Sunday, 6 October 2024

கர்மாதான் காரனமா

கர்மாதான் காரனமா

 ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*

*அமைவது* ஏன் ?

    *நம் வாழ்க்கையின்* ஒவ்வொரு நிகழ்விலும் 

*ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்*. 

  *அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்*. 

   *சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.* 

      *சிலருக்கு நல்லது செய்கிறோம்.*

*பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக*

 *நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்*. 

இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"* 

எனப்படுகிறது.

     *சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது. 

சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது. 

     சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*

சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது. 

     பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன. 

     கனவில் கூட காண முடியாத  பல *ஆச்சர்யங்கள்* நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.

*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?* 

*ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?*

    *நாமே* நம் தாயை, *தந்தையை,* 

*சகோதர* சகோதரிகளை,  *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,*  *தேர்ந்தெடுப்பதில்லை.*

    நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் 

*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 

*முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ?*

    *ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்*.

 *அது இறப்பால் மட்டும் அல்ல  பல* காரணங்களினால் நிகழும் அதே நபர் மீண்டும்  *நம் வாழ்வில் வேறு கோணத்தில்* 

*வேறு பார்வையில்* *தோன்றுவர்*

   *எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.* 

     அது என்ன ? 

*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் 

*கர்ம* கதிகளின் 

*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?

 இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  *"கர்ம வினை"* தான் .

    *இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.*

 *அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.*  

    அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது.  *அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது*.

     *இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்*

*நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது*.

*நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.*

    *இந்த வாழ்க்கை* *நடைமுறையில் நாம்* 

*ஒவ்வொருவரிடமும்* *ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்*.*

*இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.*

     இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது *கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது*. 

யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது*.

     *அவரவர்கள் செய்வினையின்* 

*பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்*

*வாழ்க்கை அமையும்* .

    *துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே*.

 *இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா*"_

*என நம் மதம் போதிக்கிறது.*

    *நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு* 

*நாம் மட்டுமே பொறுப்பு.*

 *அப்படி என்றால்* 

*ஆகாமி கர்மா* *நம்முடைய கையிலேயே இருக்கிறது*.  

   *இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது.* 

     *நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,*

*நீ என்ன செய்யப் போகிறாய் ?*

*எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?*

*எது போன்ற வாழ்க்கைத் தடத்தை* 

*ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது* 

*உனக்குப் புலப்படும்.*

இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*

*பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்*.

 *பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்* 

*தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது*. 

    *ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்*. 

அதேபோல பெரும் பணக்காரர்களையும்  *'துக்கங்கள்*' விடுவதில்லை.

*சர்க்கரை ஆலை* *அதிபரானாலும் Diabetic-*

*ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை* 

*உண்ண முடியாது*. 

*பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது*.

*வினை விதைத்த வழியில் விதி நடக்கும்*

*விதி வகுத்த வழியில்* *நாம் நடக்க வேண்டும்'*

    *நமக்கு விதிக்கப்பட்டது*

 *நம் கடமையைச்* 

*செய்வது மட்டுமே*. _*பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.*_  

*நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.* 

*அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.*

*எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை*

  *நமக்கு நடக்கும் நடக்கப்போகும்* *நல்லதை யாராலும் கெடுக்க* 

*முடியாது. அதேபோல் தீமையையும்*

 *கொடுக்க முடியாது*,,,,,

No comments:

Post a Comment