Saturday, 31 August 2024

புத்தனாகின்றேன்! பேசாலைதாஸ்

 புத்தனாகின்றேன் பேசாலைதாஸ்


வாழ்க்கை என்ற பயணத்தில், சிலவேளைகளில் நான் புத்தனாகின்றேன், ஏன் என்றே எனக்கு புரிவதில்லை. ஒருவேளை நான் வாழ நினைத்த வாழ்க்கை வேறு, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை வேறாக இருக்கலாம்.

 எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் காதல் உணர்வுகள், பாலி யல் இச்சைகள், எனக்குள்ளும் எழுந் ததுண்டு, ஆனால் கொஞ்சம் வித்தி யாசா மாக வந்தது, துறவறம் எனக்கு பிடிக்கும், அதனால் ஒரு சாமியாராக நான் முயற்ச்சித்ததுண்டு, இது வாலி பம் எட்டிப்பார்க்கும் போது நான் எடுத்த முயற்ச்சி, நான் விரும்பாமலே துறவு மடத்தில் இருந்து தூக்கிவீசப்ப ட்டேன்.

 பின்னர் என் வாழ்வில் எல்லாம் நடந்தது, போராளியாக ஆயுதம் ஏந்தி, காதல் இல்லாமல் கல்யாணமாகி, ஆனாலும் நல்லதோர் குடும்பத்தலை வனாகி, தந்தையாக, என் கடமை சரிவரச்செய்து, திரும்பிப்பார்க்கின் றேன், எனக்காக நான் வாழ்ந்ததில்லை அதுவே விடையாக வருகின்றது.

 எனக்காக வாழ்தல், அது எப்படி,?  இன்னும் புரியவில்லை எனக்கு, ஆத்ம விசாரணை மட்டுமே அடிக்கடி வருகின்றது, கிட்டதட்ட புத்தானாகி விடுவேனோ என, எண்ணத்தோன்றுகின்றது. எனக்குள் எழும்பும் ஆத்ம விசாரனைகளில்,நீங்களும் பங்கு கொள்வீர்களோ? என் ஆத்ம விசாரனை தொடர்கின்றது,,,,,

ஆத்மாவுக்கு வருவதும் இல்லை, போவதும் இல்லை. வருவது, போவது எல்லா விஷயங்களும் சரீரத்துடையதுதான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இரண்டு உடல்கள் இருக்கின்றது. ஒன்று நம் கண்ணெதிரே உள்ள உடல், இது நம் தாய் தந்தையரிடமிருந்து கிடைக்கிறது. பிறக்கிறது. இந்த உடலுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒரு எல்லை உண்டு,  அந்த எல்லை வரை வாழ்கிறது; பிறகு முடிந்து விடுகிறது. இந்த உடல், இந்த ஜன்மத் தோடு ஆரம்பித்து, மரணத்தோடு முடிவடைகிறது. அது வருகிறது; போகி றது. இது முதல் சரீரம்.

அதற்கு அடுத்து உள்ளே  மற்றொரு சரீரம், அது ஆத்மாவின் உள்ளாடை ஆகும்.மேலே உள்ள ஆடை ஸ்தூல சரீரம். மற்றது உள்ளே இருக்கும் ஆடை கண்களுக் குத் தெரியாத சூட்சும சரீரம். அது நமது சென்ற ஜன்மத்திலிரு ந்து கிடைக்கிறது என மற்ற சமயங்கள் கூறுகின்றன. கிறிஸ்தவம் இறவனால் உண்டாகின்றது, என்கின்றது.  ஸ்தூல சரீரம் தாதுக்களால் உண்டானது. அதாவது மண்ணில் இருந்து விளைந்தவை, இறைவன் மண்ணில்ஈருந்து மனிதனை படைத்து, அவன் நாசியிலே ஜீவ ஆத்து மாவை ஊதினார் அவன் ஜீவ ஆதுமமானான் என்கின்றது வேதம். அப்படிப்பட்ட ஜீவ ஆதுமா மீண்டும் இறவனிடம், இயற்கையிடம் செல்கின்றது அதுவே யாத்திரை செய்கிறது.


இந்தச் சூட்சும சரீரம் கர்ப்பதானத்தின் சமயத்தில் ஸ்தூல சரீரத்தில் பிரவேசிக்கிறது. கர்ப்பத்தில் பிரவேசிக்கிறது. இப்படிப் பிரவேசிப்பது இயற்கையாக, தானே இயங்கும் முறை யில் நேருகிறது. தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுவது போல, நதி ஓடிக் கடலில் சேர்வது போல. ஜனனத்தை வருவது என்றும் மரணத்தைப் போவது என்றும் கொள்கிறோம். ஆனால் ஆத்மா வருவதும் இல்லை, போவதும் இல்லை. அது நிரந்தரமானது அழிவதில்லை,  

எப்போதும் சூட்சும சரீரமும் அழிகிறதோ, அப்போதுதான் ஆத்மா பரமாத்மாவுடன் இணைகிறது என்பதல்ல. ஆத்மா எப்போதும் பரமாத்மாவுடன் இணைந்தே தான் இருக்கிறது. பரமாத்மா நாலாபுறமும் பரவியுள்ளார். எல்லா இடமும் அவரே! 

இந்த சூட்சும சரீரம் (உடல்)எந்த விஷயங்களால் ஆனது என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். நமது இச்சைகள், ஆசைகள், காமங்கள், எதிர்பார்ப்புகள், லட்சியங்கள், செய்யும் காரியங்கள்,நாம் செய்யாவிட்டாலும் விரும்பிய செயல்கள், கர்மங்கள், நமது எண்ணங்கள், பாவனைகள், நம் அனுபவங்களின் பாதிப்புகள் இவை அனைத்து  பாதிப்பினால் நமது சூட்சும சரீரம் நிர்மாணிக்கப்படுகிறது.


ஞானமடைந்தவுடனே புத்தர், தன் மனதிடம், 'மனமே! இதுவரை ஏகப்பட்ட சரீரங்களின் வீடு கட்டிக் கொடுத்தாய். இப்போது நீ ஓய்வு கொள்ளலாம்! இனி எனக்காக எந்த வீடும் கட்ட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. உனக்கு வந்தனம் செய்து விடை கொடுக்கிறேன். இனி உனக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை. ஏனெனில் எனக்கு ஒரு ஆசையும் இல்லை. இனி இதுவரை பல வீடு கட்டிக் கொடுத்த மனமே! போய்விடு!" என்றார்.


மரணத் தருவாயில் இருந்த புத்தரிடம் ஜனங்கள், "உங்கள் ஆத்மா பரமாத்மாவுடன் கலந்த பின் நீங்கள் எங்கு இருப்பீர்கள்?” என்று கேட்டனர். புத்தர், “நான் எங்காவது இருக்க முடியும் என்றால் பரமாத்மாவுடன் கலக்க முடியாது. ஏனென்றால், “எங்காவது” என்றால் எங்கும் இருக்க முடியாது. அதனால் நான் “எங்காவது” இருக்க மாட்டேன். எங்கும் ஆகிவிடு வேன்!" என்றார்.


ஆனால் மக்கள் கேட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். “எங்கே இருப்பீர்கள்? எங்கே போவீர்கள்?"


நீர்த் துளியிடம், "கடலில் சென்று விழுந்த பின் எங்கிருப்பாய்?" என்று கேட்கிறார்கள். துளியோ, 'கடலாகவே ஆகி விடுவேன்!' என்கிறது.


மற்ற துளிகள், 'சரிதான், ஆனாலும் எங்கே இருந்து கொண்டிருப்பாய்? எப்போதாவது சந்திக்கலாமே,' என்றால், கடலில் கலக்கும் நீர்த்துளி, "நீயும் கடலுக்கே வந்து சேர், சந்திப்பு ஏற்படும்," என்று கூறலாம்.

துளி கடலுடன் கலந்து விட்டது. அவரோடு சேர வேண்டுமானால் கடலுக்குச் செல்ல வேண்டும்.

துளி கடலுடன் இணையும். அதுவே வாழ்வின் ஆனந்தமாகும்! புத்தனைப்போல ஆசைகள் அறுத்து வாழத்துடிக்கின்றேன் முடியவில்லை என் பயணம், எனக்குள் நான் திருப்தி அடையும் வரை, அன்புக்காகாக, அரவணைப்புக்காக, ஆசைகளை யாருடன் சேர்ந்து அடக்கம் செய்யலாம் என பயணித்தக்கொண்டு இருக்கின்றேன், ஒரு புத்தனைப்போல,,,,,,,  அன்புடன் பேசாலைதாஸ்

வாழ்க்கை ஒரு சமன்பாடு. பேசாலைதாஸ்

 வாழ்க்கை ஒரு சமன்பாடு!. பேசாலைதாஸ்


வாழ்க்கை ஒரு சமன்பாடுதான், அதை தீர்க்கும் விடை தெரிந்தால் நீ சாந்தமாவாய், சமாதானமாவாய், அமைதி காண்பாய். நமக்குள் பல சமனற்ற தன்மைகள் உண்டு, சில கூடுதலாக இருக்கும், சில குறைவாக இருக்கும், நல்லவிடயம் கெட்ட விடயம் இரண்டையுமே சொல்கின்றேன். ஆக மொத்தத்தில் நிறைவாக எதுவும் நமக்குள் இல்லை. அதனால் தான் பைபிள் சொல்கின்றது, குறைவானது போகும் போது, நிறைவான ஆவி வருகின்றது என்று, இப்படியும் சொல்லலாம், நாம் வெறுமையாக்கப்படும் போது  பூரணத்தை பெற்றுக்கொள்கின்றோம் என்று.

தன்னை இழத்தல் என்றால் என்ன? நான் விளங்கிக்கொண்டதை உங்களுக்கு சொல்கின்றேன், நான் ஞானியல்ல, ஒரு முட்டாள் என வைத்துக்கொளுங்கள்! தன்னை இழத்தல் என்பது, நான் என்ற சுயத்தை இழப்பது, சுய நீதியோடு செயல்படாமல், தாழ்ந்தவன், பாவி என்று ஏற்றுக்கொள்ளுதலே தன்னை இழப்பதற்கு சமனாகும்! கத்தோலிக்கர் தினமும், பூசையில், நான் ஒரு பாவி என ஏற்றுக்கொள்கின்றேன் எனச்சொல்கின்றார்கள், உண்மை அதுவல்ல, உதடுகள் மட்டுமே அதை 

 சொல்கின்றன. குருவும் சேர்ந்தே அதை செய்துகொண்டு பலியை நிறைவேற்றுகின்றார். நமக்குள் ஞானம் அல்லது நிறைவு பெற்றுக்கொண்டதற்கான எந்த அடையாளமும் இல்லை, அதே கடுகடுப்பான முகம் ஆலையத்தை விட்டு வெளியேறும் போது!

 புத்தர் ஞான அமைதி தேடி, கடும் தவம் செய்தார், அவரால் ஞானம் அடைய முடியவில்லை, ஒரு கட்டத்தில் ஞானத்தை அடையும் கடுமையான முயற்ச்சியை கைவிட்டார், அந்த கணமே அவர் ஞானம் பெற்றார். அவருக்குள் அப்படி என்ன நடந்தது? தன்னிலையில், நான் அடைவேன் என்ற தன்முனைப்போடு நடந்து கொண்டபடியால் அவரால் ஞானம் பெறமுடியவில்லை.

விருந்தினர் சபையிலே, எல்லா ஆண்களுக்கும் மத்தியில், தான் ஒரு பெண்,அதுவும் ஊர் அறிந்த வேசை என பெயர்கொண்டவள், தன்னிலை மறுத்து, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என தன்னை மறுத்து, நறுமணத்தைலத்தால் இயேசுவின் பாதம் கழுவி, வெட்கம் சிறிதுமற்று, மானம் போனால் என்ன என தயங்காமல், ஒரு ஆணின் பாதத்தை, தன் தலைமுடியால் துடைத்த அக்கணமே, இறை இயேசுவின் இதயத்தில் சங்கமமாகி, ஞானம் கண்டாள்!

தன்னை இழப்பவன் வாழ்வை கண்டுகொள்கின்றான். இழப்பது பெறுவது என்ற சமன்பாட்டு சூத்திரமே வாழ்க்கை! மீண்டும் ஒரு மெய்த்தேடலில் உங்களை சந்திக்கின்றேன்,,,, அன்புடன் பேசாலைதாஸ்


 காயிலே புளிப்பதென்ன கன்னி இளம் மானே!   பேசாலைதாஸ்

கடவுளுமில்லை 

கத்திரிக்காயுமில்லை 

எல்லாம் பித்தலாட்டம்,

யாராவது கேள்வி கேட்க 

வேண்டுமானால் கேட்கலாம் 

என்றான் ஒரு நாத்திகன்,

சாதாரண பக்தன் ஒருவர்  

மேடைமீது ஏறினார்,

ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து,

தோலை மெதுவாக உரித்தார்,

பழத்தின் சுளையை 

தின்று கொண்டே,

பழம் இனிப்பாய் இருக்கிறதா 

என்று நாத்திகனை கேட்டார்,

பைத்தியக்காரனே 

நான் தின்று பார்க்காமல், 

பழம் இனிப்பா 

இல்லை புளிப்பா என்று,

எவ்வாறு சொல்லமுடியும் 

என்றான் நாத்திகன்,

அதேபோல் கடவுள் யார்,

அவர் எப்படிபட்டவர்,

அவரின் ஆற்றல் என்ன ?

என்பதை,

நீ ஆன்ம மார்க்கத்தில் 

ஈடுபட்டு பார்த்தால் தானே 

உனக்கு புரியும்,

கடவுளை இல்லை என்று 

எவ்வாறு  சொல்லுவாய்,

அனுபவித்து 

ருசித்துப் பார்க்காமல் 

ஏன் உளறுகிறாய், 

என்று கூறியவாறு 

மெதுவாக நடந்தார் ஆன்மவாதி,

வெட்கி தலை குனிந்தான் 

நாத்திகன்..

Friday, 30 August 2024

நான் என்னும் ஈகோ பேசாலைதாஸ்

 நான் என்னும் ஈகோ பேசாலைதாஸ்

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்...

அவர் ஒருநாள் #பூங்காவில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.

*#டால்ஸ்டாய்* அருகே வந்து, அவரைப் பார்த்து "என்னோடு விளையாட வர்றீங்களா..?: என்று கேட்டாள்.

அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.

மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், "நான் போய் வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அதைக் கேட்ட டால்ஸ்டாய், "உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று" என்றார்.

அதற்கு அந்தச் சிறுமி, "நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் ஷர்மிஸ்டாவுடன்  விளையாடினேன் என்று" என்றாள்.

உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்காக அவர் வெட்கப்பட்டார்...!

=================

ஆம்...

யாரும் யாரைவிடவும் ,

உயர்ந்தவரென்றோ !

தாழ்ந்தவரென்றோ !

மதிப்புமிக்கவரென்றோ !

அறிவானவரென்றோ !

அழகானவரென்றோ !

நிறமானவரென்றோ !

படித்தவரென்றோ !

பணக்காரரென்றோ !

ஏழையென்றோ !

நீங்கள் உங்களையும்,

நீங்கள் மற்றவரையும் நினைத்துவிடாதீர்கள்.

இப்புவிப் பந்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோவோரு சிறப்புக்கு உறியவர்கள்தான்.

வான்குருவியின் கூடு

வல்லரக்கு,

தொல்கரையான்,

தேன், சிலம்பி,

யாவருக்கும் 

செய்யரிதாலால்

யாம் பெரிதும்

வல்லோமேயென்று

வல்லமை பேச வேண்டாம். 

ஒவ்வொருவருக்கும் 

ஒவ்வொன்று எளிதாமே !

இச்சமூகத்தால் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத...

ஏழைகள்,

படிக்காத பாமரர்கள்,

ஆங்கிலம் தெரியா தாய்மொழி இயல்புடையவர்கள், 

மற்றவரால் கவரப்படாத,

மற்றவரின் கண்களை வசீகரித்து சுன்டி இழுக்காத,

கருத்தநிற மேனியை கொண்டவர்கள்,

எடுப்பாய் மினுக்காய் வனப்பாய் உடலமைப்பில்லாதவர்கள்,

வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) யாவருக்கும், உங்களைப்போலவே,,,,,,,!

சுயமரியாதை

கோபம்

உடல் வலி

மகிழ்ச்சி

பசி

உறக்கம் 

பிரிவின் வலி

சுடுசொல்லின் வலி 

இழிசொல்லின் வலி

புறக்கணிப்பின் வலி

போன்ற.......,

தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.

மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால், நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் .... நெட்டித்தள்ளி வதைசெய்து விடாதீர்கள்!

உலக அமைதிக்கு முதலில் நம்முடைய தன்முனைப்பு என்ற ஈகோவை (ego) கைவிடவேண்டும். ஈகோவால் உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்றிவிடுகிறது. எல்லா அமைதி கெடலுக்கும் ஈகோவும், பிறரிடமிருந்து எதிர்பார்த்தலுமே காரணமாயுள்ளது.

வாழ்க வையகம்! 

வாழ்க வளமுடன்!!

உடலுக்கு ஒன்பது வாசல் பேசாலைதாஸ்

 உடலுக்கு ஒன்பது வாசல் பேசாலைதாஸ்


உடலை விட்டு உயிர் பிரியும் வாசல்கள் 11 இருக்கின்றது என்பது நம்மில் அநேகருக்கும் தெரியாது. அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு. ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில் விளக்கமாக விவரித்துள்ளார்.

1ம் வாசல் - பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும். இவை நேரே நரகத்திற்கு செல்லும். திரும்பி வருவதற்கு நாளாகும்... அவ்வாறு வந்தாலும் நல்ல பிறவி கிடையாது. 2ம் வாசல் - பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும் இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும். 3ம் வாசல் - பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும்.

இந்த உயிர்கள் மறுபிறப்பில் இஸ்டபட்டவனாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும். 4ம் வாசல் - பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப்பிரியும். இவை மறுபிறப்பில் உணவுப் பிரியர்களாகவும், சாப்பாட்டு ராமர்களாகவும் பிறப்பார்கள். 5,6ம் வாசல்கள் - இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள் அதிக பாவம் செய்யாத உயிர்கள். இவை மறுபிறப்பில் நற்மணத்தையே விரும்பும்...

7,8ம் வாசல்கள் - இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும். முக்தி தேடி முயற்சிக்கும். 9,10ம் வாசல்கள் - இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும்.

இவைகளும் முக்தி தேடி முயற்சிக்கும். பழி பாவத்தைக் கண்டு அஞ்சி வாழும். குருபக்தி கடவுள் பக்தியுடன் வாழும். 11ம் வாசல் - சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் பழகிய யோகப் பயிற்சியின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபால வழியாக ஒளிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.