உனக்கு நீயே உரமேற்று
*எல்லா உறவுகளும் அவரவர் மனநிலைக்கு ஏற்றபடிதான் நடப்பார்களே ஒழிய,*_
_எதிராளி மனமறிந்து உனக்கு என்ன தேவை என்று கேட்டு நடப்பதில்லை._
_*நானிருக்கிறேன் என்கிற உறவு கிடைத்தாலும் அது நிரந்தரமல்ல.*_
_எனவே, எதிர் பார்க்காதே._
_*உன்னை நீயே அணைத்துக் கொள்.*_
_உன்னிடம் நீயே பேசு._
_உனக்கு நீயே உரமேற்று._
_*உன்னைப் பற்றி,*_
_*உன் தேவை பற்றி,*_
_*உன் வாழ்க்கை பற்றி*_
_*யோசி.*_
_எதிர்பார்த்து ஏங்கி,_
_இல்லையென்று_
_புழுங்கிச்_ _சாவதைவிட,_
_*எதுவாயினும் அசையாது இருக்கப் பழகு....*_
_நான் இருக்கிறேன் என்று சொன்ன உறவுகள் எல்லாம் இன்று எப்படி இருக்கிறே??என்று ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை.._
_*இந்த உலகில் அனைத்தும் தேவைக்கு மட்டும்தான் வேஷம் போடும் மனிதர்களிடையே பாசம் காட்டி வீணாய் போகாதீர்கள்...*_
_வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொண்டேன் மனிதர்களிடம்_ _மனிதாபிமானமும் மனமும்_ _இல்லை_
_இரக்க குணமும் இல்லை என்பதை...._
_*எங்கோ நடக்கும் தவறுக்காக யாரையோ குற்றவாளியாக பார்த்துக் கொண்டு வாழும் கேவலமான சமுதாயத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்....*_
_எத்தனை உறவுகள் அண்ணன் தம்பி என்று அத்தனையும் இன்று வீண் என்பதை அறிந்து கொண்ட நாள் இது...._
_*உங்களது நம்பிக்கையும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களை வாழ வைக்கும்....*_
_நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க ஜெயிச்சே ஆகணும்...._
_*சிலருக்கு முன்னாடி வாழ்ந்து காட்டி வைராக்கியமா நான் வெற்றி பெற்றுவிட்டேன் பார்த்துக்கொள் என்று சொடக்கு போட்டு கூற வேண்டும்.....*_
_கையில் இருந்து தவறியது கல்லல்ல அற்புதமான வைரம் என்பதை அறிந்து வேதனை பட வேண்டும்...._
_*நீங்கள் உங்களது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இருங்கள் வெற்றி தானாக உங்களிடம் வந்து சேரும்....*_
No comments:
Post a Comment