Saturday, 6 December 2025

இறப்பு என்ற புதிய அனுபவம் பேசாலைதாஸ்

 இறப்பு என்ற புதிய அனுபவம்  பேசாலைதாஸ்

வாழ்க்கையின் நிலையாமை பற்றி நீங்கள் உணர வேண்டுமென்றால்....

மருத்துவமனையிலும்... மயானத்திலும்...  

கவனிப்புத் தன்மையுடன்,

தியானத்தில் ஈடுபடுங்கள்.....

இறப்பை எதிர்கொள்வது எப்படி?

இறப்பதற்கு எப்படித் தயார் செய்து கொள்வது?

எதையும் சேர்த்து வைக்க விரும்பாதீர்கள். 

அது, அதிகாரமாகட்டும்.. பணமாகட்டும்... அந்தஸ்து... புண்ணியம்..  விஷய ஞானம்...

ஏன், உங்களுடைய ஆத்மீக அனுபவமாகட்டும்....  

எதையும் என்னுடையது என்று சேர்த்து வைக்காதீர்கள்...

இப்படி எதையுமே சேர்த்து வைக்காவிட்டால்....

எந்த நேரமும்,

நீங்கள் இறப்பதற்குத் தயாராக இருப்பீர்கள்...

ஏனெனில், அப்பொழுது நீங்கள்

எதையும் இழக்கப் போவது இல்லை.

யாரும் இறப்பைக் கண்டு  பயப்படவில்லை....

நீங்கள் வாழ்க்கையில் சேகரித்தவைதான் உங்களுக்கு மரண பயத்தை உண்டு பண்ணுகின்றன....

மரணம் நெருங்கும் பொழுது....

நீங்கள் இதுவரை

உங்கள் சக்தியையெல்லாம் செலவழித்து சேகரித்தவற்றோடு, ஒட்டிக்கொள்ளவே ஆசைப்படுகிறீர்கள்.....

ஜீசஸ் சொன்ன, 

'உங்களுடைய உயிர்த்தன்மை,

எந்தவித சேர்த்து வைத்தல் இல்லாமல், எளிமையாக.....

ஏன், வறுமையாக இருந்தால்,

அவர்களே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்' என்பதன் அர்த்தம் இதுதான்....

இதற்காக நான் உங்களை

பிச்சை எடுத்து,  

இந்த உலகத்தைத் துறந்து வாழுங்கள் என்று சொல்லவில்லை...

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்....

'நீங்கள் உலகத்திலேயே இருங்கள்... ஆனால் நீங்களே உலகமாக மாறி விடாதீர்கள்' என்பதே.....

எதையும் உங்கள் மனதில் சேர்த்து வைக்காதீர்கள்.... 

உங்கள் உள்ளே,   

நீங்கள் வறுமையோடு இருங்கள்.....

எதையும், என்னுடையது என்று சொந்தம் கொண்டாடாதீர்கள்....

அப்பொழுது நீங்கள் எந்த துன்பமும் இன்றி இறக்கலாம்....

வாழ்க்கை உங்களுக்கு பிரச்சனையே இல்லை.....

'என்னுடையது' என்ற எண்ணம்தான் பிரச்சனை.....

எவ்வளவு அதிகமாக சேர்த்து

வைக்கிறீர்களோ....

அந்த அளவுக்கு,

நீங்கள் இறக்கும்பொழுது,

அவைகள் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.....

உங்கள் ஆத்மா, 'என்னுடையது' என்ற

எண்ணத்தால் அசுத்தப்படாமல் இருந்தால்.....

வறுமையாக இருந்தால்.....

நீங்கள் எந்த நேரமும்

இந்த உலகத்தை விட்டுச் செல்லலாம்.....

இறப்பு உங்களை வந்து தட்டும்பொழுது....

நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையும்...

நீங்கள் அப்பொழுது இழப்பதற்கு

ஒன்றுமே இல்லை...

அப்படி இருக்கும் பொழுது...

வாழ்வு என்னும் அனுபவத்தில்

இருந்து....

இறப்பு என்ற புதிய அனுபவத்திற்கு செல்லுகிறீர்கள்... 

அவ்வளவுதான்....

Wednesday, 5 March 2025

உடல் என்பது ஆலையமே

 உடல் என்பது ஆலையமே! பேசாலைதாஸ்


உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! 

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்

பிடி சாம்பலாகி விடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,

இருப்பது உன் உடலே...!

அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்

சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்

உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு

விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு

விமோசனம் இல்லை...!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே

சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே  பூஜை..!

உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்

உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று

வணங்குவதை விட உயர்வானது..!

உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!

ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!

ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!

ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ

அதை தீர்மாணிப்பதும் உடலே...!

ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!

ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!

அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!

பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

தியானம் நம் மனதோடு பேச செய்யும்.

ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.

அதை தேடு...!!

இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...

        "தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்...




செயலற்ற செயல்!

செயலற்ற செயல்!  பேசாலைதாஸ்


ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை

அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில்

உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக,

காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.

அந்த சூஃபி அதனுள் சென்றார்.

அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது.

அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர்

அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி

சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்.

சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர்.

முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், `கடவுள் என்று யாரும் இல்லை. ஆனால் கடவுள் உண்டு.` ஆனால் சூஃபிகள் இதை அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி

விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக்

கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே

இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க

நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும்

குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும்.

அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா

அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில்

கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும்,

கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று

அழைக்கின்றனர்.

இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான

அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும்

அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர

ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும்

அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது

இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது

போதாது. முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம்

ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக

நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால்

நிரம்பியிருந்தது. – ஆனால் அந்த சூஃபியின் இதயம்

மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார்.

அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும்

பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான

நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை.

இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை

வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை.

ஒரு நாள் நடு இரவில் திடீரென

அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள்

என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர்

தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை,

அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு

சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக்

கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது

பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ? இதன்

கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று

விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த

கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய்

சேர வில்லையோ? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு

ஒட்டுண்ணியோ என நினைத்தார்.

பயந்து போய் நட்ட நடு இரவில்

இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார்.

ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த

மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு

நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு

காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த

அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும்,

இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்? அது

ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என

நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான்.

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது

கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான்.

காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால்

பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது.

அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு

மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது

அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு

கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில்

மின்னியது.

அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும்,

அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில்

யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின்

அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை

இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த

மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு

புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண

மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன்.

அன்றாட வாழ்க்கையின்

சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல,

நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது

கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப்

பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக்

கொண்டிருந்தான்…..ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு

சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை.

– அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல

அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது

உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு

அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக்

கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன்

அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது

வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல –

அல்லா, அல்லா – இப்போது அவனையும் அறியாது

அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது

நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான்.

ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில்

அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும்

இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை

முழுவதுமாக நனைத்து சென்றது.

நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான்.

பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன்

அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த

பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை

மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த

கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது.

பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே

செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின்

பொருள் என்ன?

லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை

கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல்.

செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து

இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக

நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான்.

வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன்

சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன்

எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான்.

எப்போதெல்லாம் நீ மிகவும்

செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ,

அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள்

உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும்

இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற

நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா

இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக்

கொள்ள முடியும். 

மாறுபாடே மரணம்!

 மாறுபாடே மரணம்! பேசாலைதாஸ்


ஒவ்வொரு நாள் காலையிலிருந்தும் மரணம் உன்னை தொடர ஆரம்பி க்கிறது... 
இறைச்சலின் உச்சபட்ச ஒலிதான் மரணம். மரணம் வெவ் வேறு வழிகளில் வருகிறது. நீ சாவது ஒருவகையான மரணம் மட்டுமே. இன்னும் பல மரணங்கள் உண்டு....

உன் அன்னை இறந்தால் நீயும் தான் இறக்கிறாய். ஏனெனில் அன்னையின் ஒரு பகுதிதான் நீ. அந்த பகுதி அப்போது இறந்துவிடுகிறது....

உன தந்தை இறந்தால், உன் சகோதரன், உன் சகோதரி, உன் நண்பன் என யார் இறந்தாலும் உன்னுடைய  ஒரு பகுதி இறக்கத்தான் செய்கிறது....

உன் விரோதி இறக்கும்போது ஒரு பெரும்பகுதி உன்னுள் இறந்து விடுகிறது... 

ஒவ்வொருவரின் மரணத்தின் முடிவிலும் நீ வேறுவிதமாக மாறிவிடுகிறாய்...

நீ பிறந்தவுடன் குழந்தையாக இருக்கிறாய்... பின்பு இளைஞனாக மாறுகிறாய், பின்பு முதுமையை அடைகிறாய்... ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் நீ இறந்துகொண்டுதான் இருக்கிறாய்... 

குழந்தை பருவத்தை நீ கடக்கும்போது அதற்கான கதவு மூடப்படுகிறது... 

நீ இறந்து இளைஞனாக மாறுகிறாய்... 

இன்னும்போனால் ஒவ்வொரு கணத்திலும் உன்னுடைய ஒருபகுதி மாற்றமடைந்து வேறொரு பகுதி நுழைவதை உணர்வாய்.... 

அப்போது ஒவ்வொரு கனமும் மரணம் உன்னை கடந்து தான் செல்கிறது...

அந்த மரணங்கள் எந்த தடயமுமில்லாமல் உன்னை கடந்து சென்றுவிடுகின்றன....

மற்றொரு நுண்ணிய மரணமொன்று உண்டு....

அது தான் காதல்... காதல் என்பது தூய்மையான மரணம்... யாராவது மரணமடைய விரும்பினால் அவர்கள் காதலில் விழலாம்.. .எல்லோரும் காதலை விவாதிக்கிறார்கள்... புத்துணர்வு கொள்கிறார்கள்... 

ஆனால் பெரும்பாலோர் காதலில் இறங்க பயப்படுகிறார்கள்... 

ஏனென்றால் காதல் என்பது மரணம்.... காதல் அச்சம் கொள்ளவைக்கிறது... காதலிக்கும் இருவரில் ஒருவருக்குள் இன்னொருவர் இறந்து தான் ஆகவேண்டும்... அது தான் காதல்... 

மற்றதெல்லாம் ஒரு விளையாட்டு தான். இந்த விளையாட்டு காதலெல்லாம் பேச்சளவில் தான் இருக்கும்.... 

உண்மையாக காதலிப்பதற்கு பயப்படுவதன் காரணம் மரணிக்க தயாராக இல்லாதது தான் காரணம் ஒருவன் தன் இணைக்குள் மரணிக்காமல் காதலில் இறங்கமுடியாது....

இது தான் முக்கிய மரணம்....

தியானம் என்பது மற்றொரு மரணமாகும்... 

உனக்குள் நீ மரணிக்கும் நிகழ்வாகும்....

இதுவரை படித்திருப்பாய்... கேள்விப்பட்டிருப்பாய்....  

ஆனால் நீயாக தியானத்திற்குள் நுழையும்போது உன்னை நீ முற்றிலுமாக இழந்து விடுகிறாய்.... 

விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தியானமானது ஒருவரை ஆழமான நிரந்தர மரணத்தில் தள்ளிவிடுவதும் உண்டு....

நீ ஒரு குருவிடம் சரணாகதியடையும்போது மற்றொரு மரணம் நிகழ்கிறது....

அது உன் அகங்காரத்தின் மரணம்.

ஒரு கட்டத்தில் உன் அகங்காரம் மறைந்தே போய்விடுகிறது.... 

மேற்கண்ட மரணங்களை தன்னுள் கொண்டது தான் வாழ்க்கை....

மனிதர்களின் மரணங்கள் மட்டும் உன்னுள் மரணத்தை தோற்றுவிப்பதில்லை.... 

உன் செல்ல நாய், மரங்கள், செல்லபிராணிகள், ஒரு அழகிய பறவை என எவை மரணித்தாலும் உனக்குள் மரணம் நிகழ்ந்துவிடுகிறது.... 

பிரபஞ்சத்தில் மரணம் நிகழ்வதும் மீண்டும் உயிர்கள் தோற்றுவிக்கப்படுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும்....

மரணம் என்பது பிரபஞ்ச மாயையாகும்...

சிரிக்காமல் சிரிக்கின்றார் புத்தர்!

 சிரிக்காமல் சிரிக்கின்றார் புத்தர்!  பேசாலைதாஸ்


துறவு என்பது ஞானமடை தலுக்கான வழி 
இது தோற்ற ங்களிலிருந்து விடுபட வைக் கிறது இந்த வழியின் சாரா ம்சம் ஒட்டாதிருப்பது

அதாவது துறவு போதி தர்மன் சொன்னான்.....'புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார்" என்று.....

யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை

அவரின் இருப்பே சிரிப்புதான்

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு

உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும்

ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு

துன்பம் நேரலாம் என்ற மனநிலையில்

ஏதாவது ‘அபத்தமாக’ நடந்தால்

அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள்

அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது

துன்பத்தை மறக்க

டென்ஷன் மறைகிறது

சிரிப்பு ஆரோக்கியமானது

நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்று விடுகிறது

ஆனால் அதுவும் ஒரு சில நிமிடத்துக்குத்தான்

பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ.....

அதனால் ஆனதே இந்த வாழ்வும்

ஆனால்

கனவை நீ ஒரு மாயை என்கிறாய்...

நனவை 'மிகுந்த சிரமப்பட்டு' தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய்

கனவுக்கும் நீ நினைவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை

இந்த உலகில் வாழ்

ஆனால்

இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது

நினைவிருக்கட்டும்

இது எல்லாமே அழகான கனவுதான்

இந்த வாழ்வு என்பது

மாறிக்கொண்டும்

மறைந்துகொண்டும்

தோன்றிக் கொண்டும் இருக்கிறது

கனவும் அப்படித்தானே.......!!!

அதனால் இந்த நினைவுடன் ஒட்டிக் கொண்டிராதே

எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி...

ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது

அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில்

‘அபரிமிதமான ஆற்றல்’ விடுபடுகிறது

இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால்

சிறைபட்டுள்ள அந்த ஆற்றல்

ஒரு புதிய உதயத்தை,

புதிய இருப்பை,

புதிய ஒளியை,

புதிய புரிதலை உனக்குள் கொண்டுவரும்

பிறகு துன்பம் என்பதே இல்லை

இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான.....

இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய்

உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும்

அதைத்தான் போதிதர்மன் சொன்னான்

"புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே

குருவும் குழந்தையும்

 குருவும் குழந்தையும்  பேசாலைதாஸ்


ஹாசன் என்ற சூஃபி ஞானி மரணப்படுக்கையில் இருந்தார். 

அப்போது சீடன் ஒருவன் அவரிடம் கேட்டான்....  

உங்கள் குரு யார்?  என்று நீங்கள் இதுவரை சொல்லவே இல்லையே!!  

நாங்களும் பலமுறை கேட்டு விட்டோம்,  நீங்கள் பதில் சொல்லவில்லை. 

இப்போதாவது சொல்லுங்கள்.

குரு சொன்னார் நான் பலரிடம் இருந்து பாடம் பயின்று இருக்கிறேன்!! 

ஆனால் எனது முதல் குரு ஒரு சிறிய குழந்தை!!

சீடர்களுக்கு வியப்பாக இருந்தது. மேலும் குரு சொன்னார்... 

அப்போது எனக்கு ஞானம் வந்து இருக்கவில்லை என்றாலும் உலக அறிவு மிக அதிகமாக இருந்தது நான் மிகப்பெரிய மேதாவியாக இருந்தேன் என் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது எனக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.

நானும் எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தேன் பிறகு பாசாங்கு செய்கிறேன் என்பது மறந்துபோகும் அளவுக்கு பேசி வந்தேன்.

நான் எனது முழு உணர்வு நிலையிலிருந்து செயல்படவில்லை.ஞானம் அடையாமலேயே நான் மிகப்பெரிய ஆசான் ஆகிவிட்டேன்.

பேருண்மையை அனுபவரீதியாக பெறாமலேயே நான் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டேன். 

மக்கள் என்னை தேடி வந்தார்கள் எல்லா புனித நூல்களும் மனப்பாடமாகத் தெரியும் யாராவது ஏதாவது கேட்டால் உடனே நான் எடுத்துவிடுவேன் அவர்கள் பயந்து போய் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த நிலையில் மூன்று நாட்கள் ஒரு வெளியூர் பயணத்தில் யாருக்குமே அடையாளம் தெரியாத இடத்தில் நான் மாட்டிக்கொண்டேன்.

எனக்கு மிகுந்த பசியாக இருந்தது. யாரிடமாவது கேட்கவேண்டும் என்று யாரையாவது தேடிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு சிறுவன் கையில் விளக்குடன் போய்க்கொண்டிருந்தான் அவனை நிறுத்தி கேட்டேன் குழந்தாய் இந்த விளக்கை எங்கே எடுத்துக்கொண்டு போகிறாய்?

அவன் சொன்னான் கோயிலில் கொண்டு இந்த விளக்கை வைக்க என்றான்.

அவனிடம் என்னுடைய மேதாவித்தனத்தை காட்டுவதற்காக, குழந்தாய் இந்த விளக்கை நீதானே ஏற்றினாய்?  என்றேன். அவன் ஆமாம் என்றான்.

மேலும் அவனிடம் கேட்டேன்,  இந்த விளக்கை நீதான் ஏற்றினாய் என்றால் இந்த ஜோதி, இந்த ஒளி எங்கிருந்து இந்த விளக்கிற்குள் வந்தது, என்று உன்னால் சொல்ல முடியுமா?

அந்த சிறுவன் சற்று என்னை உற்று பார்த்துவிட்டு, உடனே அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு...  

இப்பொழுது அந்த ஒளி எங்கே போய் விட்டதோ அங்கிருந்து தான் வந்தது. அது எங்கிருந்து வந்தது என்பதை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

அந்தக் குழந்தையிடம் நான் தோற்றுவிட்டேன் அவன் தான் என்னுடைய முதல் குரு என்றார் ஹாசன்.

ஒரு வழிப்போக்கன் ஒரு சிறுவனை பார்த்து கேட்டான் இப்போது மணி என்ன என்று சொல்ல முடியுமா?

அந்த சிறுவன் சொன்னான்...சொல்லலாம் ஆனால் நொடிக்கு நொடி காலம் நேரம் மாறிக்கொண்டே இருக்கிறது நான் உங்களிடம் ஒரு நேரத்தை சொல்லும்பொழுது அடுத்த நொடி வந்து விடுகிறது நான் எதைச் சொல்ல என்றான்.

ஒரு தாய் தன் குழந்தையை ஒரு பார்ட்டிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு நேர்த்தியான உடைகள் உடுத்தி அவனுக்கு தலையை வாரி,  பிறகு அவனிடம் சொன்னாள் பார்ட்டியில் மகிழ்ச்சியாக இரு!! அதேநேரம் கவனமாக கட்டுப்பாட்டுடன் இரு என்றாள்!!

அந்தச் சிறுவன் அவனது தாயிடம் கேட்டான் ஒரே நேரத்தில் இரண்டையும் எப்படி செய்யமுடியும்?

அவன் கேட்டான் கட்டுப்பாடாக இருந்தால், எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

அந்தத் தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

குழந்தைகளை கவனியுங்கள் உண்மையில் அவர்கள் உங்களை விட புத்திசாலிகள்.

பகவான் ரமணரிடம் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் கேட்டார் ஞானம் அடைவதற்கு எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அதற்கு ரமணர் சொன்னார்...  

நீ எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. 

நீ எதையெல்லாம் இதுவரை  கற்றிருந்தாயோ அதையெல்லாம் விட்டு விட வேண்டும்  அவ்வளவுதான். 

நீ ஒரு குழந்தையாக மாற வேண்டும் என்றார்.

இயேசு சொன்னார் நீங்கள் சாதாரணமாக இருங்களேன்.

ஏன் நீங்கள் விசேஷமானவர்கள் என்று காட்டிக் கொள்கிறீர்கள்?

குழந்தைகள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். 

பெற்றோர்களே அவர்களை அசாதாரணமாக மாற்றிவிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு எதுவும் கற்றுத் தராமல் இருந்தாலே போதும். வேண்டுமென்றால் நீங்கள் அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்........

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று!!

Wednesday, 26 February 2025

நம் நினைவின் எதிர்பலிப்பே கர்மா!

 நம் நினைவின் எதிர்பலிப்பே கர்மா!  பேசாலைதாஸ்

கர்மா என்பது என்ன என்பது சற்று குழப்பமான ஒரு விடயம் தான், சிலர் நாம் செய்யும் வினைகளுக்கான ஒத்த வினை விளைவு என்றும் சொல்வார்கள், இந்த கதையின் மூலமாக கர்மா பற்றிய மற்றுமொரு கருத்தையும் நான் சொல்லவிழைகின்றேன்.

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்..

 “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!

அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!

 சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! 

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்,

 ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். 

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்! 

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்!

 அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது!

 இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!

 அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!

அன்பர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்று, உங்களில் சிலர் நினைக்கக்கூடும், “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம்,  நான் விளங்கிக்கொண்டது இதுவே!

 “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “

நாம் அடுத்தவர்கள் மேல்  நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்! 

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே  எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்..

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்...

எனவே,

 நல்லதையே தேடுவோம்... நல்லதையே சிந்திப்போம்...என்ன அன்பர்களே, நான் சொல்வது கரெக்ட் தானே! மற்றுமொரு ஆன்மீக சிந்தனை கதையில் சந்திப்போம் அன்புடன் பேசாலைதாஸ்


Thursday, 30 January 2025

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு? பேசாலைதாஸ் 


குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு 
சிட்டுக்குருவி வாழ்ந்து வந்ததுஇலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது  மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமா யின ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடா தெனத் தீர்மானித்துவிட்டது. 

குளிர்காலம் வந்தது, குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கல ங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது அந்த குளிரின் கடுமையில் பறந்தால், மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அடர்ந்த பனிவீழ்ச்சியி னால்,  அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோடு அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது 

அந்த முற்றத்தில் சென்று, கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றுவிட்டது. சிட்டு குருவிக்கு மூச்சு திணறி னாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது சூட்டி னாலும், மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது 

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது, சாணத்தை அகற்றிப் பார்த்தது பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது 

அன்பர்களே இந்த கதையில் இருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய மூன்று படிப்பினையுண்டு. உன் மீது சாணம் போடுபவன்,உன் எதிரியாய் இருக்க வேண்டிய.அவசியம் இல்லை.அவன் யாராகவும் இருக்கலாம். அடுத்த  படிப்பினைஉன்னை சாணத்திலிருந்து,  அகற்றுபவன் உன் நண்பனா கத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் உன் எதிரியாகவும் இருக்காலம், இது காலத்தின் ஏற்பாடு 

 நீ மகிழ்ச்சியாக சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால்,சத்தமிடாமல் அமைதியாக இருக்கலாமே, எல்லாமே விதி வசம். நம்மில் பலர் அப்படித்தான், வசதிகள் வரும்போது, பட்டகஸ்டங்கள் மறந்து அந்த சிட்டுக்குருவிபோல வாழ முற்படுகின்றோம்.                                                                                   அன்புடன் பேசாலைதாஸ்


Wednesday, 29 January 2025

உள் முகம் மாற்றம்

உள் முகம் மாற்றம் பேசாலைதாஸ்


உன்னைத்திருத்து உலகம் தானாக திருந்தும், மாற்றம் பற்றி பரவலாக எங்கும் பேசப்படுகின்றது.  அரசியலில், இனப்பிரச்சனை தீர்வுகளில், பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் அதிகமாக பேசப்படுகின்றது. முதலில் தனிமனித எண்ணங்களில், சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால்,  ஏனையவை தானாக மாறும். அந்த மாற்றாம் 
நீதி சார்ந்து இருந்தால் போதும். உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்....  அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! 
இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!!  உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை கூடப்பிறந்தவர்களோ  என்று யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!!  
உங்களையே நீங்கள் அறியாத வரை, நீங்கள் மிகவும் ஆபத்தானவர் என்பதால், உங்கள் வழிகாட்டல் இங்கு யாருக்கும் தேவையில்லை!! உங்கள் வழிகாட்டுதல்   படியும், உங்கள் யோசனைப்படியும் நீங்கள் மற்றவர்களை கட்டாயப் படுத்தலாம். மேலும் உங்கள் பேச்சின் படி  நடக்காதவர்களிடம் கோபம் காட்டலாம். அவர்களை முடக்கலாம், கொல்லலாம், ஊனப்படுத்தலாம்!!  ஆனால் அவர்களின் உண்மையான மாற்றத்திற்கு (உள்முக மாற்றத்திற்கு) உங்களால் ஒருபோதும்  உதவ முடியாது!!  
உங்களுக்குள் நீங்கள் மாற்றப்படாதவரை.... மற்றொருவரின் வாழ்க்கைக்கு செல்லாதீர்கள்.  நீங்கள் ஞானத்தின் ஒளியால் நிரப்பப்பட்டால், நீங்கள் உதவலாம்!! இன்னும் சொல்லப்போனால்  உண்மையில் நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை!!  ஏனெனில்  விளக்கில் இருந்து ஒளி பாய்வது போலவோ, மலரிலிருந்து நறுமணம் பரவுவது போலவோ,  இரவில் சந்திரன் பிரகாசிப்பது போலவோ உங்களிடமிருந்து உதவி அதுவாகவே பாய்கிறது!!  
மலர் அதன் நறுமணத்தை பரப்புவதற்கு இந்த முயற்சியும் செய்வதில்லை!! சந்திரனின் அதன் ஒளியை எங்கும் பரப்புவதற்கு எந்த பிரயாசையும் எடுத்துக் கொள்வதில்லை!! அது - அதனின் இயல்பாகவே எங்கும் பாய்கிறது!!
உங்களுடைய உள் முகம் மாற்றத்தின் மூலம்  நீங்கள் - உங்களுக்கு ஒளியாக மாறினால்,  நீங்கள் மற்றவர்களுக்கு வெளிச்சமாகி விடுகிறீர்கள்!! இதுவே உங்களின் இயல்பான நிலையாகி விடுகிறது!! இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்

Tuesday, 21 January 2025

பாவமும் பழியும்

பாவமும் பழியும்  பேசாலைதாஸ்

பலருடைய இறப்புகளூக்கு காரனமே தெரியாது, செய்யாத பாவத்துக்காக பழிவாங்கப்படுகின்றார்கள்; சிலர் தாம் செய்த தப்புக்கு தானும் தண்டனை அடைவதுமில்லாமல், அப்பாவிகளூம் தண்டனை அனுபவிக்க வைத்துவிடுகின்றார்கள் 

இறந்து போன ஒருத்தன் சொர்க்கத்துக்கு சென்ற போது

அவன் எப்படி இறந்தான் என வாயிற்காப்போன் கேட்டான்

"என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. 

நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன்.என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.

ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன்

. என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல .என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா.

நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். 

ஆனா ஒருத்தனையும் காணோம். 

கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் 

. நான் தேடி வந்தவன் அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் .

எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . 

அவன் விரலில் ஓங்கி ஓங்கி மிதிச்சேன்.

 வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான்.

 நான் கீழ எட்டி பாத்தேன் .

 அவன் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் .

நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன்.

இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்."

அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை

நீ உள்ளே போகலாம் ." என்றது .

அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். 

அவனிடமும் தேவதை கேட்க

அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான்.

"நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். 

நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் .

 அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். 

திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன்.

நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன்.

 அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க .

திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். 

நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் 

. நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. 

ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி.

அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல.

 கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் ஐ என் மேல தள்ளி வுட்டு என்னை கொன்னுட்டான்."😔😔

அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது.

மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . 

அவனிடமும் தேவதை கேட்டது அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. 

அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. 

ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன்.

அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா 

நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். 

ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . 

அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு 

கதவ தெறக்க போனா .

நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன்.

 அப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல

இப்ப இங்க வந்துட்டேன் என்றான்

Friday, 3 January 2025

ஒரு அரசன் கனவு கண்டான். இரவில் அவன் கனவில் மரணத்தைக் கண்டான். அவன் பயந்து போனான். அவர் கேட்டார், “என்ன விஷயம்? என்னை ஏன் இப்படி பயமுறுத்துகிறாய்?”

மரணம் சொன்னது, “நாளை சூரிய அஸ்தமனத்தில் நான் வருகிறேன் என்று சொல்ல வந்தேன், எனவே தயாராகுங்கள். இது இரக்கத்தால் மட்டுமே, எனவே நீங்கள் தயார் செய்யலாம். ராஜா மிகவும் அதிர்ச்சியடைந்தார், அவரது தூக்கம் கலைந்தது. அது நள்ளிரவு. அவர் தனது மந்திரிகளை அழைத்து, "நேரம் குறைவாக இருப்பதால் கனவை விளக்கக்கூடியவர்களைக் கண்டுபிடி. ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம்! ” பின்னர் மொழிபெயர்ப்பாளர்கள் வந்தனர், ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போதும் இருந்ததைப் போலவே, அவர்கள் சிறந்த அறிஞர்களாக இருந்தனர். அவர்கள் பல பெரிய புத்தகங்களைக் கொண்டு வந்தார்கள், அவர்கள் விவாதிக்கவும், தகராறு செய்யவும், வாதிடவும் தொடங்கினர். சூரியன் உதயமாகி விடிந்தது. ராஜாவுக்கு மிகவும் நம்பிக்கையான வேலைக்காரனாக இருந்த ஒரு முதியவர், அரசனிடம் வந்து, அவர் காதில் கிசுகிசுத்தார், “முட்டாள்தனமாக இருக்காதே! இந்த மக்கள் என்றென்றும் சண்டையிடுவார்கள், அவர்கள் எந்த முடிவுக்கும் வர மாட்டார்கள்.இப்போது, ​​எல்லோரும் அவருடைய விளக்கம் சரி என்று முயற்சித்தார்கள், மேலும் ராஜா முன்பை விட மிகவும் குழப்பமடைந்தார். எனவே அவர் முதியவரிடம், “அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அவர், “அவர்கள் தங்கள் விவாதங்களைத் தொடரட்டும். அவை அவ்வளவு சீக்கிரம் முடிவடையப் போவதில்லை - சூரியன் மறையும், ஏனென்றால் சூரியன் உதயமானதும் சூரிய அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லை. மாறாக, என் அறிவுரையை ஏற்றுக்கொண்டு தப்பித்துக்கொள்ளுங்கள் - குறைந்தபட்சம் இந்த அரண்மனையிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். வேறு எங்காவது இரு! மாலையில் முடிந்தவரை எங்காவது சென்றடையுங்கள். லாஜிக் சரியாகப் பார்த்தது. ராஜாவிடம் மிக வேகமான குதிரை இருந்தது, அது உலகிலேயே வேகமானது. அவர் விரைந்தார், அவர் தப்பினார். நூற்றுக்கணக்கான மைல்கள் அவர் கடந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட நகரத்தை அடைந்த நேரத்தில் சூரியன் மறையத் தொடங்கியது. அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் தனது குதிரையைத் தட்டினார், "நீங்கள் நன்றாக செய்தீர்கள். நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம்.” அவர் தனது குதிரையைத் தட்டிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று யாரோ தனக்குப் பின்னால் நிற்பதை உணர்ந்தார். அவன் திரும்பிப் பார்த்தான் - மரணத்தின் அதே நிழல். மேலும் மரணம் சிரிக்க ஆரம்பித்தது. அதற்கு அரசன், “என்ன விஷயம்? ஏன் சிரிக்கிறாய்?” மரணம் சொன்னது, “இந்த மரத்தடியில் நீங்கள் இறக்க நேரிட்டதால் நான் கவலைப்பட்டேன் - மேலும் நீங்கள் எப்படி அடைய முடியும் என்று நான் கவலைப்பட்டேன். உங்கள் குதிரை மிகவும் அருமை! அது நன்றாகவே செய்தது. நானும் உங்கள் குதிரையைத் தட்டுகிறேன். அதனால்தான் நான் உங்கள் கனவில் வந்தேன்: நீங்கள் அரண்மனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஏனென்றால் அது எப்படி நடக்கும், எப்படி அடைய முடியும் என்று நான் மிகவும் கவலைப்பட்டேன். அந்த இடம் வெகு தொலைவில் பார்த்தது, இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தது. ஆனால் உங்கள் குதிரை நன்றாக இருந்தது, நீங்கள் சரியான நேரத்தில் வந்துவிட்டீர்கள்.

நீங்கள் எங்கு சென்றாலும் மரணம் உங்களுக்காக காத்திருக்கும். எல்லாத் திசைகளிலும் மரணம் காத்திருக்கிறது. எல்லா இடங்களிலும் மரணம் காத்திருக்கிறது. எனவே, அதைத் தவிர்க்க முடியாது - பின்னர் மனம் அதைத் தவிர்க்க சில வழிகளைக் கற்பனை செய்யத் தொடங்குகிறது. 

ஒரு கை ஓசை

ஒரு கை ஓசை  பேசாலைதாஸ்

தியானம் கற்றுக் கொள்வதற்காக ஒரு இளந்துறவி ஜென்மகானிடம் வந்தார்.

மகான் சொன்னார் :

முதலில் ஒரு கை ஓசையின் மேல் தியானம் செய்.

இளந் துறவிக்கு குழப்பமாக போய்விட்டது. ஒரு கையில் எப்படி ஓசை வரும். இரு கைகள் சேர்ந்து தட்டினால் தானே ஓசை வரும்.

குழப்பத்தோடு மரத்தடியில் அமர்ந்து யோசிக்கலானார். ஒன்றும் புலப்படவில்லை -

திடீரென்று மூங்கில் காட்டிலிருந்து ஒரு பறவையின் கூக்குரல் கேட்டது. இதுவாக இருக்குமோ என்று மகானிடம் போய் சொன்னார்.

மகான் கோபத்தோடு அவரை முகத்தில் அடித்து,, முட்டாள் தனமாக பேசாதே,, போய் தியானம் செய் என்றார்.

மீண்டும் இளந்துறவி யோசிக்கலானார்.

ஒவ்வொரு நாள் ஒரு பதிலை கொண்டு போனார்.

மரங்களிடையே செல்லும் காற்றின் ஒலி,,

வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் ஒலி,,

வானில் தோன்றும் இடி முழக்கம்,,

இப்படி சொல்ல சொல்ல மகான் அவரை அடித்து போகச் சொன்னார்.

ஒரு கட்டத்தில் அவர் சொல்வதையே மகான் கேட்கவில்லை.

இளந் துறவிக்கு ஒரே வருத்தம். சொல்வதை கூட கேட்காமலேயே அடித்து துரத்துகிறாரே என்று மற்ற துறவிகளிடம் கூறி வருத்தப்பட்டார்.

திடீரென்று இளந் துறவி மகானை பார்க்க செல்லவில்லை. சில நாட்கள் கழிந்தன.

மகான் அவரைத் தேடி இளந்துறவி வழக்கமாக தியானம் செய்யும் மரத்தடிக்கு வந்தார்.

எல்லாவற்றையும் மறந்து இளந் துறவி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

அவரை உலுக்கி சுய நினைவு வரச் செய்து மகான் கேட்டார்.

கடைசியாக ஒரு கை ஓசையை கேட்டு விட்டாயா? இந்த மெளனம் தான் ஒரு கை ஓசை.ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை?

இளந் துறவி சொன்னார் :

இந்த மெளனத்தில் என்னை நான் மறந்து விட்டேன்.so Blissful,,so Sweet,,

இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது. ஏன் என் எந்த பதிலையும் கேட்காமல் என்னை அடித்து துரத்தினீர்கள் என்று.

உங்கள் அன்பையும் அக்கறையையும் சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி வணங்கினார்.

புதிய ஒளி

புதிய ஒளி பேசாலைதாஸ் 

எதைப் பற்றியும்  எனக்கு  இப்போதெல்லாம் எந்த ஆவலும் இல்லை. இது ஏன்?   பன்னிரண்டு  நூற்றாண்டுகளுக்கு  முன்பு, இதே போல,  ஓர் ஆத்ம ஞானப் பள்ளி  இருந்தது. அது மாபெரும்  சூபி ஞானி  மவ்லானா ஜலாலுதீன் ரூமி என்பவருடையது.  துருக்கி  மொழியில், 'மவ்லானா'  என்றால்,  'அன்புக் குரு' என்று அர்த்தம்.  அந்தச் சொல் வேறு யாருக்குமே அடைமொழியாகப் பயன்படுத்தப் படவில்லை.

அந்தக் குருகுலத்திற்கு முன்னால், 'இந்தப் பள்ளி ஆவல் கொள்கிறவர்க ளுக்கு ஆனதல்ல', என்று எழுதப்பட்டிருந்ததுஆவலுக்கு  எந்த  ஆன்மிக அர்த்தமும் இல்லை.

ஆவல் அல்லது  ஆச்சரியம்  மனதின்  நமைச்சல்.  நமைச்சல்  இருந்தாலும் அது இருக்கும்.  இல்லாவிட்டாலும்  அது இருக்கும்.

ஆவலுக்குள் உணர்ச்சி எதுவும்  இல்லை.  அது மேலோட்டமானது. போகிற போக்கில் ஒரு  விசாரிப்பு, ஒரு வினா எழலாம். அவ்வளவுதான்.  அது உங்கள் தாகம் அன்று; தவிப்பு அன்று. அந்த ஆவலை நிறைவேற்ற  உங்கள்  வாழ்வையே தியாகம் செய்ய மாட்டீர்கள்.  ஓர் ஆராய்ச்சி  கூடச் செய்ய முயல மாட்டீர்கள்.

ஆவல் மலிவானது, யாராவது பதில் சொன்னால் சரி. சொல்லாவிட்டாலும் சரிதான். ஆழ்ந்த கவனம் அதனால் உங்களுக்கு  ஏற்பட்டு விடுவதில்லை. .... அது இதயத்திலிருந்து  எழுவதல்ல. இருத்தலைப் பற்றிய உணர்வு மயமான விசாரணை  ஏற்படுவதற்கு முன்பே ஆவல் மறைந்துவிடும்.

அதனால், அது ஒரு மோசமான அடையாளமல்ல. நீ சரியான பாதையில் தான்  போகிறாய் என்பதைச் சுட்டிக்  காட்டும்  முக்கியமான  அடையாளம்.  சரியான பாதை ஆவல் கொள்கிறவர்களுக்குச் சொந்தமானதல்ல. ஈடுபாட்டுடன், உடன்பட்டு, உண்மையை உணர உயிரையும் தியாகம் செய்யத் தயாராக  இருப்பவர்க்கே  அந்தப் பாதை உரியது. ஆவல் மறைந்தவுடனே,  நீ வெறும்  மாணவனாக அல்லாமல், சீடனாக விடுகிறாய்.

ஒரு மாணவனுக்கும், சீடனுக்குமிடையிலுள்ள வேறுபாடு  இதுதான்.  மாணவனுக்கு  ஆவல் மட்டுமே உண்டு.  சும்மா, எல்லாத் தகவல்களையும்  சேகரிப்பது மட்டுமே. அது கட்டாயத் தேடல் அன்று.  தன் அறியாமையை  மறைக்க அறிவைத் தேடுவது மட்டுமே.

ஆனால்,  அறியாமை என்னவோ அங்கேயேதான் இருக்கிறது.  அதை மூட மூட ஆபத்தாகிறது. காரணம்,  அது உங்களுக்கு  மறந்து போய் விடுகிறது.   தனது அறியாமையை மறந்து போகிறவன் தொலைந்தான் என்றுதான்  சொல்ல வேண்டும்.

நமது அறியாமையை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பது, இரவு இன்னும்  முடியவில்லை, விடியல்  இனிமேல்தான் வரப் போகிறது என்று  அர்த்தம்.  இருள் கரைவதற்கு முன்பு  நீங்கள்  நீண்ட  தூரம்  போகிற வேண்டும்.  அப்போதுதான், விடியலின் முதல்  வெளிச்சத்தைப்  பார்க்க  முடியும்.  அப்புறம்தான் சகல கோலாகலங்களோடு கதிரவன் கீழ்வானில் உதயமாவான், அனைத்து  அழகுகளோடும்; ஆசிர்வதிப்புகளோடும்.

ஆவல் கொள்கிறவனிடம் எந்த ஆழமும் இல்லை. அறிய வேண்டும்  என்ற ஆர்வத் தவிப்பு, உணர்வு  மயமாக எழும்போது, அது, வாழ்வா சாவா என்பது  போலத்தான். அதை அறியாவிட்டால் வாழ்க்கை  பசுமையற்ற பாலைவனமாகி விடுமே என்று  தோன்றும். அறிந்தே ஆக வேண்டும்  என்ற  நிர்ப்பந்த உணர்வு  எழும். உணராவிட்டால் வாழ்வு பயனற்றது என்று  தோன்றும். அறிந்தால்தான் வாழ்வுக்கு அர்த்தமிருக்கும், முக்கியத்துவம்  இருக்குமென்று  தோன்றும்.

அந்தத் தவிப்பில் ஆழத்தில்  குதித்து  விடுவீர்கள்.  அப்படிப்பட்ட  ஒரு  கட்டம் வரும்.  அது அறிதல் மட்டுமல்ல. அதுவாக இருத்தலுக்கான தவிப்பு.

அறிவு எப்போதும் இருக்கவே செய்கிறது.  உங்களுக்கும்  அதற்குமான இடைவெளி  அதிகம். அவ்வளவுதான்.  அதனுடன்  நீங்கள்  சேர்ந்து  இருக்கவில்லை.  அறிபொருளிலிருந்து அறிபவன் பிரிந்திருக்கிறான். இதுதான் அறிவின் நிலைபாடு.  தண்ணீரும் இருக்கிறது. நீங்களும்  இருக்கிறீர்கள். தொடர்பு அம்சம்தான் இல்லை.  அதனால், தாகம் அதிகமாகி விடுகிறது.

ஒரு சீடனின் வாழ்வில், அறியும்  தாகத்தைத் கைவிட்டு,  இருத்தலுக்கான  தாகம் ஏற்படும் மாபெரும்  கணம் ஏற்படும்.

ஆவலுக்கு  ஆவல் தகவலில் மட்டுமே.

சீடனுக்கோ ஞானத்தில்தான் ஆசை.

பக்தனுக்கு  மாற்றத்தில்தான் விருப்பம். அவனுக்கு  உண்மை உணர்வதில் ஈடுபாடில்லை. அதில் நிறைவு ஏற்படுவதில்லை.  அவனே உண்மையாக ஆனால்தான்  உண்டு.

சொல் வறுமையால்தான், 'ஆனால் ' என்று  சொல்கிறேன். யாரும்  உண்மையாக ஆவதில்லை.  ஏனென்றால், எல்லாருமே உண்மையாகத்தான் இருக்கிறார்கள்.

உண்மை என்பது உங்களது இருப்பு. 'ஆகு‌ம் ' காரியமல்ல, அது. ஆகக்கூடிய காரியம்  அல்ல, அது.  வழிமுறையுமல்ல. பயணம் போகிற வேண்டிய பாதையும் அல்ல. நீங்கள்  சென்றடைய வேண்டிய தொலை தூரத்துக் குறிக்கோளும் அல்ல.

உண்மை உங்களது உள்ளிருப்பு. நீங்கள்  உணர்கிறீர்களோ இல்லையோ, எல்லையற்ற காலமாய் அது எப்போதும்  இருப்பது. நீங்கள்  அடையாளம் கண்டு கொள்கிறீர்களோ இல்லையோ, அது அங்கேயேதான்  இருக்கிறது.

ஒரு பக்தன் உண்மையாக ஆவதில்லை.  தானே உண்மை என்பதை அவன் கண்டு கொள்கிறான்.    மனிதப் பிரக்ஞையால் கண்டு பிடிக்கப்படும் மாபெரும் கண்டுபிடிப்பு அதுதான்.

அதனால்தான், எந்த ஆவலும்  இல்லையென்று நீ சொன்னதை நல்லது என்கிறேன். அது ஒரு பக்குவம். மாணவ நிலையிலிருந்து சீட நிலைக்கு மாறியதன் அடையாளம். நீ சீட நிலையிலிருந்தும் மாறிப் பக்தன் நிலைக்கு நகர்ந்து  விட்டாய்.

உன்னுடைய தாகம், உன்னுடைய  விசாரணை, இனி வரண்ட தேடல் அல்ல. அது  உன்னுடைய காதலாகிவிட்டது; உன் இதயத் துடிப்பாகி விட்டது. எல்லா ஆவல்களும் அதனால் இயல்பாகவே காணாமல்  போய் விட்டன.

ஒரு நாள்  -- உண்மையை அறிவதும், தெய்வீகத்தை அறிவதும், அழகை அறிவதுமான எல்லாம்  போய்விடும்.  அறிதலில் ஆர்வம் போய்விடும்.  தண்ணீரை அறிவதால் என்ன பயன்? அதை அறிவியல் பூர்வமாக அறிவதும்கூட -- நீரகம், தீயகம் கலந்ததென்று  -- உங்கள்  தாகத்தைத் தீர்க்காது.

அந்தப் பாதையின் முக்கியமான கட்டம், உங்களை அறிவதுதான்.  நீங்கள்  அதுவாகத்தான்  ஏற்கனவே இருந்து வருகிறீர்கள்.  அது தெரிகிறதோ இல்லையோ, நீங்கள்  ஆதாரபூர்வமான அதுதான்.  உங்கள்  அடிப்படை, சாரம், இருப்பு அதுவேதான். அதற்குள் இருப்பவையே ....

சத்தியம், சிவம், சுந்தரம்.

உங்கள்  உண்மையை உணரும் போதுதான்  தெய்வீகமும்,  எல்லையற்ற அழகும் எழும். உங்களது இருப்பு, தெய்விகத்தின் ஒரு பகுதி. அப்போது உங்களது ஒவ்வொரு அசைவும் ஒரு  நடனமாகும். உங்களது ஒவ்வொரு  மெளனமும் ஒரு பாடலாகும். உங்கள் சொற்கள் தீப்பற்றி எரியும்.  அது புதிய நெருப்பு. அது புதிய ஒளி -- உங்களுடைய வாழ்வு முழுதுமே காந்த சக்தியின் ஆற்றலாகி விடும்.

உளவாளிகள்

உளவாளிகள் பேசாலைதாஸ்

 சாத்தானிடம் வேலை பார்க்கும் ஒரு குட்டிப்பிசாசு சாத்தானைப் பார்க்க அரக்கப் பரக்க ஓடி வந்தது.

பயத்தால் நடுங்கியபடி சாத்தானைப் பார்த்து பேச ஆரம்பித்தது...

சாத்தானே ஆபத்து, ஆபத்து,,,

உடனே நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த உலகத்தில் தீமைகள் அழிந்துவிடும்.

நாமும் அழிந்து விடுவோம்.

குட்டிப்பிசாசே,,, உளறாமல் முதலில் விஷயத்தைச் சொல் "

"சாத்தானே "பூலோகத்தில் ஒரு மனிதன் அடிப்படை உண்மைகளை கண்டுபிடித்து விட்டானாம்.

அதனை அவன் எல்லோரிடமும் சொல்லி விடுவான்....

எல்லோருக்கும் உண்மை தெரிந்து விட்டால் அன்பு பெருகும்

தீமை அழிந்துவிடும்...

பிறகு அங்கே நமக்கென்ன வேலை?"

சாத்தான் கடகடவென்று சிரித்தது...

முட்டாள் பிசாசே,,,

முதலில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள்.

முட்டாள் தனமாக. எஎவும் பேசாதே.

விஷயம் எனக்கும் தெரியும்.

நமது ஆட்களை நான் ஏற்கனவே அங்கு அனுப்பி விட்டேன்...

இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

கவலைப்படாதே,,,,

தீமை என்றுமே அழியாது."

ஆனால்,,, ஆனால்,,, நான் அங்கிருந்துதானே நேரே இங்கே ஓடி வருகிறேன்....

அங்கே நமது ஆட்கள் யாரையும் நான் பார்க்கவில்லையே "

அந்த உண்மையைக் கண்டு பிடித்தவனைச் சுற்றி அறிஞர்கள், தத்துவஞானிகள், பண்டிதர்கள், பூசாரிகள், பாதிரியார்கள் . மதகுருமார்கள் நின்று கொண்டிருப்பார்களே?

அவர்கள் எல்லாம் நமது ஆட்கள்தான்...

அதனால் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்...

இந்த மேதாவிகள் போடும் வாய்ச் சண்டையில் இவர்களுடைய வாதங்கள், பிரதிவாதங்களில், இவர்கள் அடிக்கும் கூத்தில் உண்மை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடும்....

இவர்கள் மூலமாகத்தான் நான் என் ரகசிய வேலையைச் செய்கிறேன். அவர்கள் என்னுடைய ரகசிய பிரதிநிதிகள்....

என்னுடைய உளவாளிகள்.

நான் அங்கே போனாலும் கூட  மாறுவேடத்தில் தான் போவேன்...

இவர்கள் அடிக்கும் கூத்தில் அந்த ஞானியால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கும் வயதாகிவிட்டது..

அவர் காலம் முடிந்துவிடும்...

அதன் பின் என் ஆட்கள் அந்த ஞானியின் சீடர்களாக,

அவரது பிரதிநிதிகளாக,

அவரது தூதர்களாக தங்களை அறிவித்துக் கொண்டு அவர் பெயரால் ஒரு மதத்தை தொடங்கி அவர் கண்டுபிடித்த மெய்ஞானத்தை பூண்டோடு அழித்து விடுவார்கள்."..