Monday, 11 December 2023

உலகின் மிகபெரிய சதிகாரர்கள் பேசாலைதாஸ்

இலங்கையின் மிகபெரிய சதிகாரர்கள்  பேசாலைதாஸ் 


இலங்கையின் மிகபெரிய சதிகாரர்கள் என்றால் அது பெளத்த பிக்குகளும் அரசியல்வாதிகளும் தான். இலங்கையில் சக சகஜ வாழ்வு, சாமாதானம் இல்லாமல் இருப்பதற்கு இவர்களே காரனம். இவர்கள் அப்பாவி சிங்கள மக்களை தமது அதிகார ஆசைகளுக்காக, இனவாதத்தை தூண்டிவிடுவார்கள். இவர்களிடம் நாட்டுப்பற்று துளிகூட இருக்காது, அப்படி நாட்டுப்பற்றைப் பற்றி பேசினாலும், அதனையும் தமது தேரவாத பெளத்ததிற்கு திசை திருப்பிவிடுவார்கள். இதனால் சிங்கள பொது மக்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள், தமிழர்களை பாதுகாக்க பொருளாதர ரீதியில் புலம் பெயர் தமிழர் பலம் உண்டு. சிங்கள பொது மக்களுக்கு யார் உண்டு? இதனை அந்த மக்களுக்கு யார் சொல்வது? சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும்.அதை எந்த கருத்துருவாக்கத்தோடு எடுத்து சொல்ல வேண்டும்? 

அதற்கான பொது கருத்துருவாக்கம் இலங்கை நாட்டுப்பற்று Patriatism ஒன்று மட்டுமே. வறுமையில் இருந்து இலங்கையை காப்பாற்றவேண்டு மானல், இனங்களுக்கிடையே சாமாதன புரிந்துணர்வு தேவை! நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற ஆத்ம உணர்வு தூண்டப்பட வேண்டும். இதனை ஒருபோதும் பெளத்த பிக்குகளும் சிங்கள அரசியல் வாதிகளும் செய்யப்போவதில்லை. தமிழ் முஸ்லிம் மலையக மக்களிடம் இருந்தே இந்த புதிய அரசியல் அணுகுமுறை அவசியம்!

தமிழ் முஸ்லிம் தரப்புகளுக்கிடையில் ஆசனங்களை பெற்றுக்கொள் வதில் மட்டுமே அரசியல் வியூகங்கள் அமைக்கப்படுகின்றதே தவிர, சலுகை அரசியல் அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகின்றதே தவிர, சிங்கள முற்போக்குவாதிகளை இனம் கண்டு அணுகும் முறையில் இருந்து விலகி,  இனவாத அரசியல் சக்திகளுடன் ஏதாவது கிடைக்குமா என முயற்சிக்கின்றார்கள். இது மலடியை கர்ப்பவதியாக்கும் வீணான முயற்ச்சி என்பது எனது எண்ணம்.

ஆன்மீக தலைவர்கள் மனித ஆத்மாவை அடிமைப்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் மனித உடல்களை அடிமைப்படுத்துவார்கள்.

இருவரும் தங்கள் சதித் திட்டங்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள். தங்கள் பணிகளை பிரித்துக் கொண்டு செயல்படுவார்கள். இருவரும் போரை விரும்புவார்கள்... வறுமையை விரும்புவார்கள்.. இருவரும் மக்கள் பாதிக்கப்படுவதையும் துன்பப்படுவதையும் அநாதைகளாக திரிவதையும் விதவைகளாக இருப்பதையும் நோஞ்சான்களாக இருப்பதையுமே விரும்புவார்கள்.

பல நூற்றாண்டுகளாக மதவாதிகளும் அரசியல்வாதிகளும் எப்படி வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் படித்துப் பார்த்தால் எல்லோரும் கிரிமினல்களாகவும் கொலைகாரர்களாகவும் வாழ்ந்தது தெரிய வரும். கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஐயாயிரம் போர்களை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அமைதியைப் பற்றியும் அன்பைப் பற்றியும் பேசுவார்கள்.. ஆனால் அதன்படி நடந்து கொள்ளமாட்டார்கள். அமைதியை பேசிக் கொண்டே போருக்கு தயாராவார்கள். அரசியல்வாதிகள் பேசுவதை பொருட்படுத்தாதீர்.. செயல்படுவதை மட்டும் பாருங்கள்.

அரசியல்வாதிகள் தந்திரமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் செயல்படுவார்கள். ''உங்கள் தாய்நாட்டை நேசியுங்கள்'' என சொல்லும் அதே வேளையில் ''சுற்றத்து நாடுகளின் மீது கோபப்படுங்கள்'' என சொல்வார்கள். நாட்டுப்பற்றை சொல்லிக் கொண்டே போருக்கு தயாராவார்கள். சுற்றத்து நாடுகளை மதரீதியாக பிரிப்பார்கள். உங்கள் மதத்தை நேசிக்கும் அதே வேளையில் மற்ற மதங்களின் வெறுப்பு கொள்ளுங்கள் என்பார்கள். உங்கள் நிறத்தை நேசியுங்கள்.. அதே வேளையில் மாற்று  நிறத்தவர்களின் மேல் வெறுப்பு கொள்ளுங்கள் என்பார்கள். நீங்கள் உண்மையாக மனித இனத்தின் மீது அன்பு செலுத்த விரும்பினால் நாட்டுப்பற்றை விட்டுவிடுங்கள்.

மதப்பற்றை விட்டுவிடுங்கள்.. 

நிறப்பற்றை விட்டுவிடுங்கள். உண்மையாக மனிதர்களை நேசிக்க விரும்பினால் இது மாதிரி முட்டாள்தனமான அரசியல்களை  விட்டுத்தள்ளுங்கள். 

உள்மையமாக அரசியல் நடத்துபவர்கள் தான் பிக்குகள். மதத்தன்மைக்கு எதிராக சதி செய்பவர்கள் இவர்கள்.

மனித குலத்தின் ஒட்டுண்ணிகள் இவர்கள்

தனி மனித சுதந்திரத்திற்கு எதிராகவும் 

பரிணாமத்திற்கு எதிராகவும்.. 

சுயமரியாதைக்கு எதிராகவும் இவர்கள் செயல்படுவார்கள். மனிதர்களை பாவிகளாக மாற்றுபவர்கள் இவர்கள்.

மனித ஆத்மாவில்  பொறாமை உணர்வை ஏற்படுத்துவதன் வாயிலாக பெரிய காயத்தை உண்டாக்குவார்கள்.

பொறாமை உணர்வு ஏற்பட்டால் மனிதன் தன்னை தானே நொந்துக்கொள்வான்.

இது தான் அவர்கள் உத்தி.

கெளரவம் தன்னுணர்வு எதிர்காலம் என எல்லாவற்றையும் அழிப்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தை இப்படி தான் அடிமைப்படுத்தி வருகிறார்கள்.

மதவாதிகளின் எனும் வேலை 

ஒரு அசிங்கமான வேலை. அரசியல்வாதிகளை விட கீழ்தரமான வேலை.

விபச்சாரிகளை விடவும் மோசமான வேலை. ஒரு விபச்சாரி தன் உடலை தான் வியாபாரம் செய்கிறாள். அரசியவாதிகள் தொண்டர்களின் வெளி சுதந்திரத்தை மட்டுமே பறிப்பார்கள்.

ஆனால் #பாதிரிகள்_மனித #ஆத்மாவையே_அழித்துவிடுகிறார்கள் 

மதத்தன்மைக்கு எதிரானவர்களே இவர்கள். அரசியல்வாதிகள் மதவாதிகளை காத்து நிற்பார்கள். மதவாதிகள் அரசியல்வாதிகளை ஆசிர்வதிப்பார்கள்.

#மனித_குலத்தின்_இரத்தத்தையே #இருவரும்_உறிஞ்சிவிடுவார்கள். 

இது ஒரு வித்தியாசமான பிணைப்பு. யாருமறியா ''கடவுள்'' என்ற ஒற்றை பெயரை வைத்து கிரிமினல் வேலை செய்பவர்கள் தான் மதவாதி. கடவுளை நீக்கினால் அரசியல்வாதிகளை நீக்கிவிடலாம். அரசியல்வாதிகளை நீக்கினால் மதவாதிகளை நீக்கிவிடலாம். இதன்மூலம் மதவாதிகள், அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தையும் நீக்கிவிடலாம். இவர்கள் இருவர்களையும் சமுதாயத்தை விட்டு நீக்கிவிட்டால் 50% துன்பங்கள் இயல்பாகவே நீங்கிவிடும்.

No comments:

Post a Comment