இரையும் இறையும்
புத்தர் தனது ஆரம்ப நாட்களில் மனிதனின்
துன்பதிற்கான காரணத்தை கண்டறிய மிகவும் கடுமையான தியானத்தை மேற்கொண்டார். இப்படியே நீண்ட நாட்கள் உணவில்லாமல் தியானம் மேற்கொண்டதால் உடல் மிகவும் மெலிந்து நடக்ககூட முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார். அவரது சீடர்கள் மிகவும் வற்புறுதியும் அவர் ஏற்க்க மறுத்துவிடுகிறார். உடலை வருத்திதான் கடவுளை அடைய வேண்டும் என்பது அவரது நம்பிக்கை.
ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டிருகையில் சாலையில் இரண்டு இசை கலைஞர்கள் தங்களுக்குள் தனது கருவியில் இசை சரியாக ஒலிப்பதில்லை என கூறுகிறார் அதற்க்கு மற்ரொருவர்,
"கருவியின் கம்பியை அதிகமாக முறுக்க வேண்டாம் எனவும் அப்படி செய்தால் கம்பி அறுந்துவிடும் எனவும் அதே சமயதில் தளர்வாக இருந்தால் இனிமையான இசை வராது" எனவும் கூறுகிறார்.
தியான நிலையில் இதை கேட்ட புத்தர் அன்றிலிருந்து சரியான அளவு உணவு எடுத்துகொண்டார் எனவும் கூறப்படுகிறது.
எனவே இரையும் முக்கியம் இறையும் முக்கியம்.
No comments:
Post a Comment