Tuesday, 28 November 2023

தன் வழியே போய், தவறுகளை கண்டுபிடி! பேசாலைதாஸ்

 தன் வழியே போய், தவறுகளை கண்டுபிடி! பேசாலைதாஸ்


மனிதன் தளர்வான நிலையில் இருக்கும்போதுதான், ஞானத்தின்  தெளிவை கண்டுகொள்கின்றான். இறுக்கமாக தன்னை வைத்தி ருப்ப தின் மூலம், ஞானத்தை அடைவதை, தெளிவை பெறுவதில் சிரமப்படுகி ன்றான். புத்தர் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட் டார், ஒரு கட்டத்தில் தன் முயற்ச்சி தோல்வியடைவதை உணர்ந்த அவர், ஞானத்தை தேடும் முயற்ச்சியை கைவிட்டு, சரணாகதி நிலைக்கு சென்றுவிட்டாராம், அப்போதுதான் அவர் ஞானம் பெற்றதாக புத்தர் விபரிக்கின்றார். ஞானிகளும், குருக்களும், யோகிகளும் அடைய முடியத ஞானத்தை சிலவேளைகளில், பாவவழியில் மூழ்கி இருந்த, விபச்சாரிகள், பாவிகள் ஞானத்தை தெய்வீகத்தை கண்டுகொள்கின்றார்கள். இயேசு தெளிவாக சொன்னார் ஞானம்  ஞானிகளையும் மேதாவிகளையும் தேடிச் செல்வதில்லை, மாறாக பாவிகளையும் விபச்சாரிகளையுமே தேடிவருகின்றது என்று.

 மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர். இரண்டு பேர் ஒரேவிதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை. உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே.

ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ – தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ – அதுவே உனது வழி.

ஆனால் யார் தன்னிச்சையாக இல்லையோ, யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ, யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ, அவர்கள் முழுமையான தீவிரத்தோடு வாழவேண்டும்,, முழு முயற்சியோடு இருக்கவேண்டும் 

ஏனெனில் அதுதான் அவர்களுக்கு சுலபம். யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும்.

தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக, தளர்வாக இருப்பதன் மூலமாக, இயல்பாக இருப்பதன் மூலமாக அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் அப்போது அதுதான் சரியான வழி. 

ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.

ஆகவே எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் அதன் அடிஆழம் வரை செல், அதனுடன் செல், அது என்னவென்று உணர்ந்து கொள். அப்போது ஞானம் அருகில் வரக்கூடும். 

மனதை தளர்வாக வைத்திருப்பதற்கு ஒரே வழி! அன்பாக இருப்பது, எல்லோரிடமும் அன்பாக இருக்கப்பழகிக்கொண்டால் மனம் தளர்வான, மென்மையானதாக மாறும், அங்கே தெய்வீகம் குடி கொள்ள எத்தனிக்கும்.

நமக்குள் ஆணவத்தை, அகந்தையை, ஈகோவை வளர்த்துக் கொண்டு, எனது ஊர், எனது சாதி, எனது சொந்தம் என்ற சுயத்தை நாம் வளர்த்துகொள்வோமேயானல் அவர்கள் தோல்வியையே காண்பார்கள். கிறிஸ்தவமதத்தில் பெரும்பாலன அருட்பணியா ளர்கள், குருக்கள், க்ன்னியாஸ்திர்கள் இப்படிப்பட்ட சுயத்தில் இருப்பதினாலும், அதில் இருந்து விடுபட முடியாது இருப்பதி னாலுமே அவர்களால் ஞானம் பெறமுடிவதில்லை, நற்பணிகள் ஆற்றுவதில் தோல்வி கண்டுகொள்கின்றார்கள்.

இப்படிப்பட்ட அருட்பணியாளர்களை நீங்கள் சீண்டிப்பாருங்கள். அவர்கள் ஆற்றாமைகள், குப்பைகள் வெளியே வரும், ஏனெனில் அவர்கள் ஒருவிதமான இறுக்கமான மனிதர்களாக இருக்கின் றனர். நமது குடும்ப பெருமைக்காக, சமூகப்பெருமைக்காக அருட்பணி வாழ்வை தெரிவு செய்துவிட்டு, பின்னர் தமது ஊரையும், குடும்பத்தையும், தனது சாதியத்தையும் விட்டு வெளிவரமுடியாது, இரண்டும் கெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இறுக்கமான மனிதர்களாக வாழ்கின்றார்.

நான் முகநூலில் ஒரு வேடிக்கையான அருவருப்பான கதையை வாசிக்க நேர்ந்தது, பாவ மன்னிப்பு அறையில் ஒருவன் பாவமன்னிப்பு கோரி காத்திருந்தான் பாதிரியார் திரைக்கு மறுபுறம் வந்து அமர்ந்து செய்த  பாவத்தைக் கூற சொன்னார்.

இவன் தான் அன்பாக வளர்த்த நாயோடு  உடலுறவு கொண்டுவிட்டேன் ஆகவே எனக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டும் என்றான் பாதிரியாரும் இனி இது போன்ற பாவத்தை செய்யாதே எனக்கூறி 10 டாலர் அபராதம் விதித்தார்

மீண்டும் அடுத்தவாரம் அவனே வந்திருந்தான் மீண்டும் பாவமன்னிப்பு கேட்க இந்த வாரம் என்ன பாவம் செய்தாய் என்றார் பாதிரியார் இவன் மீண்டும் அதே பாவம்தான் மீண்டும் என் நாயுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்.

ஏனெனில் அது மிக சுகமாக இருந்தது என்றான் பாதிரியார் சற்று கோபத்துடன் இனி செய்யாதே எனக்கூறி 50 டாலர் அபராதம் விதித்தார் மூன்றாவது வாரமும் அவனே பாவமன்னிப்பு கேட்க வந்திருந்தான்

இப்ப என்ன பாவம் செய்தாய் என்றார் பாதிரியார் அவன் இப்பவும் அதே நாயோடு  உடலுறவு செய்துவிட்டேன் அது மிக சுகமாக இருந்ததால் என்னால் விட முடியவில்லை என்றான்

உடனை கோபத்தின் உச்சத்துக்கே சென்ற பாதிரியார் முடியாது முடியவே முடியாது. நானும் முயற்சி செய்து செய்து பார்த்தேன் என்னை நகத்தால் பிராண்டி காயப்படுத்திவிட்டு சென்றுவிட்டது என்றார் வருத்தத்துடன்.

இந்த கதை அருவருப்பானதுதான், ஆனாலும் இதற்குள்ளும் சில உண்மை இருக்கின்றது, துறவறம் என்பது இலகுவான காரியம் அல்ல, என்னைப் பொறுத்தவரை, அது இயேசு சொன்னதை மீறும் செயலாகும்! இயேசு என்ன சொன்னார்? உன்னைப்போல உன் அயலவனை நேசி என்றார். முதலில் நமது உடலின் ஊணர்வு களை உணர்ச்சிகளை நாம் நேசிக்கவேண்டும். அப்படியானல் கிறிஸ்தவ துறவிகள் அறியாமல் செய்கின்றார்களா? இல்லை இது தவறான புரிதல், இயேசுவுக்காக சகல மக்களை அன்பு செய்யவே இவர்கள் துறவிகளானார்கள் அதுதான் உண்மை நோக்கம் இலக்கு, இயேசுவும் இதற்கு சான்று பகன்றார். என் பொருட்டு சகலவற்றையும் துறப்பவன், பாக்கியவான் என்று, அப்படிப்பட்ட துறவிகள் குருக்கள் கன்னியர்கள் தளர்வான தன்மை கொண்டிருப்பார்கள், சகலரையும் அன்பு செய்வார்கள், அவர்களை பார்க்கும் போது தெய்வீக வட்டம் தெரியும். 


ஆனால் எல்லா குருக்களும் துறவிகளும் அல்ல, சுயத்தை மறக்காதவர்கள், தனது ஊர், தனது சாதி, தனது ஊர் ஆலையம், தனது பங்கு என்று கட்டிக்கொண்டு, இறுக்கமாக தங்களை வைத்துக்கொள்வோர்களின் ஆழ்மனதில், மேலே சொன்ன அருவருப்பான கதையில் வரும் பாதிரியாராகவே இருப்பார். எனவே யாராக இருந்தாலும் எல்லோரையும் நேசித்து தன்னலம் மறந்து தளர்வான தயாள குணம் கொண்டவர்களாக இருந்தல் நாமும் ஞானம் பெறுவோம், இது எனது சிந்தனை . எனது மெய்ப்பொருள் தேடல் தொடரும்  அன்புடன் பேசாலைதாஸ்

Monday, 27 November 2023

.காமத்தில் இருந்து கடவுளுக்குள் வாருங்கள்! பேசாலைதாஸ்

காமத்தில் இருந்து கடவுளுக்குள் வாருங்கள்! பேசாலைதாஸ்


காமத்தில் இருந்து விடுபட்டு, கடவுளுக்குள் பிரவேசிப்பது, மறு பிறப்பு என்று கூட நாம் புரிந்து கொள்ளலாம், அந்த நிலை பேரின்ப பெருவாசலுக்குள் நுழைவதப் போன்ற ஓர் அனுபவம் என மகான் கள் சொல்வதுண்டு. அது ஒரு பாய் ச்சல் போன்றதாகவே இருக்கும் என நான் அனுமானிக்கின்றேன்.

 பைபிளில் ஒரு இடத் தில் இப்படி சொல்லப்படுகின்றது, உலகத்தின் இறுதிக்கணத் திலே, உயிரோடு இருப்பவர்கள், அக்கணமே மறு உருவம் பெற்று, நித்தியத்துக்கான உடலை பெறுவார்கள் என சொல்லப்படுகின்றது.

 நித்தியத்துக்கான உடல் நிலை என்பது பேரின்ப பெரு வாசலை தொடுவதை அல்லது உணர்வதை போன்ற ஒரு பரவச ஆனந்தம் என்றே நான் நினைக்கின்றேன். அதை நான் ஒருபோதும் அனுப வித்தது இல்லை. ஆக மொத்தத்தில் அது ஒரு ஈர்ப்பின் செயல் பாடாக இருக்கமுடியும்.

உங்களது நண்பர் உங்களிடம் ' இது காந்தம் ' என்று சொல்லி ஒரு பொருளை கொடுக்கிறார். அதை வாங்கி பார்க்கிறீர்கள். அது ஒரு இரும்புத் துண்டு. அதை காந்தம் என்கிறார் உங்களது நண்பர். எப்படி நம்புவது ? இரும்பு துண்டு மட்டும் தானே கண்களுக்கு தெரிகிறது. மின்சாரம் போலவே, காந்த புலம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. சின்ன இரும்பு ஆணி, இரும்பு துகள் இவற்றை அதன் அருகில் வைத்து, அதன் காந்த ஈர்ப்பு விசையின் மூலமாகத்தான், அந்த இரும்பு துண்டு ஒரு காந்தம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.

பூமி -  நாம் நின்று கொண்டிருக்கும் தரை ( Land ) நமது கண்களுக் குத் தெரிகிறது. புவி ஈர்ப்பு விசை (gravity force ) நமது கண்களுக்கு தெரிவ தில்லை. ஒரு நொடி நேரம் மட்டும் புவி ஈர்ப்பு விசை இல்லை என்று வைத்துக்கொள்வோம் அவ்வளவுதான், உலக மக்கள், விலங்குகள், பூமியில் உள்ள பொருட்கள், அனைத்துமே விண் வெளியில் பாய்ந்து விடும். அது போலதான், மனித உடம்பில் உருவாகும், விந்துவும் - கருவும்.

விந்துக்களின் கூட்டத்தை கெட்டியான திரவ வடிவில் கண்களால் காண முடியும். ஒரு விந்தணுவை மட்டும் நுண்நோக்கி ( microscope ) வழியாக பார்த்து விட முடியும். ஆனால், அதை சுற்றி சூழ்ந்திரு க்கிற ' ஜீவ காந்த ' புலத்தை நமது கண்களால் காணமுடியாது. காந்த மண்டலத்தால் சூழ பட்டதுதான், ஆண்களின் விந்து அணு வும், பெண்களின் கரு அணுவும்.

இந்த இரண்டும் வெவ்வேறு எதிர் திசையில் செயல்படுகின்றது. ஆண் விந்துவும் அதனைச்சூழவுள்ள காந்த வலயமும் முன் நோக்கி பாயக்கூடியது, அதேவேளை பெண்களின் கருவும் அதனை சூழவுள்ள காந்த வலயமும் ஈர்க்கும் தன்மை கொண்ட தாக அமைகின்றது.

ஆண்கள் உணர்ச்சிவசப்படும் போது, அல்லது தூண்டப்படும் போது stumulate அவனின் ஆண் உறுப்பு விரைத்து நிமிர்ந்து, விந்தணுக்களை பாய்ச்சுவதற்கு தயாராக இருக்கும், இது இயல்பானதே. ஆனால் ஒரு பெண்ணின் உறுப்பு அப்படியல்ல, விந்துவின் உள் நோக்கிய பாய்ச்சலை, முழுமையாக பெற்றுக் கொள்ள, அல்லது ஈர்த்துக்கொள்ள கால அவகாசம் தேவைப்படு கின்றது. 

ஒரு பெண் காம இன்பத்தில் உச்சநிலை அடையும் போதுதான், விந்துக்களை முழுமையாக ஈர்ந்து கொள்ளும் நிலை அடைகின்றாள், திருப்தி அடைகின்றாள். அந்த அனுபவத்தை அடைய துணை நின்றவன் மீது அவள் அன்பு இன்னும் பெருகு கின்றது. எனவேதான் ஒரு ஆண், எப்போதும் பாயத்தயாராகிக் கொண்டிருக்கும் விந்துவின் வீரியத்தை அடக்கி ஆளும் ஆண் மகனாக இருக்கவேண்டும். 

பெண்ணின் உச்சநிலை அடைவதற்கு ஆடவன் ஒருவன் துணை செய்யும் போது, அவன் ஆலயத்தின் கருவறைக்குள் பிரவேசித்த இன்பத்தை அடைவான். ஆனால் நம்மில் பலபேர் அப்படி காத்திருப்பதில்லை, ஆலைய வாசலின் படிக்கட்டில் ஏறியவுடன் அணைத்துமே அவனிடம் இருந்து பாய்த்து விடுகின்றது. இதுவே இல்லற சிக்கலுக்கும் காரனமாக அமைகின்றது என்பதே எந்து முடிவாகும்.

ஒருவரால், சிறுநீரை வெளியேற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில், அதை வெளியேற்றாமல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொஞ்ச நேரமாவது வைத்துக் கொள்ள முடியும். எப்படியென்றால், சிறுநீர் அணுக்களில்  எந்த விதமான காந்த புலமும் இல்லை. அதனால், அதை வெளியேற்றுவதற்கு சமயத்திற் கேற்றது போல் தாமத படுத்த முடிகிறது.

ஆனால், உடலுறவின்போது, ஆண் எதிர்பாராத நேரத்தில், அவனது கட்டுப்பாட் டுக்குள் இல்லாமல், விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுகிறது. காரணம், எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்ற காந்த தத்துவத்தின் படி விந்து அணுக்கள் செயல்பட்டு விடுகிறது. எதிர் துருவத்தை நோக்கி பாய்கிறது. கருவில் கலக்கிறது.

பின்னாளில், கரு முட்டை உருவாகிறது. குழந்தை உண்டாகும் போது,குழந்தை யின் உடலமைப்பு -- அனாட்டமி  -அனைத்து குழந்தைகளுக்கும்  ஒரே அமைப் புடன் உருவாகுவதற்கு இந்த காந்த புலமே முக்கியக் காரணமாக உள்ளது. இதில், விந்தணு குழந்தையின் உடலாகவும், காந்த புலம்  அதன் ஆத்மாவும் உருமாறுகிறது.

ஆத்மா என்பது ஒரு காந்த பிரதேசம். அதனால்தான், குழந்தையை பார்க்கி றோம் அதன் ஆத்மாவை பார்க்க முடிவதில்லை. ஆத்மாவின் சக்தியை மட்டுமே உணர முடியும். குழந்தை வளர்ந்து  வாலிப பருவத்தை அடைகிறது. காந்த புலனும் - அதாவது ஆத்ம சக்தியும் வலிமை அடைகிறது. அதன் சக்தி எல்லையற்றது. மகாவீரர் அதை ' அனந்த வீர்யம் ' என்று அழைத்தார்.

அந்த காந்த புலனை இரண்டு வழிகளில் பயன் படுத்திக் கொள்ளலாம். முதலாவது,  தியானத்தின் மூலமாக ஆத்ம சக்தியை, இடுப்பு பகுதியிலிருந்து -மூலாதாரத்திலிருந்து - மேலே ஏற்றி, உச்சந் தலையிலிருக்கும், துரியம், ஸகஸ்ராதாரம் பகுதிக்கு எடுத்து செல்ல இயலும். அது பேரின்ப நிலையின் ஆரம்பம்.

விந்து சக்தியில் இருந்து காந்த சக்தியை மட்டும அழைத்து செல்கிற செயல். மனதில், எந்த நிலையிலும் சாந்தத்தை ஏற்படுத்தி தரும் அதுவே   'புனிதம் 'இந்த இன்பம் நிரந்தரம். காந்த புலத்தை மேல் நோக்கி செலுத்த நினைப்பவர்களுக்கு மன உறுதி அதிகமாக வேண்டும்.

ஏன் என்றால், அந்த பாதை முழுவதும் முரண்பாடுகள்,  குழப்பங்கள் அதிகம். ஆனால், இறுதியில் கிடைக்கும் பேரின்ப நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இரண்டாவது, காந்த புலனின் தாக்கத்தால் உடலுறவின் மூலமாக, கீழ் நோக்கி செலுத்தி சிற்றின்ப நிலையை அடைந்துவிடலாம். இது சுலபமானது. அடிக்கடி மனம் விரும்புவது. நாம் எல்லோரும் தினம் தினம் அதையே செய்கின்றோம். அதற்காகவே வாழ்கின்றோம். அதற்காக்வே உழைக்கின்றோம்.  கீழ் நோக்கிய அந்த உடல் உறவினால் நாம் பெற்ற குழுந்தைகளுக்காக நாம் வாழ்கின்றோம். அவர்களும் வளர்ந்து நாம் செய்வதையே அவர்களும் செய்கின்றார்கள். தந்தை தவறு செய்ய, தாய் இடம் கொடுக்க, பூமியில் ஜனனம் நிகழ்கின்றது. இதை நான் தவறு என்று சொல்லவில்லை ஜதார்த்தம் என்கின்றேன். குழும்பி விடாதீர்கள். அதிலும் இன்பம் இருக்காத்தானே செய்கின்றது!

ஆனால், இந்த இன்பம் தற்காலிகமானது. சிறிது நேரம் மட்டுமே. மனது, சிற்றி ன்பத்தையே எப்போதும் விரும்புவதால், அதை மீறி பேரின்பத்திற்கான முயற்சியை மேற்கொள்வது கடினம்தான். மனம், தேவையில்லாத சமயங் களிலும், காம இச்சையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும். எனவேதான், சிற்றின்பத்தில் முழுமைப் பெற்ற பின்னர், மனதின் தொல்லை இல்லாமல், பேரின்பத்திற்கான முயற்சிக்கு வருவது நல்லது. நான் சொல்வதை சில துறவிகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை நிட்சயம் எனக்கெதிரான கருத்துக் களை முன்வைப்பார்கள். என்னை விமர்சிப்பார்கள், என்னதான் சொன்னா லும்'  காமத்தில் இருந்து கடவுளுக்கு வருவது சாத்தியமானது. வேண்டு மென்றால் முயற்ச்சித்துப்பார்ப்போம். நானும் முயச்சிக்கின்றேன். மீண்டும் உங்களை மெய்ப்பொருள் தேடலில் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் சொல்லி விடை பெறுவது உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

Sunday, 26 November 2023

குடிகார தியானம் பேசாலைதாஸ்

 குடிகார தியானம் பேசாலைதாஸ்

ஒரு குடிகாரன் வந்து கேட்கிறான்: "நான் ஒரு குடிகாரன். நான் தியானம் செய்வது எப்படி?"

அந்தத் துறவி, "அதற்கு முதல் நிபந்தனை, நீ குடிப்பதை விட வேண்டும். அப்போதுதான் தியானம் செய்ய முடியும்" என்கிறார்.

இந்த நிபந்தனைகள் தற்கொலைக்குக் கொண்டு செல்வதாயுள்ளன.

ஒரு மனிதன் குடிகாரனாய் அல்லது திருடனாய் அல்லது ஒழுக்கக் கேடானவனாய் இருக்கக் காரணம் அவன் அமைதியற்ற, நலக்குறைவு கொண்ட மனதுடன் இருப்பது தான்.

இவை நோயுற்ற மனத்தின் விளைவுகள். தொடர் நிகழ்வுகளே. அப்படியிருக்கையில் அவனிடம், "முதலில் நலமடை. பிறகு நீ தியானம் செய்யலாம்" என்று சொல்லப்படுகிறது.

ஆனால் பிறகெதற்குத் தியானம் தேவை? தியானம் மருந்து போன்றதே. அது ஒரு மருந்தே.

தந்த்ரா ஒழுக்கம் கடந்தது. அது உன்னிடம் நீ யார் என்று கேட்பதில்லை.நீ இதுவரை ஒழுக்கமாக இருந்திருக்கவேண்டும் என்ற விதி இல்லை.

நீ ஒரு மனிதனாயிருப்பது போதும். நீ எங்கிருந்தாலும், நீ எப்படியிருந்தாலும், நீ ஏற்றுக் கொள்ளப்படுகிறாய்.

உனக்குப் பொருந்துகின்ற ஒரு உத்தியைத் தேர்ந்தெடு. உன்முழு சக்தியையும் அதில் கொடு. அதன் பின் நீ பழைய ஆளாகக் கண்டிப்பாக இருக்க மாட்டாய்.

உண்மையான, ஆதாரபூர்வமான உத்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்கும்.

நான் நிபந்தனைகளை விதிக்கிறேன் என்றால்,என்னிடம் போலியான உத்தியே இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது.

நான் சொல்கிறேன், ''முதலில் இதைச் செய்..  அதைசெய்யாதே என்றெல்லாம் சொல்லுவது சாத்தியம் இல்லாதது.

ஒரு திருடனால் திருடும் செயலை விட்டுவிட முடியும். ஆனால் அவன் உள்ளத்தில் திருட்டுத்தனம் இல்லாதவனாக மாற முடியாது.

ஒரு பேராசைக்காரன், பேராசைப்படும் பொருட்களை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் பேராசையில்லாதவனாக மாற முடியாது. நீ அவனிடம் திணிக்கலாம். அல்லது அவனே அவன் மீது பேராசையற்ற தன்மையைத் திணித்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் கூட ஒரு விதப் பேராசையின் அடிப்படையிலேயே இருக்கும்.

சொர்க்கம் கிடைக்குமென்று வாக்குறுதி வழங்கப்பட்டால், அவன் பேராசையற்றவனாயிருக்க முயற்சி செய்யக் கூடும். ஆனால் இது எல்லாவற்றையும் மீறிய பேராசையாக மாறிவிடும்.

சொர்க்கம், மோட்சம், விடுதலை, சத் - சித் - ஆனந்த், பிரபஞ்ச இருப்பு, முழு உணர்வு நிலை, பரம சுகம் - இவை அவன் பேராசை கொண்ட பொருட்களாயிருக்கும்.

தந்த்ரா சொல்கிறது. நீ மனிதனை, மாறக் கூடிய ஆதாரபூர்வமான யுக்திகளை கொடுக்கா விட்டால், மாற்ற முடியாது.

வெறும் போதனைகளால் எதுவும் மாறியதில்லை. இதை நீ உலகம் முழுவதும் பார்க்கலாம்.

கணக்கிலடங்கா போதனைகள், கணக் கில்லாத ஒழுக்கக் கோட்பாடுகள், ஏராளமான பூசாரிகள். போதகர்கள், ஓதுவார்கள் - உலகம் முழுவதும் இவர்களால் நிறைந்து வழிகிறது.

ஆனாலும் எல்லாம் அவ்வளவு அசிங்கமாகவும், அவ்வளவு ஒழுக்கக் கேடாகவும் இருக்கிறது.ஏன்?

ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறது? உன் ஆஸ்பத்திரிகளை இந்தப் போதகர்களிடம் கொடுத்தால், அதுவும் இப்படியாகி விடும். அவர்கள் அங்கும் போய் போதனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

மேலும் அவர்கள் அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளியையும், "நீ பாவி! நீதான் இந்த நோயை உண்டாக்கிக் கொண்டாய்; நீயே இப்போது இந்த நோயை மாற்று” என்று நினைக்கச் செய்துவிடுவார்கள்.

ஓதுவார்களிடம் ஆஸ்பத்திரிகள் கொடுக்கப்பட்டால்: அந்த ஆஸ்பத்திரிகளின் நிலை எப்படி இருக்கும்? இந்த முழு உலகமும் இருக்கும் நிலைக்கு வந்துவிடும்.

போதகர்கள் போதித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் தொடர்ந்து, "கோபம் கொள்ளாதே" என்று எந்தவித யுக்தியும், டெக்னிக்கும் கொடுக்காமலே சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்.

நாம் இதை நீண்ட நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருப்பதால், நாம் இந்தக் கேள்வியைக் கூட ஒருபோதும் எழுப்புவதில்லை.

"நீ என்ன சொல்கிறாய்? நான் கோபத்தோடு இருக்கிறேன். நீ என்னிடம் "கோபம் கொள்ளாதே" என்று சும்மா சொன்னால் போதுமா? எப்படி அது சாத்தியம்? நான் கோபமாய் இருக்கும்போது அதன் அர்த்தம் "நான்" இப்போது கோபமாய் இருக்கிறேன்'' என்பதே.

நீ சும்மா சொல்கிறாய்? "கோபப்படாதே என்று. அப்படியானால் நான் என்னையே அமுக்கிக் கொள்ளத்தான் வேண்டுமா எந்த யுக்தியும் இல்லாமல்?

ஆனால் அப்படி அமுக்கிக் கொள்வது அதிக கோபத்தையே உண்டு பண்ணும். அது குற்றவுணர்வைத் தோற்றுவிக்கும்.

ஏனெனில் நான் என்னை மாற்றிக் கொள்ள முயன்று, அப்படி என்னை மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அது தாழ்வு மனப்பான்மையையே உண்டாக்கும்.

அது எனக்கு நான் ஒரு பாவி என்ற உணர்வையே, அதாவது நான் கையாலாகாதவன்.. என்னால் எனது கோபத்தை வெற்றி கொள்ள முடியவில்லை என்ற உணர்வையே கொடுக்கும். யாரும் வெற்றி பெற முடியாது!

உனக்குச் சில ஆயுதங்கள் தேவை. உனக்குச் சில யுக்திகள் தேவை. ஏனெனில், உனது கோபம் என்பது அமைதியற்ற மனத்தின் ஒரு அடையாளமே. அமைதியற்ற மனதை மாற்றி விட்டால் அதன் அடையாளமும் மாறிவிடும். கோபம், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவ்வளவே. உள்ளே உள்ளதை மாற்று; அப்போது வெளியே உள்ளது மாறிவிடும். 

ஆகவே தந்த்ரா, உனது ஒழுக்கம் என்ற பெயரில் அழைக்கப் படுவதைப் பொருட்படுத்துவதில்லை. உண்மையில், ஒழுக்கத்தை வற்புறுத்துவது கீழானது; சிறுமைப்படுத்துவது;

அது மனிதத் தன்மையில்லாதது. என்னிடம் வரும் ஒருவரிடம் நான், "கோபத்தை முதலில் விடுங்கள், செக்ஸை முதலில் விடுங்கள், இதை விடுங்கள், அதை விடுங்கள்" என்று சொன்னால், நான் மனிதத் தன்மையில்லாதவன்.

நான் சொல்வது சாத்தியமில்லாதது. இப்படிச் சாத்தியமில்லாமல் போவது அந்த மனிதனை அவனுக்குள்ளேயே கூனிக் குறுகச் செய்யும்.

அவன் தாழ்ந்தவனாக உணர ஆரம்பிப்பான். அவன் அவனுக்குள்ளேயே, அவன் சொந்தக் கண்களின் முன்பே சிறுமை அடைவான். சாத்தியமில்லாததை அவன் முயற்சி செய்து பார்த்தால், அவன் தோல்வியே அடைவான்.

போதகர்கள் இந்த உலகம் முழுவதையும் “நீங்கள் பாவிகள்” என்று உறுதியாக நினைக்கச் செய்து விட்டார்கள். இது போதகர்களுக்கு நல்லது. ஏனெனில் நீ இப்படி நம்பவில்லை யென்றால், அவர்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாது.

நீங்கள் கண்டிப்பாகப் பாவிகளாயிருக்க வேண்டும். அப்போது மட்டுமே சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் எல்லாம் தொடர்ந்து கொழிக்க முடியும். உங்கள் ஜீவிதம் பாவமாய் இருப்பதே அவர்களது வெற்றி.

உன் குற்றவுணர்வே மிக உயர்ந்த சர்ச்சுகள் எல்லாவற்றின் அஸ்திவாரம்.

நீ அதிக குற்றவுணர்வு கொண்டிருந்தால், அதிக சர்ச்சுகள் மேலும் மேலும் அதிக உயரங்களை எட்டும்.

அவை உனது குற்றவுணர்வின் மேல், உன் பாவத்தின் மேல், உன் தாழ்வு மனப்பான்மையின் மேலேயே கட்டப்பட்டுள்ளன.

இப்படியாகத்தான் அவை, தாழ்ந்த மனித குலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

தந்த்ரா, உன் ஒழுக்கம் என்ற பெயரில் அழைக்கப்படுவதைப் பற்றி, உன் சமூக முகதாட்சண்யங்கள், இன்னும் இது போன்றவை பற்றி அக்கறைப்படுவதில்லை.

இதன் அர்த்தம், தந்த்ரா ஒழுக்கக் கேடாயிருக்கச் சொல்கிறது என்பதல்ல! தந்த்ரா, உன் ஒழுக்கத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொண்டதாக இல்லை.

ஆகவே ஒழுக்கக் கேட்டைப் பற்றியும் அது சொல்வதில்லை. தந்த்ரா மன மாற்றத்திற்கான விஞ்ஞான பூர்வமான யுக்திகளைக் கொடுக்கிறது.

இப்படி மனம் மாற்றமடையும் போது உன் குணாதிசயமும் மாறும். உன் அடிப்படை கட்டமைப்பே மாறும்போது, உன் முழுக் கட்டமைப்பும் மாறிப் போகும்.

ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி பொருளை மாற்ற முடியும் என்றால் மனதையும் ஒரு உத்தியைப் பயன்படுத்தி மாற்ற முடியும் என்பதை அறிந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஒரு மருந்து எப்படி நல்லவன், கெட்டவன் என்று பார்க்காமல் நோயை குணப்படுத்துகிறதோ அதுபோலவே தந்த்ராவும்.

Saturday, 25 November 2023

தாமரை இலையாக இரு. பேசாலைதாஸ்

 தாமரை இலையாக இரு. பேசாலைதாஸ்


வாழ்க்கை ஒரு விந்தை தான்! அதில் சந்தேகமே இல்லை . விந்தைகளை நாம் வேடிக்கை பார்க்கத்தான் முடியும் அதை மாற்றவோ மறைக்கவோ நம்மால் முடியாது. ஆனால் அதை ஒரு பிரச்சினையாக நம்மால் மாற்றிவிடமுடியும். ஒரு விந்தையை ஒரு பிரச்சினையாக ஆக்கியவுடன் தான் சிக்கல் தொடங்கிவிடும். ஏனெனில் அதற்குத் தீர்வு கிடையாது

ஒரு விந்தை விந்தையாகவே இருக்கிறது; அது தீர்க்க முடியாதது. 
அதனால்தான் அதை விந்தை என்கிறோம். வாழ்க்கையே ஒரு விந்தைதான், ஆனால் வாழ்க்கை பிரச்சினைக்குரிய ஒன்றல்ல.
நாம் செய்யும் அடிப்படைத் தவறுகளில் ஒன்று இது. நாம் உடனடியாக ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிடுகிறோம். 

ஒரு விந்தைக்கு முன்பாகக் கேள்விக்குறியை வைத்துவிட்டால், வாழ்க்கை முழுக்க அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.  அது கிடைக்கவும் போவதில்லை. உதாரணம் மரணம்! அது மிகுந்த விரக்தி யையும் கொண்டுவரும். அதனால் எதையும் பிரச்சினையாக ஆக்காமல் ஆனந்தமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். பைபிள் சொல்கின்றது, அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், தொழுவத்தில் மாடுகள் செத்துக்கிடத்தாலும், கடவுளுக்குள் மகிழ்ச்சியாக இருங்கள்! கடவுள் எல்லாவற்றையும் கவனிப்பார், அதுதானே அவரின் வேலை! நீங்கள் மகிழ்சியாக இருங்கள். அதை மட்டுமே என்னால் சொல்லமுடியும்

எதனையும் சொந்தம் கொண்டாடாமல் இருப்பது வாழ்க்கையின் மகத்தான அனுபவங்களில் ஒன்று.  எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பதும், எதன் அங்கமாகவும் உணராமல் இருப்பதும் கடந்துபோகும் பேருணர்வைத் தருவதாகும்.

ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி தனக்கு விருப்பமான சூபி துறவியைச் சந்திக்கச் சென்றார். பல ஆண்டுகளாக அவருடைய செய்திகளால் அவர் வசீகரிக்கப்பட்டிருந்தார். சூபி துறவியின் அறைக்குள் நுழைந்தார். 
அறைக்குள் நுழைந்த அவருக்கோ பெரும் வியப்பு. அந்த அறை முற்றிலும் காலியாக இருந்தது! 

சூபி துறவி அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தார்.  அங்கே இருக்கை கள் எதுவும் இல்லை. ஒரு அமெரிக்கரால் நாற்காலிகள் இல்லாத அறையைக் கற்பனையே செய்ய இயலாது. “இங்கே உட்கார்வதற்கு ஒரு இருக்கையும் இல்லையே?” என்றார் அமெரிக்கப் பயணி. அந்த வயதான துறவி சிரித்துக்கொண்டே, உன்னுடையது எங்கே? என்று கேட்டார்.

“நான் இங்கே பயணியாக அல்லவா வந்தேன். நான் எப்படி நாற்காலியை எடுத்துவர முடியும்” என்று கேட்டார். சூபி துறவி பதிலளித்தார். “நானும் இங்கே சில நாட்களுக்குப் பயணியாகவே வந்துள்ளேன்.  அதற்குப் பிறகு போய்விடுவேன். உன்னைப் போலவே” என்றார்.

இந்த உலகம் சிறந்த யாத்திரைத் தலம். அவ்வளவுதான்.  சொந்தம் கொண்டாடுவதற்குரிய இடம் அல்ல. இந்த வாழ்க்கை யாத்திரையின் இறுதி, நித்திய நித்திரை, அதனோடு இந்த உடலின் வேலை.  முடிந்து விடும். உங்களுக்கு இது விந்தையாக தோன்றவில்லையா? வாழ்க்கை பயணத்தில் நாம் சில நாடுகளை சந்திக்கின்றோம், பல மனிதர்களை சந்திக்கின்றோம், நம்மக்காக நாம் சிலர் உருவாக காரனமாக இருக்கி ன்றோம். காதல், கல்யாணம், உடல் உறவு இன்பம், துன்பம் எல்லாமே தற்காலிகமானது, அதில் மரணம் மட்டும் நிட்சயமானது! எனவே எதிலும் அதிக பற்றுவைத்துவிடாதே! தாமரை இலையாக தண்ணீர் துளியாக  இரு.  பேசாலைதாஸின் மெய்ப்பொருள் தேடல் தொடரும்,,,,,,

வாழ்க்கை என்பது ஒரு பாதை பேசாலைதாஸ்

வாழ்க்கை என்பது ஒரு பாதை பேசாலைதாஸ்

 மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். முறை தவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?
பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?
ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.
திரௌபதியின் சுயம் வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்
படுத்தப் பட்டேன்
குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்.
அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.
நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன.
நல்ல கல்வி இல்லை. இராணுவ பயிற்சி இல்லை. ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.
நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!
நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்து கொண்டேன்.
ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!
துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.
கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.
வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்
பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.
வண்ணத்துப்பூச்சிக்கு தன் உடலில் உள்ள வண்ணங்கள் தெரிவதில்லை .
அது போல மனித வாழ்வின் மகத்துவம் அவரவர் எண்ணங்களில் உள்ளது என்பது சில சமயம் நமக்கு புரிவதில்லை.
நம் வாழ்க்கை புத்தகத்தில் சில பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்
சில பக்கங்கள் வரையப்பட்டிருக்கும்
சில பக்கங்கள் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்
சில பக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கும்
சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கும்
ஆனால் இன்னும் பல பக்கங்கள் வெறுமையாகவே இருக்கும்
அது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ
அப்படியே அதை நாம் மாற்றுவோம்..
நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.
எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடு முரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

சொல்லாதே யாரும் கேட்டால்,,,, பேசாலைதாஸ்

 சொல்லாதே யாரும் கேட்டால்,,,, பேசாலைதாஸ்

முல்லா தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம்  என்ன விசயம்? எதற்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் ? எனக்கேட்டார்.

அந்த சாமியார் நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்.அதைச் சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது. அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் என்றார்.

உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு . சரி பரவாயில்லை என்னுடன் வா என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் ஏறினார். 

அந்தச் சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலைக் கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு முல்லாவைத் தொடர்ந்தார்

சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.

சாமியார்,  எனக்கு என்ன தருகிறீர்கள் ? எனக் கேட்டார். சற்று பொறுமை இழந்தவராக

முல்லா  என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை, "sorry  “ என்றார்

சாமியார்,  முட்டாள் இதைக் கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ?

முல்லா  ,  என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான். அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்கமாக இருந்தது அதான்.மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்.ஹீ ஹி… “ என்றார்.

“அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது”

சாத்தியம் ஆகும் அசாத்தியம் பேசாலைதாஸ்

 சாத்தியம் ஆகும் அசாத்தியம் பேசாலைதாஸ்

மேற்கின் மாபெரும் உள்வியலாளர்களில் ஒருவரான கூ (Cotue) என்பவர் கற்பனையின் மூலமாகவே பலப்பல நோய்களில் இருந்து குணம்பெற லட்சக்கணக்கான மக்களுக்கு உதவினார்.

அவரது செயமுறை மிகவும் எளிமையானது நீங்கள் நலமாக இருப்பதான உணர்வை உணரத் தொடங்குங்கள் அவ்வளவே 'நான் அதிகமதிகம் நலமாகிக் கொண்டே வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் கூடுதல் சுகத்தை பெற்றுக் கொண்டிருக்கிறேன்' எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்பார்.

அவர் 'இரவில் நீங்கள் ஆழ்ந்து உறங்கும்போது தீங்கள்ஆரோக்கியமாக இருப்பதாக எண்ணிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு கணமும் நீங்கள் அதிகமதிகமாய் நலமடைந்து வருவதாக எண்ணுங்கள். காலையில் எழும்போது உலகிலேயே முதல்தர ஆரோக்கியமுள்ள ஆளாக நீங்கள் இருப்பீர்கள். கற்பனை செய்துகொண்டே போங்கள், “

இப்படிக் கூறி லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் உதவினார். குணப்படுத்த முடியாத நோய்கள்கூட குணமாயின.

இது ஒரு அற்புதம் போலவே தோன்றுகிறது. உண்மையில் இது ஒன்றுமில்லை. இது ஒரு எளிய விதி மட்டுமே. அதாவது உங்கள் மனம் கற்பனையை பின்பற்றுகிறது.

குழந்தைகளிடம் நீ திறமை இல்லாதவன்/ள். சுறு கறுப்பில்லாதவன் / ள் '' என்று நீங்கள் சொல்லி வந்தால் அவர்கள் மந்தமானவர்கள் ஆகிறார்கள் என இப்போது உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

பல பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு குழத்தையிடம் நீ முட்டாள் எதையும் உன்னால் செய்ய முடியாது. இந்தக் கணக்கை உன்னால் போட முடியாது'' என்று சொல்லிவிட்டு அந்தக் கணக்கை அதனிடம் கொடுத்து ''முயன்று பார்" என்று சொன்னால் அதனால் அதற்கு விடை காண முடியாது.

கதவை நீங்கள் அடைத்து விட்டிருக்கிறீர்கள்: ''

நீ புத்திசாலி, உன்னைப் போன்ற புத்திசாலிக் குழந்தையை நான் பார்த்ததே இல்லை. உன் அளவுக்கு உன் வயசுக்கு உளக்கு நிறைய அறிவு இருக்குது. உனக்குள் பல நிறமைகள் இருப்பதாக தெரிகிறது எப்பேர்ப்பட்ட கணக்கையும் உன்னால் போட்டுவிட முடியும். இப்போது இதைச் செய்துபார்'' என்று குழந்தையிடம் கூறுங்கள்; அதனால் அதைச் செய்துவிட முடியும்.

அவனுக்கு / அவளுக்கு கற்பனைச் சிறகை நீங்கள் தந்து விட்டீர்கள்

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என நீங்கள் கருதினால், நீங்கள் அழகானவர் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால், ஒரு குறிப்பிட்ட அழகு உங்கள் உடலில் நிகழத் தொடங்கும்.

மேலும் ஒரு பெண்ணிடம் "நீ அழகாயிருக்கிறாய்'' என்று ஒரு ஆண் கூறும் போதெல்லாம். உடனடியாக அந்தப் பெண் மாற்றம் அடைந்து விடுகிறாள்.

அவள் அழகானவளாக இல்லாமல் இருந்திருக்கலாம் இந்தக் கணத்துக்கு முன்புவரை அவள் அழகாக இல்லாது இருந்திருக்கலாம் வெறும் சராசரியான எளிய தோற்றமுடையவளாகவே இருக்கலாம்.

ஆனால் இந்த மனிதன் அவளுக்குக் கற்பனைத் திறனை அளித்திருக்கிறான்.

எனவே காதலிக்கப்படும் ஒவ்வொரு பெண்மணியும் அதிக அழகானவளாக ஆகிறாள். காதலிக்கப்படும் ஒவ்வொரு ஆண் மகனும் அதிக அழகானவனாக ஆகிறான்.

அன்பு செய்யப்படாத ஒருவர் அழகாக இருக்கலாம்.ஆனால் அரியப்படாமல் இருக்கிறது.

இப்போது கற்பனையின் வலிமை விஞ்ஞான நிரூபனங்களாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாக இருக்கின்றன.

அதாவது எத்தக் கற்பனையால் பீடிக்கப்பட்டாலும் அது ஒரு விதையாக ஆகிறது.

வெறும் கற்பனை மூலம் முழு தலைமுறைகளே மாற்றப்பட்டிருக்கின்றன; முழு கால கட்டங்களே முமு தேசங்களே மாற்றப்பட்டிருக்கின்றன.

கிறித்தவ. முகமதிய தியானங்கள் அனைத்தும் அடிப்படையில் கற்பனை மூலமாகவே அமைந்துள்ளன.

முதலில் ஒன்றை நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதன்பின் அதை நீங்கள் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள்.

கற்பனைக்கு வலிமை உள்ளது. அதன் மூலம் வீரனை கோழையாக்க முடியும். கோழையை வீரனாக்க முடியும்.

கற்பனையினால்  அசாத்தியம்கூட சாத்தியம் ஆகும்.

குழந்தை ஞானம் பேசாலைதாஸ்

 குழந்தை ஞானம்   பேசாலைதாஸ்

குழந்தைகள் ஏன் ஆனந்தமாக இருக்கிறார்கள்? அதிலும் மிகவும் எளிமையான விசயங்களில்கூட அவர்கள் பேருவகை கொள்கிறார்கள்.

இந்த ஆனந்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை உங்களால் கற்பனைசெய்தும் பார்க்க இயலாது. கடற்கரையில் கிடக்கும் சாதாரண வண்ணக் கற்களைப் பார்த்ததுமே அவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாடத் தொடங்கிவிடுகிறார்கள்.

அவர்களுக்கு என்ன நோகிறது? உங்களால் ஏன் கூத்தாட முடிவதில்லை?

ஏனெனில் அவை வெறும் கற்களே என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

உங்கள் ஞாபகம் தங்கம் பற்றி அறிந்து இருக்கிறது. தங்கத்தை அடைவது நோக்கமாக உள்ளது.அதை அடைந்த பிறகும் மகிழ்ச்சி இல்லை. மேலும் அதை அடைய வேண்டும் என்ற ஞாபகம். எனவே கற்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை.

குழந்தைகளுக்கோ ஞாபகம் என்பது இல்லை எனவே தான் அவர்களுக்கு அந்தக் கற்கள் ஒரு அற்புதமாகத் தென்படுகின்றன.

ஏதோ நிலவையே அவர்கள் அடைத்து விட்டது மாதிரி மகிழசசியால் கூத்தாடுகிறார்கள்.

முதன்முதலாக மனிதன் நிலவை அடைத்ததும் உலகம் முழுவதிலும் மாபெரும் மகிழ்ச்சிக் கிளாச்சி ஏற்பட்டது என்று நான் படித்திருக்கிறேன்.

அப்போது எல்லாரும் தத்தம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாகவே எல்லாருக்குமே சலித்துவிட்டது உற்சாகம் வடிந்துவிட்டது.

இனி மேற்கொண்டு என்ன செய்வது? மனிதன் நிலவின்மீது நடந்து கொண்டிருக்கிறான் வேறு ஒன்றும் இல்லை அவ்வளவுதான்.

வெறும் பதினைத்தே நிமிடங்களுக்கு பின்.

ஆனால் அந்த இடத்தை அடைவதற்கு இந்தக் கனவுக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்தது.

இப்போதோ நடந்து கொண்டிருப்பது குறித்து யாருக்குமே ஆர்வம் அக்கறை இல்லாமல் போய்விட்டது.

தங்கம் கிடைத்த பிறகும் அதனோடு நீங்கள் எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை அவர்களால் எதைக்கொண்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 

உங்களால் மட்டும் இந்த உயர்வு தாழ்வு வேற்றுமையை கைவிட முடிந்தால்!

உங்களால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியும்.

ஆன்மாவின் பசி பேசாலைதாஸ்

 

ஆன்மாவின் பசி பேசாலைதாஸ்

ஒரு பார்வையற்ற ஃபக்கீர் ஒரு ஊரில் பிச்சை எடுத்துக்கொண்டு ஒரு மசூதிக்கு வந்தார். 

மசூதியின் வாசலுக்கு முன்னால் கைகளை விரித்து, "சாப்பிட ஏதாவது கிடைக்குமா? எனக்குப் பசிக்கிறது" என்று கேட்டார்.

அவ்வழியே சென்றவர்கள், "முட்டாளே! இது உண்பதற்குக் கிடைக்கும் வீடு அல்ல. 

இது மசூதி, இது கோயில். இங்கு யாரும் வசிக்கவில்லை. 

நீங்கள் பிச்சையெடுக்கும் இது மசூதி  - உங்களுக்குக் எதுவும் கிடைக்காது. இங்கே எதுவும் இல்லை! வேறு எங்காவது செல்லுங்கள்."

ஃபக்கீர் சிரித்தார். கடவுள் இல்லத்தில் இருந்து எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், வேறு எந்த வீட்டில் இருந்து எதுவும் பெற முடியும், 

இது நான் கடைசியாக வந்த வீடு, தவறுதலாக இந்த இறுதி வீடு கோயிலாகும், நான் எப்படி நகர முடியும். 

இங்கிருந்து நான் இடம் பெயர்ந்தால் எங்கே போவேன்? இதற்குப் பிறகு வேறு வீடு இல்லை, 

இப்போது நான் இங்கேயே இருப்பேன், எனக்கு ஏதாவது கிடைத்தால் மட்டுமே நகருவேன்."

மக்கள் அவரைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். 

அவர்கள், "முட்டாள்! இங்கு யாரும் வசிக்கவில்லை. உனக்கு யார் எதையும் கொடுப்பார்கள்?"

அவர் பதிலளித்தார், "அதுவல்ல கேள்வி, நான் கடவுளின் வீட்டை விட்டு வெறுமையான கைகளுடன் செல்ல வேண்டும் என்றால், என் கைகள் எங்கே நிரப்பப்படும்? என் கைகள் எங்கும் நிரப்பப்படாது, இப்போது நான் இந்த கதவைத் தட்டிவிட்டேன். 

என் கைகள் நிரம்பியவுடன் தான் கிளம்புவேன்."

ஃபக்கீர் அங்கேயே இருந்தார். 

ஒரு வருடமாக அவனுடைய கைகள் அப்படியே விரிந்திருந்தன, 

அவனுடைய உடலும் அவ்வாறே ஏங்கிக்கொண்டிருந்தது. 

ஊர் மக்கள் அவனுக்கு பைத்தியம் என்று சொல்ல ஆரம்பித்தனர். 

அவர்கள் அவனை நோக்கி, "நீ முற்றிலும் முட்டாள்! கைகளை விரித்து எங்கே உட்கார்ந்திருக்கிறாய் என்று நினைக்கிறாய்? இங்கே பெறுவதற்கு ஒன்றுமில்லை."

ஆனால் ஃபக்கீர் ஒரு வகையான, தனித்துவமான ஒருவர். அவர் உட்கார்ந்து உட்கார்ந்து உட்கார்ந்தார்.

ஓராண்டுக்குப் பிறகு, அந்த ஃபக்கீர் ஏதோ சாதித்திருப்பதை ஊர் மக்கள் கண்டனர். 

அவன் முகத்தின் பிரகாசம் மாறியிருந்தது. அவனைச் சுற்றி ஒருவித அமைதி தென்றல் மிதந்து கொண்டிருந்தது; 

அவரைச் சுற்றி ஒருவித ஒளி, ஒரு நறுமணம் தோன்றியது.... அந்த மனிதர் நடனமாடத் தொடங்கினார். 

முன்பெல்லாம் கண்ணில் நீர் வழிந்த இடத்தில், இப்போது முகத்தில் புன்னகை. 

அவர் கிட்டத்தட்ட இறந்துவிட்டார், ஆனால் இந்த ஒரு வருடத்தில் அவரது வாழ்க்கை மீண்டும் மலர்ந்தது, அவர் நடனமாடத் தொடங்கினார்.

மக்கள், "நீங்கள் ஏதாவது பெற்றீர்களா?"

அவர் கூறினார், "நான் எதையாவது பெறுவேன் அல்லது நான் தங்கமாட்டேன் என்று முடிவு செய்ததால் ஒன்றைப் பெறாமல் இருக்க முடியாது, 

நான் விரும்பியதை விட அதிகமாக அடைந்தேன், நான் என் உடலுக்கு உணவை மட்டுமே விரும்பினேன், 

நான் உணவைப் பெற்றேன். என் ஆன்மாவிற்கும், நான் என் உடலின் பசியை மட்டுமே பூர்த்தி செய்ய விரும்பினேன், ஆனால் இப்போது என் ஆன்மாவின் பசியும் நிறைவேறிவிட்டது."

"இதை எப்படி அடைந்தாய்? இதை எப்படிப் பெற்றாய்?" என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

அவர் கூறினார், "நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் என் தாகத்திற்கு பின்னால் எனது முழு விருப்பத்தையும் வைத்தேன். 

தாகம் இருந்தால் அதனுடன் முழு உறுதியும் இருக்க வேண்டும் என்று நான் எனக்குள் சொன்னேன். 

என் முழு உறுதியும் என் தாகத்திற்குப் பின்னால் இருந்தது, இப்போது என் தாகம் தணிந்து விட்டது. 

நான் அந்தத் தண்ணீர் கிடைக்கும் இடத்தை அடைந்தேன், அதைக் குடித்த பிறகும் என் தாகம் நீங்காது."

மன உறுதியின் அர்த்தம், தைரியம், உள் வலிமை மற்றும் மன உறுதி, 

நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதைச் செய்ய வேண்டும், 

நீங்கள் எது சரி என்று நினைக்கிறீர்களோ, அதன்படி செயல்படுவது மற்றும் உங்களுக்குச் சரியான பாதையைப் பின்பற்றுவது. 

இந்த உறுதி உங்களிடம் இல்லை என்றால், என் அல்லது வேறு யாருடைய வார்த்தைகளால் எதுவும் நடக்காது. 

என் வார்த்தைகளால் ஏதாவது நடந்தால், விஷயங்கள் மிகவும் எளிதாக இருக்கும். 

உலகில் நல்ல விஷயங்களைச் சொன்னவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். 

அவர்களின் வார்த்தைகளால் மட்டுமே விஷயங்கள் நடக்க முடிந்தால், இப்போது உலகம் முழுவதும் அனைத்தும் நடந்திருக்கும். 

ஆனால் மகாவீரரோ, புத்தரோ, கிறிஸ்துவோ, கிருஷ்ணரோ, முகமதுவோ எதுவும் செய்ய முடியாது. #நீங்களே_எதையும்_செய்யத் #தயாராக_இல்லாதவரை_யாரும் #எதையும்_செய்ய_முடியாது.

முதல்தரிசனம் பேசாலைதாஸ்

 முதல்தரிசனம் பேசாலைதாஸ்

முன்னொரு காலத்தில் ஒரு பெண் இருந்தாள். 

அவள் வளர்ந்து வந்த மதத்தை விட்டு அவள் விலகி வந்தாள். 

அவள் மற்றொரு  மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதில் சேர்ந்தாள். 

பின் மற்றொரு மதத்தின் கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டு இதை விட்டு விலகி அதில் சேர்ந்தாள். 

ஒவ்வொரு முறை அவள் வேறு மதத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும்போதும் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டதாகவும் ஆனால் அது நிறைவு தரவில்லை எனவும் அவள் நினைத்தாள். 

ஒவ்வொரு முறை அவள் மதம் மாறும்போதும் அவள் வரவேற்கப்பட்டாள். 

அவளது தரம் உயர்ந்து இருப்பதாகவும், அவளது தூய்மையும் ஞானநிலையும் உயர்ந்து வருவதாகவும் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் அவளது மனநிலையோ

குழப்பமாகத்தான் இருந்தது. 

இந்த நீண்ட பயணத்தில் அவள் ஒருமுறை இமாம் ஜபார் சாதிக் என்ற நிறைவடைந்த ஞானி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றாள்.

அவளது முயற்சிகளையும்

கருத்துக்களையும் கேள்விப்பட்ட பின் அவர் நீ உன் வீட்டிற்கு திரும்பிச் செல். 

நான்  எனது முடிவை ஒரு செய்தியாக அனுப்பி வைக்கிறேன் என்றார்.

விரைவிலேயே அந்த ஞானியின் சீடர்

ஒருவர் இவளின் வீடு தேடி வந்தார். 

அவர் கையில் அந்த குரு கொடுத்தனுப்பிய ஒரு பார்சல் இருந்தது. அவள் அதை திறந்து பார்த்தாள். 

அதில் ஒரு கண்ணாடி பாட்டில் இருந்தது. அதில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களையுடைய மணல் மூன்று அடுக்குகளாக நிரப்பப்பட்டு இருந்தது. 

மீதி பாதி பஞ்சால் நிறைக்கப்பட்டிருந்தது. 

அதன்கூடவே இந்த பஞ்சை எடுத்துவிட்டு இந்த பாட்டிலை குலுக்கு. 

அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நீ இருக்கிறாய் என்ற எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் இருந்தது.

அவள் அந்த பஞ்சை எடுத்துவிட்டு

அந்த பாட்டிலை குலுக்கினாள். 

பார்த்தபோது அவள் கையில் இருந்தது சாம்பல் கலர் கொண்ட

மணல் பாட்டில்.

மனிதன் முரண்பாடுடையவன். மனிதன்

மட்டுமே மிருகமாகவும் மனிதனாகவும் இருக்கக் கூடியவன். 

அதுதான் முரண்பாடு. அதுதான்  அவனது தனித்துவம். 

மனிதனின் சிறப்பே அவனுக்கு உள்ளே உள்ள உள்முக முரண்பாடுதான். 

மற்ற அனைத்து மிருகங்களும் முரண்பாடு உடையவை அல்ல.

ஒரு மரம் மரம் மட்டுமே. ஒரு நாய்

நாய் மட்டுமே. 

ஆனால் மனிதனுக்கு மட்டும் அது மட்டுமே என்பது போன்ற நிலை கிடையாது. 

அவன் எப்போதுமே வளர்ச்சியடைபவன், நிலைமாற்றமடையக் கூடியவன். 

மனிதன் எப்போதும் தன்னையே கடந்து செல்கிறான். அதுதான் அவனது முரண்பாடு. 

அது அவனது ஆழ்நிலை இருப்பு. அது தற்செயலானதல்ல, அதுதான் அடிப்படையே. 

நீ இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டால் மனித்தன்மை பற்றிய முதல்தரிசனம் உனக்கு ஏற்படும்.

வளரும் வேரைத் தேடி,,,,,,,பேசாலைதாஸ்

வளரும் வேரைத் தேடி,,,,,,,பேசாலைதாஸ்

கங்கை பாய்கிறது, பெருங்கடல்கள் நிரம்பியுள்ளன, ஆனால் உங்கள் கைகளில் கொள்கலன் இல்லை - நீங்கள் தண்ணீர் வேண்டும் என்று கத்துகிறீர்கள்.

கங்கை, "நீர் இருக்கிறது, ஆனால் உங்கள் பாத்திரம் எங்கே?"

"கண்டனை பற்றி பேசாதே. நீ கங்கை, உன்னில் இவ்வளவு தண்ணீர் இருக்கிறது, எனக்கு கொஞ்சம் கொடு" என்று சொல்கிறீர்கள்.

கங்கையின் கதவுகள் மூடப்படவில்லை, கங்கையின் கதவுகள் திறந்திருக்கும் - ஆனால் உங்களுக்கு ஒரு கொள்கலன் தேவை.

உறுதியின் கொள்கலன் இல்லாத இடத்தில், ஆன்மீக பயணத்தில் எந்த நிறைவும் அல்லது மனநிறைவும் அடைய முடியாது.

என் பேச்சை இவ்வளவு மௌனமாக கேட்டு விட்டீர்கள்.... நமது முதல் நாளின் மூன்று சந்திப்புகள் இப்போது முடிவடைந்து, நாளை முதல் மற்ற இரண்டு விஷயங்களைப் பற்றி விவாதிக்கத் தொடங்குவோம். 

இப்போது, ​​இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சுமார் பத்து நிமிடங்கள் இரவு தியானத்திற்கு உட்காருவோம்.

இரவு தியானத்தைப் பற்றி இரண்டு அல்லது மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பிறகு நாம் உட்கார்ந்து கொள்வோம்.

படுத்திருக்க முடியுமா? தியானம் செய்பவர்கள் படுக்க போதுமான இடம் இருக்கிறதா? முதலில் புரிந்து கொள்ளுங்கள், பிறகு இரவு தியானம் செய்வோம். 

காலை தியானம் உட்கார்ந்து செய்யப்பட வேண்டும். 

உயிர் எழுகிறது, காலையில் எழுகிறது, எனவே உட்கார்ந்து தியானம் செய்வது பயனுள்ளதாக இருக்கும். 

இரவு தியானத்தை படுக்கையில் படுத்து உறங்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். 

தியானத்திற்குப் பிறகு, அமைதியாக தூங்கச் செல்லுங்கள். 

இது நாளின் கடைசி விஷயம். 

காலையில் எழுந்ததும் முதலில் நடக்கும் தியானம்; இரவு தியானம் என்பது தூங்குவதற்கு முன் நடக்கும் கடைசி விஷயம்.

ஒருவர் தூங்கும் முன் முறையாக தியான நிலைக்குச் சென்றால், ஒருவரின் முழு தூக்கமும் மாறுகிறது. 

ஒருவரின் முழு தூக்கமும் ஒரு தியானமாக மாறும், ஏனென்றால் தூக்கத்திற்கு சில விதிகள் உள்ளன. 

முதல் விதி என்னவென்றால், இரவில் கடைசி எண்ணம் உங்கள் தூக்கத்தின் மைய சிந்தனையாக மாறும், மேலும் காலையில் எழுந்ததும் உங்கள் முதல் எண்ணமாக இது இருக்கும். 

நீங்கள் கோபத்தில் இரவில் தூங்கச் சென்றிருந்தால், இரவு முழுவதும் உங்கள் மனமும் உங்கள் கனவுகளும் கோபத்தால் நிறைந்திருக்கும். 

நீங்கள் காலையில் எழுந்ததும், உங்கள் முதல் உணர்வு மற்றும் உங்கள் முதல் எண்ணம் கோபமாக இருப்பதைக் காண்பீர்கள். 

இரவில் நம்முடன் உறங்குவதற்கு எதை எடுத்துக் கொண்டாலும் அது இரவு முழுவதும் நம்முடன் இருக்கும்.

அதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் உங்கள் தூக்கத்தில் எதையாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், உங்களுடன் தியானத்தை எடுத்துச் செல்வது நல்லது, 

இதனால் முழு தூக்கமும் தியானத்தைச் சுற்றி, அதன் அமைதியைச் சுற்றியே சுழலும். 

மெதுவாக, மெதுவாக, சில நாட்களுக்குள், கனவுகள் மறைந்து, உங்கள் தூக்கம் ஆழமான நதியாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.

 நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து காலையில் எழுந்ததும் - இந்த இரவு தியானத்திலிருந்து ஆழ்ந்து - உங்கள் முதல் எண்ணங்கள் அமைதி, பேரின்பம், அன்பு.

எனவே காலைப் பயணத்தை காலை தியானத்தோடும், இரவுப் பயணத்தை இரவு தியானத்தோடும் தொடங்க வேண்டும். 

இரவு தியானம் படுத்திருக்கும் போது செய்ய வேண்டும் - படுக்கையில் படுத்திருக்கும் போது. 

இங்கே படுத்துக்கொண்டு பரிசோதனை செய்வோம்.🌹

                🌹 வளரும் வேரைத் தேடி 🌹

கொடுப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் பேசாலைதாஸ்

 கொடுப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் பேசாலைதாஸ்

ஒரு ஊரில் தர்ம சிந்தனை உள்ள பண்ணையார் ஒருவன் இருந்தான்.அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ஏகப்பட்ட உதவிகள் செய்துவந்தான்.

துன்பம் என்று வருபவர்க்கும்,உதவி என்று கேட்பவர்களுக்கும் அவன் இல்லையென்று சொன்னதில்லை.

அந்த ஊரே அவனை வாழ்த்தியது.அதே ஊரில் ஒரு கஞ்சனும் இருந்தான்.யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை.ஊர் அவனை எப்பொழுதும் ஏசியது.

அந்த இருவரும் எப்பொழுதாவது சந்திக்க நேரும்போது பண்ணையார் கஞ்சனை ஏளனமாக பார்ப்பது வழக்கம்.

ஊர் தன்னை புகழ்வதிலும்,கஞ்சனை திட்டுவதிலும் அவர் பெருமை கொண்டார்.

ஓர் நாள் பண்ணையார் வீட்டில் அன்னதானம் நடந்தது.மொத்த ஊரும் அங்கு பசியாறிக்கொண்டிருக்க கஞ்சன் மட்டும் தன்னுடைய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான்.

அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன் பசியாக இருப்பதாகவும் தனக்கு உணவும் நீரும் கிடைக்குமா என்றும் கஞ்சனை கேட்டான்.

கஞ்சன் சொன்னான் நான் உனக்கு உணவு தர முடியாது அதோ பார் பண்ணையார் வீடு அங்கு போனால் உனக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்று சொல்லியனுப்பினான்.

ஆண்டுகள் பல கடந்தது.

பண்ணையாரும்,கஞ்சனும் மரணித்தனர்.மரணத்துக்கு பின்னான தீர்ப்பு அலுவலகத்தின் வாயில் படியில் இருவரும் நின்றிருந்தனர்.

சொர்க்கத்தின் நிர்வாகி கஞ்சனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு பண்ணையாரை நரகத்துக்கும் அனுப்ப உத்தரவிட்டார்.

பண்ணையார் கேட்டார் இது என்ன அநியாயம் 'அவன் ஒரு கஞ்சன்,நான் தர்மம் அல்லவா செய்தேன்?அவனுக்கு சொர்க்கம் எனக்கு நரகமா? 

நிர்வாகி சொன்னார்...அவன் கஞ்சன் ஆனாலும் தன்னிடமுள்ள எதையும் இங்கு எடுத்து வரவில்லை.அங்கேயே விட்டுவிட்டுதான் வந்திருக்கிறான்.அது எப்பொழுது யாருக்கு எங்கு சேர வேண்டுமோ அங்கு போய் சேர்ந்துவிடும்.

ஆனால் நீ கொடுப்பதில் பெருமை கொண்டாய்.ஏழைகளுக்கு உதவி செய்வதில் கருணையும் அன்பும் இருப்பதற்கு பதிலாக கர்வமும்,பெருமையும் மட்டுமே இருந்தது உன்னிடம்.

உணவு வழங்கிய நிகழ்வில் ஒருவன் மட்டுமே தர்மத்தை பெற்றுக்கொண்டவன்  ஆவான்.

அவன் அந்த கஞ்சன் மட்டுமே.

வழிப்போக்கனுக்கு  உணவை காட்டிய கஞ்சனிடம் பெருமை இல்லை. சிறிதளவேனும் அன்பு இருந்தது.

--------------------------------------------------------------------

கொடுப்பதில் பெருமை கொள்ளாதீர்கள் அது உங்களுடையது அல்ல.

அன்பு செலுத்துங்கள். எதுவும் இல்லாவிட்டாலும்.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு பேசாலைதாஸ்

கூழாங்கற்களின் புறக்கணிப்பு பேசாலைதாஸ் 

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே அன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில், நீ எத்தனை பேரைப் பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணிப் பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாகச் சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. 

அது போல் இயல்பாய் கடமையைச் செய்.

The rotten Indian mind! Pesalaithas

 BELOVED MASTER,

I WANT TO GET MARRIED. HOW CAN I BE SURE THAT THE WOMAN I AM MARRYING IS PURE IN CHARACTER?
Suresh, this is what I call the rotten Indian mind! If the woman is really pure, why should she be
marrying you in the first place? And why this desire, this imposition on the other? And what do you mean by purity, purity of character? Do you mean that she has not known anybody sexually before you? But that will mean marrying a woman who is immature, marrying a woman who is inexperienced. If you are going to employ an engineer, will you ask him, "The first requirement is that you shouldn't know anything about engineering"? Then you ask about experience; you want proofs, certificates. If you are wise you will inquire whether the woman has been loved by other people too. If a woman has not been approached by anybody up to now, escape! What does it mean? It simply means the woman is dangerous!
Only very ugly people can have that kind of purity you are asking for. But I don't see that by having a few love affairs a person becomes impure. Love purifies. How can it make somebody impure? The more one loves, the more one becomes artful, skillful, intelligent in love. Millions of marriages fail because two inexperienced persons are trying to work things out. If both are inexperienced, it is bound to fail. There are a few primitive societies still existent in the world where it is thought to be a must that a
woman should know a few men, that the man should know a few women, before they decide to marry. Marriage needs artfulness; it is a great effort to create a symphony between two persons' beings. So don't ask foolish things. And if you are too much after such a kind of purity, then please, why are you deciding to make the woman impure? You will suffer for it, and she will suffer because she will be making you impure. Don't do such harm to each other. Why in the first place think of marriage? Remain pure!

இயற்கையின் சீதனம் மனைவி. பேசாலைதாஸ்

 இயற்கையின் சீதனம் மனைவிபேசாலைதாஸ்

 


ஜீவிதம் ( வாழ்க்கை ) எப்போதுமே 

மிகவும் நியாயமானது.

இயற்கை எப்போதும்

 நமது வாழ்க்கையை 

தரம் பிரித்து பார்ப்பதில்லை.

மழை, வெயில், காற்று,

நீர், நிலம், தென்றல் என

இயற்கை  தருவதை அனைவருக்கும் சமமாகவே தருகிறது.

வசதியான வாழ்க்கை,

எளிமையான வாழ்க்கை என்று பிரித்துப் பார்பதெல்லாம்,

மனிதனின் மன நோயால் எழுகிற எண்ணங்கள்.

வாழ்க்கையே இயற்கையின்

கொடை என்பதால்,

அது தருவதில் 

ஏற்றத் தாழ்வுகள் பார்ப்பதில்லை.

மனைவி அமைவதும் இயற்கையின் கொடையே.

ஆனால்,

பெரும்பாலான ஆண்களின் எண்ணங்கள் எல்லாம்,

' அடுத்தவனுக்கு அழகான, அமைதியான மனைவி கிடைத்திருக்கிறாள்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி வந்து வாய்த்தாள் ? ' என்று

புலம்பலாகவே இருக்கிறது.

உன் மனைவி,

உனக்கு இணையாக இருக்க அருகதை இல்லாதவள் என்று ஒருபோதும் 

நினைத்து விடாதே.

நீ நன்றாக படித்திருக்கலாம்,

உன்னிடம் நிறைய பணம் இருக்கலாம்,

அதிக உடல் வலிமை மிக்கவனாகவும் இருக்கலாம்,

இது போன்றவை எல்லாம்

இன்பமான வாழ்க்கைக்கு

ஆதாரமானது இல்லை

என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால்,

இவற்றை வைத்துதான் 

உன் மனைவியை நீ 

எடை போடுகிறாய்.

இங்கே பெரும்பாலானோர்,

காமத்தை முன்னிருத்தியே

திருமணம் செய்து கொள்ளுகின்றனர்.

மிக முக்கிய தேவையான,

காதல், அன்பு இவைகள் எல்லாம்

பின் தள்ளப்பட்டு விடுகிறன.

உண்மையாக

 உனக்கு எதற்கு அருகதை இருக்கிறதோ,

அதுதான் உனது துணைவியாராக கிடைக்கும்.

கூடவோ குறையவோ கிடைத்து விடாது.

எனவே,

நீ உன்னுள் திரும்பிப் பார்.

உன் மனைவி உனக்கு நிகரில்லை என்று நீ நினைத்தால்,

உன்னிடம் தான்  ஏதேனும் குறையிருக்க வேண்டும்.

உன்

வார்த்தைகள் மென்மையாக இல்லாமல் இருக்கலாம்,

நீ கூர்ந்த உணர்வில்லாதவனாக இருக்கலாம்,

பயன்படுத்திக் கொள்ளதான் பெண்,

மற்றபடி அவளிடம் வேறு என்ன இருக்கிறது ? ' என்ற

ஒருவிதமான அலட்சிய மனப்பான்மை உடையவனாக நீ இருக்கலாம்.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உனது வாழ்க்கை,

உன்னை விட்டு நழுவி விடாமல் இருக்க வேண்டும் என்றால்,

உன் மனைவியை மதித்திரு.

அன்பாயிரு.

எப்போதுமே ஒன்றை நினைவில் வைத்திரு.

உனது காதலுக்கு,

காமம் தான் விதை என்றால்,

ஆத்மார்த்தமான வாழ்க்கை உனக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

வாழ்க்கையை தவற விட்டு விடுவாய்.

அக ஜீவிதத்தில் உண்மையான

அன்பு ஒருங்கிணைந்திருக்கும்

போது மட்டுமே,

புற வாழ்க்கையில்

மகத்தான ஆனந்தம் எழுகிறது.

அப்போது 

நீ எந்த குறையும் இல்லாமல்,

மீண்டும் புதிதாய் பிறப்பெடுத்து வருவதுபோல் உணர்வாய்.

இது நிச்சயம்.

எதை நேசித்தாலும் யாரை நேசித்தாலும் உண்மையில் அது... உங்களை நீங்களே நேசிப்பதாகும். எதை வெறுத்தாலும் யாரை வெறுத்தாலும் உண்மையில் அது... உங்களை நீங்களே வெறுப்பதாகும்.
பசியோடு இருக்கும் ஒரு ஏழை,
ஏன் MOZART இசையை கேட்பதில்லை,?"
பசியோடு இருப்பவன், 
ஏன் PICASO ஓவியங்களை இரசிப்பதில்லை?
என்று யாரும் என்னிடம் கேட்பதில்லை.
ஆனால், அதற்கு மாறாக,
செல்வந்தர்கள் மட்டும், 
ஏன் உங்களை தேடி வருகிறார்கள்?
என கேட்கிறார்கள்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... 
ஆன்மீகம் தான் உண்மையான ஆடம்பரம். 
உலகில் செல்வ செழிப்பு, சராம்சம், புத்திகூர்மை, மற்றும் கலாச்சாரத்தில் நாகரீகம் உள்ளவர் மட்டுமே என்னை நெருங்க முடியும்.
ஏன் என்றால்...
#மிகவும்_உன்னதமான_ஐஸ்வர்யம்,
#ஆன்மீகம்_மட்டுமே. 

ஒரு மனிதனாக இருக்கவாவது கற்றுக்கொள். பேசாலைதாஸ்

 


ஒரு மனிதனாக இருக்கவாவது கற்றுக்கொள். பேசாலைதாஸ்

அலெக்சாண்டரிடம் ஒரு சன்னியாசி கூறினார்.

உன்னை பொறுத்தவரை அலெக்சாண்டர் குறைந்தபட்சம் ஒரு மனிதனாக இருக்கவாவது கற்றுக்கொள்.
நீ உன்னை அரசர் அலெக்ஸாண்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாய்.
#இந்த_ஆணவம் உன்னுடைய
பு/சித்தரை அறிவதில் இருந்து உன்னை தடுத்துக் கொண்டிருக்கிறது.
நீ உனக்குள் அதை சுமந்து கொண்டிருக்கிறாய் ஆனால் "நான் சிறப்பானவன், என்ற இந்த எண்ணம்.
உலகையே கைப்பற்ற நினைக்கும் ஆசை,,,
உலகத்தையே கைப்பற்றுவதன் மூலம் நீ என்ன சாதிக்கப் போகிறாய்?
விரைவில் மரணம் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விடும் .
நீ அம்மணமாக இருப்பாய்,
பூமியில் புதைக்கப்படுவாய்.
உன்மேல் மக்கள் நடப்பதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
விலகி செல்லுங்கள் நான் பேரரசர் அலெக்ஸாண்டர் என்று உன்னால் மறுப்புக் கூற முடியாது.
தயவுசெய்து இந்த "சிறந்த,,, என்ற கருத்தை விட்டு விடு .
மேலும் அலெக்ஸாண்டர் என்ற பெயரும் கூட உன்னுடையதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்.

நான் தான் யூதாஸ். நீங்கள்தான் ஏசு, பேசாலைதாஸ்

 நான் தான் யூதாஸ். நீங்கள்தான் ஏசு,  பேசாலைதாஸ்


உங்கள் மனதின் வலிகளுக்கு,காயங்களுக்கு அடுத்தவர் காரணம் என்று நினைப்பதால்தான் காயம் ஆறாமல் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் அந்த காயங்களை சுமக்கிறீர்கள்.

உங்கள் தந்தை ஏதாவது சொல்லியிருப்பார்,வகுப்பில் ஆசிரியர் மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியது என.

கவனியுங்கள்.அவர்கள் உங்களை காயப்படுத்துவதற்காக திட்டம் தீட்டவில்லை.எல்லோரும் தத்தமது காயங்களுக்காக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.ஆனால் நீங்கள் காயம் படுகிறீர்கள்.எப்படி?

காயம்பட நீங்கள் தயாராக இருப்பதுதான்.

அங்கு தன்முனைப்பு இருப்பதால்தான்.

எனவே உங்கள் காயத்தை பற்றிய விழிப்புடன் இருங்கள்.அந்த காயத்துக்கு உதவி செய்யாதீர்கள்.அதை குணமாக விடுங்கள்.அதை சுமப்பதினாலும்,மீண்டும் பழிவாங்க நினைப்பதாலும் மட்டும்தான் அந்த காயம் ஆறாமல் ரணமாகவே உள்ளது.

அங்கு தன்முனைப்பு இல்லையென்றால் காயம் பட வாய்ப்பே இல்லை.இப்படி வாழ்நாள் முழுதும் காயங்கள் ஆறாமல் இருப்பதற்கு காரணமே அதை நினைத்து நினைத்து அதற்கு வலுவூட்டிக்கொண்டிருப்பதுதான்.

சிறு விஷயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறீர்கள்.

பழைய காயங்கள் இருந்தால் அது எங்கிருக்கிறது என்று அதன் வேர்களுக்கு செல்லுங்கள்.அதை கவனியுங்கள்.

புதிய காயங்கள் ஏற்படாமல் இருக்க யாராவது உங்களை அவமதித்தால்அமைதியாக வீட்டுக்கு செல்லுங்கள்.

யாராவது உங்களை தாக்கினால்,துரோகம் செய்தால் நன்றியோடு வீட்டுக்கு செல்லுங்கள்.

இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு புதிய சக்தி உங்களுக்குள் பாயும்.

பதிலுக்கு எதுவும் செய்யாமல் இருக்கும்போது நீங்கள் உணர்ந்திராத புதிய சக்தியை,புத்துணர்ச்சியை உங்களுக்குள் எழுவதை நீங்கள் காண்பீர்கள்.

ஒருபுத்தரை நீங்கள் அவமானப்படுத்த முடியாது.செரித்து உள்ளே தள்ளிவிடுவார்.அது சக்தியாக மாறிவிடும்.

அதை நீங்கள் தெரிந்துகொண்டுவிட்டால்,ஒருமுறை அதை சுவைத்துவிட்டால் உங்கள் வாழ்வு கொண்டாட்டமாகிவிடும்.

இவ்வளவு நாள் நீங்கள் செய்த முட்டாள்தனத்தை பார்த்து சிரிப்பீர்கள்.உள்ளே இருந்த எல்லா பழிகளும்,வருத்தங்களும்,காயங்களும் காணாமல் போன அதிசயத்தை பார்த்து பிரமிப்பீர்கள்.

பிறகு உங்களை யாரும் காயப்படுத்தமுடியாது.

நீங்கள் தான் யூதாஸ்.நீங்கள்தான் ஏசு,நீங்கள்தான் தாவோவின் மனிதன்.