Tuesday, 25 January 2022

வருவது வரட்டும்!

வருவது வரட்டும்!  பேசாலைதாஸ் 


ஒரு ஜென் பெண்துறவி, தனது யாத்திரையின் நடுவில் ஒரு கிராமம் வழியாகச் சென்று கொண்டிருந்த போது மாலை கவிழ்ந்தது. 

இரவில் அங்கேதான் தங்கவேண்டும் என்று முடிவு செய்த அவர், ஒவ்வொரு வீடாகச் சென்று தங்குவதற்கு இடம் கோரினார். 

அவர்கள் ஜென் பெளத்தத்துக்கு எதிரானவர்கள்.

 அவர்கள் சம்பிரதாயவாதிகள். 

அவர்கள் அந்தப் பெண் துறவியைத் தங்கள் இல்லங்களில் தங்கவைக்க மறுத்தனர். 

அந்த பெண் துறவி, தன் பசியை ஆற்றும் வகையில் ஒரு கவளம் உணவைக் கூட அவர்கள் தர மறுத்துவிட்டனர்.

அந்த பெண்துறவிகிராமத்துக்கு வெளியே நடந்து போனார். 

நடுங்கும் குளிரில் பசியோடு, 

வயல்களின் நடுவில் நின்றுகொண்டிருந்த 

தனி செர்ரி மரத்தின் அடியில் சென்று அமர்ந்தார். 

சில்லிடும் குளிரால் தூக்கம் வரவில்லை.

 கொடும் விலங்குகள் உலவும் இடம் வேறு.

நள்ளிரவில் தூங்கியும் தூங்காமல் கண்விழித்தார் ரெங்கெட்சு. 

இலையுதிர்காலத்து நீல இரவு வானத்தைப் பார்த்தார்.

 அவர் அமர்ந்திருந்த செர்ரி மரத்தின் மொட்டுகள் பனியால் படர்ந்த நிலவைக் கண்டு சிரிப்பதைப் பார்த்தார் ரெங்கெட்சு.

 அவர் பார்த்த காட்சியின் அழகில் மெய்சிலிர்த்த ரெங்கெட்சு 

கிராமத்தவர்கள் எனக்குத் தங்க இடம் கொடுக்க மறுத்ததால்,

 நான் பனிபடர்ந்த நிலவொளி வீசும் இரவில் பூமொட்டுகளைப் பார்க்க முடிந்தது” என

கிராமத்தவர்களுக்கு நன்றி கூறினார்

மிகுந்த நன்றியுணர்ச்சியோடு கிராமம் இருக்கும் திசை நோக்கினார்

அவர் நன்றியுணர்வால் தளும்பினார். 

கிராமத்தவர்கள் அவருக்கு இடம் தந்திருந்தால், அவர் ஒரு சாதாரணக் கூரையின் கீழ் தூங்கியிருப்பார். 

செர்ரிப்பூ இதழ்கள் நிலவோடு கிசுகிசுப்பதை அவரால் கேட்டிருக்கவே முடியாது. 

இந்த இரவின் ஆழ்ந்த அமைதியை அவர் உணர்ந்திருக்கவே முடியாது. வரவது வரட்டும் என்று வாழ்பவன் இரசிகனாகின்றான். அதுபோலவே வாழ்க்கை எதையெல்லாம் கொண்டு வருகிறதோ அதையெல்லாம் நன்றியுடன் ஏற்கும்போதே ஒருவன் புத்தர் ஆகிறான். அன்புடன் பேசாலைதாஸ்

Wednesday, 5 January 2022

மனதை பார்த்துக்கொள் நல்லபடி!

 மனதை பார்த்துக்கொள் நல்லபடி! பேசாலைதாஸ்


எனது மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற சிந்தனை பூங்காவில், மனித மனம் பற்றி மீள வும் உங்களோடு எனது சிந்தனையை பகிர் ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நம் வாழ் வில் எல்லா உணர்வுகளுக்கும் உணர்ச் சிக ளுக்கும், அதனால் விளையும் இன்ப துன்பங்க ளுக்கும் மனித மனமே காரனம், என நான் பலமுறை சொல்லியிருக்கின்றேன். மனம் தான் எல்லவற்றிற்கும் அடிப்படை காரணம், அதனால்தான் கவிஞன் சொன்னான், "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, மனிதன் எதையோ பேசட்டும், உனக்கு நீதான் நீதிபதி, உன் மனதை பார்த்துக் கொள் நல்லபடி" என்று, அதைத்தான் மீண்டும் நான் வலியுறுத்து கின்றேன். 


மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். இதோ ஒரு சம்பவம் ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். இந்த சூழ் நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.


ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார். ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண் களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கி றபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந் தபடி கூறிக்கொண்டே சென்றார். அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மை யான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.


இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?" இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன. இதுதான் நமது மனம்..இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்.. குணப்படுத் தவும் முடியும்.. இந்த மனதால் பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும். எனவே, நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படு த்துவோம். பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…! அன்பின் பேசாலைதாஸ்

Sunday, 2 January 2022

மெளனம் எனது தாய்மொழி

 மெளனம் எனது தாய்மொழி  பேசாலைதாஸ் 


இந்த வருடம் முழுவதும் மெளனி யாகி நிறைய எழுதவேண்டும் என நினைக்கின்றேன். கண் மூடி மெளனியாக இருப்பதற்கு எண்ணினேன். என் எண்ணமிது அறியாயோ சாமி நீ! சர்வ பரிபூரண இறைவனே!  

மெளனம் ஒரு அழகிய மொழி, அது மனம் பேசும் குரல், வாய் பேசாமல் மெளனிக்கும் போது, உள் மனம் பேசத்தொடங்குகின்றது, அதுவே மெளன மொழி! எல்லோரும் பேசும்  ஒரே மொழி மெளனம் மட்டுமே! அது சிந்திக்க துண்டுகின்றது, வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்கும் ஒரு புரிதல் மெளனம்! ஞானிகள், மேதைகள் கவிஞர்கள், கலைஞர்கள் இவர் களின் தாய்மொழி மெளனமாகின்றது, கலக் கத்தில் இருப்போருக்கு தெளிவை கொடுப்பது இந்த மெளனம் தான்! அது அழகானது, விலை மதிப்பற்றது, சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை! 


வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற் குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு என்று கூட நான் சொல்லத்துணிவேன். அந்த இருட்டுக்குள்ளேயும் ஞானம் வெளிச்சமாகி உள் ஒளி பரப்பும், அதில் நாம் இறைவனை கூட தரிசிக்க லாம். அந்த இறை இன்பம் பெறும் போது, எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிக ளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.



“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண் டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ் களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!” மெளனம் என்றவுடன் என் இதயத் தில் எங்கேயோ எப்போதோ வாசித்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஒரு நாள், நான்கு துறவிகளும், இரவு முழுவதும் மௌனமாக இருக்க தீர்மானித்து அமர்ந் தனர்.  சிறிது நேரம் கடந்தது, முதலா மவன், "குளிர்" கடுமையாக உள்ளது என்றான். இரண்டாமவன், நாம் மௌன மாக இருக்க முடிவெடுத்து அமர்ந்திருக்கிறோம், மறந்துவிட்டாயா? என்றான். கோபமடைந்த மூன்றாமவன், நீங்கள் இருவரும் கொஞ் சம் அமைதியாக இருக் கிறீர்களா? என்றான். நான்காமவன், சிரித்துக்கொண்டே, இங்கு மௌனமாக இருப்பவன் நான் மட்டும்தான் என்றான்.


நம்மில் பெரும்பாலோனர் இந்த துறவிகள் மாதிரித்தான், புது வருடம் பிறந் துவிட் டது, நல்லனவற்றை செய்வோம், முடிந்தவரை தருமம் செய்வோம் என துணிவா ர்கள், இடையில் அடுத்தவர்களின் செயல்களால் உந்தப்பட்டு தீர்மா னங்களையும், மெளனங்களியும் களைந்து கொள்கின்றார்கள். உங்களின் மௌனமும் இப்படிப் பட்டதுதான். நீங்கள் தியானத்தில் ஆழமாக செல்ல, செல்ல...மௌனமும் தொடர்ந்து வரும்...உள்ளும் - புறமும், பேசாமல் இருப்பது மேலானது... "மௌனம், நிகழ்வது" நீ உருவாக்குவதல்ல...ஆனால் ஒரு எச்சரி க்கை. மெளனமும் பேசும், பேசும், பேசும்... அப்படி பேசும்...மௌனம் அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியது. வார்த்தை கள் தம் ஆற்றலை இழந்து விடும்போது...மெளனம் பேசும்...மெளனத்தால் சொல்ல முடியாதது எதுவுமே இல்லை. சொற்கள் தோற்று போகும்போது...மெளனத்தின் அர்த்தம் ஆழமாக இருக்கும்.. வடிவங்கள் முடியும் இடத்தில்...வடிவமின்மை ஆரம்ப மாகிவிடுகிறது......


எனவேதான் நான் சொல்கின்றேன் அமைதியாக மெளனமாக இருக்க முயலுங் கள். நீங்கள் சீண்டப்படும்போது, உணர்ச்சிகளை கோபத்தை கொட்டிவிடாதீர் கள், பொறுமை கொள்ளுங்கள். முடிந்தால் வாய் மூடி மெளனியாகுங்கள், எல்லாமே அடங்கிவிடும். உள்ளம் மட்டும் அல்ல, நம் உடலும் இதனால் நன்மை அடையும், வீன் இரத்த அழுத்தம், மன உளச்சல் இவைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். புதிய வருட தீர்மானமாக இதனை கடைப்பிடியுங்கள். இந்த வருடம் முழுவதும் மெளனி யாகி நிறைய எழுதவேண்டும் என நினைக்கின்றேன். கண்மூடி மெளனியாக இருப்பதற்கு எண்ணினேன். என் எண்ணமிது அறியாயோ சாமி நீ! சர்வபரிபூரண இறைவனே!  அன்புடன் பேசாலைதாஸ்

"நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே"

  "நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே" பேசாலைதாஸ்


அவரவர் எந்த நிலை யில் இருக்கின்றார்களோ அதையே அடிப் படையாக கொண்டு, மற்றவர்களின் செயல்களை எடைபோடுவார் கள், அல்லது தமது எண்ணங்களை தம்மை வைத்தே மதிப்பீடு செய்வார் கள். 


            ஒரு மத்தியானவேளை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடி யில் ஒருவர் நன் றாக உறங்கிக்கொண்டிருந் தார். அவ்வழியாக வந்த விறகுவெட்டி அவரை ப்பார்த்தார். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயி லிலும் இப்படி உறங்குகிறான்” என நினைத்துக் கொண்டே சென்றார். 


                                              திருட்டுத் தொழில் செய்யும் ஒருவர் அடுத்ததாக, அவ்வழியாக வந்தார். இரவு முழுவதும் கண்விழித்து திருடியிருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகி றான்” என நினைத்துக்கொண்டே சென்றார்.


                                                   மூன்றாவதாக குடிகாரர் ஒருவர் அவ்வழியாக வந்தார். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென் றார். 


                                                      சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உற ங்கும் இவர், முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகையச் செயலைச் செய்ய முடியும்” என அவரை வண ங்கி விட்டு சென்றார். "நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே" அன்புடன் பேசாலைதாஸ்

நேர்மறை சிந்தனைகள் The Positive Thinks

 நேர்மறை சிந்தனைகள் The Positive Thinks  பேசாலைதாஸ்


என் வாழ்க்கையும், உங்க வாழ்க் கையும் ஏன் எல்லோரின் வாழ்க் கையின் அடிப்படை ஆதாரம் ஒண்ணு தான். கண்விழித்து எழு ம்புவது, காலைக்கடன் முடிப் பது, வேலை செய்வது, ஓய்வு எடு ப்பது, சாப்பிடுவது, கண் துயில் வது இதைத்தான் ஜனாதிபதி தொடக்கம், தெருவோர பிச்சை க்காரன் வரை செய்கின்றனர், இதில் உள்ள பிரச்சனை என்ன வென்றால் பணம், புகழ், அந்த ஸ்த்து, செல்வாக்கு, அதிகாரம் என்பன ஆளுக்காள் வேறுபட்டு க்கொண்டிருக்கின்றன. ஒன்றை மட்டும் நினைவில் கொள்க, திருப்தி நிம்மதி என்று எடுத்துக்கொண்டால், நாட்டை ஆளும் ஜனாதிபதியை விட, தெருவோர பிச்சைக்காரன் கொடுத்துவைத்தவன், அன்றாட அப்பம் அவனுக்கு ஆண்டவன் கொடுக்கின்றான் என்ற நேர்மறை எண்ணத்துடன் வாழ்கின்றான்.

அதனால நான் சொல்கின்றேன் வாழ்க்கையை ஈசியா எடுத்துக்கொள்வோம். " வேடிக்கையா பொழுது போகனும், சும்மா விளையாட்டா வாழ்ந்து பார்க்கனும், அன்போடு உறவாடி வாழ்ந்து கழிக்கனும்" என்ற ஒரு சினிமா பாடல் மனதுக்குள் வருகின்றது. அதுதான் வாழ்க்கை!


என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு 


துயரப்படுறத விட்றுவோம்...


Norman Vincent Peale  என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...


தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.


தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட 


துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.


பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து 


அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.


கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.


வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார். 


சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.


இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.


 உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.


அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.


 இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. 


 இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.


தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” 


என கேட்ட கேள்விக்கு என் மனைவி 


என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.


எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” 


என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.


 உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது 


 என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.


இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.


இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.


கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. 


அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.


இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...!


ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...


கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...


அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.


என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...


மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...


வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...?


மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்... 


வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....


Feel the  power of  positive  Thinking... 


That is the BIGGEST SECRET OF LIFE...!!!


Age does not matter at every stage of Life !



வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!" அன்புடன் பேசாலைதாஸ்

விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!

விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!  பேசாலைதாஸ்


காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்? என்பது யாருக்கும் தெரியாது நண்பர்களே! நாம் விதைப்பதுதான் அதனை தீர்மானிக்கும், கடவுள் கூட, சற்று அப்பால் தள்ளி நின்று இதை அவதானிக்கின்றார். இதுதான் கர்மா என நான் நினைக்கின் றேன்.விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கி னாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!  முகநூலில் நான் வாசித்த ஒரு உண்மை சம்பவத்தை எழுதுகின்றேன். கொடுங்கள் உங்களால் முடிந்த அளவு ஏழை எளியவர்களுக்கு, ஏழை விதைவைகளுக்கு, கைவிடப்பட்ட ஏழைகளுக்கு உங்கள் கரம் நீளட்டும்! கொடுத்தது காத்து நிற்கும், இந்த சம்பவம் நடந்தது, 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.


பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.


நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.


ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.


அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.


நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.


பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.


ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.


ஆண்டுகள் உருண்டன.


பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.


எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)


பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.


ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.


ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.


“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.


பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.


காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.


இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.


அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?


இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.


ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..


காலம் குறித்து வைத்துகொண்டது....

மனமே நமது பிரச்சினை!

 மனமே நமது பிரச்சினை! பேசாலைதாஸ்


நமக்கு ஏற்படுகின்ற பிரச்சனை, துன்பம், துயரம் எல்லாவற்றி க்கும் காரனம் நாம் தான், நமது மனமே முக்கிய காரனம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா என வள்ளுவன் வாக்கு சொல்கின் றது. சொர்க்கமும் நரகமும் நம் வசமே என்கின்றான் லெளகீக கவிஞன், என் கவிஆசான், கண்ண தாசன் சொல்கின்றான். என் சிறுமதியின் தீர்மானத்தை பின்வரும் கதை நிரூபணமாக்கின்றது.

தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.*காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்றஇரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட் டான்.  முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்.. முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர். இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன. 

அரசரால் *தூங்கவே*முடியவில்லை.அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்..மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*. நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர்,  ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார். முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்: 

''அந்த நாய்கள், உங்களுக்கு *ஆதரவாகவோ அல்லது எதிராகவோ* இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை அந்த நாய்களுக்கு இங்கு ஒரு *அரசர்* தங்கி இருப்பது *தெரியாது.* அவைகள் படிப்பதில்லை. அவற்றுக்கு *அறிவும்* கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை. அவை, தங்களுக்கே உரிய *குரைக்கும் வேலையைப்* பார்க்கின்றன.  நீங்கள், *தூங்குகிற வேலையைப்* பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் *குரைத்தால்*, நான் எப்படி *தூங்க* முடியும்...???'' என்றார் அரசர். உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப் பதை *எதிர்த்துப்* போராடுகிறீர்கள். அப்படிப் *போராடாதீர்கள்* பிரச்னை *குரைப்பொலி* அல்ல,  உங்கள் *எதிர்ப்பு* உணர்வு.  நீங்கள், *சத்தத்துக்கு எதிராக* இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று *ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள்*. நாய்கள் உங்களது நிபந்தனையைக் *கவனிக்கப் போவது* இல்லை. 

நீங்களும் உங்கள் நிபந்தனையை *விலக்கப் போவது* இல்லை.  ஆனால், *நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்.* நடை முறைக்குச் சாத்தியமானதும் அதுதான்.  நாய்களின் குரைப்பை *ஏற்றுக் கொள்ளுங்கள்*. இந்த இரவிலும் எவ்வளவு *சக்தியுடன்* அவை குரைக் கின்றன பார்த்தீர்களா....??? *ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால்,* குரைப்புச் சத்தமும் ஒருவகை *மந்திரம்தான்*...!!!'' என்றார் முனிவர்.*'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க* போனார் அரசர்.

ஆனால் காலையில், மிகுந்த *மகிழ்ச்சியுடன்* எழுந்து முனிவரைச் சந்தித்தார் *அரசர்*...!!!''ஆச்சரியம்தான்....!!! எனது *எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு*, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து *ரசிக்கவும்* தொடங்கினேன். அப்படியே *உறங்கிப்* போனேன்'' என்றார் அரசர்.

முனிவர் *நமக்குச்* சொல்கிறார்:"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். *உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால்*, உன் கவனத்தை *உள்முகமாகத்* திருப்பு. எரிச்சலுக்கான காரணம் *நீயாகத்தான்* இருப்பாய்.  உனது *எதிர்பார்ப்பு* அல்லது *ஆசை* வேறாக இருந்திருக்கும்;  அல்லது ஏதோ ஒரு *நிபந்தனையை* உனக்குள் நீ விதித்திருப்பாய்.  அதுதான் உனது *எரிச்சலுக்குக்* காரணம்.. 

*உலகத்தை* நமக்கேற்ப *நிர்ப்பந்தப்படுத்த முடியாது..*அதை எதிர்த்துப் *போராடும்போது* நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.*யாரையும்  நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக் கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.* அன்புடன் பேசாலைதாஸ்