Thursday, 24 October 2024

பயம் - ஒரு கொடிய நோய்.

 பயம் - ஒரு கொடிய நோய்.,


பயம் ஒரு பெரிய மனித சாபம். இது ஒரு எதிர்மறை எண்ணம். இது உங்கள் மோசமான எதிரி. மரண பயம், நோய் பயம், பொது விமர்சனத்தின் பயம், உங்களின் சொத்து அல்லது பணத்தை இழக்க நேரிடும் என்ற பயம் போன்ற பல்வேறு வடிவங்களை இது எடுத்துக்கொள்கிறது. பயம் பல உயிர்களை அழித்து, மக்களை மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியடையச் செய்கிறது.

சிலர் போர்க்களத்தில் ஷெல் அல்லது ஷாட்களை தைரியமாக எதிர்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் பொது விமர்சனம் மற்றும் பொது கருத்துக்கு பயப்படுகிறார்கள். சிலர் காடுகளில் புலியை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அறுவை சிகிச்சை நிபுணரின் கத்தி மற்றும் பிஸ்டோரிக்கு பயப்படுகிறார்கள். நீங்கள் எல்லா வகையான பயங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.

----

மனதில் உள்ள கற்பனை சக்தி பயத்தை தீவிரப்படுத்துகிறது.

பயம் என்பது மாயை அல்லது மோகத்தின் காரணமாக, அவித்யா (அறியாமை) காரணமாக மொத்த மற்றும் பௌதிக சரீரத்தின் மீதுள்ள பற்று. சரீரத்தின் மீதான பற்றுதல் (மோஹ, தேஹத்யஸ) எல்லா பயத்திற்கும் காரணம். யோகா அல்லது ஞானத்தால் உடல் உறையை (அன்னமய கோஷத்தை) தூக்கி எறியக்கூடியவர் பயத்திலிருந்து விடுபடுவார். பயத்தை வென்றவன், அனைத்தையும் வென்றவன், மனதின் மீது தேர்ச்சி பெற்றான்.

---

சிலருக்கு அதிக அளவு இரத்தத்தை கண்டால் மயக்கம் வரும். சில ஆண்களால் அறுவை சிகிச்சையைப் பார்க்க முடியாது. அவர்கள் மயக்கம் அடைகிறார்கள். இவை அனைத்தும் மன பலவீனங்கள்.

சில மலம் அல்லது வாந்தியெடுத்தல் பொருட்கள் அருகில் இருந்தால் சிலர் தங்கள் உணவை எடுக்க முடியாது. எல்லா மன பலவீனங்களும் விசாரத்தால் ஒழிக்கப்பட வேண்டும்.

------

அமைதியான மனம் என்றால் தைரியம்.

ஆன்மீகப் பாதையின் சோதனைகள் மற்றும் சிரமங்களை நீங்கள் அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.

சுயத்தின் ஒற்றுமையை அங்கீகரிப்பதில் அதன் வேர் உள்ளது.”அபயம்” (அச்சமின்மை) தெய்வீக குணங்களில் ஒன்றாகும். நீங்கள் ஆத்மா என்று தொடர்ந்து நினைத்துக் கொள்ளுங்கள்.

மெல்ல மெல்ல அபரிமிதமான தைரியத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் அழியாத சுயம் (ஆத்மான்) என்ற ஒரே எண்ணம் ஒவ்வொரு விளக்கத்தின் பயத்தையும் திறமையாக அழிக்க முடியும்.

இந்த பயங்கரமான பயம் நோய்க்கு ஒரே ஒரு சக்திவாய்ந்த டானிக், ஒரு உறுதியான சஞ்சீவி. நீங்கள் அழியாதவர் (அமிர்தா), அச்சமற்ற (அபய) ஆத்மா என்று நினைத்துக் கொள்ளுங்கள். மெல்ல மெல்ல பயம் நீங்கும். தைரியம் என்ற நேர்மறை நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பயம் மெதுவாக மறைந்துவிடும்

அற்புதமான ஈர்ப்பு சக்தி

அற்புதமான ஈர்ப்பு சக்தி  

ஒரு முறை பிரபல இயற்பியல் விஞ்ஞானி நியூட்டனிடம் ஒரு பெண்மணி வந்து:

'மிஸ்டர் நியூட்டன் அவர்களே!, இந்த கண்டுபிடிப்புக்களை எல்லாம் எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என கேட்டாள். 

அதற்கு விஞ்ஞானி நியூடன்: இலகுவான விடயம், பூமியில் கீழே விழும் பொருட்கள் பற்றி சிந்திப்பதில் நான் தினமும் என் நேரத்தைச் செலவழித்தேன். அதனால் இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது." என்றார். 

அதற்கு அந்தப் பெண்மணி:  நானும்தான் நாளாந்தம் பல மணிநேரம் சிந்திக்கிறேன், ஆனால் எதுவும் ஆகவில்லையே!" என்றாள். 

அதற்கு நியூட்டன் அவளிடம்: நீங்கள் எது பற்றி சிந்திக்கிறீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு அவள்: என்னுடன் சண்டைபிடித்து,

என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் கணவரைப் பற்றித்தான்!" என்றாள். 

அதற்கு நியூட்டன்: நீங்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் சித்தித்தீர்களா? அ‌ல்லது பிரிந்த பின்னால் சிந்தித்தீர்களா?

என்று கேட்டார். 

அதற்கு அவள்: 'பிரிந்த பின்னர்தான்" என்றாள். 

அதற்கு விஞ்ஞானி நீயூடன் அவர்கள்: நீங்கள் பிரிய முன்னர் உங்கள் கணவர் பற்றி சிந்தித்திருத்தால், அற்புதமான ஈர்ப்பு சக்தி விதியை கண்டுபிடித்திருப்பீர்கள்!" என்றார்.

பெண்ணின் எதிர்பார்ப்பு!

 பெண்ணின் எதிர்பார்ப்பு!

ஒரு மனிதன் தான் விரும்பும் ஒரு தோழியிடம், "எப்படிப்பட்ட ஆணை உன் வாழ்க்கை துணையாக தேடுகிறாய்?"என்றான்.

அவள் சிறிது நேரம் நின்று, அவன் கண்ணைப் பார்த்து, "உனக்கு உண்மையாகவே தெரிய வேண்டுமா?"

தயக்கத்துடன் “ஆமாம்” என்றான்.

அவள் விளக்கத் தொடங்கினாள்,

"என்னால் செய்ய முடியாததை, எனக்காக உன்னால் என்ன செய்ய முடியும் என்று ஒரு ஆணிடம் கேட்க வேண்டும்"

"என்னால் பணம் சம்பாதிக்க முடியும். நான் என் செலவுகளை பார்த்துக்கொள்ள முடியும். பிறர் உதவி இல்லாமல் என் வீட்டை நான் கவனித்துக்கொள்வேன்". எனவே, இவற்றை தவிர்த்து "உன்னால் எனக்கு என்ன தர முடியும்? என்று கேட்பேன்"

அவள் பணத்தைக் குறிப்பிடுகிறாள் என்று நினைத்து அவன் அவளைப் பார்த்தான். "நான் பணத்தைப் பற்றி பேசவில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்க பாடுபடும் ஒரு மனிதன் எனக்குத் தேவை" என்றாள்.

அவன் திரும்பி உட்கார்ந்து, தன் கைகளை மடக்கி, அவளிடம் விளக்கம் கேட்டான். அவள் சொன்னாள்:

"எனக்கு மனதளவில் சிறந்து விளங்கும் ஒருவர் தேவை, ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு உரையாடல் மற்றும் மனக்கிளர்ச்சி அவசிய தேவை. என் உணர்வுகளின் மீது அக்கறையில்லாத மனிதன் தேவையில்லை."

"ஆன்மீக ரீதியான புரிதல் கொண்ட ஒருவர் எனக்குத் தேவை, ஏனென்றால் நான் சமமற்ற மனநிலையுடன் ஒருவருடன் இருக்க விரும்பவில்லை. நம்பிக்கையும், அவநம்பிக்கையும் ஒன்றாக வாழ்க்கை பயணம் மேற்கொள்ள முடியாது",

"அடிப்படை கட்டமைப்பே இங்கு பணம் என்றானவுடன், நான் நிதிச் சுமையுடன் வாழ விரும்பவில்லை. பண ரீதியாக சிறந்து விளங்க பாடுபடும் ஒரு நேர்மறை மனிதர் எனக்குத் தேவை."

"ஒரு பெண்ணாக நான் என்ன செய்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு உணர்திறன் உள்ள ஒருவர் எனக்குத் தேவை, ஆனால் நான் தவறு செய்தால், என்னை தடுத்து நிறுத்தும் அளவுக்கு வலிமையான திறன் கொண்டவர் எனக்குத் தேவை."

"எனக்கு உறவுகளில் நேர்மையான ஒருவர் தேவை. பொய்களும் அக்கறையின்மையும் ஆண் மகனுக்கு அழகல்ல என்று நினைப்பவள் நான்"

"கடவுளால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையில், நல்ல தலைவராகவும், நல்ல வழிகாட்டியாகவும் , நல்ல ஆலோசனை வழங்குபவராகவும் நல்ல நண்பராகவும் இருக்கக்கூடிய ஒரு குடும்பம் சார்ந்த மனிதர் எனக்குத் தேவை."

நான் மதிக்கக்கூடிய ஒருவர் எனக்குத் தேவை.

தன் பொறுப்புகளை கவனிக்காத ஒரு மனிதனுக்கு நான் அடிபணிய முடியாது.

அடிபணிந்திருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால் அவர் தகுதியானவராக இருக்க வேண்டும்.

ஆனால், நான் அவரைத் தேடவில்லை. அவர் என்னைக் கண்டுபிடிப்பார். அவர் என்னுள் தன்னை அடையாளம் கண்டு கொள்வார். அவர் எப்போதும் என்னிடம் ஈர்க்கப்படுவார். கடவுள் பெண்ணை ஆணுக்கு துணையாகப் படைத்தார்.

"ஒரு மனிதனால் தனக்குத்தானே உதவ முடியாவிட்டால் என்னால் அவருக்கு உதவ முடியாது." புரியவில்லையா? அதாவது அவனே என்னை கண்டுபிடித்து என்னிடம் வருவான் என்கிறேன்."

சொல்லி முடித்ததும் அவனைப் பார்த்தாள். அவன் ஒரு குழப்பமான முகத்துடன் அமர்ந்திருந்தான்.

"நீ நிறைய எதிர்பார்கிறாய்" என்றான்.

அவள் பதிலளித்தாள், "எனது மதிப்பு எனக்கு தெரியும். அதானால் தான்."என்று.....

யாருக்கு யார் என்று இறைவன் வகுத்த விதி ; சேர வேண்டிய தருணத்தில் சரியாக வந்து சேரும்! என்ற முணுமுணுப்புடன் இருவரும் சென்றார்கள்!

கூனியின் குணமும் சகுனியின் இயல்பும்

கூனியின் குணமும் சகுனியின் இயல்பும் 

தவறுகளில் தேங்கிக்கிடப்பதே முன்னேற்றத் திற்கான முக்கிய தடையாகும். அறிஞர்🌹

கூனியின் குணமும் சகுனியின் இயல்பும்

எல்லோரும் ஒரே குணவியல்புடன் இருக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை.

ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனைக்கு ஏற்ப குணவியல்புகளில் வேறுபட்டவர்களாக இருப்பர்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறை வன் அனைவரையும் ஒரே குணவியல்புடன் - ஒரே தன்மை வாய்ந்த அறிவுடைமையுடன் படைத்திருக்க முடியும்.

அவ்வாறான படைப்பு இந்த உலகில் எந்த ஆக்கத்தையும் தரமாட்டா.

ஆம், எலியைப் படைத்த இறைவன் பூனை யையும் படைத்தான். அப்போதுதான் பூனை யும் எலியும் விழிப்புணர்வோடு தம்மைப் பாது காத்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற உணர்வோடு உற்சாகமாகச் செயற்படும்.

மாறாக எலிக்கு எதிரிகள் இல்லை என் றால், பூனையின் மிக்க நட்பு எலி என்றால், அவற்றுக்கு ஏது வாழ்வு. இதேபோன்றுதான் அனைத்தும்.

ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சமயம் என்பதாக இப் பிரபஞ்சத்தைப் படைத்தருளு வது ஒன்றும் இறைவனுக்குப் பெரிய காரிய மல்ல.

ஆனால் எல்லாம் ஒன்றென்றிருந்தால், அத்தனையும் இல்லாமல் போய்விடும்.

ஆம், ஒரே சமயம் என்ற நிலைமை இருந் தால்; உலக மக்கள் முதலில் கடவுளைத்தான் மறந்திருப்பர்.

ஒரே மொழி என்றால், இந்த உலகம் சைகை மொழியில்தான் உரையாடியிருக் கும்.

ஆக, எதுவும் ஒன்றுக்கு மேற்பட்டு இருக் கும்போதுதான் அவை கடும் போட்டியிட்டு உயிர்ப்போடு வாழ்ந்து கொள்ளும்.

அந்த வகையில் இராமாயணத்தில் கூனி, அவதார புருஷராகிய இராமபிரானின் பட்டா பிசேகத்தைக் குழப்புவதற்காகப் பிறந்தாள்.

அவளின் உடற்கூனும் உள்ளத்து அங்க வீனமும் இல்லாதிருந்தால், இராமாயண

காப்பியம் நமக்குக் கிடைத்திருக்க மாட்டாது.

ஆக, இராமருக்கு முன்னதாகவே அவ ரின் பட்டாபிஷேகத்தைக் குழப்புகின்ற மந்தரை எனும் கூனி மண்ணில் பிறந்து விட்டாள்.

கூனியின் பிறப்பு இராமரைக் காட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல, இராவண வதத்துக் கும் அதுவே காரணம்.

இதுபோன்றுதான் மகாபாரதத்துச் சகுனி. கௌரவர் சேனைக்கான அழிவு; கௌர வர்களைக் காப்பாற்வதற்காகச் சூழ்ச்சி

செய்த சகுனியால் ஆயிற்று.

சூதில் சகுனியின் சூழ்ச்சி இல்லை யாயின், பாண்டவர்கள் வனவாசம் செல்வது ஒருபோதும் நடந்திருக்காது. 

அவர்கள் வனம்செல்லாவிடில், பகவத் கீதையை நமக்கு யார் தருவார். ஆக கூனி, சகுனி என்போர் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறார்கள். இதுவே உலக நியதியாம்..

சிந்தனைத்தடாகம்

சிந்தனைத்தடாகம் 

பிடிக்காத பெண்ணை திருமணம் செய்த பிறகு பெற்றோர்கள் வழக்கமாக சொல்லுவது 'கவலைப்படாதே போக போக உனக்கு அவள் மேல் காதல் வந்துவிடும்.' போக போக வருவது காதல் அல்ல பழக்கம். பிறகு அதில் பிறக்கும் அர்ப்பணிப்பு. தொன்மையான வேட்டைக்காரன் இறைச்சியை உண்ண விரும்பியபோது, ​​புலியிடம் சிலவற்றை தனக்கு விட்டு விடுமாறு  கேட்டான். புலியும் தந்தது, என்னை என்றும் கொல்லாதே என்ற நிபந்தனையோடு. இதே நிலையில் தான் நம்மூர் கணவன் மனைவியும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். வியாபார ஆற்றலை நம் திருமண அமைப்பில் அற கட்டளையாக மாற்றி வைத்துள்ளது நமது சுற்று சூழல்கள். அனுபவம் மனிதன் தனக்கு நேர்ந்ததைக் கொண்டு என்ன செய்கிறான் என்பதே. இதை அறிந்தவன் நிறுவனமயமாக்கப்பட்ட சமுதாய கோட்பாடுகளின் செல்வாக்கு இல்லாமல் நம் முழு வாழ்க்கையையும் நாம் வாழ்ந்தால், வாழ்க்கையுடன் மேலும் நெருக்கமாகவும் உணர்வுகளுடன் நெருக்கமாகவும் இருக்க நம்மை சமுதாயம் விடாது என்பதே

கிறிஸ்தவ கடவுள் இந்து கடவுள் யூதக் கடவுள்கள் இறந்துவிட்டார்கள். இதைத்தான் நீட்சே சொன்னார் .

இன்னும் பல கடவுளால் இருந்திருக்கிறார்கள் .

அனைவரும் அழித்து போய் இல்லாமல் போய் விட்டார்கள்.

 பட்டியல் போட்டுப் பார்த்தால் இத்தனை கடவுளார் இருந்திருக்கிறார்களே என்று அதிசயத்து போய்விடுவாய் !

அப்படிப்பட்ட பட்டியல் ஒன்றை நான் பார்த்திருக்கிறேன் 

ஆனால் இப்போதோ அவர்கள் பெயர்கள் கூட யாருக்கும் நினைவில் இல்லை.

 பட்டியல் முழுக்க படித்து பார்த்தேன் நிறையத்தால் கடவுள் ஆராய் கற்பித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

 அந்த கடவுளார் மீது சலிப்பு தோன்றிய போது புதிய கடவுளாரை கற்பித்துக் கொள்கிறார்கள் .

பழைய பொம்மைகளுக்கு பதிலாக புதிய பொம்மைகள்.

 இந்த கடவுளால் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள்.

 ஆனால் இவர்கள் உண்மையான கடவுள் அல்ல.

 உண்மையான கடவுள் வாழ்க்கை தான்.

 தான். மற்றவர் .

உயர்ந்தவர். தாழ்ந்தவர் .

கருப்பர் .சிவப்பு. என பிரிவினை ஏதும் இன்றி வாழும் வாழ்க்கை தான் கடவுளால்

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.

கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....

காதலில் ஒருவரை ஒருவர் மயக்கும் கலை இன்று சட்டரீதியாக கொந்தளிப்பான ஆய்வறிக்கையாக மாறியுள்ளது. ஆதியில் நாம் முகத்தை ஆற்றில் ஒட்டிக்கொண்டு மிருகத்தைப் போல தண்ணீர் குடித்தவர்கள். நாம் மலைகளுடன் பேசினவனவர்கள். காட்டுமிராண்டித்தனமாக காதலித்தவர்கள். திடீருன்னு காதலிலும் காமத்திலும் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்க சொல்லி கட்டளை. காதலும் காமமும் சீர்திருத்த முடியாத ஒரு போதை மேம்படுத்த முடியாத ஒரு தவறு நுகர முடியாத திரவியம் பாட முடியாத ச ரி க ம ப விளையாட முடியாத சூதாட்டம் ஆனால் இன்று ஆசைப்பட முடியாத ஒரு ஆசையாக காதலும் காமமும் மாறி விட்டது. காலத்துக்கு ஏற்றால் போல்  இன்று ஒழுக்க விதிகள் பின்பற்றப்படும் போது மட்டுமே மயக்குதல் நிலைத்திருக்கும். இந்தப் படித்த உலகில் காதலியை கவரும் பொழுது பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு இரவில் அவளோ அவனோ மயங்க போவதில்லை. இன்று ஆண்கள் காதலனை காதலியை கவர்ந்து மயக்கி தன் வசப்படுத்தும் கவர்ச்சியான கலையைப் புரிந்து கொள்ளாமல், டார்வினின் மூதாதையர் குரங்குகளாக மாறி பெண்களை கொடூரமாக கற்பழித்து அவர்களைக் கொல்கிறார்கள். அவளுடைய குற்றத்தில் பங்குதாரராக இருப்பது காதல் அவள் மீது குற்றம் செய்வது ஆண்மையின் இயலாமை...Courtesy: Art Eternal

போர் முடிந்த பிறகு ஒரு சிப்பாய்யிடம் தளபதி கேட்டார் " பட்டாளத்தில் இருக்க போகிறாயா இல்லை ரிட்டயர் ஆக விருப்பமா" பதில் வந்தது " நான் துண்டு துண்டுகளாக பல துறைகளில் ஆய்வு செய்ய விரும்புகிறேன். அரசியல், கலாசாரம், பாரம்பரியம், மதம், மானுடவியல், காதல், சமூக நீதி, காமம், புத்தகம், போதை பொருள், தத்துவம், சினிமா, நீல படங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம், இன சுத்திகரிப்பு உட்பட. இவை அனைத்திலிருந்தும் சிலவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்க போகிறேன். அதற்கு மேல் உலகத்துல என் வீடு போல் ஒரு போர்களம் என் குடும்பத்தார் போல் கவித்துவமான எதிரி படை எங்கும் கிடையாது. அவர்களை தீவிரமாக அறிந்து கொள்ள போகிறேன். அதற்கு தளபதி "எல்லாப் போர்களும் ஒரு சிந்திக்கும் மனிதன் தோல்வியடைந்தான் என்பதற்கு அறிகுறியாகும். உன்னை போன்ற புத்திசாலிகள் சந்தேகங்கள் நிறைந்தவர்கள். நீ சுடும் தோட்டாவின் படைப்பாற்றலை முடக்குவாய். முட்டாள்கள் நம்பிக்கை நிறைந்தவர்கள். அர்த்தமற்ற போருக்கு இரண்டாவது வகை தேவை. நீ கிளம்பு.."Courtesy: Perceptive Artista

தலை சிறந்த காதலர்களுக்கு வழக்கமான காதல் முறைகள் பிடிப்பதில்லை. செக்ஸில் நாடகம் அவர்களின் வாழ்க்கையை சிலிர்க்க வைக்கிறது. பிரபஞ்சம் இந்த மாஸ்டர் காதலர்களை துல்லியமாக உருவாக்க மிகுந்த நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது ஏனென்றால் அவர்கள் அனைவரிடமிருந்தும் வித்தியாசமான ஒன்றை பாலியல் உலகிற்கும் எழுத்தாளர் உலகிற்கும் வழங்கி உள்ளது. சிறந்த காதலர்களுக்கு மற்ற பெண்களைத் தேட நேரமில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்தத்தை நேசிப்பதற்கான புதிய வழிகளைத் தேடுவதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் காதல் செய்யும் அத்தனை கோணங்களையும் மற்றும் காதல் செய்யும் செயல்முறையின் அனைத்து பகுதிகளையும் மேய்ந்து தின்றவர்கள். பரந்த கடற்கரைக்கு முன், அலைமோதும் நதியின் கரை மேல், பட்டபகலில் சூரியனின் அழகுடன், நிலவு வெளிச்சத்தில் தூங்கும் உடைந்த கோவிலுக்குள்ளே, பால் கொதிக்கும்போது சமையலறையில், கைவிடப்பட்ட காரின் பின் இருக்கையில், அறுவடை செய்த வயல்களில், மரணத்தையும் பாலினத்தையும் இணைக்கும் கல்லறையில் கூட இந்த புது படைப்பில் முழுகிய ஜோடி காமத்தின் உச்சத்தை அடைகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நேரத்தில் காதல் புரியும் கணவன் மனைவி போல் இவர்களுக்கு காமம் சலிப்பு தட்டுவதில்லை...Courtesy: Academic Painting/ La Peinture Acadèmique♥️

பழுத்த இலைகளின் நடுவே 

ஓரு பச்சை இலையாய் நீ எனக்குத்தெரிந்தாய் 

எத்தனை கணங்கள்

பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை

ஒளிபட்டுத் தெறிக்கும் 

உன் யெளனத்தில் கிறக்கமுற்ற என் மனம்

ஒரு ஊஞ்சலைப் போல ஆடத் தொடங்கியது

பல்வேறு திசைகளில் ஆடும் உன்னை இமைகள் விரித்து 

பார்வைகள் சுழற்றிப் பார்தேன் 

ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு அழகில் ஒளிர்ந்தாய்

நின்ற இடத்தைவிட்டு நகராத நான் உன் வனப்பில் வீழ்ந்தேன்

காற்றின் பாடலில்  உன் நளீனம் உன்னதத்தில் மிதந்தது

நான் பிரார்த்தித்துக்கொண்டது என்னவெனில் 

நீ எப்போதும் பழுத்து உதிர்ந்துவிடாத

பச்சிலையாய் இருக்க வேண்டும் என்பதுதான்

என் கண்களைவிட்டு நீ உதிர்ந்து 

மறைவதை ஒரு போதும் ஏற்காது என்னுள்ளம்

நீ அப்படியே துளிர்த்திரு நான் உன் மீது விழித்திருப்பேன்.

எப்போதும் ஆசையாய் ஆவலாய் உன்னை தழுவ,,,,,,,

                                                                     அன்பின் பிரேமிதாஸ்

என் இறூதி வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வைத்தாய். உறவுகளின் அரவணைப்பில் இருந்து ஒதுங்கினேன். வாழ்க்கையின் பொறுப்புகளில் இருந்து, அதன் வடிவத்தை விட்டு உன்னை நாடினேன். உனக்காக சம்பாதிக்க துடித்தேன். வாழ்க்கையில் தனியாக இருப்பது மிகவும் கடினம் மற்றும் சில நேரங்களில் தனியாக இருப்பது மிகவும் சுகம் என்பதை அறிந்து கொண்டேன். உன் குடும்பத்திற்காக எல்லாவற்றிற்கும் தலையை ஆட்ட கடமை பட்டவன் நான். திருமணமாகி குழந்தைகள்  பெற்றாய். இப்போது  தனியாக இருக்கிறாய். இன்று என் காதலை ஏற்க விரும்புகிறாய். இது வருவதை நான் எதிர் பார்க்கவில்லை. உரையாடல் கவிதையாக மாறும். சிரிப்பு இசையாக கேட்கும். திரும்பவும் ஒன்றாகச் செலவழிக்கும் நேரம் ஒரு மெல்லிசையாக மாற்றியமைக்கும், அது பழையதாக இல்லாமல் புதிதாக  மீண்டும் மீண்டும் ஒலிக்கும் எனக்கு. உனக்கு குழந்தைகளின் நினைவு, இறந்த உன் கணவருடன் வாழ்ந்த வருடங்களை உன்னால் மூட முடியாது. கடவுளுக்கு கொடூரமான நகைச்சுவை உணர்வு உண்டு. நீண்ட காலமாக உனக்காக காத்திருந்ததைப்போல என் காதல்  கனவுகளில் உன் நினைவு ஆட்சி செய்தது. அது எனக்கு மகிழ்வை தருகிறது. உனக்கு பாதுகாப்புஅளித்தது. நிஜ வாழ்க்கையில் இனிமேல் என்னால் காதல் தியாகியாக இருக்க முடியாது. கவலைப்படாதே உன் தனிமையை உன் குடும்பத்தின் பொறூப்புகள்  நான் சுமப்பேன். உன்னையும் என் இதயத்தில் என்றூம்

ஆசிரியர்களின் எதிர்காலம் அவர்கள் கண் முன்னே கொல்லப்படுவதால், அவர்கள் தொழில் மேல் எந்தப் பற்றும் இல்லை என்பதை ஆதாரம் காட்டுகிறது. ஒரு பள்ளியில் மிக சில ஆசிரியர்கள் மட்டும் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியராகவும் பதவி உயர்வு கிடைக்கிறது. மற்றவர்கள் முப்பதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதே நிலையில் பணி ஓய்வு பெறுகிறார்கள். விரக்தியில் நம்பிக்கையோ உற்சாகமோ அவர்களுக்கு இல்லை, மேம்படுத்தி கொள்ளும் பசியும் இல்லை. தினமும் வகுப்பறையில் வழக்கமானதை ஓப்பிக்கிறார்கள். சொன்ன நேரத்தில் சிலபஸை முடிக்க. அதனால்தான் என்னமோ இவர்களின் நெறிமுறை ரேடாரை விட்டு வெளியேறும் பல மாணவர்கள்  நேர்மையின்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு தேசத்தின் எதிர்காலம் இந்த கசப்பான மனநிலையில் உள்ள டீச்சர்கள் கைகளில் உள்ளது. யாரவது ஒரு ஆசிரியர்  தங்களை மேம்படுத்திக் கொண்டால் அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பார்வையற்றவன் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு உதவிய வாக்கிங் ஸ்டிக்கை கண் பார்வை வந்த முதல் நாளில் தூக்கி எறிவது போல் நாம் நமது படிப்பு முடிந்தவுடன் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை தூக்கி எறிகிறோம். ஒரு ஜ. ஏ. ஸ் அதிகாரியை விட  ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வாங்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமது...

உன்னிடம் எல்லாமும் சொல்லிவிட்டேன்

நீ அறிந்தும் அறியாதது போலிருக்கிறாய்

நீண்ட உன் கரங்களில் 

என் மனதை பூங்கொத்தைப் போல் தந்துவிட்டேன்

அதன் உள்வெளிகளில் உட்சென்று

என்னைக் கலைத்துப்போடு

உன் மீதான பெருங்காதலும்

மோகமும் சிதறி விழும்

நானென்பதில் உன் உயிரையும்

என் மீதான உன் உயிர்த்த

பார்வைகளையும்

கிறங்கச் செய்யும் தாமரையாய்

விரியும் உன் இதழ்களையும்

உன் சுவாசத்திலிருந்து வெளியேறும்

உயிர்க்காற்றையும் 

சேகரித்துக்கொண்டுள்ளேன்

மிக எளிதாக கடந்து செல்லும்

உன்னிடம் தயக்கமுறும் உரையாடலை

சொல்ல முடிவதில்லை

நீ எனக்காய்த் திறவாத உன் இதயத்தில்

என்ன சேமித்திருக்கிறாய்

உன் இமையோரங்களில் 

என் பிம்பம் அவ்வளவு

வாஞ்சையாக நகர்ந்து செல்வதைப்

உணர்ந்திருப்பாய்

சொல்லின் வண்ணங்களில்

உன்னை வானவில்லின் அழகில்

வரைந்து வைத்திருக்கிறேன்

திரும்பத் திரும்ப 

உன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதில்

ஆனந்தம் பெரும் அலையாய்

ஆர்ப்பரிக்கும் வேளை

அடர்வனத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல 

தொலைந்து போகிறேன்

எனக்கான உன் வாக்கியங்களில்

நடந்து போக உன் அனுமதிக்காய்

காத்திருக்கிறேன்

உன் மனதின் பூங்கொத்துகள்

சலசலத்துக்கொண்டிருப்பது

எனக்கு கேட்கத் தொடங்கிவிட்டது.

ஆசிரியர்களின் எதிர்காலம் அவர்கள் கண் முன்னே கொல்லப்படுவதால், அவர்கள் தொழில் மேல் எந்தப் பற்றும் இல்லை என்பதை ஆதாரம் காட்டுகிறது. ஒரு பள்ளியில் மிக சில ஆசிரியர்கள் மட்டும் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியராகவும் பதவி உயர்வு கிடைக்கிறது. மற்றவர்கள் முப்பதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதே நிலையில் பணி ஓய்வு பெறுகிறார்கள். விரக்தியில் நம்பிக்கையோ உற்சாகமோ அவர்களுக்கு இல்லை, மேம்படுத்தி கொள்ளும் பசியும் இல்லை. தினமும் வகுப்பறையில் வழக்கமானதை ஓப்பிக்கிறார்கள். சொன்ன நேரத்தில் சிலபஸை முடிக்க. அதனால்தான் என்னமோ இவர்களின் நெறிமுறை ரேடாரை விட்டு வெளியேறும் பல மாணவர்கள்  நேர்மையின்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு தேசத்தின் எதிர்காலம் இந்த கசப்பான மனநிலையில் உள்ள டீச்சர்கள் கைகளில் உள்ளது. யாரவது ஒரு ஆசிரியர்  தங்களை மேம்படுத்திக் கொண்டால் அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பார்வையற்றவன் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு உதவிய வாக்கிங் ஸ்டிக்கை கண் பார்வை வந்த முதல் நாளில் தூக்கி எறிவது போல் நாம் நமது படிப்பு முடிந்தவுடன் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை தூக்கி எறிகிறோம். ஒரு ஜ. ஏ. ஸ் அதிகாரியை விட  ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வாங்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு


அவர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகத் தேர்ந்தெடுத்தனர். ஒரு தந்தைக்கும் வெவ்வேறு பெண்களுக்கும் பிறந்தவர்கள் யூதர்களும் பாலஸ்தீனியர்களும். முதல் தாரத்து வயிற்றில் கரு தங்கவில்லை இன்னொரு தாரத்தை நோக்கி ஓடியது அந்த ஆணின் மனம். பிறகு இருவருக்கும் கரு தங்கி விட்டது. பிறக்கும் குழந்தைகள் தர போகும் தொல்லைகள் உலக போர் அளவுக்கு வந்து சேருமென்று ஒருபோதும் கற்பனையில் கூட அவன் எதிர்பார்த்த இருக்க மாட்டான். வழக்கம்போல் இரு தாரத்து பிள்ளைகளுக்கு நடுவே வரப்பு சண்டை அதனுடன் மத சண்டையும் கலந்து விட்டது. ஒரு குழுவிற்குச் சொந்தமான உணர்வு மற்றும் அந்தக் குழுவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தால் போரைத் தூண்டலாம். சில ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு வன்முறையில் உள்ளார்ந்த நாட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை விட இன்று நடக்கும் விஷயங்கள் மிகவும் வித்தியாசமானது. அன்று இருந்த இசையும் இன்றைய இசை வித்தியாசமானதாக இருந்தாலும். நாக்கு ருசி வித்தியாசமானதாக இருந்தாலும் மக்கள் மாறி வரும் இசை மற்றும் சுவைக்கு ஏற்றவாறு தங்களை மிகவும் மாற்றி கொள்கிறார்கள். ஆனால் வரப்பு மதம் சாதி சண்டைகளில் மட்டும் அன்று முதல் இன்றுவரை அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை...Courtesy: World in my eyes♥️

ஒவ்வொரு நாளும் கண்ணியத்தைப் பற்றி நீ இன்னும் எவ்வளவு கற்று கொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும். முதலில் அது பெண்களுடனான உன் நடத்தையில் தொடங்குகிறது.'  'அப்போது ஒரு பெண்ணை கவரும் கற்பனைகள் என்னுடன் விளையாடுவதை எப்படி நிறுத்துவது என்று முதலில் நான் கற்று கொள்ள வேண்டும். கவரும் கலையில் கண்ணியம் குறைச்சல் ' என்றான் மாணவன். அதை நானே இன்னும் கற்கவில்லை என்று நினைத்து சிரித்தார் ஆசிரியர். பல விஷயங்களை எப்படி உணர்கிறோம் என்று நமக்கு தெரியும் ஆனால் அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாது. எதிர் பாலினத்தை எப்படி மயக்குவது என்பது ஒரு சிக்கலான கணிதம். கவரும் கலையின் வெற்றி தோல்விக்கு நடுவே தவிக்கும் பல காதல் கதைகள். கவரும் கலையை யாராலும் கற்பிக்க முடியாது, யாரோ அல்லது ஏதாவது உன்னை சிந்திக்கதான் வைக்க முடியம். மயக்கும் கலை பொதுவான விதிகளின் கீழ் வர முடியாது.  ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு தந்திரங்கள் தேவை. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும். இந்த கவரும் கலையில் வெற்றியடைகிறாயோ இல்லையோ என்பது பொருத்தமற்றது. ஏனென்றால் இது கற்க முடியாத கலை. கண்ணியத்தை புதைக்கும் ஒரு கலை வடிவம். வாழ்க்கையில் ரசிக்க வேண்டிய ஒரு அனுபவம் மட்டுமே..

அன்பு செலுத்துவது வெறுப்பதை விட எளிது என்கிறாய் ?

மனிதனை அவன் போக்கில் விட்டு விட்டால்.

 எந்த விஷயத்தையும் கலக்காமல் விட்டுவிட்டால்.

 வெகு சுலபம்தான்.

 எந்த பிரச்சனையும் இருக்காது .

பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலத்தான்.

 அல்லது புகை மேலே கிளம்புவதை போலத்தான் .

மரங்களில் மலர்கள் மலர்வதைப் போலத்தான்.

 பறவைகள் பாடுவதைப் போலத்தான்.

 அவ்வளவு இயல்பாக உற்று ஊற்று போல தானே  பாயும் தான்.

 அவனை யார் விடுகிறார்கள் ?

குழந்தை பிறந்த உடனே அவன் மீது பாய்ந்து விடுகிறார்கள் .

சக்தியை எல்லாம் சிதைத்து!

 தன் பொய்வாழ்வு வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் போகும் அளவுக்கு.

 அவனை அலங்கோலப்படுத்தி விடுகிறார்கள்

 தான் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழவில்லை.

 என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் செய்து விடுகிறார்கள்.

என் அன்பே  உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதோவொரு தேவைக்காக எனக்கு நீ தேவைப்படுகிறாய் அல்லவா கண்மணி! அதற்கு நான் காதலென்ற  பெயர் வைத்திருக்கிறேன். 

சின்னக் குழந்தை மாதிரி பண்ணாத,   லூசு மாதிரி இருக்கு, கொஞ்சம் மெச்சூரா இரு, அப்படி இரு, இப்படி இரு, அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறோம். ஆசையாசையாய் பார்த்துக் கொண்ட முகங்களை எதார்த்தமாய் பார்த்துக் கொள்கிறோம். தூசுபடிந்த புத்தகமாய் என் உணர்வுகள், இப்படி தான் இருக்க வேண்டுமென என் விருப்பத்தை உன் மேல் திணித்துக்  கொள்கிறேன். இன்னும் இதை காதலென்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கழுத்தின் கீழே இறங்காத  பார்வைகள், காமம் தொடாத பேச்சுக்கள், முத்தத்திற்கே பல கனாக்கள், ஒரு தீண்டலுக்கே புல்லரித்த தேகங்கள், ஆசை வார்த்தைகளுக்கு ஆகாயம் பறந்த மனம், சிறுசிறு அசைவு களையும் கவிதைகளாய்  ரசித்த நாட்கள், துளியும் சுயநலமற்ற பேரன்பில்  உனக்காக நானும், எனக்காக நீயும் வாழ்ந்திருப்போம்   அதற்கும் காதலென்றே தான் பெயர் வைத்திருந்தோம்.  ஆரம்பத்தில் காதல் நம் கைகளை பற்றிக் கொண்டிருந்தது. இப்போது நம் கைகள் அந்த காதலை  இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது, சாகும் வரை பிரியா வரத்தோடு,,,,,,,,,,,,,







Tuesday, 22 October 2024

வெல்ல முடியாதது

வெல்ல முடியாதது 

முல்லா நஸ்ருதீன், தன்னுடைய நூறாவது வயதை முடிக்கும்பொழுது, சில பத்திரிகையாளர்கள் வந்து அவரை பேட்டி கண்டார்கள். அந்த நகரத்தில் அவர் தான் முதன் முதலில் நூறு வயதை எட்டியவர் என்று தெரிய வருகிறது. 

அவரை, "நீங்கள் எப்படி இவ்வளவு நாள் வாழ்ந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் மது அருந்துவது இல்லை, பெண்களிடமும் எனக்கு விருப்பம் இல்லை. ஒருக்கால் அதுதான் காரணமாக இருக்கலாம்" என்றார்.

அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து ஏதோ சாமான்கள் விழும் சத்தமும், ஏதோ பறக்கும் சத்தமும் கேட்டன. நிருபர்கள் குழப்பத்துடன், "என்ன அது சத்தம்?" என்றார்கள்.

அதற்கு முல்லா, "அது வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய அப்பா குடித்துவிட்டு, வேலைக்காரியை துரத்துகிறாரோ என்னவோ?' என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார்.

முல்லாவின் தகப்பனாருக்கு சுமார் 125 வயது இருக்கலாம். ஆனால் முல்லா சொல்லுகிறார், தான் மது. மாதுவைத் தொடுவது இல்லை. அதுதான் தன் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று. ஆனால், அவர் தந்தை, தன் 125-வது வயதிலும் குடித்து விட்டு பெண்ணைத் துரத்திக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் உங்கள் உடலை எடுக்கும்பொழுதே மரணமும் உண்டாகிவிடுகிறது. 

தாயின் கர்ப்பத்தில் நீங்கள் நுழையும் பொழுதே.மரணமும் சேர்ந்தே வருகிறது. 

உங்களுடைய வாழ்க்கை எனும் கடிகாரம்,70 அல்லது 80 ஆண்டுகள் ஓடுவது என்பது ஆயுள் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் உங்கள் நீண்ட ஆயுளுக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

'இறப்பு' என்பது தவிர்க்க முடியாதது வெல்ல முடியாதது

இரும்புத் துண்டு.

இரும்புத் துண்டு.

உங்களது நண்பர் உங்களிடம்

 ' இது காந்தம் ' என்று சொல்லி ஒரு பொருளை கொடுக்கிறார்.

அதை வாங்கி பார்க்கிறீர்கள்.

அது ஒரு இரும்புத் துண்டு.

அதை காந்தம் என்கிறார் உங்களது நண்பர்.

எப்படி நம்புவது ?

இரும்பு துண்டு மட்டும்தானே கண்களுக்கு தெரிகிறது.

மின்சாரம் போலவே,

காந்த புலம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை.

சின்ன இரும்பு ஆணி,

இரும்பு துகள் இவற்றை அதன் அருகில் வைத்து,

அதன் காந்த ஈர்ப்பு விசையின் மூலமாகத்தான்,

அந்த இரும்பு துண்டு

 ஒரு காந்தம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.

பூமி -  நாம் நின்று கொண்டிருக்கும் 

தரை ( Land ) நமது கண்களுக்குத் தெரிகிறது.

புவி ஈர்ப்பு விசை

(gravity force ) நமது கண்களுக்கு தெரிவதில்லை.

ஒரு நொடி நேரம் மட்டும்

புவி ஈர்ப்பு விசை இல்லை 

என்றால்,

உலக மக்கள், விலங்குகள், பூமியில் உள்ள பொருட்கள்

அனைத்துமே 

விண் வெளியில் 

பாய்ந்து விடும்.

அது போலதான்,

 மனித உடம்பில் உருவாகும்

விந்துவும் - நாதமும்.

விந்துக்களின் கூட்டத்தை

கெட்டியான திரவ வடிவில் 

கண்களால் காண முடியும்.

ஒரு விந்தணுவை மட்டும்

நுண்நோக்கி ( microscope ) வழியாக பார்த்து விட முடியும்.

ஆனால்,

அதை சுற்றி சூழ்ந்திருக்கிற

' ஜீவ காந்த ' புலத்தை நமது கண்களால் காணமுடியாது.

காந்த மண்டலத்தால் 

சூழ பட்டதுதான்,

ஆண்களின் 

விந்து அணுவும்,

பெண்களின் நாதமும்.

ஒருவரால்,

சிறுநீரை வெளியேற்றும்

சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில்,

அதை வெளியேற்றாமல்

தனது கட்டுப்பாட்டுக்குள்

கொஞ்ச நேரமாவது

வைத்துக்கொள்ள முடியும்.

எப்படியென்றால்,

சிறுநீர் அணுக்களில் 

எந்த விதமான காந்த புலமும் இல்லை.

அதனால்,

அதை வெளியேற்றுவதற்கு

சமயத்திற்கேற்றது போல்

தாமதப்படுத்த முடிகிறது.

ஆனால்,

உடலுறவின்போது,

ஆண் எதிர்பாராத நேரத்தில்,

அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல்,

விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

காரணம்,

எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்

என்ற காந்த தத்துவத்தின் படி 

விந்து அணுக்கள் செயல்பட்டு விடுகிறது.

எதிர் துருவத்தை நோக்கி பாய்கிறது.

நாதத்தில் கலக்கிறது.

பின்னாளில்,

கரு முட்டை உருவாகிறது.

குழந்தை உண்டாகும் போது,

 குழந்தையின் உடலமைப்பு -

- அனாட்டமி  -அனைத்து குழந்தைகளுக்கும் 

ஒரே அமைப்புடன் உருவாகுவதற்கு இந்த காந்த புலமே முக்கியக் காரணமாக உள்ளது.

இதில்,

விந்தணு 

குழந்தையின் உடலாகவும்,

காந்த புலம் 

அதன் ஆத்மாவும் உருமாறுகிறது.

ஆத்மா என்பது ஒரு 

காந்த பிரதேசம்.

அதனால்தான்,

குழந்தையை

 பார்க்கிறோம்.

அதன்

ஆத்மாவை பார்க்க முடிவதில்லை.

ஆத்மாவின் சக்தியை மட்டுமே உணர முடியும்.

குழந்தை வளர்ந்து 

வாலிப பருவத்தை அடைகிறது.

காந்த புலனும் - அதாவது

ஆத்ம சக்தியும் 

வலிமை அடைகிறது.

அதன் சக்தி எல்லையற்றது.

மகாவீரர் அதை

 ' அனந்த வீர்யம் ' என்று அழைத்தார்.

அந்த காந்த புலனை இரண்டு வழிகளில்

பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலாவது,

தியானத்தின் மூலமாக

ஆத்ம சக்தியை,

இடுப்பு பகுதியிலிருந்து -

மூலாதாரத்திலிருந்து -

மேலே ஏற்றி,

உச்சந் தலையிலிருக்கும்,

துரியம், ஸகஸ்ராதாரம்

பகுதிக்கு எடுத்து செல்ல இயலும்.

அது பேரின்ப நிலையின் ஆரம்பம்.

விந்து சக்தியில் இருந்து

காந்த சக்தியை மட்டும்

அழைத்து செல்கிற செயல்.

மனதில்,

எந்த நிலையிலும் சாந்தத்தை ஏற்படுத்தி தரும் அதுவே   'புனிதம் '

இந்த இன்பம் நிரந்தரம்.

காந்த புலத்தை 

மேல் நோக்கி செலுத்த நினைப்பவர்களுக்கு

மன உறுதி அதிகமாக வேண்டும்.

ஏன் என்றால்,

அந்த பாதை முழுவதும்

முரண்பாடுகள், 

குழப்பங்கள் அதிகம்.

ஆனால்,

இறுதியில் கிடைக்கும்

பேரின்ப நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இரண்டாவது,

காந்த புலனின் தாக்கத்தால்

உடலுறவின் மூலமாக,

கீழ் நோக்கி செலுத்தி

சிற்றின்ப நிலையை அடைந்துவிடலாம்.

இது சுலபமானது.

அடிக்கடி மனம் விரும்புவது.

ஆனால்,

இந்த இன்பம் தற்காலிகமானது.

சிறிது நேரம் மட்டுமே.

மனது,

சிற்றின்பத்தையே எப்போதும் விரும்புவதால்,

அதை மீறி பேரின்பத்திற்கான முயற்சியை மேற்கொள்வது

கடினம்தான்.

மனம்,

தேவையில்லாத சமயங்களிலும்,

காம இச்சையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும்.

எனவேதான்,

சிற்றின்பத்தில் முழுமைப் பெற்ற பின்னர்,

மனதின் தொல்லை இல்லாமல்,

பேரின்பத்திற்கான முயற்சிக்கு வருவது நல்லது.

' காமத்தில் இருந்து கடவுளுக்கு வருவதே சாத்தியமானது. 

உங்களது நண்பர் உங்களிடம்

 ' இது காந்தம் ' என்று சொல்லி ஒரு பொருளை கொடுக்கிறார்.

அதை வாங்கி பார்க்கிறீர்கள்.

அது ஒரு இரும்புத் துண்டு.

அதை காந்தம் என்கிறார் உங்களது நண்பர்.

எப்படி நம்புவது ?

இரும்பு துண்டு மட்டும்தானே கண்களுக்கு தெரிகிறது.

மின்சாரம் போலவே,

காந்த புலம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை.

சின்ன இரும்பு ஆணி,

இரும்பு துகள் இவற்றை அதன் அருகில் வைத்து,

அதன் காந்த ஈர்ப்பு விசையின் மூலமாகத்தான்,

அந்த இரும்பு துண்டு

 ஒரு காந்தம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.

பூமி -  நாம் நின்று கொண்டிருக்கும் 

தரை ( Land ) நமது கண்களுக்குத் தெரிகிறது.

புவி ஈர்ப்பு விசை

(gravity force ) நமது கண்களுக்கு தெரிவதில்லை.

ஒரு நொடி நேரம் மட்டும்

புவி ஈர்ப்பு விசை இல்லை 

என்றால்,

உலக மக்கள், விலங்குகள், பூமியில் உள்ள பொருட்கள்

அனைத்துமே 

விண் வெளியில் 

பாய்ந்து விடும்.

அது போலதான்,

 மனித உடம்பில் உருவாகும்

விந்துவும் - நாதமும்.

விந்துக்களின் கூட்டத்தை

கெட்டியான திரவ வடிவில் 

கண்களால் காண முடியும்.

ஒரு விந்தணுவை மட்டும்

நுண்நோக்கி ( microscope ) வழியாக பார்த்து விட முடியும்.

ஆனால்,

அதை சுற்றி சூழ்ந்திருக்கிற

' ஜீவ காந்த ' புலத்தை நமது கண்களால் காணமுடியாது.

காந்த மண்டலத்தால் 

சூழ பட்டதுதான்,

ஆண்களின் 

விந்து அணுவும்,

பெண்களின் நாதமும்.

ஒருவரால்,

சிறுநீரை வெளியேற்றும்

சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில்,

அதை வெளியேற்றாமல்

தனது கட்டுப்பாட்டுக்குள்

கொஞ்ச நேரமாவது

வைத்துக்கொள்ள முடியும்.

எப்படியென்றால்,

சிறுநீர் அணுக்களில் 

எந்த விதமான காந்த புலமும் இல்லை.

அதனால்,

அதை வெளியேற்றுவதற்கு

சமயத்திற்கேற்றது போல்

தாமதப்படுத்த முடிகிறது.

ஆனால்,

உடலுறவின்போது,

ஆண் எதிர்பாராத நேரத்தில்,

அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல்,

விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

காரணம்,

எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்

என்ற காந்த தத்துவத்தின் படி 

விந்து அணுக்கள் செயல்பட்டு விடுகிறது.

எதிர் துருவத்தை நோக்கி பாய்கிறது.

நாதத்தில் கலக்கிறது.

பின்னாளில்,

கரு முட்டை உருவாகிறது.

குழந்தை உண்டாகும் போது,

 குழந்தையின் உடலமைப்பு -

- அனாட்டமி  -அனைத்து குழந்தைகளுக்கும் 

ஒரே அமைப்புடன் உருவாகுவதற்கு இந்த காந்த புலமே முக்கியக் காரணமாக உள்ளது.

இதில்,

விந்தணு 

குழந்தையின் உடலாகவும்,

காந்த புலம் 

அதன் ஆத்மாவும் உருமாறுகிறது.

ஆத்மா என்பது ஒரு 

காந்த பிரதேசம்.

அதனால்தான்,

குழந்தையை

 பார்க்கிறோம்.

அதன்

ஆத்மாவை பார்க்க முடிவதில்லை.

ஆத்மாவின் சக்தியை மட்டுமே உணர முடியும்.

குழந்தை வளர்ந்து 

வாலிப பருவத்தை அடைகிறது.

காந்த புலனும் - அதாவது

ஆத்ம சக்தியும் 

வலிமை அடைகிறது.

அதன் சக்தி எல்லையற்றது.

மகாவீரர் அதை

 ' அனந்த வீர்யம் ' என்று அழைத்தார்.

அந்த காந்த புலனை இரண்டு வழிகளில்

பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலாவது,

தியானத்தின் மூலமாக

ஆத்ம சக்தியை,

இடுப்பு பகுதியிலிருந்து -

மூலாதாரத்திலிருந்து -

மேலே ஏற்றி,

உச்சந் தலையிலிருக்கும்,

துரியம், ஸகஸ்ராதாரம்

பகுதிக்கு எடுத்து செல்ல இயலும்.

அது பேரின்ப நிலையின் ஆரம்பம்.

விந்து சக்தியில் இருந்து

காந்த சக்தியை மட்டும்

அழைத்து செல்கிற செயல்.

மனதில்,

எந்த நிலையிலும் சாந்தத்தை ஏற்படுத்தி தரும் அதுவே   'புனிதம் '

இந்த இன்பம் நிரந்தரம்.

காந்த புலத்தை 

மேல் நோக்கி செலுத்த நினைப்பவர்களுக்கு

மன உறுதி அதிகமாக வேண்டும்.

ஏன் என்றால்,

அந்த பாதை முழுவதும்

முரண்பாடுகள், 

குழப்பங்கள் அதிகம்.

ஆனால்,

இறுதியில் கிடைக்கும்

பேரின்ப நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இரண்டாவது,

காந்த புலனின் தாக்கத்தால்

உடலுறவின் மூலமாக,

கீழ் நோக்கி செலுத்தி

சிற்றின்ப நிலையை அடைந்துவிடலாம்.

இது சுலபமானது.

அடிக்கடி மனம் விரும்புவது.

ஆனால்,

இந்த இன்பம் தற்காலிகமானது.

சிறிது நேரம் மட்டுமே.

மனது,

சிற்றின்பத்தையே எப்போதும் விரும்புவதால்,

அதை மீறி பேரின்பத்திற்கான முயற்சியை மேற்கொள்வது

கடினம்தான்.

மனம்,

தேவையில்லாத சமயங்களிலும்,

காம இச்சையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும்.

எனவேதான்,

சிற்றின்பத்தில் முழுமைப் பெற்ற பின்னர்,

மனதின் தொல்லை இல்லாமல்,

பேரின்பத்திற்கான முயற்சிக்கு வருவது நல்லது.

' காமத்தில் இருந்து கடவுளுக்கு வருவதே சாத்தியமானது.

ஞான ருசி

ஞான ருசி  

அஞ்சானி என்பவன் மனதளவில் வாழ்கிறவன் .

மனம் கழிந்த நிலை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது .

தகவல்கள் அறிவு என்ற இவற்றின் தளத்தில் வாழ்கிறவன்.

 ஞானத்தை ருசி பார்க்காதவன்.

 இரவல் வாழ்க்கை வாழ்கிறவன் .

பிறரை பார்த்து அவற்றே தானும் வாழ்கிறவன்.

 தன் இருத்தலின் இருந்து முகிழ்ந்து வரும் எதையும் அறியாதவன் .

புத்தருக்கு அஞ்சானி என்பவன் சாத்திரங்கள் சொல்வது அனைத்தும் தெரிந்து கொண்டவன் .

ஆனால் சத்தியத்தின் ஒரு கணத்தைக் கூட சுவைத்திராதவன் .

பெரிய அறிஞனாக இருக்கலாம் மெத்த படித்தவனாக இருக்கலாம்.

 பார்க்க போனால் அஞ்சாணிகள் மெத்த படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

 தங்களுடைய அஞ்சானுக்கு திரையிட்டு வைக்க. அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டி இருக்கிறது .

வார்த்தைகள் கொள்கைகள் தத்துவங்கள் என்ற எவற்றுக்கு பின்னால் தம்முடைய அகத்து அறியாமையை அவர்கள் மறைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

 நமது வெறுமையை மறைத்து வைக்க வேண்டி இருக்கிறது .

அப்போதுதான் அவர்களால் தமக்கும் தெரியும் என்று நினைத்துக் கொள்ள முடிகிறது

தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததற்கும் தெரியாததற்கும் இடையே ஒரு பாலம் தான் மனிதன் .

தெரிந்ததில் அடங்கி போய் கிடப்பது அறிவீனம் !

தெரியாததை தேடி போவது ஞானத்தின் ஆரம்பம்.

 தெரியாததோடு ஐக்கியமாகப் போவது ஞானி ஆகி போவது.

 புத்தன் ஆகி போவது.

 மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்து மனிதன் இருப்பவன் அல்ல.

 மாறிக்கொண்டிருப்பவன் .

அவன் மனிதனாகும் பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறவன்.

 ஒரு யாத்திரிகன்.

 ஒரு வழிப்போக்கன்.

 இன்னும் வீட்டுக்கு போய் சேராதவன் .

தன் வீட்டை தேடிக் கொண்டிருக்கிறவன்.

 வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவன் !அஞ்சானி.

 ஏனென்றால் அத்தோடு தேடுதல் முடிந்து விடும் .

தேடுதலை நிறுத்திய அந்தக் கணமே தேங்கி போன குட்டையாகி போகிறாய் .

உன் சக்திகள் அனைத்தும் தேங்கி போக உடை மாற்றம் தான் வீசும்.

பிறகு நீ இறந்து போனவன் உயிரோடு இருப்பவன் அல்ல. 

தான் யார் என்ற தேடலை முடித்தவனே உயிரோடு இருப்பவன் . 

அன்புக்கு ஒரே ஒரு மார்க்கம் தான்

அன்புக்கு ஒரே ஒரு மார்க்கம் தான் 

அன்புக்கு ஒரே ஒரு மார்க்கம் தான் அது மற்றவரை வெறுப்பது என்றாகி போய்விடாது.

 மற்றவரை வெறுத்துத்தான்

உன் தேச அபிமானத்தை காட்டுவது என்றாகி போய்விட்டது .

ஒரு மதத்தை நேசிப்பது என்பது பிற மதங்களை வெறுப்பது தான் என்று ஆகிப் போய்விட்டது .

மதங்கள் அன்பை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன!

 என்ன சாதித்து விட்டன?

 என்றால் வெறுப்பை வளர்த்து விட்டிருப்பதை தான் .

கிறிஸ்தவர்கள் அன்பைப் பற்றி பேசுகிறார்கள் ஆனால் போர்களை தான் நடத்திக் கொண்டிருக்கும்.

 வெறுக்க உனக்கு பயிற்சி தருகிறார்கள்.

 எனவே வெறுப்பது சுலபமாகி போய்விட்டது .

அதற்கு உன்னை தயாராக்கி வைத்திருக்கிறார்கள் .

இந்துவாக இருப்பது இருப்பது என்பது முகமதியர்களை வெறுப்பது.

 கிறிஸ்தவர்களை யூதர்களை வெறுப்பது.

 கிறிஸ்தவனாக இருப்பது என்பது மற்ற மதங்களை சார்ந்தவர்களை வெறுப்பது.

 தேசியவாதியாக இருப்பது என்பது மற்ற நாடுகளை வெறுப்பது.

 நாமும் இத்தனை முட்டாள்தனங்களுக்கும் ஏற்றுக் கொள்கிறோம் .

இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .

பிறகு என்ன உன்னுடைய இயல்புக்கு துரோகம் செய்ய வேண்டியது தான்.

இறந்த பிறகு என்ன ஆவோம்???

 இறந்த பிறகு என்ன ஆவோம்???

இரண்டு பிறவிகளுக்கிடையே உள்ள காலமற்ற இடைவெளியில் இந்த ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது ?

ஒரு பிறவிக்கும் , மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான் .

அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும் . 

ஆனால் புலன்களுக்கு வேலை இல்லை .

ஏனெனில் உடல் இல்லை . 

அப்படிக் கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது .

அப்படி சந்தேகம் வந்தால் அந்தக்கனவு கலைந்துவிடும் . 

மிக ஆழமான கனவுகூட ஒரு சிறு சந்தேகத்தில் உடைந்துவிடும் .

ஆகவே , அந்த இடைவெளியில் நடப்பவை அனைத்தும் உண்மை போலவே தோன்றும் .

அப்பொழுது தோன்றும் தோற்றங்கள் மிகவும் அசாதாரணமானவையாகக்கூட இருக்கக்கூடும் .

ஆத்மா சொர்க்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான் .

உண்மையில் சொர்க்கமும் இல்லை , நரகமும் இல்லை ! 

பல மத ஏடுகள் , நரகம் பயங்கரமாக இருக்கும் என்று வர்ணிக்கின்றன . இது உண்மைதான் ! 

ஆனால் இது ஒருவித கனவு நிலை , அவ்வளவுதான் .

இரண்டு உடல்களுக்கிடையே இரண்டு ஆத்மாக்கள் இருக்கின்றன . 

ஒன்று பாபங்கள் செய்த கெட்ட ஆத்மா . மற்றொன்று புண்ணியம் செய்த நல்ல ஆத்மா .

இந்த முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய் , தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம் . 

இதுதான் கெட்ட ஆவி என்பது . நான் இதை ' பிரீதாஸ் ' (Pretas ) என்று அழைக்கிறேன் . 

மாறாக நல்ல ஆவிகளை அல்லது நல்ல ஆத்மாக்களை ' தேவாஸ் ' (Devas ) என்று அழைக்கிறேன் . 

இந்த முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம் ! இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும் , கெட்டதும் கலந்திருக்கின்றன . 

ஆனால் அடுத்த பிறவியில் இதில் எதுவும் ஞாபகம் இருக்காது .

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்துகொள்வது நலம்!

ஒருவன் இரவில் தூங்குவதற்கு முன்பு உள்ள ஒரு மணி நேரத்தையும் , காலையில் எழுந்த பிறகு உள்ள ஒருமணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் , இறப்பதற்கு ஒன்பது மாதம் முன்பே அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் . 

சரியாகப் பயன்படுத்துவது என்றால் தியானம் மற்றும் பிரார்த்தனையில் இருக்கவேண்டும் .

இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஆன்மா மறுபிறவி எடுப்பதற்கு முன்பு அந்த ஆன்மா நிலையாகவும் இல்லை , அது அங்கும் , இங்கும் அலைந்துகொண்டும் இல்லை . அது ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது . 

இதை தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியாது . இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள் , தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன .

 அது மீண்டும் உடலை எடுக்கும்பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன .

அடுத்து நம் மதக்கொள்கைகளில் ஒன்று ......இந்த உலகம் ஒரு கனவு அல்லது ஒரு தோற்றம் என்றுதான் கூறுகின்றன . 

இதன் அர்த்தம் என்னவென்றால் , இந்த உலகத்தை நீங்கள் ஒரு கனவைக் காண்பதுபோலக் காணவேண்டும் .

அதாவது சாட்சியாக நின்று சம்பந்தப்படாமல் பார்க்க வேண்டும் என்றுதான் இதற்கு அர்த்தம் .

அப்பொழுது உங்களுடைய தியானத்தன்மை கூடுகிறது .

நீங்கள் கனவில் பங்கு பெறுவதில்லை ! நீங்கள் வெறுமனே படுத்துக்கொண்டு , உங்கள் மனம் போடும் ஆட்டத்தை பிரக்ஞையற்று பார்க்கிறீர்கள் ! அதில் நீங்கள் உங்கள் உடலால் எந்த வேடமும் போடவில்லை . 

நீங்கள் உங்கள் கனவில் ஒரு பார்வையாளனாக இருக்கிறீர்கள் .

அடுத்து இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளுங்கள் . 

நமக்கிடையே உள்ள ஒரு அங்குல இடைவெளியில் பல ஆன்மாக்கள் நிறைந்து கிடக்கின்றன ! 

ஒரு கெட்ட ஆன்மா ஒரு உடலுக்குள் பாய்வது எப்படி ?

ஒருவன் மிகவும் பயந்த நிலையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் .

அப்பொழுது அந்த உடல் தன் ஆத்மாவைச் சுருக்கிக்கொண்டுவிடுகிறது . 

அந்த நிலையில் அந்த உடலின் சில பாகங்கள் வெற்றுத்தன்மையில் ( Empty ) இருக்கின்றன .

அப்பொழுது நம்மைச் சுற்றியுள்ள கெட்ட ஆவிகள் ஒன்றோ அல்லது பலவோ அந்த உடலுக்குள் பாய்ந்துவிடுகிறது . 

ஆனால் தைரியமானவர்களிடம் இது நெருங்காது . ஏனெனில் அவர்களிடம் வெற்றிடம் ஏற்படாது . 

ஒரு பயந்த ஆள் மிகவும் கீழான நிலையில் இருப்பதால் உயர்ந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள் புகாது .

உயர்ந்த ஆன்மாக்கள் எப்பொழுதும் மேலான - உயர்ந்த நிலையில்தான் உலவிக் கொண்டிருக்கும் .

கீழான . ஆத்மாக்கள்தான் கீழே உலவிக் கொண்டு தன் ஆசையைத் தீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கும் . 

அவை இயற்கையாக மறுபிறவி எடுக்க நாளாகலாம் .

மாறாக ஞான ஆத்மா என்பது சுத்தமான உயிர்த்தன்மை . 

இந்த உயிர் மிகவும் மேலான நிலையை அடைந்து பிரபஞ்ச உயிர்த்தன்மையோடு கலந்துவிடுகிறது . 

இதற்கு மறுபிறவி கிடையாது . இது ஆசைகளற்ற ஆத்மா அல்லது உயிர்தன்மை . 

மற்றவை அனைத்தும் மறுபிறப்பு எடுத்து எடுத்துத்தான் தன் உலக ஆசைகளைத் துறக்க வேண்டும் .

பாலுறவு சக்தி

பாலுறவு சக்தி 


ஆண் பெண் இருவருக்கும் பலமுறை உச்சம் சாத்தியமானது 

வாழ்நாள் முழுவதும் தன் உடலில் உள்ள காம சக்தியை பாதுகாத்தல் மற்றும் காதல் தன்மையுடன் அல்லது அன்புடன் இருத்தல்.  

காம சக்தி மனிதர்களிடம் வறண்ட போய்விட்டால் அன்பு மறைந்துபோகும் மேலும் அவர்களுக்கு சண்டை, சச்சரவு, கோவம், பொறாமை, தீயவை செய்தல் ஏமாற்றுதல் போன்ற பல கெட்ட குணங்கள் உருவாகும்

தாவோயிஸ்டுகள் ஒரு திருமண வாழ்வின் திருப்திக்கு பாலியல் சார்ந்த புரிதல், ஒருவருக்கு ஒருவர் இணைந்து பயணித்தல் இன்றியமையாததாகக் கூறுகின்றனர் 

உண்மையில், இது உங்கள் படுக்கையறையை நிம்மதியையும், அமைதியும், இன்பத்தையும் ஏற்படுத்தும் கலைகளில்  முதன்மையான படுக்கையறை கலையாகும் 

இந்த காலத்து நவீன தம்பதிகளின் பாலுறவு சிகிச்சையாளரைப் போலவே, படுக்கையறையில் ஆண் பெண்ணுக்கு சிக்கல்கள் இருந்தால், முழு திருமண உறவும் பாதிக்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இருப்பினும், பாலியல் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல.

பெரும்பாலும் ஆண் பெண் இருவருக்கும் வெவ்வேறு பாலியல் தேவைகள் உள்ளது

தாவோயிஸ்டுகளுக்கு, செக்ஸ் என்பது ஆரோக்கியத்தைப் பற்றியது, ஒழுக்கம் அல்ல என்று கூறுகிறார்கள் 

பாலுறவில் எல்லா பெண்களும் அல்லது எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல

பெண்களின் பாலியல் தூண்டுதல் பெண்கள் எதிர்பார்ப்பது ஒன்று ஆனால் ஆண்கள் பெண்களுக்கு விரும்பாததை அல்லது எதிர்வினை பாலுறவில் செயல்படுகின்றனர் என்று கண்டுபிடித்தார்கள் 

மேலும் தாவோயிஸ்டுகள் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆற்றலின் விளைவாகக் (பாலியல் ஆற்றலை யாங் மற்றும் யின் என்று அழைத்தனர்).

இந்த ஆற்றல்கள் நமது பாலுணர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், ஆண் பெண் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தப் புரிதலை எவ்வாறு பாலுறவில் பயன்படுத்துவது என்பதையும் தம்பதிகளுக்கு விளக்குவோம்.

தாவோயிஸ்டுகள் ஆண் மற்றும் பெண் பாலுணர்வை ஒத்திசைப்பதில் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிப்பதில் முதன்மையாக அக்கறை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை, எல்லா மக்களுக்கும் ஆண்பால் (யாங்) மற்றும் பெண்பால் (யின்) ஆற்றல் உள்ளது,

மேலும் இந்த பாலுறவு சக்தி ஆண் பெண் எப்போது ஈர்ப்புடன்  இருக்க மிகவும் இன்றியமையாதது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் - 

கூடுதலாக இந்த பாலுறவு சக்தியின் மூலம் பாலுறவு இன்பம், ்நோய் குணப்படுத்துதல், ஆண் பெண்ணின் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் ஆண் பெண்ணின் ஆன்மீக உறவுக்கான நடைமுறைகள் தம்பதிகளுக்கு சமமான சக்திவாய்ந்தவை மற்றும் முக்கியமானவை என்று கூறுகிறார்கள் 

தொடரும் ஆண் பெண் பலமுறை உச்சம்


Monday, 14 October 2024

சரணாகதி

சரணாகதி 

பிரபஞ்ச இருப்பின் கைகளில்... 

அர்ஜுனன் ஒரு கருவியாக இருந்தால்...

அவனது 'தனித்தன்மை'யின் கதி என்ன?

எல்லாம் நடக்கவேண்டிய 

முறைப்படி நடந்தால்...

முன்பே வரையறுக்கப்பட்டபடி

நடக்குமானால்...

தனிமனிதனுக்கு 

என்ன பொறுப்பு இருக்க முடியும்?

அவன் இயந்திர சக்கரத்தின்

ஒரு பல் மட்டும்தானே?

🌸 இது ஒரு முக்கியமான வினா...

அதனால் நான் சொல்லப்போவதைக் 

கவனமாகக் கேளுங்கள்...

அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்...

வாழ்க்கையின் சில அடிப்படை

உண்மைகளை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்...

🌸மற்றொருவர் கையில்...

கருவியாக மாறுகிறவரின் தனித்தன்மை, 

அழிக்கப்பட்டுவிடும் என்பது மெய்தான்...

ஆனால், 

ஒருவர் தாமே விரும்பிக் 

கருவியாக மாறிவிட்டால்...

விளைவது நேர்மாறாகத்தான்

இருக்கும்...

அவருடைய தனித்தன்மை 

உயர்ந்த நிலையில் மலர்ந்து மணம் வீசும்...

🌸இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது...

ஒருவர் வேண்டுமென்றே...

உங்களைத் தாழ்த்தி... 

அடிமைப்படுத்தி வேலை வாங்கினால்...

நீங்கள் உங்கள் ஆத்மாவையே

இழந்துவிடவேண்டி வரும்...

ஆனால், 

"நீங்களே விரும்பிச்

சரணாகதியடைந்து...

இயற்கையின் கரங்களில் உங்களை ஒப்படைத்துவிட்டால்..."

"உங்கள் ஆத்மா நிறைவடைந்து திகழும்."

🌸இந்த வேறுபாட்டை...

கவனமுடன் நன்றாகப் புரிந்து

கொள்ளுங்கள்...

வேறுபாடு மிக நுட்பமானது...

பிரமாதமானது...

உதாரணமாக, 

நீங்கள் வலிமை கொண்டு 

என் கால்களை விலங்கு 

போட்டுக் கட்டிவிட்டால்...

நான் உங்கள் அடிமையாகிவிடுவேன்...

🌸ஆனால், "நானே விரும்பி...

எனக்கு அடிமையாகிவிட்டால்..

என்ன ஆகும்?"

அப்போது நானே எஜமான்

ஆகிவிடுவேன்...

அதை உருவாக்கியவன் ஆகிவிடுவேன்...

🌸டயோஜினிஸ் சொன்ன பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது...

"நான் சுதந்திரத்தின் ரகசியத்தைக் 

கற்றுக் கொண்டுவிட்டேன்...

அதனால் எனக்கு நானே அடிமையாகிவிட்டேன்...

என் சுதந்திரத்தைப் பறிக்க 

யாராலும் முடியாது...

உங்களால் என்னை அடிமைப்

படுத்த முடியாது" 

என்று கூறினார்.

🌻"கண்ணன் அர்ஜுனனைத்

தன் அடிமைக் கருவியாக 

இருக்கச் சொல்லவில்லை...

எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு...

இருப்பின் நீரோட்டத்திற்கு ஏற்பச் 

செல்லும்படி வேண்டுகிறான்...

வாழ்க்கை ஆற்றின் போக்கைஎதிர்த்து, 

எதிர்நீச்சல் போடுவது முட்டாள்தனம்...

🌻"உன்னை வாழ்க்கையிடம் ஒப்படைத்துவிடு...

நீ நிறைவடைவாய்" என்கிறான் கண்ணன்...

யாரவது ஒருவர்... 

உண்மையிடம்...

பூரணத்திடம்...

இயற்கையிடம்...

முழுப் புரிதலோடு 

தன்னைச் சரணாகதி ஆக்கிக் கொண்டால்...

அவனது தனித்தன்மை முடமாக்கப்படாது...

🌻அது முழுமலராய் மலர்ந்து

மணம் வீசும்...

அப்போது அவரே, அவரது எஜமானன்...

"அதனால்...

சரணாகதி தவிர...

தன் எஜமானத் தன்மையை...

நிலைநாட்டிக் கொள்ள... 

வேறுசிறந்த மார்க்கம் இல்லை...

இதைத் தெளிவாகப் 

புரிந்துகொள்ள வேண்டும்...

🌻நான் இப்படி சரணடையும்போது, 

நானே எஜமானன் ஆகிவிடுகிறேன்...

அடிமைத்தனமான சரணாகதி

அல்ல இது...

அதனால், சரணாகதி அடையும் 

அர்ஜுனன், சக்கரத்தின் ஒரு பல் அல்ல...

"அவன் தெய்வீகநிலை அடைந்துவிடுகிறான்..."

முதல்முறையாக, அவனது தனித்தன்மை பூரணமாய் மலர்கின்றது...

அது எந்தவித முயற்சியும் இல்லாமல், 

இயல்பாய் நிகழ்ந்துவிடுகிறது.

ஞான வழி

ஞான வழி 

நிச்சயமாக இது ஒருவர் மனதில் எழுகிற அடிப்படையான சந்தேகம்தான்.

நான் குடும்பத்தை துறந்து வந்து விடாதீர்கள் ' என்று சொல்வது,

ஒரு குடும்பத்தை துறந்து வந்து விடுவது,

வேறு இரண்டு 

புதிய குடும்பங்களை உண்டாக்கிக் கொள்வதற்கு வழிவகுத்து விடலாம் என்ற

காரணத்தால்தான்.

காமத்தை வெல்வது கடினம்.

அதை கடந்துதான் செல்லவேண்டும் என்ற அடிப்படை உண்மையில் தான்.

அதற்கு ஒரு பெண் போதும்.

அவளை,

அவள் ஏற்படுத்திக் கொடுத்த குடும்பத்தை துறக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

நான் ' விடுதலை ' என்பதை பற்றியும் இடைவிடாமல் பேசிக் கொண்டும் இருக்கிறேன்.

நான் சொல்வதை,

அதன் விளக்கத்தை

 காது கொடுத்து கேட்பதோடு பலர் நின்று விடுகின்றனர்.

அவர்கள் எல்லாம்

அதை  நெஞ்சில் நிறுத்தி உணர்ந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது.

கவனமாகக் கேளுங்கள்.

நீங்கள் சுதந்திரமாக பிறந்தீர்கள்.

ஆனால்,

அடிமைத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையை நான் அடிமைத்தனம் என்று சொல்ல வில்லை.

சொல்லவும் மாட்டேன்.

அதில்தான் அனைத்துமே உள்ளது.

அன்பு,

பாசம்,

கல்வி

அறிவு,

காதல்,

சகோதரத்துவம் 

இது போன்றவைகளை எல்லாம்

ஒரு வாழ்க்கை இல்லாமல் உங்களால் அடையமுடியாது.

உணர முடியாது.

இவைகள் எல்லாம்

நீங்கள் ஞானமடைவதற்கு தடைகளே அல்ல.

வேறு சில அடிமைத்தனங்கள் உள்ளன.

அவற்றிலிருந்து உங்களால் மீண்டு,

 விடுதலை பெற்று

வர முடியவில்லை.

அந்த அடிமை நிலையை நீங்களாகவே

 மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்கள்.

ஏனெனில்,

அந்த அடிமை சங்கிலி

பொன்னாலான விலங்கு.

தங்கத்தால் செய்யப்பட்டவை.

அந்த சங்கிலிகள்,

அதிகாரம்

புகழ்,

மரியாதை,

பொறாமை,

பொருள் சேர்க்கை,

என்பவற்றால்

செய்யப்பட்டுள்ளன.

அழகிய மணம் பரப்பும் மலர்களால் மூடப்பட்டுள்ளன.

அந்த அடிமை சங்கிலி உங்களுக்கு 

தங்க ஆபரணங்களாக 

மாறியது போல்,

ஒரு மாயத் தோற்றத்தை

ஏற்படுத்தி விட்டது.

அதனால்தான்,

நீங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது மட்டுமில்லாமல்,

அதையே உங்களது வாழ்வின் அர்த்தமும் 

சிறப்பு என்றும்

உயர்ந்த குறிக்கோள் என்றும் நினைக்கிறீர்கள்.

இதுதான் உண்மையில்

' சிக்கல் '

நான் அறிவுறுத்துகிற 

' விடுதலை ' என்பது,

இனிமேல் நீங்கள் புதிதாக

சாதித்து பெற வேண்டிய பிரச்சனை அல்ல.

அந்த அடிமை சங்கிலியை

உங்களை விட்டு தூரமாக தூக்கி  போட்டுவிடுவதே.

இதற்காக,

நீங்கள் நன்றாக

புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்,

உங்களிடம் 

இருக்கும் இந்த அடிமை சங்கிலியை,

தங்க ஆபரணம் என்று நினைக்காமல்,

அது ஒரு இரும்பு சங்கிலி

என்ற உண்மையை  உணர்ந்து 

கொள்வதுமட்டுமே.

அவைகள் உங்களுடன் இருக்கும்போது,

ஒரு சின்ன கீறல் ஏற்படுத்துகிற

பிளவின் வழியாகக் கூட

உங்களால்

வானத்தை பார்க்க இயலாது.

நான் போதிப்பது,

அந்த அடிமை சங்கிலியிலிருந்து விடுதலை அடைந்து,

சுதந்திர மனிதனாக 

ஞான வழியை நோக்கி செல்வதை தான்.


உயிர் துடிப்பு

உயிர் துடிப்பு 

பாலுணர்ச்சியோடு சண்டை போடுபவர்கள் விரைவில் விந்தை வெளியேற்றி விடுவார்கள். ஏனெனில் இறுக்கமான மனம் இறுக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அவசரப்படுகிறது.

புதிய ஆராய்ச்சிகள் பல ஆச்சரியமான விஷயங்களை, பல ஆச்சரியமான உண்மைகளைக் கூறுகின்றன. அப்போது எழுபத்தி ஐந்து சதம் ஆண்கள் உச்ச நிலைக்கு முன்பே விந்தை வெளியேற்றுபவர்களாக இருப்பதை உணர்ந்தனர்.

எழுபத்து ஐந்து சதவிகித ஆண்கள்! ஒரு ஆழமான சந்திப்பிற்கு முன்பே அங்கு அவர்கள் விந்தை வெளியேற்றி விடுகின்றனர். செயல் முடிந்து விடுகிறது.

மேலும் தொண்ணூறு சதம் பெண்கள் ஒருபோதும் எந்த விந்துணர்வையும் அடைந்த தில்லை. அவர்கள் ஒருபோதும் ஒரு உச்சியை, ஒரு ஆழத்தை, நிறைவு செய்யும் சிகரத்தைத் தொட்டதில்லை - தொண்ணூறு சதம் பெண்கள்?!

இதனால்தான் பெண்கள் இவ்வளவு கோபமாகவும், கடுகடுப் போடும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். அவர்கள் தாங்கள் வாழும் ஆணோடு சுமூகமாக இருப்பதற்கு எந்த தியானமும் உதவ முடியாது. எந்தத் தத்துவமும், எந்த மதமும்,

எந்த ஒழுக்கமும் உதவ முடியாது. அவர்கள் விரக்தியில், கோபத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் நவீன கால விஞ்ஞானம் பழைய தந்த்ரா இரண்டுமே சொல்கின்றன. அதாவது ஒரு பெண் விந்துணர்வுத் தன்மையில் ஆழமாக நிறைவடையாவிட்டால் அவள் குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்.

அவளுக்கு இருக்கும் அந்தக் குறையால் கடுகடுப்பு உருவாகிறது. அவள் எப்பொழுதும் சண்டை போடும் ஆழ் உணர்விலேயே இருக்கிறாள்.

எனவே உனது உனது மனைவி ஒரு சண்டை போடும் ஆழ் உணர்விலிருந்தால் முழு விஷயத்தைப் பற்றியும் திரும்பவும் யோசி.

காரணம் மனைவியிடம் அல்ல -நீயே கூட காரணமாய் இருக்கலாம். மேலும் பெண்கள் விந்துணர்வை அடைவதில்லை என்பதால் அவர்கள் பாலுணர்ச்சிக்கு எதிராக மாறி விட்டனர். அவர்கள் பாலுணர்ச்சிக்குள் செல்ல சுலபத்தில் விருப்பப்படுவ தில்லை.

அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அவர்கள் பாலுணர்ச்சிக்குள் செல்லத் தயாராக இருப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் எந்தவித ஆனந்தத்தையும் அதன் மூலம் அடையாத போது, அவர்கள் ஏன் தயாராக இருக்க வேண்டும்? மேலும் அதன் பின் அவர்கள் அந்த மனிதன் தன்னை பயன்படுத்திக் கொண்ட தாகவே உணருகின்றனர்.

தேவையான பொழுது ஒரு பொருளை பயன்படுத்தி விட்டு பிறகு ஒதுக்கி விடுவது போலவே அவர்கள் உணருகினறனர்.

ஒரு ஆண் திருப்தியடைந்து விடுகிறான். ஏனெனில் அவன் விந்தை வெளியேற்றி விட்டான். பிறகு அவன் நகர்ந்து தூங்கப் போய்விடுகிறான். அந்த மனைவி அழுது கொண்டிருக்கிறாள். அவள் வெறுமனே பயன்படுத்தப்பட்டாள்.

மேலும் அந்த அனுபவம் எந்த விதத்திலும் அவளுக்கு நிறைவைக் கொடுக்க வில்லை. அது அவளது கணவனுக்கு அல்லது காதலனுக்கு அல்லது நண்பனுக்கு ஒரு விடுதலையைக் கொடுக்கலாம். ஆனால் அது அந்த விதத்திலும் அவளுக்கு நிறைவளிப்பதாய் இல்லை.

தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு விந்துணர்வு என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் ஒருபோதும் அதை அறிந்ததில்லை.

அவர்கள் உடல் முழுவதும் துடிக்கும். அந்த ஆனந்தத்தை, ஒவ்வொரு நாடி நரம்பும் அதிரும், ஒவ்வொரு செல்லும் உயிர்த் துடிப்புக்கு வரும், அந்த சிகரத்தை ஒருபோதும் தொட்டதில்லை. அவர்கள் அதை அடைந்ததேயில்லை.

மேலும் இதற்குக் காரணம் சமுதாயத்தின் பாலுணர்ச்சிக்கு எதிரான அணுகுமுறையே. சண்டைபோடும் மனம் அங்கிருக்கிறது. மேலும் அந்தப் பெண், அவள் மிகவும் உறைந்து போகுமளவு அடக்கி வைத்திருக்கிறாள்.

அந்த ஆண் அந்தச் செயலை அது ஏதோ ஒரு பாவம் என்பதைப் போல செய்து கொண்டே போகிறான். அவன் அதைக் குற்றமாக உணர்கிறான். அது செய்யக் கூடாதது. மேலும் அவன் தனது மனைவியுடன் அல்லது காதலியுடன் புணர்ந்து கொண்டிருக்கும் போது, அவன் ஏதோ ஒரு மகாத்மாவை - ஏதோ ஒரு துறவி என்று அழைக்கப்படுபவரை - நினைத்துக் கொண்டிருக்கிறான்.

மேலும் அவன் பாலுணர்வில் ஈடுபட்ட பிறகு அந்த மகாத்மாவிடம் எப்படிப் போவது, எப்படி இந்த பாலுணர்ச்சியை, இந்தக் குற்றத்தை, இந்தப் பாவத்தைக் கடந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

மகாத்மாக்களை விட்டு விடுவது மிகவும் கடினமான காரியம். நீ புணர்ந்து கொண்டிருக்கும் போது கூட அவர்கள் அங்கிருக் கிறார்கள். நீங்கள் இருவரல்ல! ஒரு மகாத்மாவும், அங்கு இருக்கிறார். அப்படி மகாத்மா அங்கில்லாவிட்டால் அப்போது கடவுள் நீ இந்தப் பாவத்தை செய்வதை கவனித்துக் கொண்டிருக் கிறார்.

மக்களின் மனதில் கடவுள் என்ற கருத்து ஒரு வெறும் எட்டிப் பார்க்கும் சிறுவனாகவே இருக்கிறது. அவர் எப்பொழுதும் உன்னைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார் -

இந்த அணுகு முறை பதற்றத்தை உருவாக்குகிறது. பதற்றம் அங்கு இருக்கையில், விந்து வெளியேற்றம் விரைவில் நடந்து விடுகிறது.

பதற்றம் அங்கு இல்லாத பொழுது, விந்து வெளியேறுவதை மணிக் கணக்கில் ஒத்திப் போட முடியும் -நாட்கணக்கில் கூட,

மேலும் அங்கு அதற்குத் தேவையே இல்லை. அன்பு ஆழமாக இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் சக்தி அளிக்க முடியும்.

அப்போது விந்து வெளியேற்றம் முற்றிலும் நின்று விடுகிறது. வருடக் கணக்கில் இரு காதலர்களும் எந்த விந்து வெளியேற்றமும் இல்லாமல், சக்தி எந்த விதத்திலும் விரையமாகாமல், ஒருவருக் கொருவர் சந்தித்துக் கொள்ள முடியும்.

அவர்கள் ஒருவருக் கொருவர் தளர்த்திக் கொள்ள முடியும். அவர்களது உடல்கள் சந்திக்கும்; தளர்வடையும். அவர்கள் பாலுணர்ச்சியில் நுழைவார்கள், தளர்வார்கள்.

மேலும் விரைவிலோ சிறிது கழித்தோ பாலுணர்ச்சி ஒரு கிளர்ச்சியாக இருக்காது. அப்போது அது ஒரு கிளர்ச்சியல்ல; அது ஒரு தளர்த்திக் கொள்ளல் - ஒரு ஆழமான, அதன் போக்கில் விட்டு விடுதல்.

நீ முதலில் உனக்குள், வாழ்வு சக்தியிடம் சரணாகதியானால் மட்டுமே அது நடக்க முடியும். அப்போது மட்டுமே நீ உனது காதலி அல்லது காதலனிடம் சரணடைய முடியும். தந்த்ரா இது நிகழ்வதைச் சொல்கிறது. மேலும் அது எப்படி நிகழ முடியும் என்பதையும் சொல்கிறது.

தந்த்ரா சொல்கிறது: நீ கிளர்ச்சியோடு இருக்கும் பொழுது ஒருபோதும் கலவியில் ஈடுபடாதே.

இது மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் நீ கிளர்ச்சியோடு இருக்கும் போதே நீ புணர விரும்புகிறாய். மேலும் சாதாரணமாகப் பங்கு கொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் கிளர்ச்சியூட்டிக் கொள்கின்றனர். அப்போதுதான் அவர்கள் புணர முடியும்.

ஆனால் தந்த்ரா சொல்கிறது: அதாவது கிளர்ச்சியோடு இருக்கையில் நீ சாந்தமாக, தியானத்தோடு இருக்கையில் அன்பு செய். முதலில் தியானம் செய்; பிறகு அன்பு செய்; மேலும் நீ அன்பு செய்யும் போது, புணரும் போது, எல்லையைக் கடந்து போகாதே.

எல்லையைக் கடந்து போகாதே என்று நான் சொல்வதன் அர்த்தம் என்ன? கிளர்ச்சியும் வன்முறையும் அடையாதே. அப்பொழுதுதான் உனது சக்தி சிதறாமல் இருக்கும்.

நீ பாலுணர்ச்சி சக்தி ஓட்டத்தோடு போனால், முழு சரணாகதி அடைந்தால், விரைவிலோ அல்லது சிறிது கழித்தோ நீ ஒரு நிலைக்கு வந்து சேர்வாய்.

அங்கு பாலுணர்ச்சி புது வாழ்க்கைக்கு பிறப்பு கொடுப்பது மட்டுமல்ல... பாலுணர்ச்சி அதிக வாழ்க்கையையும் கொடுக்க முடியும் என்பதை அறிவாய். காதலர்களுக்கு பாலுணர்ச்சி ஒரு வாழ்வை கொடுக்கும் சக்தியாக மாற முடியும்.

ஆனால் அதற்கு சரணாகதி தேவை. ஒருமுறை நீ சரணடைந்து விட்டால், பல பரிமாணங்கள் மாறுகின்றன.

உதாரணமாக, தந்த்ரா அறிந்திருக்கிறது. தாவோ அறிந்திருக்கிறது. அதாவது நீ புணர்ச்சியின் போது விந்தை வெளியேற்றி விட்டால் அப்போது அது உனக்கு வாழ்வைக் கொடுப்பதாக இருக்க முடியாது.

அங்கு விந்தை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. விந்து வெளியேற்றத்தை முற்றிலும் மறந்துவிட முடியும்.

தந்த்ரா, தாவோ இரண்டும் சொல்கின்றன: விந்து வெளியேற்றம் ஏனெனில் நீ சண்டையிடுகிறாய், இல்லாவிட்டால் அதற்கு அங்கு தேவையே இல்லை.

காதலனும் காதலியும் ஆழமான பாலுணர்ச்சித் தழுவலில் இருக்கமுடியும். ஒருவரில் ஒருவர்தளர்வடைந்து கொண்டு, விந்தை வெளிப்படுத்துவதில் அவசரப்படாமல், அந்த நிகழ்வை முடிக்க அவசரப்படாமல் இருக்க முடியும்.

அவர்கள் வெறுமனே ஒருவருக்குள் ஒருவர் தளர்வு கொள்ள முடியும். மேலும், இந்த தளர்வு கொள்ளல் முழுமையானதாய் இருந்தால், அவர்கள் இருவரும் வாழ்வை அதிகமாக உணர்வார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வளப்படுத்துவார்கள்.

தாவோ சொல்கிறது... ஒரு மனிதன் ஓராயிரம் வருடம் வாழ முடியும். அவன் பாலுணர்ச்சியில் எந்த அவசரமும் காட்டாமல் இருந்தால், அவன் ஆழமாக தளர்வுற்று இருந்தால், ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரில் ஒருவர் ஆழமானத் தளர்வு நிலையில் இருந்தால் ஒருவருள் ஒருவர் கரைந்திருந்தால் ஒருவரில் ஒருவர் ஆழ்ந்திருந்தால் எந்த அவசரமும் இல்லாமல், எந்த இறுக்கமும் இல்லாமல் இருந்தால், பல விஷயங்கள் நிகழும்.

ரசவாத மாற்றங்கள் நிகழும் - ஏனெனில் இருவரின் வாழ்வின் சாரமும் இருவரின் மின்சாரமும், இருவரின் உடலியல் சக்தியும் சந்திக்கின்றன.

மேலும் இந்த சந்திப்பால், அவை எதிரெதிரானதாக இருக்கும் காரணத்தால் ஒன்று எதிர்நிலை மற்றொன்று ஆதரவு நிலை - அவர்கள் எதிர்துருவங்கள் - ஒருவரையொருவர் ஆழமாகச் சந்திக்கும் பொழுது, அவர்கள் ஒருவருக்கொருவர் சக்தி அளிக் கின்றனர்.

ஒருவர் மற்றொருவரை 

ள்ளவராக்கு கின்றனர். அதிக வாழ்வைத் தருகின்றனர்.