குழந்தை ஞானம் பேசாலைதாஸ்
குழந்தைகள் ஏன் ஆனந்தமாக இருக்கிறார்கள்? அதிலும் மிகவும் எளிமையான விசயங்களில்கூட அவர்கள் பேருவகை கொள்கிறார்கள்.
இந்த ஆனந்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை உங்களால் கற்பனைசெய்தும் பார்க்க இயலாது. கடற்கரையில் கிடக்கும் சாதாரண வண்ணக் கற்களைப் பார்த்ததுமே அவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாடத் தொடங்கிவிடுகிறார்கள்.
அவர்களுக்கு என்ன நோகிறது? உங்களால் ஏன் கூத்தாட முடிவதில்லை?
ஏனெனில் அவை வெறும் கற்களே என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
உங்கள் ஞாபகம் தங்கம் பற்றி அறிந்து இருக்கிறது. தங்கத்தை அடைவது நோக்கமாக உள்ளது.அதை அடைந்த பிறகும் மகிழ்ச்சி இல்லை. மேலும் அதை அடைய வேண்டும் என்ற ஞாபகம். எனவே கற்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை.
குழந்தைகளுக்கோ ஞாபகம் என்பது இல்லை எனவே தான் அவர்களுக்கு அந்தக் கற்கள் ஒரு அற்புதமாகத் தென்படுகின்றன.
ஏதோ நிலவையே அவர்கள் அடைத்து விட்டது மாதிரி மகிழசசியால் கூத்தாடுகிறார்கள்.
முதன்முதலாக மனிதன் நிலவை அடைத்ததும் உலகம் முழுவதிலும் மாபெரும் மகிழ்ச்சிக் கிளாச்சி ஏற்பட்டது என்று நான் படித்திருக்கிறேன்.
அப்போது எல்லாரும் தத்தம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாகவே எல்லாருக்குமே சலித்துவிட்டது உற்சாகம் வடிந்துவிட்டது.
இனி மேற்கொண்டு என்ன செய்வது? மனிதன் நிலவின்மீது நடந்து கொண்டிருக்கிறான் வேறு ஒன்றும் இல்லை அவ்வளவுதான்.
வெறும் பதினைத்தே நிமிடங்களுக்கு பின்.
ஆனால் அந்த இடத்தை அடைவதற்கு இந்தக் கனவுக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்தது.
இப்போதோ நடந்து கொண்டிருப்பது குறித்து யாருக்குமே ஆர்வம் அக்கறை இல்லாமல் போய்விட்டது.
தங்கம் கிடைத்த பிறகும் அதனோடு நீங்கள் எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை அவர்களால் எதைக்கொண்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
உங்களால் மட்டும் இந்த உயர்வு தாழ்வு வேற்றுமையை கைவிட முடிந்தால்!
உங்களால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியும்.
No comments:
Post a Comment