Friday, 11 October 2024

மற்றொரு தோற்றம்

மற்றொரு தோற்றம் 

சிசிலியைச் சேர்ந்த் டுரிடு என்னும் நாற்பது வயதுக் காரன்,  இரவும், பகலும் எந்த இடமானாலும் எப்போதும் செக்ஸைப் பற்றியே எண்ணி தனது வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருந்தான்.

 அவனுக்கு பைத்தியமே பிடித்து விடும்போல இருந்தது. அவனால் அதை நிறுத்த முடியவில்லை.

இறுதியாக இத்தாலிய மன இயல் வல்லுநர் ஒருவரிடம் சென்று

. "எனக்கு நீங்கள் உதவ முடியுமா டாக்டர்" என்று கேட்டான்.

"ஆம். முடியுமென்று நான் நினைக்கிறேன். நாம் சில புதிய பரிசோதனைகளை முயன்று பார்ப்போம்" என்றார்.

முதல்நாள் டாக்டர் ஒரு காகதித்தில் ஒரு வட்டத்தை வரைத்து அதை டுரிடுவிடம் காட்டி, "நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்.

. இது மிகவும் சுலபமானது, இது ஒரு அழகான பெண்ணின் பிறப்புறுப்பின் படம்".

"என்ன?"

"ஆம் அவள் கால்களை அகற்றி வைத்திருப்பதால் அப்படித் தெரிகிறது!" என்றான்.

அடுத்த நாள் டாக்டர் அவனிடம் ஒரு முக்கோணத்தைக் காட்டி, "நீ என்ன காண்கிறாய்?" என்றார்.

ஓ....இதுவா, இது நேற்று காட்டினீர்களே, அதே பெண் குறியின் மற்றொரு தோற்றம்தான்" என்றான்.

மூன்றாவது நாள் டாக்டர், அவன் எந்த வகையிலும் செக்ஸோடு சம்பந்தப்படுத்தி கூறாத படிக்கு ஒரு படம் வரைந்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவர் ஒரு செவ்வகத்தை வரைந்து அதன் மத்தியில் ஒரு புள்ளி மட்டும் வைத்தார். 

"மிஸ்டர். இப்போது நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்" என்று கூறுங்கள்.

"இதைப்போல் குறும்பு செய்யாதீர்கள் டாக்டர்" இதுவும் அதே படம்தான். 

செவ்வக வடிவமான ஒரு படுக்கையில் அந்த அழகான பெண்குறி இருப்பதை மேலே இருந்து பார்ப்பது போல் வரைந்துள்ளீர்கள்!” என்றான்.

உடனே.''நீ மனதில் செக்ஸ் வெறி பிடித்து, நெறி கோணியவனாக இருக்கிறாய்" என்று டாக்டர் கத்தினார்.

"நானா?" என்றான் டுரிடு.

"நானா?" இந்த மாதிரியான ஆபாசப் படங்களை தினம் வரைந்தது நானா நீங்களா? என்றான் டுரிடு.

இப்படி மதங்கள் தான் விநோதமான சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டன

No comments:

Post a Comment