்றி நினைத்தாவது பார்க்கப் போகிறார்கள் .

அதனால் கிடைப்பது சிரமம் அது அரிது என்பதால் அந்த ஒரே காரணத்துக்காக மதிப்பு தந்து வைத்திருக்கிறார்கள் ?

அதை என்ன சாப்பிட முடியுமா 

அல்லது குடித்து விடத்தான் முடியுமா?

மனிதர்கள் யாருமே இல்லாமல் போய்விட நீ மட்டும் தனியாக இந்த உலகத்தில் இருக்க நேர்ந்தது என்றால் .

அப்போது உன்னிடம் கோவினூர் வைரம் இருக்கிறது என்றால் .

என்ன செய்வாய்? 

வீசி எரிந்து விட்டு போய்விடுவாய் .

எதற்காக அதை சுமந்து கொண்டு திரிய வேண்டும்.

கிட்டாதாயின் வெட்டென மற.

Tuesday, 12 December 2023

பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்

 பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்


ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது. 

ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன? 

 கோபால்.👨

 முருகன். 👨

 பழனிச்சாமி 👨

 மாயாண்டி 👨

 முருகேசன். 👨

 ஆனால்  நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற  ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள். 

அதற்கு தாய்கோழி 🐔:

மனிதர்களுக்கு  பல பெயர்கள் உள்ளன. 

ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு  ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀

ஆனால் நாம் செத்தபிறகு  நமக்கு பல பெயர்கள் :

சிக்கன் 65.

சிக்கன் புலாவ்

சில்லி சிக்கன் 

சிக்கன் வறுவல்

சிக்கன் தந்தூரி

கார்லிக் சிக்கன்

ஜிஞ்சேர் சிக்கன்

பெப்பேர் சிக்கன்....

🥙பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்

ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர்

 


*ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.*

*யோகி பரமஹம்ச யோகானந்தா* தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.

இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு *வியானப் பிராணா* வை அவர் தக்கவைத்துச் சென்றதால், எத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.

இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் விஞ்ஞானிகள்/மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்து கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

அவர் உடல் (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்

இன்றும் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது.

இவரது குரு *யுக்தேஸ்வரகிரியும்* இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அறிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மறுநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. *மகா சமாதி* என்றழைக்கப்படும். தன் உடலை ஒரு சட்டையை கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது *மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு*. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை. அவ்வளவு தான்.

*கபீர் தாசர்* மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.

*ரமணர்* மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் மறைந்தது.

*பட்டினத்தார்* பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார். தன் அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு *சிவலிங்கம்* இருந்தது.

*மாணிக்கவாசகர்* சிதம்பரம் நடராஜர் சன்னதி கருவறையில் வெட்டவெளியில் ( *வான் பொருள்-ஆகாயம்* ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு *இராமலிங்கசுவாமிகள்* வடலூரில் ஒருதனி அறையில் *ஒளிஉடலோடு* மறைந்து விட்டார்.

பரமஹம்ஸயோகனந்தரின் *யோகா உடல்* 33 நாட்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டது.

*ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.*