Saturday, 29 May 2021

மீன் விற்கப்படும்

 உடனே ' ' இங்கு ' ' என்ற வார்த்தை அழிக்கப்பட்டது .

 இப்போது அந்தப் பலகையில் , ' ' மீன் விற்கப்படும் ' ' என்று இருந்தது .........

#மூன்றாவது நாள் வேறொரு வாடிக்கையாளர் கடைக்கு வந்தார் .

 ' ' மீன் விற்கப்படும் ' ' என்பதைப் பார்த்து , ' ' விற்கப்படும் என்பது ஏன் ?

 யாராவது மீனை சும்மா கொடுப்பார்களா ? ' ' என்று கேட்டார் .

 உடனே ' ' விற்கப்படும் ' ' என்ற வார்த்தை அகற்றப்பட்டது .

 இப்போது ' ' மீன் ' ' என்கிற ஒரே வார்த்தை மட்டுமே இருந்தது .

ஒரு வயதானவன் கடைக்கு வந்தான் .

 கடைக்காரனிடம் . ' ' மீனா ? ' ' ஒரு குருடன் கூட இங்கு மீன் விற்கப்படுகிறது என்பதை தூரத்தில் வரும்போதே அறிந்து கொள்வானே ' ' என்று கேட்டான் . 

உடனே ' ' மீன் ' ' என்னும் வார்த்தையும் அகற்றப்பட்டது . 

இப்போது அது வெறும் பலகையாக இருந்தது .

அப்போது அந்தப் பக்கமாகப் போனவன் ஒருவன் ' ' ஏன் இந்த வெறும் பலகை ? ' ' என்று கேட்டான் . 

அதனால் அந்தப் பலகையும் நீக்கப்பட்டது . 

எனவே ஒவ்வொன்றாக அகற்றிய பின் ஒன்றும் இருக்காது . 

ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு வார்த்தையாக அகற்றப்பட்டது .

 இப்போது அங்கு மீதமிருப்பது ஒன்றும் இல்லை . 

வெறும் வெறுமைதான் .

அன்பு என்பதும் இப்படிப்பட்ட வெறுமையில்தான் பிறக்க முடியும் .

 ஒன்றுமில்லாத ஒன்றுதான் .

 ஒன்றுமில்லாத மற்றொன்றிடம் கூடிக் கலக்க முடியும் . 

ஒரு பூஜ்யம்தான் மற்றொரு பூஜ்யத்துடன் முழுமையாக இணைய முடியும் இரண்டு தனிமனிதர்கள் அல்ல .

 இரண்டு வெற்றிடங்கள்தான் சந்திக்க முடியும் . ஏனெனில் வெற்றிடத்தில் தடைகள் ஏதும் இருப்பதில்லை .

 மற்றவையெல்லாம் சுவர்களைக் கொண்டுள்ளன .

 ஆனால் வெற்றிடத்தில் ஒன்றும் கிடையாது .

எனவே நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் : 

அன்பு என்பது தனிமனிதத்தன்மைகளான ' ' நான் ' ' என்பதும் ' ' அவன் அடுத்தவன் ' ' என்பதும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிறக்கும் .

 அப்போது எஞ்சியிருப்பதெல்லாம் , நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாம்தான் , எல்லையில்லாத அந்த தன்மைதானே தவிர ' ' நான் ' ' என்பதல்ல . 

அந்த நிலையை அடையும்போது எல்லாத் தடைகளும் பொடிப் பொடியாகி ஏற்கனவே நம்முள் தயாராக இருக்கும் கங்கையின் திடீர்ப் பாய்ச்சல் ஏற்பட்டுவிடும் .

நாம் ஒரு கிணறு வெட்டுகிறோம் .

 தண்ணீர் ஏற்கனவே பூமிக்குள் உள்ளது . 

அதை நீங்கள் வேறு எங்கிருந்தும் கொண்டு வர வேண்டியதில்லை .

 நாம் வெறுமனே மணலையும் , கற்களையும் தோண்டி அவற்றை அப்புறப்படுத்துகிறோம் . 

நாம் செய்யும் இந்தச் செயல் என்ன ?

 பூமிக்குள் மறைந்திருக்கும் தண்ணீர் வெளிவருவதற்கான ஒரு இடத்தை , அந்தத் தண்ணீர் தன்னைப் பிறருக்கு காட்டிக் கொள்வதற்கான ஒரு இடத்தை , ஒரு வெற்றிடத்தைத்தான் நாம் உருவாக்குகிறோம் .

 உள்ளே இருக்கும் தண்ணீர் வெளிப்படுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது . 

அது இதுவரை பெறமுடியாத ஒரு வெற்றிடத்திற்காக ஏங்குகிறது .

 அப்போதுதான் அது வெளியே வர முடியும் . 

அப்போதுதான் அது பீறிட்டுக் கிளம்ப முடியும் . 

ஒரு கிணற்றில் முழுவதும் கற்களும் , மணலும் நிறைந்திருந்தால் , அந்த மணலையும் , கற்களையும் அப்புறப்படுத்தும் அந்தக் கணமே தண்ணீரானது மேலெழுந்து வரும் .

 அதே போன்றுதான் மனிதனும் தனக்குள் அன்பு நிறைந்தவனாக இருக்கிறான் . 

இப்போது அந்த அன்பு மேலெழுந்து வருவதற்கு ஒரு இடம் தேவை .

 உங்களது உள்ளமும் ஆன்மாவும் எதுவரை ' ' நான் ' ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ , அதுவரை நீங்களும் மணலும் , கற்களும் , நிறைந்த ஒரு கிணற்றைப் போன்றவர்கள்தான் ,

 அன்பு என்னும் ஊற்று உங்களில் இருந்து மேலே கொப்பளித்துக் கிளம்பாது 

No comments:

Post a Comment