Saturday, 31 August 2024

புத்தனாகின்றேன்! பேசாலைதாஸ்

 புத்தனாகின்றேன் பேசாலைதாஸ்


வாழ்க்கை என்ற பயணத்தில், சிலவேளைகளில் நான் புத்தனாகின்றேன், ஏன் என்றே எனக்கு புரிவதில்லை. ஒருவேளை நான் வாழ நினைத்த வாழ்க்கை வேறு, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை வேறாக இருக்கலாம்.

 எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் காதல் உணர்வுகள், பாலி யல் இச்சைகள், எனக்குள்ளும் எழுந் ததுண்டு, ஆனால் கொஞ்சம் வித்தி யாசா மாக வந்தது, துறவறம் எனக்கு பிடிக்கும், அதனால் ஒரு சாமியாராக நான் முயற்ச்சித்ததுண்டு, இது வாலி பம் எட்டிப்பார்க்கும் போது நான் எடுத்த முயற்ச்சி, நான் விரும்பாமலே துறவு மடத்தில் இருந்து தூக்கிவீசப்ப ட்டேன்.

 பின்னர் என் வாழ்வில் எல்லாம் நடந்தது, போராளியாக ஆயுதம் ஏந்தி, காதல் இல்லாமல் கல்யாணமாகி, ஆனாலும் நல்லதோர் குடும்பத்தலை வனாகி, தந்தையாக, என் கடமை சரிவரச்செய்து, திரும்பிப்பார்க்கின் றேன், எனக்காக நான் வாழ்ந்ததில்லை அதுவே விடையாக வருகின்றது.

 எனக்காக வாழ்தல், அது எப்படி,?  இன்னும் புரியவில்லை எனக்கு, ஆத்ம விசாரணை மட்டுமே அடிக்கடி வருகின்றது, கிட்டதட்ட புத்தானாகி விடுவேனோ என, எண்ணத்தோன்றுகின்றது. எனக்குள் எழும்பும் ஆத்ம விசாரனைகளில்,நீங்களும் பங்கு கொள்வீர்களோ? என் ஆத்ம விசாரனை தொடர்கின்றது,,,,,

ஆத்மாவுக்கு வருவதும் இல்லை, போவதும் இல்லை. வருவது, போவது எல்லா விஷயங்களும் சரீரத்துடையதுதான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இரண்டு உடல்கள் இருக்கின்றது. ஒன்று நம் கண்ணெதிரே உள்ள உடல், இது நம் தாய் தந்தையரிடமிருந்து கிடைக்கிறது. பிறக்கிறது. இந்த உடலுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒரு எல்லை உண்டு,  அந்த எல்லை வரை வாழ்கிறது; பிறகு முடிந்து விடுகிறது. இந்த உடல், இந்த ஜன்மத் தோடு ஆரம்பித்து, மரணத்தோடு முடிவடைகிறது. அது வருகிறது; போகி றது. இது முதல் சரீரம்.

அதற்கு அடுத்து உள்ளே  மற்றொரு சரீரம், அது ஆத்மாவின் உள்ளாடை ஆகும்.மேலே உள்ள ஆடை ஸ்தூல சரீரம். மற்றது உள்ளே இருக்கும் ஆடை கண்களுக் குத் தெரியாத சூட்சும சரீரம். அது நமது சென்ற ஜன்மத்திலிரு ந்து கிடைக்கிறது என மற்ற சமயங்கள் கூறுகின்றன. கிறிஸ்தவம் இறவனால் உண்டாகின்றது, என்கின்றது.  ஸ்தூல சரீரம் தாதுக்களால் உண்டானது. அதாவது மண்ணில் இருந்து விளைந்தவை, இறைவன் மண்ணில்ஈருந்து மனிதனை படைத்து, அவன் நாசியிலே ஜீவ ஆத்து மாவை ஊதினார் அவன் ஜீவ ஆதுமமானான் என்கின்றது வேதம். அப்படிப்பட்ட ஜீவ ஆதுமா மீண்டும் இறவனிடம், இயற்கையிடம் செல்கின்றது அதுவே யாத்திரை செய்கிறது.


இந்தச் சூட்சும சரீரம் கர்ப்பதானத்தின் சமயத்தில் ஸ்தூல சரீரத்தில் பிரவேசிக்கிறது. கர்ப்பத்தில் பிரவேசிக்கிறது. இப்படிப் பிரவேசிப்பது இயற்கையாக, தானே இயங்கும் முறை யில் நேருகிறது. தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுவது போல, நதி ஓடிக் கடலில் சேர்வது போல. ஜனனத்தை வருவது என்றும் மரணத்தைப் போவது என்றும் கொள்கிறோம். ஆனால் ஆத்மா வருவதும் இல்லை, போவதும் இல்லை. அது நிரந்தரமானது அழிவதில்லை,  

எப்போதும் சூட்சும சரீரமும் அழிகிறதோ, அப்போதுதான் ஆத்மா பரமாத்மாவுடன் இணைகிறது என்பதல்ல. ஆத்மா எப்போதும் பரமாத்மாவுடன் இணைந்தே தான் இருக்கிறது. பரமாத்மா நாலாபுறமும் பரவியுள்ளார். எல்லா இடமும் அவரே! 

இந்த சூட்சும சரீரம் (உடல்)எந்த விஷயங்களால் ஆனது என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். நமது இச்சைகள், ஆசைகள், காமங்கள், எதிர்பார்ப்புகள், லட்சியங்கள், செய்யும் காரியங்கள்,நாம் செய்யாவிட்டாலும் விரும்பிய செயல்கள், கர்மங்கள், நமது எண்ணங்கள், பாவனைகள், நம் அனுபவங்களின் பாதிப்புகள் இவை அனைத்து  பாதிப்பினால் நமது சூட்சும சரீரம் நிர்மாணிக்கப்படுகிறது.


ஞானமடைந்தவுடனே புத்தர், தன் மனதிடம், 'மனமே! இதுவரை ஏகப்பட்ட சரீரங்களின் வீடு கட்டிக் கொடுத்தாய். இப்போது நீ ஓய்வு கொள்ளலாம்! இனி எனக்காக எந்த வீடும் கட்ட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. உனக்கு வந்தனம் செய்து விடை கொடுக்கிறேன். இனி உனக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை. ஏனெனில் எனக்கு ஒரு ஆசையும் இல்லை. இனி இதுவரை பல வீடு கட்டிக் கொடுத்த மனமே! போய்விடு!" என்றார்.


மரணத் தருவாயில் இருந்த புத்தரிடம் ஜனங்கள், "உங்கள் ஆத்மா பரமாத்மாவுடன் கலந்த பின் நீங்கள் எங்கு இருப்பீர்கள்?” என்று கேட்டனர். புத்தர், “நான் எங்காவது இருக்க முடியும் என்றால் பரமாத்மாவுடன் கலக்க முடியாது. ஏனென்றால், “எங்காவது” என்றால் எங்கும் இருக்க முடியாது. அதனால் நான் “எங்காவது” இருக்க மாட்டேன். எங்கும் ஆகிவிடு வேன்!" என்றார்.


ஆனால் மக்கள் கேட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். “எங்கே இருப்பீர்கள்? எங்கே போவீர்கள்?"


நீர்த் துளியிடம், "கடலில் சென்று விழுந்த பின் எங்கிருப்பாய்?" என்று கேட்கிறார்கள். துளியோ, 'கடலாகவே ஆகி விடுவேன்!' என்கிறது.


மற்ற துளிகள், 'சரிதான், ஆனாலும் எங்கே இருந்து கொண்டிருப்பாய்? எப்போதாவது சந்திக்கலாமே,' என்றால், கடலில் கலக்கும் நீர்த்துளி, "நீயும் கடலுக்கே வந்து சேர், சந்திப்பு ஏற்படும்," என்று கூறலாம்.

துளி கடலுடன் கலந்து விட்டது. அவரோடு சேர வேண்டுமானால் கடலுக்குச் செல்ல வேண்டும்.

துளி கடலுடன் இணையும். அதுவே வாழ்வின் ஆனந்தமாகும்! புத்தனைப்போல ஆசைகள் அறுத்து வாழத்துடிக்கின்றேன் முடியவில்லை என் பயணம், எனக்குள் நான் திருப்தி அடையும் வரை, அன்புக்காகாக, அரவணைப்புக்காக, ஆசைகளை யாருடன் சேர்ந்து அடக்கம் செய்யலாம் என பயணித்தக்கொண்டு இருக்கின்றேன், ஒரு புத்தனைப்போல,,,,,,,  அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment