படுக்கையும் பரம்பொருளும் பேசாலைதாஸ்
மனிதர்களுக்கு மட்டுமே உடலுறவு கொள்ள தனியறையாக படுக்கையறை அவசியமாகிறது.....!
அந்த அறையில் சுகம் காணும் வேளையினை நீட்டித்து ஈறுடல் ஓருடலாகி அதுவும் மறைந்து உடலற்ற வண்ணமாகி ஆன்மாவாக மலர்ந்து கடவுள் தன்மைக்கு புகும் நுட்பம் தந்திராவில் உள்ளது.......!
ஓர் ஆண் என்பவன்
100 % முழுதும் ஆண் தன்மைக்குள் அடங்குபவன் இல்லை. முக்கால் பாதி ஆண் தன்மையும் கால் பாதி பெண் தன்மையும் அடங்கிய உருவம்.....!
ஒரு பெண் என்பவள் 100% முழுதும் பெண் தன்மைக்குள் அடங்கிய உருவம் இல்லை.
முக்கால் பாதி பெண் தன்மையும் கால் பாதி ஆண் தன்மையும் அடங்கிய உருவம்.....!
ஆண் தன்னிடம் குறையாகவுள்ள கால் பாதியை பெண்ணிடமும் , பெண் தன்னிடம் குறையாகவுள்ள கால் பாதியை ஆணிடமும் ஈர்த்து கோர்த்து முழுமையடைய முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்......!
இதுவே இனக்கவர்ச்சி எனப்படுகிறது.
இந்த காம சக்தியே ஆண் பெண் உயிரினங்களின் ஈர்ப்பு சக்தியாக இயற்கை வித்திட்ட அற்புதம் என்று நம் முன்னோர்கள் அறிந்தனர். இதுவே இனப்பெருக்க வளர்ச்சியின் ரகசியம் என்றும் அறிந்தனர்....!
ஆணும் பெண்ணும் காமத்தில் ஈடுபடும் போது உச்ச நிலையில் அவர்கள் ஆணுமற்ற மற்றும் பெண்ணுமற்ற நிலைக்கு செல்கிறார்கள். ஏனென்றால் அங்கே ஓருவரின் முக்கால் பாதியும் மற்றவரின் கால் பாதியும் ஒன்றாக சங்கமிக்கிறது......!
அதுவே அர்த்தனரீஸ்வர நிலையாகும்.
யாரை பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றை ஒன்றில் அடங்க... உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி என்று பாடல் வரிகள் கூட நினைவுக்கு வரலாம்....!
அந்த வேளையில் அவர்கள் தன்னை மறந்து தன் தேகம் மறந்து வேதியியல் மாற்றமும் அடைந்து காம போதை தலைக்கு ஏறி எதுவுமற்ற நிலைக்கு செல்கிறார்கள்......!
பிரபஞ்சம் தோன்றும் போது முதலில் தோன்றியது காம சக்தி என்று வேத நூல்கள் சொல்கிறது.....!
வத்ஸாயனர் தாம் எழுதிய காம சூத்ரா வை எழுத தொடங்கும் முன் கடவுள் வாழ்த்தாக காம சக்தியை வணங்கி தொடங்கினார் என்று வரலாறு கூறுகிறது....!
இந்த காம சக்தியை ஆன்மீகத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று நம் முன்னோர்கள் ஆராய்ந்து அதில் தந்திரா என்ற நுட்பத்தை கண்டறிந்தனர்.....!
காமத்தில் தோன்றும் இந்த பரவசம் மின்னல் கீற்று போல ஓரிரு நிமிடங்கள் தோன்றி மறைகிறது.அந்த பரவச இன்பத்தை பகலில் பரவும் சூரிய வெளிச்சம் போல எப்போதும் பிரகாசித்த வண்ணம் மிளிர வைக்கும் நுட்பமே தந்திராவில் செயல்படுத்தப்படுகிறது......!
தந்திராவில் ஈடுபடும் போது தன்னுணர்வில் இருந்து இடம் பெயர்ந்து விழுப்புணர்வில் நிலைத்து ஆண் பெண் சக்தி எழும்பி ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பாயும் சக்தி ஓட்டத்தை சண்டைக்குள் புகாமல் சாட்சியாக நின்று பார்ப்பவர் போல சாக்ஷி பாவனையில் பரவசம் கண்டு அனுபவிக்கலாம்....!
தந்திராவில் ஈடுபடும் போது அனுபவிப்பவர் என்ற நிலையிலிருந்து விலகி வெறும் பார்ப்பவர் என்ற நிலைக்கு மாறிவிடும் தன்மை அடையலாம்.....!
தொடக்கத்தில் உடலில் தொடங்கினாலும் முடிவில் தந்திராவில் உடலற்ற நிலைக்கு செல்லமுடிகிறது. உடலில் தொடங்கி உடலற்ற நிலைக்கு செல்வதே தந்திராவின் இலக்காகும்.....!
தந்திராவில்
காம சக்தியை மேலேற்றி ஞானத்தின் நுழைவாயில் சென்று ஆத்மசக்தியை முடுக்கி விடுகிறோம்.....!
செந்தாமரை தண்டு சேற்றில் விளைந்தாலும் விண்ணில் மேலேறி தாமரையாக உருமாறி மலர்கிறது அல்லவா?
அதுபோல காமத்தில் கசடாக தொடங்கினாலும் தந்திராவில் கங்கையாக உருமாறி புனிதம் பெறுகிறது......!
கீழான நிலையில் காமம் தொடங்கினாலும் தந்திராவில் சிகரத்தின் உச்சியாக உரு மாறி உசத்தி அடைகிறது......!
சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை எனபது தவறு. கலை என்றாலே கற்று தான் அதில் உள்ள நுணுக்கங்களையும் , நுட்பங்களையும் , அதற்கான உத்திகளையும் கற்று நிபுணத்துவனாக முடியும். தந்திராவும் ஓர் கலை தான்......!
ஓர் இடத்திற்கு செல்வதற்கு பல வழிகளில் செல்லாம். கார் , பஸ், ரயில் என்று. அது மற்ற தியான முறையை கையாளும் போது என்றால் தந்திராவில் பயணிப்பது ஒரு விமானத்தில் செல்வது போல ஆகும்.
கரும்பு தின்ன கூலி எனும் போது சொல்லவா வேண்டும் .....!
தந்திரா வை இந்த உலகில் முழுமையாக கற்றவரகள் ஒரு சில பேர் மட்டுமே.....!
அதை உலகத்திற்கு அறிமுக படுத்தி முறையாக கற்று தருபவர்கள் யார் என்று தேடினால் கிடைப்பது கடினம்.....!
No comments:
Post a Comment