Sunday, 27 June 2021

எல்லாம் மாயைதானா

எல்லாம் மாயை தானா?  பேசாலைதாஸ் 

எல்லாம் மாயை தானா என்ற தேவதாஸ் திரைப்படப்பாடலை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், யாக்கை நிலையாமை என்ற சித்தர்களின் தத்துவம் என் மனதில் தொற்றிக்கொள்ளும், இந்த பாடலுக்கும், இந்த திரைப்படத்திற்கும், என் சொந்த வாழ்வுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. தேவதாஸ் என்ற சமூக காதல் படம் 1958 களில் வெளி வந்தது. இதுதான் தமிழ் திரைப்படத்தின் முதலாவது சமூக காதல்  திரை ப்படம் என நினைக்கின்றேன். தீவிர திரைப்பட இரசிகரான என் அப்பா, இந்த திரைப்படத்தின் பெயரை, அதே ஆண்டில் பிறந்த எனக்கும் வைத்துவிட்டார். என்ன பொருத்தம் பாருங்கள், அதே திரைப்படத்தில், கதாநாயகனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வியும், அதன் விரக்தியும் பிற்காலத்தில் எனக்கும் ஏற்பட்டது.

                                                                           உலகே மாயம், வாழ்வே மாயம், நாம் காணும் சுகமே மாயம் என்று அவ்வப்போது நாம் விரக்கதியின் விளிம்பில் நிற்கும்போது எண்ணத்தோன்றுகின்றது. இந்த எண்ணம் நியாயமானதா என சிந்தித்தால், விடை இல்லை என்று தான் சொல்லமுடியும், வாழ்வே மாயம் என்றால், இயற்கையான இறைவன் அதை மனிதனுக்கு தந்திருக்க மாட்டார். மானிட உடல் தான் மாயை, அது மண்ணில் எடுக்கப்பட்டு, பெண்ணில் வைக்கப்பட்ட ஒரு பிண்டம். அது அழிவுக்கு உட்பட்டது என்பது இயற்கையின் தத்துவம், ஆனால் கெட்டுப்போகும் பாலுக்குள் எண்ணெய் ஒழிந்திருப்பது போல, கெட்டுப்போக ஆயத்தமாக் இருக்கும், இந்த உடலுக் குள் என்றுமே கெட்டுப்போகாதா,என்றுமே அழிவுறாத ஆன்மா இருக்கி ன்றது. அதை காத்துக்கொள்வதே வாழ்வின் மிகப்பெரும் உண்மை!

மாயைக்கும் முக்திக்கும் இடையில் மனித வாழ்வு, பயணிக்கின்றது,  மாயையும்  முக்தியும், இந்த இரண்டுக்கும் இடையே நாம் போராடு கிறோம் ஏன்.....??? ஏனெனில்......

நமக்கு உள்ளேயிருந்து ஏதோ ஒரு குரல் "நான் சுதந்திரன், நான் சுதந்திரன்"

என்று சொல்கிறது

ஆனால் , அந்தச் சுதந்திரத்தை உணா்வதற்கு

வெளிப்படுத்துவதற்கும் முயன்றாலோ

அல்லது கடக்க முடியாத கஷ்டங்கள் நம்மை எதிா்நோக்கி நிற்கின்றன

இந்த கஷ்டங்களை மீறி , உள்ளே இருக்கும் அந்த குரல் 

"நான் சுதந்திரன்

நான் சுதந்திரன்" என்று ஆணித்தரமாகச்

சொல்லிக் கொண்டேயிருக்கின்றன

அந்த குரல் ஒலித்து கொண்டே இருக்கிறத

ஆம், அந்த குரலின் அழைப்பை ஏற்று தான் நாம் இங்கே பிறந்திருக்கிறோம்

நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும்

நாம் எல்லோருமே அந்த குரலைப் பின்பற்றி சுதந்திரத்தை நோக்கியே விரைந்து சென்று கொண்டிருக்கிறோம்

அந்த குரலை அறிந்து

அது என்னவென்று

புரிந்து கொண்ட பிறகு

காட்சி அடியோடு மாறுகிறது

மாயையின் கொடூரமான போா்க்களமாக இருந்த அதே உலகம் நல்லதாக அழகியதாக

மாறிவிடுகிறது 

அதன் பின் நாம் இயற்கையை சபிப்பதில்லை

உலகம் கொடியது, எல்லாம் வீண் என்று சொல்லதில்லை

அதன்பின் நாம் கதற வேண்டிய அவசியம் இல்லை

அந்த குரலை புாிந்து கொண்டவுடன்

இந்த போராட்டம், சண்டை, போட்டி, துன்பம், இன்பம், கொடுமை, அற்ப சந்தோஷங்கள், மகிழ்ச்சி 

இவையெல்லாம் பிரபஞ்சத்தில் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான காரணம்

நமக்கு தெரிந்து விடுகிறது

பொருட்களின் இயல்பே அது தான் என்பது நமக்குத் தெரிகிறது

பிறகு என்ன......???

ரிஷிகள் பிரபஞ்சம் முழுவதும் தேடிய இறைவன் நம்முடைய இதயங்களிலேயே இருக்கிறார்கள்

நீங்கள் கேட்ட குரல் சாிதான்

உங்கள் சுதந்திரமே உங்களது சொந்த இயல்பு

மாயை ஒரு போதும் உங்களை கட்டவே இல்லை

இயற்கை உங்கள் கழுத்தை நொிப்பதாகக் கனவு கண்டு 

நீங்கள் குழந்தையை போல பயந்தீா்கள்

உங்கள் குறிக்கோள் இந்த பயத்திலிருந்து விடுபடுவது தான்

இந்த குறிக்கோளை அறிவுபூர்வமாக மட்டுமில்லாமல்  

உண்மையிலேயே பாா்த்து, இந்த உலகத்தை உணா்வதை விட நிச்சயமாக அதை நாம் உணர வேண்டும் 

அப்போது தான் நாம் சுதந்திரா்கள் என்பதை

உணா்வோம்

அப்போது, அப்போது மட்டுமே எல்லா துன்பங்களும் மறையும்

அப்போது தான், இதயத்திலுள்ள குழப்பங்களெல்லாம் நீங்கி இதயம் அமைதி பெரும்

எல்லா கோணல்களும் நேர் ஆக்கப்படும்

பல்வேறு வெளிப்பாடுகள், மனமயக்கம் எல்லாம் 

மறையும்

மாயை இப்போது இருப்பது போல பயங்கர கனவாக இல்லாமல்

அழகு மிகுந்ததாக மாறிவிடும்

இந்த பூமி இப்போது உள்ளதை போல் சிறைச்சாலையாக இல்லாமல் 

விளையாட்டு மைதானமாக மாறிவிடும்

அபாயங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் தெய்வீகமாகித் 

தங்கள் உண்மை இயல்பை நமக்கு காட்டும்

எல்லாவற்றின் உள்ளும் புறமுமாக நிற்பது

ஒரே உண்மைப் பரம்பொருள் தான் என்பதை 

அப்போது தான் நாம் உணா்வோம்

Saturday, 29 May 2021

மீன் விற்கப்படும்

 உடனே ' ' இங்கு ' ' என்ற வார்த்தை அழிக்கப்பட்டது .

 இப்போது அந்தப் பலகையில் , ' ' மீன் விற்கப்படும் ' ' என்று இருந்தது .........

#மூன்றாவது நாள் வேறொரு வாடிக்கையாளர் கடைக்கு வந்தார் .

 ' ' மீன் விற்கப்படும் ' ' என்பதைப் பார்த்து , ' ' விற்கப்படும் என்பது ஏன் ?

 யாராவது மீனை சும்மா கொடுப்பார்களா ? ' ' என்று கேட்டார் .

 உடனே ' ' விற்கப்படும் ' ' என்ற வார்த்தை அகற்றப்பட்டது .

 இப்போது ' ' மீன் ' ' என்கிற ஒரே வார்த்தை மட்டுமே இருந்தது .

ஒரு வயதானவன் கடைக்கு வந்தான் .

 கடைக்காரனிடம் . ' ' மீனா ? ' ' ஒரு குருடன் கூட இங்கு மீன் விற்கப்படுகிறது என்பதை தூரத்தில் வரும்போதே அறிந்து கொள்வானே ' ' என்று கேட்டான் . 

உடனே ' ' மீன் ' ' என்னும் வார்த்தையும் அகற்றப்பட்டது . 

இப்போது அது வெறும் பலகையாக இருந்தது .

அப்போது அந்தப் பக்கமாகப் போனவன் ஒருவன் ' ' ஏன் இந்த வெறும் பலகை ? ' ' என்று கேட்டான் . 

அதனால் அந்தப் பலகையும் நீக்கப்பட்டது . 

எனவே ஒவ்வொன்றாக அகற்றிய பின் ஒன்றும் இருக்காது . 

ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு வார்த்தையாக அகற்றப்பட்டது .

 இப்போது அங்கு மீதமிருப்பது ஒன்றும் இல்லை . 

வெறும் வெறுமைதான் .

அன்பு என்பதும் இப்படிப்பட்ட வெறுமையில்தான் பிறக்க முடியும் .

 ஒன்றுமில்லாத ஒன்றுதான் .

 ஒன்றுமில்லாத மற்றொன்றிடம் கூடிக் கலக்க முடியும் . 

ஒரு பூஜ்யம்தான் மற்றொரு பூஜ்யத்துடன் முழுமையாக இணைய முடியும் இரண்டு தனிமனிதர்கள் அல்ல .

 இரண்டு வெற்றிடங்கள்தான் சந்திக்க முடியும் . ஏனெனில் வெற்றிடத்தில் தடைகள் ஏதும் இருப்பதில்லை .

 மற்றவையெல்லாம் சுவர்களைக் கொண்டுள்ளன .

 ஆனால் வெற்றிடத்தில் ஒன்றும் கிடையாது .

எனவே நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் : 

அன்பு என்பது தனிமனிதத்தன்மைகளான ' ' நான் ' ' என்பதும் ' ' அவன் அடுத்தவன் ' ' என்பதும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிறக்கும் .

 அப்போது எஞ்சியிருப்பதெல்லாம் , நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாம்தான் , எல்லையில்லாத அந்த தன்மைதானே தவிர ' ' நான் ' ' என்பதல்ல . 

அந்த நிலையை அடையும்போது எல்லாத் தடைகளும் பொடிப் பொடியாகி ஏற்கனவே நம்முள் தயாராக இருக்கும் கங்கையின் திடீர்ப் பாய்ச்சல் ஏற்பட்டுவிடும் .

நாம் ஒரு கிணறு வெட்டுகிறோம் .

 தண்ணீர் ஏற்கனவே பூமிக்குள் உள்ளது . 

அதை நீங்கள் வேறு எங்கிருந்தும் கொண்டு வர வேண்டியதில்லை .

 நாம் வெறுமனே மணலையும் , கற்களையும் தோண்டி அவற்றை அப்புறப்படுத்துகிறோம் . 

நாம் செய்யும் இந்தச் செயல் என்ன ?

 பூமிக்குள் மறைந்திருக்கும் தண்ணீர் வெளிவருவதற்கான ஒரு இடத்தை , அந்தத் தண்ணீர் தன்னைப் பிறருக்கு காட்டிக் கொள்வதற்கான ஒரு இடத்தை , ஒரு வெற்றிடத்தைத்தான் நாம் உருவாக்குகிறோம் .

 உள்ளே இருக்கும் தண்ணீர் வெளிப்படுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது . 

அது இதுவரை பெறமுடியாத ஒரு வெற்றிடத்திற்காக ஏங்குகிறது .

 அப்போதுதான் அது வெளியே வர முடியும் . 

அப்போதுதான் அது பீறிட்டுக் கிளம்ப முடியும் . 

ஒரு கிணற்றில் முழுவதும் கற்களும் , மணலும் நிறைந்திருந்தால் , அந்த மணலையும் , கற்களையும் அப்புறப்படுத்தும் அந்தக் கணமே தண்ணீரானது மேலெழுந்து வரும் .

 அதே போன்றுதான் மனிதனும் தனக்குள் அன்பு நிறைந்தவனாக இருக்கிறான் . 

இப்போது அந்த அன்பு மேலெழுந்து வருவதற்கு ஒரு இடம் தேவை .

 உங்களது உள்ளமும் ஆன்மாவும் எதுவரை ' ' நான் ' ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ , அதுவரை நீங்களும் மணலும் , கற்களும் , நிறைந்த ஒரு கிணற்றைப் போன்றவர்கள்தான் ,

 அன்பு என்னும் ஊற்று உங்களில் இருந்து மேலே கொப்பளித்துக் கிளம்பாது 

படுக்கையும் பரம்பொருளும்,,,,

படுக்கையும் பரம்பொருளும்  பேசாலைதாஸ் 

மனிதர்களுக்கு மட்டுமே உடலுறவு கொள்ள தனியறையாக படுக்கையறை அவசியமாகிறது.....!

அந்த அறையில் சுகம் காணும் வேளையினை நீட்டித்து  ஈறுடல் ஓருடலாகி  அதுவும் மறைந்து உடலற்ற வண்ணமாகி  ஆன்மாவாக மலர்ந்து  கடவுள் தன்மைக்கு புகும்  நுட்பம் தந்திராவில்  உள்ளது.......!

ஓர் ஆண் என்பவன்

 100 % முழுதும் ஆண் தன்மைக்குள் அடங்குபவன் இல்லை. முக்கால் பாதி ஆண் தன்மையும் கால் பாதி பெண் தன்மையும் அடங்கிய உருவம்.....!

ஒரு பெண் என்பவள் 100% முழுதும் பெண் தன்மைக்குள்  அடங்கிய  உருவம் இல்லை. 

முக்கால் பாதி பெண் தன்மையும் கால் பாதி ஆண் தன்மையும்  அடங்கிய உருவம்.....!

ஆண்  தன்னிடம் குறையாகவுள்ள கால் பாதியை பெண்ணிடமும் , பெண்  தன்னிடம் குறையாகவுள்ள  கால் பாதியை ஆணிடமும் ஈர்த்து கோர்த்து முழுமையடைய முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்......!

இதுவே இனக்கவர்ச்சி எனப்படுகிறது.

 இந்த  காம சக்தியே ஆண் பெண்  உயிரினங்களின் ஈர்ப்பு சக்தியாக இயற்கை வித்திட்ட அற்புதம்  என்று நம் முன்னோர்கள் அறிந்தனர். இதுவே இனப்பெருக்க வளர்ச்சியின் ரகசியம்  என்றும் அறிந்தனர்....!

ஆணும் பெண்ணும் காமத்தில் ஈடுபடும் போது உச்ச நிலையில் அவர்கள் ஆணுமற்ற மற்றும்  பெண்ணுமற்ற நிலைக்கு செல்கிறார்கள். ஏனென்றால் அங்கே ஓருவரின் முக்கால் பாதியும் மற்றவரின் கால் பாதியும் ஒன்றாக சங்கமிக்கிறது......!

அதுவே அர்த்தனரீஸ்வர நிலையாகும்.

 யாரை பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றை ஒன்றில் அடங்க...  உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி என்று பாடல் வரிகள் கூட நினைவுக்கு வரலாம்....!

அந்த வேளையில் அவர்கள் தன்னை மறந்து தன் தேகம் மறந்து வேதியியல் மாற்றமும் அடைந்து காம போதை தலைக்கு ஏறி  எதுவுமற்ற நிலைக்கு செல்கிறார்கள்......!

பிரபஞ்சம் தோன்றும் போது முதலில் தோன்றியது காம சக்தி என்று வேத நூல்கள் சொல்கிறது.....!

வத்ஸாயனர் தாம் எழுதிய காம சூத்ரா வை எழுத தொடங்கும் முன் கடவுள் வாழ்த்தாக காம சக்தியை வணங்கி  தொடங்கினார் என்று வரலாறு கூறுகிறது....!

இந்த காம சக்தியை ஆன்மீகத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று நம் முன்னோர்கள் ஆராய்ந்து அதில் தந்திரா என்ற நுட்பத்தை கண்டறிந்தனர்.....!

காமத்தில் தோன்றும் இந்த பரவசம் மின்னல் கீற்று போல ஓரிரு நிமிடங்கள் தோன்றி மறைகிறது.அந்த பரவச இன்பத்தை பகலில் பரவும் சூரிய வெளிச்சம் போல எப்போதும் பிரகாசித்த வண்ணம் மிளிர வைக்கும் நுட்பமே தந்திராவில் செயல்படுத்தப்படுகிறது......!

தந்திராவில் ஈடுபடும் போது தன்னுணர்வில் இருந்து இடம் பெயர்ந்து விழுப்புணர்வில் நிலைத்து ஆண் பெண் சக்தி எழும்பி ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பாயும் சக்தி ஓட்டத்தை  சண்டைக்குள் புகாமல் சாட்சியாக நின்று பார்ப்பவர் போல சாக்ஷி  பாவனையில்  பரவசம் கண்டு அனுபவிக்கலாம்....!

தந்திராவில் ஈடுபடும் போது அனுபவிப்பவர் என்ற  நிலையிலிருந்து விலகி வெறும் பார்ப்பவர் என்ற நிலைக்கு  மாறிவிடும் தன்மை அடையலாம்.....!

தொடக்கத்தில் உடலில் தொடங்கினாலும்  முடிவில் தந்திராவில் உடலற்ற நிலைக்கு  செல்லமுடிகிறது.  உடலில் தொடங்கி உடலற்ற நிலைக்கு  செல்வதே தந்திராவின் இலக்காகும்.....!

 தந்திராவில் 

காம சக்தியை  மேலேற்றி ஞானத்தின் நுழைவாயில் சென்று  ஆத்மசக்தியை முடுக்கி விடுகிறோம்.....!

செந்தாமரை தண்டு சேற்றில் விளைந்தாலும் விண்ணில் மேலேறி தாமரையாக உருமாறி  மலர்கிறது அல்லவா?

அதுபோல காமத்தில் கசடாக தொடங்கினாலும் தந்திராவில் கங்கையாக உருமாறி புனிதம் பெறுகிறது......!

கீழான நிலையில் காமம் தொடங்கினாலும் தந்திராவில் சிகரத்தின் உச்சியாக உரு மாறி உசத்தி அடைகிறது......!

சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை எனபது தவறு. கலை என்றாலே கற்று தான்  அதில் உள்ள நுணுக்கங்களையும் , நுட்பங்களையும் , அதற்கான உத்திகளையும்  கற்று நிபுணத்துவனாக முடியும். தந்திராவும் ஓர் கலை தான்......!

ஓர் இடத்திற்கு செல்வதற்கு பல வழிகளில் செல்லாம்.  கார் , பஸ், ரயில் என்று.  அது மற்ற தியான முறையை கையாளும் போது என்றால்   தந்திராவில் பயணிப்பது ஒரு விமானத்தில் செல்வது போல ஆகும்.

கரும்பு தின்ன கூலி எனும் போது சொல்லவா வேண்டும் .....!

தந்திரா வை இந்த உலகில் முழுமையாக கற்றவரகள்  ஒரு சில பேர் மட்டுமே.....!

அதை உலகத்திற்கு அறிமுக படுத்தி முறையாக கற்று தருபவர்கள் யார் என்று தேடினால் கிடைப்பது கடினம்.....!

ஆனந்தமாயிறுக்க ஒரு வழியுண்டு

ஆனந்தமாயிறுக்க ஒரு வழியுண்டு  பேசாலைதாஸ் 

சீன ஞானி கன்பூசியசிடம் ஒரு சீடர்,''ஆனந்தமாயிருக்க ஒரு வழி சொல்லுங்கள்,குருவே,'' என்று கேட்டுக் கொண்டான். 

அதற்கு  கன்பூசியஸ்   

''உன் கேள்வியே விநோதமாக இருக்கிறது. 

எந்த ரோஜாவும், தான் ரோஜாவாக என்ன வழி என்று கேட்பதில்லை'' என்றார்.

உங்களுக்குள் ஆனந்தம் எப்போதும் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

 ஆனால் மனிதன் தன் அறியாமையினால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான். 

அவ்வாறு தடுக்காமலிருக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் பொங்கிக் கொண்டே இருக்கும்.

ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்ட போது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபடத் தொடங்கினர்.

ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.

அவரை அனைவரும் பைத்தியம் என்று கேலி பேசினர். 

அந்த ஞானி சொன்னார்,'' எனக்குக் கடவுளிடம் எந்த வியாபாரமும் இல்லை.

நம்மைக் காப்பாற்ற வேண்டுமா, மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. 

அது என்னுடைய கவலை இல்லை. 

நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.

திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன்.

 ஆகவே, மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது.

எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ, மரணத்தை  மட்டும் எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்?

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே! பேசாலைதாஸ் 

சிந்தனை செய் மனமே என்று ஞானிகள், மத போதகர்கள் வலியுறுத்துகி ன்றார்கள், ஆனால் மனம் சிந்தனை செய்ய தொடங்கும்போது, பல நிந்தனைகள் மனதில் சூறாவளியாக சூழ்ந்துகொள்கின்றது. மனிதர்க ளால், மனித உறவுக ளினால், புறக்கணிக்கப்படுகின்றோம் என மனம் கறத்தொடங்குகின்றது. யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்...?யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......???

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா..? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து, நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன், அது மனதின் வேலை  உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பது ண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக் கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை. சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது 

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக் கிறது . அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது கூழாங்கற் களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை. வைரத்தின் புறக்கணிப்பு வலி யைத் தருகிறது. இது மனதின்  "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத் தினால் விளைவது 

அந்த மனப்பான்மையினால். பிறரை உயர்வாகக் கருதும்போது. உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய். பிறரைத் தாழ்வாகக் கருதும்போது. உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய். உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. உன்னை உயர்வாகக் கருதும் தருண த்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகி றது

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு - தாழ்வு ஏதுமில்லை. சிறு புல் லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன ஆக  இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை. தியானம் செய் . இயற்கையை நேசி வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார் 

இது இயல்பே என எண்ணு, வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை . அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது அது போல் இயல்பாய் கடமையைச் செய். எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்,,,,,,,,,,,,,, அன்புடன் பேசாலைதாஸ்

Sunday, 23 May 2021

 மரணம் என்ற அம்பு  பேசாலைதாஸ் 


நாம் எப்போது இந்த உலகத்தில், தாயின் கருவறையில் இருந்து வந்தோமோ அப்போதே மரணம் என்கின்ற அம்பு இயற்கையால் நம் உடல் மீது பாய்ந்துவிட்டது, அது எப்போது உருவி எடுக்கப்படுகின்றதோ அப்போது உடலைவிட்டு உயிர்பிரியும், இதை உணராது நாம் வெறும் அந்தையிலும் அகம்பாவாத்திலும் வாழ்கின்றோம். புத்தர் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது. புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.

புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.

அவன் உயிருக்குப் போராடுகிறான். அவன் ஒரு தத்துவவாதி. புத்தர் அவனிடம் "இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும். அதை எடுப்பதற்கு என்னை அனுமதி"என்று கேட்டார்.

அந்த மனிதன் "கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்? எனது விரோதி யார்? இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது? என்ன கர்மத்தின் பலன் இது? இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.

அதைக்கேட்ட புத்தர் "விசாரணையை நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு. ஏனெனில் நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய். முதலில் இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால் நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று பதில் கூறினார்.

இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கூறுவது என்ன?

நாம் அனைவரும் சாவின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம். மரணத்தின் அம்பு உன்னை ஏற்கனவே துளைத்து விட்டது. நீ அதை அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம். மரணத்தின் அம்பு ஏற்கனவே ஊடுருவி விட்டது.

அம்பு கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கஷ்டம் இருக்கும். நீ படும் துன்பம் மரணத்தின் அம்பு உனக்குள் ஊடுருவிச் சென்று விட்டதாகக் காட்டுகிறது.

எனவே, "இந்த உலகைப் படைத்தது யார்? ஏன் படைத்தான்? நான் ஏன் படைக்கப்பட்டேன்? எனக்குப் பல பிறவிகள் உண்டா? அல்லது ஒரு பிறவிதானா? நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?" என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.

அதனால்தான் புத்தர், "பிறகு விசாரணை செய்து கொள். முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு வெளியே எடுக்கப் படட்டும்"என்று கூறுகிறார்.

மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே, "இந்த அம்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும் நான் ஒருபோதும் கண்டதில்லை." என்று கூறினார்.  அன்புடன் பேசாலைதாஸ்

Wednesday, 19 May 2021

கடவுள் உண்மையிலே இருக்கிறாரா ?

 கடவுள் உண்மையிலே இருக்கிறாரா ? 


இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது !

மின்சாரம் என்றால் என்ன , உயிர் என்றால் என்ன , மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது , இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு யாராவது ' இதுதான் ' என்று முடிவாக நிரூபிக்க முடிந்தால் , கடவுள் உண்டா , இல்லையா என்பதையும் நிரூபிக்க முடியும் !

மேற்சொல்லியவற்றை சற்று ஆழ்ந்து பாருங்கள் . எல்லாமே இயக்கம்தான் ( Process ) ! 

எதுவுமே ஒரு பொருளாகக் ( Objcet ) கிடையாது .

ஆகவே கடவுள் என்பதும் ஒரு இயக்கம்தான் . 

அது உயிரற்ற பொருள்களில் ( Inanimate Objects ) உறக்கமாக இருக்கிறது .

உயிர்ப் பொருள்களில் ( Animate Objects ) உயிராக - பிரக்ஞையாக - உணர்வாக - சக்தியாக இருக்கிறது .

இயக்கம் என்று வரும்பொழுது , மேடு , பள்ளம் ; இன்பம் , துன்பம் ; பகல் , இருட்டு ; ஆண் - பெண் ....... என்று மாறுபட்டு இயங்குகிறது .

அப்பொழுதுதான் அது ஒரு இயக்கமாக இருக்க முடியும் .

ஆகவேதான் நான் உங்கள் உள்ளே உள்ள உயிர்த்தன்மையை வணங்குங்கள் என்று கூறுகிறேன் .

கடவுள் உங்களுக்குள்ளே - உங்களோடு மிக நெருக்கமாக இருக்கிறார் . 

அதை நீங்கள் வெளியே தேடுவது முட்டாள் தனமில்லையா ? 

மதவாதிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள் !

ஆகவே , கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஒரு செயலோடு , அது சம்பந்தப்படும் பொழுதுதான் தெரியும் .

மின்சாரம் இருப்பதற்கு ஆதாரம் , அது செயல்வடிவம் பெறும்பொழுதுதான் விளங்கும் , - (டிவி , ரேடியோ , மோட்டார் ஓடுதல் .....)

கடவுள் உங்களிடம் உணர்வாக ( Consciousness ) இருக்கிறார் . 

ஹெய்சென்பெர்க் ( Heisenbergh ) என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின் , ' நிலையாமைத் தத்துவம் ' ( Unerfainity Principle ) பற்றி உங்களுக்குத் தெரியுமா ? 

அவர் கூறுவது . " அணுவில் உள்ள மூலக்கூறுகள் ஒருசமயம் பொருளாகவும் , மறுசமயம் அலையாகவும் இன்னொரு சமயம் பொருளாகவும் அலையாகவும் , மறுசமயம் எதுவுமே இல்லாமலும் ( Nothing ! ) இருக்கிறது " என்று கூறுகிறார் .

இதுவே கடவுள் தத்துவத்திற்கும் பொருந்தும் ! 

கடவுள் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறார் . அதனால்தான் மனிதன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான் !

இதில் புத்தர் அந்த ஒன்றுமற்ற தன்மையை ( The Great Nothing ) வற்புறுத்துகிறார் ! மதங்கள் பொருள்களை வலியுறுத்துகின்றன .

ஆத்திகர்கள் ! யோகிகளும் , ஞானிகளும் அலையை வற்புறுத்துகிறார்கள் . 

*நாத்திகன் , அலையையும் - பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்* .

இதை ஆழ்ந்து புரிந்துகொண்ட ஒருவன் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு , தன் வாழ்நாளை வீண்டிக்க மாட்டான் ! 

மனிதன் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதே ஒருவருக்கொருவர் அன்பும் , கருணையும் கொண்டு உதவி செய்துகொண்டு , ஆனந்தமாகச் சிரித்து வாழவே ! வேறு எதற்காகவும் இல்லை .

பிறகு அவன் தன்னைத்தானே அறிந்துகொண்டு , ஞானத்தை அடைய வேண்டும் . "

கேள்வி : - கோவில்களுக்குச் செல்வது நல்லதா , கெட்டதா ?

பதில் : - நல்லது , கெட்டது , நம்பிக்கை எல்லாம் ஒரு தனிமனிதனைப் பொறுத்த விஷயம் . 

என்னைப் பொறுத்தவரையில் சாதாரண மக்களுக்கு , இது ஒரு பொய்யான ஆறுதல் தரும் கூடம் ! மற்றபடி இதனால் எந்த நன்மையும் இல்லை . ஆனால் பல பேர் இதை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள் . பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள் .

*உங்களால் , அந்தச் சிலையை ஒரு அன்பு உருவமாகப் பார்க்க முடிந்தால் , ( ராமகிருஷ்ணரைப்போல ) உங்களால் பக்தி யோகத்தில் முன்னேற முடியும் .*

ஆனால் இப்படிப் பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? அந்த மனப்பக்குவம் யாரிடம் இருக்கிறது ?

கோவிலுக்குப் போகும் 100 - க்கு 99 பேர்கள் , ' எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் ' என்று வேண்டிக்கொள்ளத்தான் போகிறார்கள் .

அதாவது " வேண்டிக்கொள்ள ! " கைமாறாக , காசு போடுகிறேன் , தலை முடியைக் கொடுக்கிறேன் என்று வேறு வியாபாரம் ! 

இதுதான் ஆன்மீகமா ?

ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் . நீங்கள் வேண்டிக் கொள்ளுவது உங்களிடமேதான் ! 

அதாவது எதிரே உள்ள சிலையை முன்னிறுத்தி , உங்கள் உயிர்தன்மையிடம் , உங்கள் தெய்வீகத்தன்மையிடம்தான் வேண்டிக்கொள்கிறீர்கள் ! 



போதி தர்மர் தன் வாரிசை தேர்ந்தெடுத்தல்

 போதி தர்மர் தன் வாரிசை தேர்ந்தெடுத்தல்

❤
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, போதிதர்மா மீண்டும் இந்தியாவுக்கு வந்தபோது, ​​ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய சீடர்களாகிவிட்டனர். அவர்களில் நான்கு பேரை இறுதி சோதனைக்கு அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
ஏனென்றால் அந்த நான்கு பேரில் ஒருவர் சீனாவில் தனது பணியைத் தொடர அவரது வாரிசாக தேர்வு செய்யப்படுவார்.
ஆயிரக்கணக்கான சீடர்கள் அங்கே அமர்ந்திருந்தாலும் பெரும் மௌனம் மட்டுமே அங்கு இருந்தது. அந்த நான்கு பேரும் அதற்கு தகுதியானவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால் யார் மிகவும் தகுதியானவர்கள் என்று சொல்வது மிகவும் கடினம்
போதிதர்மா முதல் மனிதரிடம், “ஞானத்தின் சாரத்தைச் சொல்லுங்கள்” என்று கேட்டார்.
அந்த மனிதன், “ஞானத்தின் சாராம்சம் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்றார்.
போதிதர்மா, ”உங்களிடம் என் சதை இருக்கிறது, ஆனால் சதை மிகவும் ஆழமாக இல்லை. நீங்கள் என் வாரிசாக தேர்வு செய்யப்படவில்லை. நீங்கள் கூறியது சத்தியத்தின் தொலைதூர எதிரொலியைக் கொண்டுள்ளது, ஆனால் அது ஒரு எதிரொலியாகும். ”
அவர் இரண்டாவது சீடரிடம், ”நீங்கள் சொல்லுங்கள் ஞானத்தின் சாராம்சம் என்ன?” என்று கேட்டார்.
அவர் கூறினார், ”ஞானத்தின் சாராம்சம் தியானம், முற்றிலும் அமைதியாக இருப்பது.”
போதிதர்மா, ”உங்களிடம் என் எலும்புகள் உள்ளன, ஆனால் நீங்கள் என்னிடம் இல்லை. நீங்கள் என் வாரிசாக இருக்க முடியாது. ”
அவர் மூன்றாவது மனிதனிடம் திரும்பி, அதே கேள்வியைக் கேட்டார், "ஞானத்தின் சாராம்சம் என்ன?"
மூன்றாவது நபர், "ஞானத்தின் சாராம்சம் என்னவென்றால், உங்கள் திறனை அதன் இறுதி உண்மைக்கு கொண்டு வருவதும், மலருவதும், உங்கள் இருப்புக்கு பூக்களைக் கொண்டுவருவதும் ஆகும்."
போதிதர்மா, ”உங்களிடம் என் மஜ்ஜை இருக்கிறது, ஆனால் இன்னும் நீங்கள் என் வாரிசாக இருக்க முடியாது. நீங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள், ஆனால் நெருக்கம் கூட ஒரு தூரம். ”
அவர் நான்காவது மனிதரிடம் திரும்பினார், அதே கேள்வியைக் கேட்டார். நான்காவது மனிதனின் கண்களில் கண்ணீர் இருந்தது, அவர் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போதிதர்மாவின் காலடியில் சரிந்தார்.
போதிதர்மா, ”உங்கள் மௌனம் எனக்கு புரிகிறது. ஆனால் இந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அது புரியாது. உங்கள் அனுபவத்தை வார்த்தைகளாக கொண்டு வர வேண்டும். சொல்!"
கண்ணீருடன் அந்த மனிதன், “எனக்குத் தெரியாது” என்றார்.
மேலும் போதிதர்மா, ”நீங்கள் என் வாரிசாகப் போகிறீர்கள், ஏனென்றால்‘ எனக்குத் தெரியாது ’என்று சொல்லக்கூடிய நபர் ஏற்கனவே ஞான ஆலயத்தின் வாசலை அடைந்துவிட்டார்.
அவர் ஏற்கனவே வாசலில் நிற்கிறார். அவரது அப்பாவித்தனம், அவர் அறியாதது, தெரிந்து கொள்வதற்கான ஆரம்பம். ”
ஒரு உண்மையான குரு உலகம் முழுவதையும் கண்டிக்கப் போகிறார், அவர் உங்களுக்கு எதையும் கொடுக்கவில்லை மாறாக, அவர் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்.
ஒரு குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நிலையில் அவர் உங்களை முற்றிலும் நிர்வாணமாக விட்டுவிடுகிறார். அங்கிருந்துதான் உங்கள் உண்மையான வளர்ச்சி தொடங்குகிறது. அங்கிருந்துதான் உண்மையான ஆரம்பம்.
ஞானத்தை விட பெரியது எது? ஞானத்தை விட அப்பாவித்தனம் பெரியது, ஏனென்றால் ஞானம் என்பது வெற்று வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமே.
அப்பாவித்தனம் என்பது உங்கள் முழு இருப்பின் மாற்றமாகும்,
நீங்கள் எல்லா தூசுகளையும் சுத்தம் செய்வது போல - நீங்கள் ஒரு குளியல் எடுத்துவிட்டீர்கள்.
அப்பாவித்தனத்தின் புத்துணர்ச்சி, அப்பாவித்தனத்தின் இளமை, மெதுவாக மெதுவாக ஆழமடைந்து, உங்கள் அழியாத தன்மையைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது.

Sunday, 16 May 2021

மரணத்தை மறக்காதே

 மரணத்தை மறக்காதே

.
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும்.
ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். “என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா”
நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது.” என்று கேட்டு அலைந்து திரிந்தாள்.
இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ‘ நான் இறந்து விட்டாலும்கூட………. நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.’ அப்படிப்பட்ட பொறாமை…. இதுதான் ‘இந்தியாவின் பாரம்பரியம்’ என்று அழைக்கப்படுகிறது.
அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், “எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்.” என்றனர்.
ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, “இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?” என்று வேண்டினாள்.
புத்தர், “நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!” என்றார்.
அவள், “அது எதுவானாலும் நான் செய்கிறேன்” என்றாள்.
புத்தர், “அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா.” என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், “இந்த நகரத்தை சுற்றி வந்து…………. என்றார்.
அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், “கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில் சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. ‘எந்த குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ’ என்பதுதானே புத்தரின் நிபந்தனை.” என்றனர்.
அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். “எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?” ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்.”
மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள்.
மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், “எங்கே கடுகு?” என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், “நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, என்ன பயன்? – சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான
வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது.
குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்,” என்றாள்.
புத்தர், “நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்.” என்றார்.
நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான் அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான் அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே வர வேண்டும்.
புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த
சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது….. அவளுக்கு என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.’ என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது.

குளிராய் இரு அன்றேல் சூடாக இரு

 நீங்கள் ஒரு சோதனை செய்து பாருங்கள்


உங்களின் ஒரு கையை நெருப்பில் சூடாக்குங்கள்
மற்றொரு கையை ஐஸ்கட்டியின் மீது வையுங்கள்
சில நிமிடங்களுக்கு பிறகு உங்கள் இரு கைகளையும் ஒரே நேரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தினுள் நுழையுங்கள்
உங்களால் அந்த பாத்திரத்தில் இருப்பது சுடு நீரா....??? குளிர் நீரா..???
என உடனடியாக கண்டுபிடிக்க முடியாது
அதே போல தான் கிருஷ்ணனின் விஷயத்திலும் நடைபெருகிறது
நீங்கள்ல அவனை புரிந்து கொள்ளாமல் போவதற்கு
நீங்கள் தான் காரணமே தவிர கிருஷ்ணனல்ல
அவனை முழுதாக காதலித்த ராதையிடம் கேளுங்கள்
அவள் வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பாள்
ராதையுடன் நடனமாடும்போது அவன் பூரணமாக ஆடுவான்
அப்போது ராதை அவனை முழுமுதல் கடவுள் என்று கூட சொல்லுவாள்
அவனுடன் நடனமாடும் எல்லா கோபிகைகளும் அப்படி தான் சொல்வார்கள்
அவனை தன் எலும்பு குருத்திற்குள் உணர்வார்கள்
அதுவே அவன் மற்ற பெண்களுடன் நடனமாடும்போது அவனை பேய் என்பார்கள்
அர்ஜுனனும் பாண்டவர்களும் கிருஷ்ணனை கடவுளாக உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள்
ஆனால் கௌரவர்கள் அவனை சாத்தான் என்பார்கள்
ஏனெனில் அவர்கள் அழிவிற்கு காரணம் அவன் தானே
ஆனால் புத்தர் விஷயத்தில் நிலைமை வேறானது
கிருஷ்ணனைப் போல புத்தருக்கு ஆயிரம் விளக்கங்கள் இருக்க முடியாது
தன் சொந்த பந்தங்களிலிருந்து முழுமையாக புத்தர் தம்மை விடுவித்துக் கொண்டவர்
அதனால் புத்தரை எந்த பக்கத்திலிருந்து சுவைத்தாலும் ஒரே சுவை தான்
அவர் ஒரு சமநிலம் போன்றவர்
அதனால் புத்தர் நிலையானவராக தெரிகிறார்
கிருஷ்ணன் உங்களுடைய எல்லா கருத்துகளையும் மதிப்பீடுகளையும் பொய்யாக்கிவிடுகிறான்
உங்கள் கருத்துகளை அவன் பொய்யாக்கிவிடுவதால் தான் அவனை பூரணமானவன் எனச் சொல்கிறோம்
கிருஷ்ணனைக் குறித்த எல்லா அனுமானங்களையும் ஒருங்கிணைத்தால்
அது அவனை முழுதாய் விளக்குவதாய் அமையக்கூடும்
ஆனால் அவையும் ஒன்றோடொன்று முரண்படக்கூடும்
அவன் என்றுமே தனக்கென ஒருவனாக இருந்ததில்லை
அவன் எந்த மனிதனாகவும் தனி மனிதனாகவும் இருப்பதில்லை
அவன் வெறுமையானவன்
பூரணமானவன்
இருப்பின் இருப்பு
கண்ணனை கண்ணாடியுடன் ஒப்பிடலாம்
கிருஷ்ணன் எனும் கண்ணாடியின் முன் நின்றால் நாம் தான் தெரிவோம்
கிருஷ்ணனைப் போன்றே நீயும் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம்
அங்கிருந்து நகர்ந்த வினாடியே அவன் வெறுமை ஆகிவிடுகிறான்
யார் அவன் முன் நிற்கிறார்களோ அவர்களையே அவன் பிரிதிபலிக்கிறான்
அவன் முன் நிற்பவர்கள் எல்லோரும் தங்களையே அவனிடம் காண்கிறார்கள்
புத்தரின் தத்துவங்களுக்கு ஒரே உரை தான் இருக்கும்
இயேசுவின் போதனைகளுக்கு சில உரைகளே உள்ளன
ஆனால் அவை கூட எந்த விதத்திலும் மாறுபட்டவை கிடையாது
ஆனால் கீதைக்கு ஆயிரம் உரைகள் எழுதப்பட்டுள்ளது
எல்லா உரையாசிரியர்களும் தன் உருவையே கீதையில் கண்டார்கள்
ஆயிரம் விளக்கங்களை கிருஷ்ணன் மீது மட்டுமே உங்களால் சுமத்த முடியும்
புத்தர் மீது உங்கள் விளக்கங்களை சுமத்த முடியாது
புத்தரின் போதனைகள் தீர்க்கமானது, முடிவானது
மகாவீரர் பக்தர்களிடம் கூட இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளது
சுவேதாம்பரர்கள்..... திகம்பரர்கள் என......
ஆனால் அவர்கள் கூட மகாவீரரின் போதனைகள் மீது வேறுபாடு கொள்வதில்லை
கிருஷ்ணனைக் கொண்டு பல பிரிவுகளை உருவாக்குவது இயலாத காரியம்
ஆனால் பிரிக்கத் தொடங்கினால் ஆயிரம் பத்தாயிரம் என விரிந்து கொண்டே போகும்
அப்போதும் கிருஷ்ணனை முழுவதுமாக பிரித்துவிட முடியாது
ஆயிரம் விளக்கங்கள் அவனை சுற்றி சொல்லப்பட்டாலும் கிருஷ்ணன் என்பவனை பிரித்துக் காட்ட முடியாது
அதனால் தான் அவனை சுற்றி பல சமயப் பிரிவுகளை உருவாக்க முடிவதில்லை
இயேசுவை சுற்றி கூட மூன்று பெரிய பிரிவுகள் உண்டு
ஆனால் கிருஷ்ணனை சுற்றி ஒன்றுமே இல்லை
ஆனால் கீதைக்கு ஆயிரம் உரைகள் உண்டு
எந்த இரண்டு உரையும் ஒன்றாக இருப்பதில்லை
அதோடு எல்லா உரைகளும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக விரோதிகளைப் போல முட்டி மோதிக் கொள்கின்றன
சங்கரரும் இராமானுஜரும் ஒருவரை ஒருவர் ''நீ ஒரு முட்டாள்'' என மோதிக் கொள்வார்கள்
ஆனால் இருவர் சொல்வதும் ஒன்றே
ஏனெனில்
கிருஷ்ணன் வடிவமற்றவன்
வரையரையற்றவன்
உடலற்றவன்
எல்லையற்றவன்
உங்கள் முடிவிற்கு அப்பாற்பட்டவன் ✨ku

யார் பிராமணன்

 யார் பிராமணன்

நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில்
இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய
ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற
ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது.
சத்யகம் குழந்தையாய் இருக்கும்
போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும்
நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும்
குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன்,
நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான்
நேரம்.” என்றார்.
தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத்
தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம்
அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு
ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும்.
ஆனால் முயற்சி செய்வதில் எதுவும்
தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.”
சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான
குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன?
உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான்.
அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான்.
அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்.
உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும்,
பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும்
இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு. உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய்.
இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.” என்றார்.
அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக்.
சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார்.
ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார்.
உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்…….
சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி
கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார்.
முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது.
அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார்.
சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார்.
உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும்
உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.
சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார்.
அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான்
கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான்
உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய்.
மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப்
பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது
உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார்.
சத்யகம் சென்று அப்படியே கூறினார்.
அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான
ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான
தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள
விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ
உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது
தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு
வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார்.
சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக
இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம்
என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான்.
குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக்
கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத
வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று
விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ்,
அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை
மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார்.
இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு
என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு
டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ?
ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக்
கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற
இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள்
மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது
புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து
ஓய்வெடுப்பான்.
முதல் சில வருடங்கள் தொடர்ந்து
பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில்
அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது.
வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை.
இந்த கதை மிகவும் அழகானது.
பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம்
அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின.
இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன.
அதனால் ஒருநாள் பசுக்கள்
சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன.
சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது
என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்…….. நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது
பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக….. பரவசமாக
இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து
விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான்
மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது
மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள்
சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள்
வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான்.
அந்த குருவின் சீடர்கள் சத்யகம்
ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர்.
அவன் வந்து நின்றான்……..பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான்.
குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே
ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன்
உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள்,
மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி
நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார்.
குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை
இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன்
வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக்
கொண்டிருப்பாள்.” என்றார்.
சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் –
சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து,தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் – திரும்பி வந்தார். இவர்
வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார்.
ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர்
பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால்
சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார்.
உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது.
நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே
இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள்.
சத்யகம் வீடு திரும்பினார்.
தாய்க்கு மிகவும் வயதாகி
விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே………..இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்