காமத்தில் இருந்து கடவுளுக்குள் வாருங்கள்! பேசாலைதாஸ்
காமத்தில் இருந்து விடுபட்டு, கடவுளுக்குள் பிரவேசிப்பது, மறு பிறப்பு என்று கூட நாம் புரிந்து கொள்ளலாம், அந்த நிலை பேரின்ப பெருவாசலுக்குள் நுழைவதப் போன்ற ஓர் அனுபவம் என மகான் கள் சொல்வதுண்டு. அது ஒரு பாய் ச்சல் போன்றதாகவே இருக்கும் என நான் அனுமானிக்கின்றேன்.
பைபிளில் ஒரு இடத் தில் இப்படி சொல்லப்படுகின்றது, உலகத்தின் இறுதிக்கணத் திலே, உயிரோடு இருப்பவர்கள், அக்கணமே மறு உருவம் பெற்று, நித்தியத்துக்கான உடலை பெறுவார்கள் என சொல்லப்படுகின்றது.
நித்தியத்துக்கான உடல் நிலை என்பது பேரின்ப பெரு வாசலை தொடுவதை அல்லது உணர்வதை போன்ற ஒரு பரவச ஆனந்தம் என்றே நான் நினைக்கின்றேன். அதை நான் ஒருபோதும் அனுப வித்தது இல்லை. ஆக மொத்தத்தில் அது ஒரு ஈர்ப்பின் செயல் பாடாக இருக்கமுடியும்.
உங்களது நண்பர் உங்களிடம் ' இது காந்தம் ' என்று சொல்லி ஒரு பொருளை கொடுக்கிறார். அதை வாங்கி பார்க்கிறீர்கள். அது ஒரு இரும்புத் துண்டு. அதை காந்தம் என்கிறார் உங்களது நண்பர். எப்படி நம்புவது ? இரும்பு துண்டு மட்டும் தானே கண்களுக்கு தெரிகிறது. மின்சாரம் போலவே, காந்த புலம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. சின்ன இரும்பு ஆணி, இரும்பு துகள் இவற்றை அதன் அருகில் வைத்து, அதன் காந்த ஈர்ப்பு விசையின் மூலமாகத்தான், அந்த இரும்பு துண்டு ஒரு காந்தம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.
பூமி - நாம் நின்று கொண்டிருக்கும் தரை ( Land ) நமது கண்களுக் குத் தெரிகிறது. புவி ஈர்ப்பு விசை (gravity force ) நமது கண்களுக்கு தெரிவ தில்லை. ஒரு நொடி நேரம் மட்டும் புவி ஈர்ப்பு விசை இல்லை என்று வைத்துக்கொள்வோம் அவ்வளவுதான், உலக மக்கள், விலங்குகள், பூமியில் உள்ள பொருட்கள், அனைத்துமே விண் வெளியில் பாய்ந்து விடும். அது போலதான், மனித உடம்பில் உருவாகும், விந்துவும் - கருவும்.
விந்துக்களின் கூட்டத்தை கெட்டியான திரவ வடிவில் கண்களால் காண முடியும். ஒரு விந்தணுவை மட்டும் நுண்நோக்கி ( microscope ) வழியாக பார்த்து விட முடியும். ஆனால், அதை சுற்றி சூழ்ந்திரு க்கிற ' ஜீவ காந்த ' புலத்தை நமது கண்களால் காணமுடியாது. காந்த மண்டலத்தால் சூழ பட்டதுதான், ஆண்களின் விந்து அணு வும், பெண்களின் கரு அணுவும்.
இந்த இரண்டும் வெவ்வேறு எதிர் திசையில் செயல்படுகின்றது. ஆண் விந்துவும் அதனைச்சூழவுள்ள காந்த வலயமும் முன் நோக்கி பாயக்கூடியது, அதேவேளை பெண்களின் கருவும் அதனை சூழவுள்ள காந்த வலயமும் ஈர்க்கும் தன்மை கொண்ட தாக அமைகின்றது.
ஆண்கள் உணர்ச்சிவசப்படும் போது, அல்லது தூண்டப்படும் போது stumulate அவனின் ஆண் உறுப்பு விரைத்து நிமிர்ந்து, விந்தணுக்களை பாய்ச்சுவதற்கு தயாராக இருக்கும், இது இயல்பானதே. ஆனால் ஒரு பெண்ணின் உறுப்பு அப்படியல்ல, விந்துவின் உள் நோக்கிய பாய்ச்சலை, முழுமையாக பெற்றுக் கொள்ள, அல்லது ஈர்த்துக்கொள்ள கால அவகாசம் தேவைப்படு கின்றது.
ஒரு பெண் காம இன்பத்தில் உச்சநிலை அடையும் போதுதான், விந்துக்களை முழுமையாக ஈர்ந்து கொள்ளும் நிலை அடைகின்றாள், திருப்தி அடைகின்றாள். அந்த அனுபவத்தை அடைய துணை நின்றவன் மீது அவள் அன்பு இன்னும் பெருகு கின்றது. எனவேதான் ஒரு ஆண், எப்போதும் பாயத்தயாராகிக் கொண்டிருக்கும் விந்துவின் வீரியத்தை அடக்கி ஆளும் ஆண் மகனாக இருக்கவேண்டும்.
பெண்ணின் உச்சநிலை அடைவதற்கு ஆடவன் ஒருவன் துணை செய்யும் போது, அவன் ஆலயத்தின் கருவறைக்குள் பிரவேசித்த இன்பத்தை அடைவான். ஆனால் நம்மில் பலபேர் அப்படி காத்திருப்பதில்லை, ஆலைய வாசலின் படிக்கட்டில் ஏறியவுடன் அணைத்துமே அவனிடம் இருந்து பாய்த்து விடுகின்றது. இதுவே இல்லற சிக்கலுக்கும் காரனமாக அமைகின்றது என்பதே எந்து முடிவாகும்.
ஒருவரால், சிறுநீரை வெளியேற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில், அதை வெளியேற்றாமல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொஞ்ச நேரமாவது வைத்துக் கொள்ள முடியும். எப்படியென்றால், சிறுநீர் அணுக்களில் எந்த விதமான காந்த புலமும் இல்லை. அதனால், அதை வெளியேற்றுவதற்கு சமயத்திற் கேற்றது போல் தாமத படுத்த முடிகிறது.
ஆனால், உடலுறவின்போது, ஆண் எதிர்பாராத நேரத்தில், அவனது கட்டுப்பாட் டுக்குள் இல்லாமல், விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுகிறது. காரணம், எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்ற காந்த தத்துவத்தின் படி விந்து அணுக்கள் செயல்பட்டு விடுகிறது. எதிர் துருவத்தை நோக்கி பாய்கிறது. கருவில் கலக்கிறது.
பின்னாளில், கரு முட்டை உருவாகிறது. குழந்தை உண்டாகும் போது,குழந்தை யின் உடலமைப்பு -- அனாட்டமி -அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே அமைப் புடன் உருவாகுவதற்கு இந்த காந்த புலமே முக்கியக் காரணமாக உள்ளது. இதில், விந்தணு குழந்தையின் உடலாகவும், காந்த புலம் அதன் ஆத்மாவும் உருமாறுகிறது.
ஆத்மா என்பது ஒரு காந்த பிரதேசம். அதனால்தான், குழந்தையை பார்க்கி றோம் அதன் ஆத்மாவை பார்க்க முடிவதில்லை. ஆத்மாவின் சக்தியை மட்டுமே உணர முடியும். குழந்தை வளர்ந்து வாலிப பருவத்தை அடைகிறது. காந்த புலனும் - அதாவது ஆத்ம சக்தியும் வலிமை அடைகிறது. அதன் சக்தி எல்லையற்றது. மகாவீரர் அதை ' அனந்த வீர்யம் ' என்று அழைத்தார்.
அந்த காந்த புலனை இரண்டு வழிகளில் பயன் படுத்திக் கொள்ளலாம். முதலாவது, தியானத்தின் மூலமாக ஆத்ம சக்தியை, இடுப்பு பகுதியிலிருந்து -மூலாதாரத்திலிருந்து - மேலே ஏற்றி, உச்சந் தலையிலிருக்கும், துரியம், ஸகஸ்ராதாரம் பகுதிக்கு எடுத்து செல்ல இயலும். அது பேரின்ப நிலையின் ஆரம்பம்.
விந்து சக்தியில் இருந்து காந்த சக்தியை மட்டும அழைத்து செல்கிற செயல். மனதில், எந்த நிலையிலும் சாந்தத்தை ஏற்படுத்தி தரும் அதுவே 'புனிதம் 'இந்த இன்பம் நிரந்தரம். காந்த புலத்தை மேல் நோக்கி செலுத்த நினைப்பவர்களுக்கு மன உறுதி அதிகமாக வேண்டும்.
ஏன் என்றால், அந்த பாதை முழுவதும் முரண்பாடுகள், குழப்பங்கள் அதிகம். ஆனால், இறுதியில் கிடைக்கும் பேரின்ப நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இரண்டாவது, காந்த புலனின் தாக்கத்தால் உடலுறவின் மூலமாக, கீழ் நோக்கி செலுத்தி சிற்றின்ப நிலையை அடைந்துவிடலாம். இது சுலபமானது. அடிக்கடி மனம் விரும்புவது. நாம் எல்லோரும் தினம் தினம் அதையே செய்கின்றோம். அதற்காகவே வாழ்கின்றோம். அதற்காக்வே உழைக்கின்றோம். கீழ் நோக்கிய அந்த உடல் உறவினால் நாம் பெற்ற குழுந்தைகளுக்காக நாம் வாழ்கின்றோம். அவர்களும் வளர்ந்து நாம் செய்வதையே அவர்களும் செய்கின்றார்கள். தந்தை தவறு செய்ய, தாய் இடம் கொடுக்க, பூமியில் ஜனனம் நிகழ்கின்றது. இதை நான் தவறு என்று சொல்லவில்லை ஜதார்த்தம் என்கின்றேன். குழும்பி விடாதீர்கள். அதிலும் இன்பம் இருக்காத்தானே செய்கின்றது!
ஆனால், இந்த இன்பம் தற்காலிகமானது. சிறிது நேரம் மட்டுமே. மனது, சிற்றி ன்பத்தையே எப்போதும் விரும்புவதால், அதை மீறி பேரின்பத்திற்கான முயற்சியை மேற்கொள்வது கடினம்தான். மனம், தேவையில்லாத சமயங் களிலும், காம இச்சையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும். எனவேதான், சிற்றின்பத்தில் முழுமைப் பெற்ற பின்னர், மனதின் தொல்லை இல்லாமல், பேரின்பத்திற்கான முயற்சிக்கு வருவது நல்லது. நான் சொல்வதை சில துறவிகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை நிட்சயம் எனக்கெதிரான கருத்துக் களை முன்வைப்பார்கள். என்னை விமர்சிப்பார்கள், என்னதான் சொன்னா லும்' காமத்தில் இருந்து கடவுளுக்கு வருவது சாத்தியமானது. வேண்டு மென்றால் முயற்ச்சித்துப்பார்ப்போம். நானும் முயச்சிக்கின்றேன். மீண்டும் உங்களை மெய்ப்பொருள் தேடலில் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் சொல்லி விடை பெறுவது உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment