Friday, 30 April 2021

ஆசை அதிகம் வைத்து, மனசை அடக்கிவைக்கலாமா?

 ஆசை அதிகம் வைத்து, மனசை  அடக்கிவைக் கலாமா?பேசாலைதாஸ் 


உணர்ச்சி என்றாலும், உரிமை என்றாலும் எதையாவது நாம் அடக்கினால் அது புரட்சியாக வெளிவரும், அல்லது அதற்கு எதிராக மனித மனம் சதா போராடிக்கொண்டே இருக்கும். இது மனிதனிடம் இருக்கும் பாலியல் உணர்ச்சிகளுக்கும் பொருந்தும், பாலியல் கவர்ச்சியினால் மனித மனம் காதல் வசப்படுகின்றது, அதுவே பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்யும் முதல் படியாகின்றது. அதனை முறைப்படி, அறஒழுக்கத்துக்குட்பட வித த்தில் அங்கீகரிக்க திருமணம் என்ற சடங்கு அவசியமாகின்றது. சில மதங்களில் துறவம் திருத்தொண்டு என்ற ரீதியில் இந்த பாலுணர்வு இடை யூறாக இருக்கும் என்பதற்காக துறவு என்ற கோணத்தில், இந்த பாலியல் உணர்ச்சிகளை அடக்குகின்றது. அதுவே பின்னர் பல விபரீதங்களுக்கு காரனமாகின்றது.

                                              தினந்தோறும் செய்திகளில் பார்க்கின்றோம், சாமி யார் பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சியில்லை ஈடுபட்டதாக அறிகின் றோம், இதற்கு காரனம் அடக்கப்பட்ட பாலியல் உணர்ச்சிகளே! அதற்காக துறவறம் தவறானது என்று நான் வாதிடவரவில்லை, பாலியல் உணர்வு களை உணர்ச்சிகளை கடந்து செல்லும் பக்குவம் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன். உணர்ச்சிகளை முற்றும் முழுதாக நிராகரித்து, துறவம் மேற்கொள்வது அபத்தமானது, பாலியல் உணர்ச்சிகளை அனுபவித்தே அதை கடந்து செல்லமுடியும், இதுதான் உளவியல் வழிமுறை. எதையும் அடக்ககூடாது.

                                         ஒரு துறவி, எவ்வாறு பாலியல் உணர்ச்சிகளை அனுபவி த்தபடி, அதை கடந்து செல்வது? சிக்கலான விடயமல்லவா! அதற்குத்தான் "தந்திரா" என்ற தியான பொறிமுறையுண்டு. ஒவ்வொரு படைப்புகளும், கடவுளின் இயற்கையின் அம்சங்கள். அந்த படைப்புக்குள் ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு, ஆறு, கடல், குளம், வாவி மலை, மரம், மிருகம் ,மனிதன் இப்படி எல்லாவற்றிற்குள்ளும் ஆணும் பெண்ணும் கலந்திருக்கும்.

                                                       ஆணாக இருக்கும் மனிதனுக்குள் பெண் இயல்பு ஒழிந்திருக்கும், அது போலவே பெண்ணுக்குள்ளும், ஆண் இயல்புகள் மறைந்திருக்கும். துறவியான ஒருவர், தனக்குள்ளே இருக்கும், அந்த ஆண் அல்லது பெண் உணர்வுகளுடன் தனது பாலியல் உணர்ச்சிகளை அனுபவி க்கமுயலும் போது, தன்னையே அவன் தரிசிக்கின்றான், அவ்வாறு தனக் குள் இருக்கும் படைப்பின் முழுமையை அடையும் போது பேரானந்த உண ர்வை அவன் பெறுகின்றான், பின்பு பாலியல் உணர்ச்சிகள் அவனுக்கு சிற்றின்பமாக தெரியும். அதுவே முழுமையான துறவு நிலை.

                                                   இந்த துறவு மனோநிலையில் உள்ளவர்கள், ஒரு போதும், பாலியல் இச்சைகளுக்கு இடங்கொடுக்கமாட்டார்கள், துறவு நிலையை எந்தவேளையிலும் கைவிடமாட்டார்கள், நான் சொல்லும் இந்த மனோநிலையில் துறவிகள் வாழுகின்றார்களா? என்பது அவரவர்களு க்கே வெளிச்சம். எனவேதான் தத்துவவாதிகள் சொல்கின்றார்கள் "உன்னையே நீ அறிவாய்" என்று, இயேசு சொல்கின்றார் முதலில் உங் களை நீங்களே அன்பு செய்யுங்கள் என்று, அதன் சூட்சுமம் இது தான் உங்களுக்குள்ளே இருக்கும் அந்த ஆணை, பெண்ணை காதலியுங்கள்!

எனவே புலன் ஆசைகளை அடக்கலாமா ?  முக்கியமாகப் பெண் ஆசையை.  பதில் இதுதான், புலன் ஆசைகளை - முக்கியமாக பெண் ஆசையை ஒருக்காலும் அடக்கக்கூடாது .  அந்த அடக்கப்பட்ட ஆசை பிரக்ஞை மனதிலிருந்து பிரக்ஞையற்ற மனதிற்குச் சென்று ஆழமாகப் பதுங்கிவிடும்  இந்த அடக்கப்பட்ட உணர்வு , சந்தர்ப்பம் பார்த்து இருக்கும் .  சமயம் வாய்த்தால் , பாம்பு போல சீறிப்பாயும் ! அப்பொழுது அவன் தன்னிலை மறந்து ஒரு பைத்தியம்போலச் செயல்படுவான் . அல்லது மிருகம்போல செயல்படுவான் . பெரும்பாலான போலிச்சாமியார்கள் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்தான் !  இவர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . எந்தப் புலன் உணர்வையும் அனுபவித்துத்தான் கடந்து செல்ல முடியும் .

ஒரு பெண்ணோடு உடல் உறவில் ஈடுபடும் போது, காம இச்சையின் உந்துதலில் அது இடம்பெறக்கூடாது, ஆனால் பெரும்பாலும் அது காம இச்சையின் உந்துதலில்தான் நிகழ்கின்றது. அதனால்தான் அவசரம், வேகம், படபடப்பு, பதற்றம் எல்லாம் ஒருமித்து நிகழ்வதால், அந்த உடல் உறவில் உண்மை மகிழ்வு இருப்பதில்லை. உடல் உறவு முடிந்த நிலையில், அன்பின் சல்லாபங்கள், சிலுமிசங்கள், சின்ன சின்ன சினுங்கள்கள், மெல்லிய கோபம் கலந்த ஊடல்கள் அங்கே இருப்பதில்லை, பெரும்பாலான உடல் இன்பங்கள், உடல் உறவுகள்,  நான் சொல்வது போல இருப்பதில்லை, இதனால் உண்மை அன்பு தேடி, உடல் உறவில் ஈடுபடும் உள்ளங்கள் ஏமாறுகின்றது. அங்கலாய்க்கின்றது, இன்னொரு ஆடவனை பெண்ணை நாடுகின்றது தேடுகின்றது. இதுதான் இன்றைய சமூகத்தில், குடும்பத்தில் ஏற்படும் எல்லா தகராறுகளுக்கும் காரனம்!

நான் நிறைய அவதானித்திருக்கின்றேன், ஆச்சரியப்படுகின்றேன், விழுந்து விழுந்து காதலித்த ஜோடிகளுக்கிடையில், விரிசல்கள் விவாக ரத்துக்கள், வேறு தொடர்புகளை காண்கின்றேன். நான் காதலித்து திருமணம் செய்தவனில்லை, அது எனக்கு நிகழ்வில்லையே என்ற ஏக்கம், இருந்ததுண்டு, ஆனால் காதலித்து வாழ்கை நடத்துபவர்களின் சித்திர த்தை பார்த்தால், என் போன்றவர்களின் திருமணவாழ்வு அறிவுபூர்வமா னதாக, அன்பு வழியாக தெரிகின்றது, அங்கே காதல் இயற்றப்டுகின்றது. அதனால்தான் சொல்கின்றேன், முதலில் உங்களை காதலியுங்கள், பின்னர் நீங்கள் காதலிக்கும், காதலிக்குள் இருக்கும் ஆன்மாவோடு களவி சுகம் காணும் முயற்சியில் இறங்குங்கள், முதலில் காமம் தான் வாசல் திறக்கும், அந்த வாசாலில் நின்றுவிடாதீர்கள், உள்ளே செல்லுங்கள், அன்பின் வயப்பட்டு, இரண்டறக்கலந்து இன்பம் கொள்வீர், இறையுணர்வு மெல்ல மலரும்! ஆதலில் காதல் செய்வீர், அடக்கியாளும் ராஜபக்சாக்கள் போல அன்பின் ராம்ராச்சியத்தில் வாழத்தேவை இல்லை.  அன்புடன் பேசாலைதாஸ்

 

நிர்வானம்

 நிர்வாணம்.....பேசாலைதாஸ்

👨இந்தியாவில் வாழ்ந்த ஷாஜகான் என்ற பேரரசர் ஒரு அழகான பெண்னை விரும்பினார் .. 

👨ஆனால் அந்த பெண்ணோ அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை .. 

👨அவர் ஒரு பெருந்தன்மைக்காரர் ..

அதனால் அவர் அவளை சம்மதிக்கவைக்க முயன்றார்..

ஆனால் அவரால் அது  முடியவில்லை ..

👨ஆனால் அவளோ அவரது மெய்க்காப்பாளர் ஒருவரிடம் காதல் வயப்பட்டு இருந்தாள் ..

👨இதைக் கண்டு கொண்ட அவர் மிகவும் கோபம் அடைந்தார் .. அவர்கள் இருவரும் உடனடியாக பிடிக்கப் பட்டு அரச சபைக்கு கொண்டு வரப்பட்டனர் ..

👨ஷாஜகான் அங்கேயே அப்போதே இருவருடைய தலையையும் 

துண்டிக்க ஆணையிட்டார் .. 

👨ஆனால் அவரது வயதான பிரதான மந்திரியாக இருந்த பெரியவர் ஒருவர் , அரசே அப்படி செய்யாதீர்கள் ..அது அவர்களுக்கு சரியான தண்டனையாக அமையாது ..

👨கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் என்று கூறி நான் இவர்களுக்கு சரியான தண்டனையை அளிக்கிறேன் என்றார் ..

👨அவர்கள் இருவரையும் நிர்வாணம் ஆக்கி அவர்கள் இருவரும் கட்டிப் பிடுத்துக் கொண்டிருக்கும்படி ஒன்றாக கட்டி அதன் பின் அந்த அரச சபையில் இருந்த ஒரு தூணில் கட்டும்படி ஆணையிட்டார் ..

👨இதைக்கேட்ட அங்கிருந்த மற்றவர்களால் இதை நம்ப முடியவில்லை ..இது என்ன தண்டனை ?  இது அவர்களுக்கு ஒரு பரிசு போல அல்லவா அமைந்துள்ளது என்றனர் .. 

👨இதைத்தானே அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்று மற்றவர்கள் நினைத்தார்கள் ...

👨அந்த இரண்டு காதலர்கள் கூட இது என்ன தண்டனை .. இது 

ஒரு வெகுமதி போல அல்லவா இருக்கிறது என்று நினைத்து இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள் ..

👨ஆனால் அவர்கள் நினைப்பு தவறாகி விட்டது ..

👨இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் ஓடி விடாதபடி ஒரு கயிற்றினால் கட்டப்பட்டு பிறகு ஒரு தூணில் கட்டப்பட்டு இருந்தனர் ..

👨நீங்கள் எவ்வளவு நேரம் தான் ஒருவரைக் கட்டிப் பிடிக்க முடியும் ..ஐந்து நிமிடம் .. அரைமணி நேரம் .. இருபத்தி நான்கு மணி நேரம் சென்றது .. பிறகு ஒருவரை ஒருவர் வெறுத்தனர் ..

👨அவர்கள் இருவருக்கும் வியர்த்தது .. அவர்கள் உடலும் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது ... 

👨இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து அந்த பிரதம மந்திரி அவர்களை விடுதலை செய்யுங்கள் .. அவர்களின் ஆடைகளை கொடுத்து அனுப்புங்கள் என்றார் ..

👨அவர்கள் இருவரும் தங்களின் ஆடைகளைப் பெற்றுக் கொண்டு எதிர் எதிர்த் திசையில் ஓடி விட்டனர் .. 

👨அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை .. அவர்கள் போதுமான அளவு சந்தித்து விட்டனர் ..

👨உங்கள் உடல் இறக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் ..உயிர்த் துடிப்புள்ள ஏதோ ஒன்று அதனுள் இருந்து கொண்டு உடலை இயக்குகிறது ..

👨அந்த ஒன்று இந்த உடலை விட்டு பறந்து செல்கின்ற அந்த நொடியே இந்த உடலின் உண்மை நிலை வெளிப்படுத்தப் படும் ..

தியானத்திற்கு பெண் இன்பம் ( Sex ) தடையாகவே இருக்கும்

தியானத்திற்கு பெண் இன்பம் பேசாலைதாஸ்

தியானத்திற்கு பெண்

இன்பம் ( Sex ) தடையாகவே இருக்கும் என்று கூறும் பௌத்தத்திலிருந்து 

தந்திரா எப்படி வளர முடியும்....???

*#ஓஷோ_பதில்* : " புத்தர் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

அவர் குறிப்பிட்டது என்னவென்றால் ,

ஒருவன் தியானத்திற்குள் ஆழமாகச் சென்றால்

அவன் பெண் இன்பத்தைக் கடந்து விடுவான் என்பதுதான் .

ஆனால் மக்கள் அதைப் புரிந்துகொள்ளாமலே கடந்து செல்வதற்குப் பதிலாக 

அதனோடு சண்டைபோட ஆரம்பித்து விட்டார்கள் 

நீங்கள் அதைப் புரிந்துகொள்ள அதை நட்புடன் அணுக வேண்டும் 

அதனுடன் சற்று இணைந்து செல்லவேண்டும் 

பௌத்தம் , இந்த உலகத்தில் உள்ள மிகச்சிறந்த ஆன்மீகத் தன்மையுள்ள மதங்களில் ஒன்றாகும் 

இப்படி மக்கள் பாலுணர்வைத் தவறாகப் புரிந்துகொண்டு 

அதற்கு எதிராகச் சென்றாலும் அதனுடன் சண்டை போட்டாலும் 

அது உங்களை எதிர்க்க ஆரம்பிக்கும் 

அது உங்களை முழுமையாக ஆக்கிரமிக்க முனையும் 

இந்த மிகவும் வலுவான சக்திமிக்க பாலுணர்வை அடக்கி யாரும் வென்றதாகச் சரித்திரம் இல்லை 

உங்களுடைய சந்நியாசிகள் உடலுறவைப்பற்றி மிக அதிகமாகவே கனவு காண்பவர்கள் 

பகலில் அதை மறுப்பதுபோல வேடம் போடுவார்கள் 

ஆனால் இரவில் பல பெண்களுடன் கனவுலகில் இருப்பார்கள்....!!!

அது இப்பொழுது அவர்களது மன ஆழத்திலிருந்து வருகிறது 

பகலில் பிரக்ஞையாக அதை அவர்கள் அடக்கி வைத்திருக்கலாம் 

ஆனால் இரவில் தூங்கும்பொழுது பிரக்ஞை நிலை மறைய கனவு நிலை மேலே வருகிறது 

ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் 

அடக்கப்பட்டவை அனைத்தும் மிக ஆழமாக அங்கேயேதான் இருக்கும் 

அதிலிருந்து உங்களால் விடுபட முடியாது 

ஆனால் வெளியிடப்பட்டவை அனைத்தும் மெல்ல மறைந்துபோகும் 

புத்த சந்நியாசிகளுள் , பெண் சந்நியாசிகளும் இருந்திருக்கிறார்கள் 

எல்லோருமே பாலுணர்வைப் புரிந்து வைத்திருந்தார்கள் 

கடந்து சென்றிருக்கிறார்கள் 

பாலுணர்வு இன்பம் ,  அதைப் புரிந்துகொண்டால் 

அதைத் தியானத்திற்கு ஒரு ஏணியாக மாற்றிக்கொள்ளலாம் 

பெண் இன்பம் என்பது தியானத்தில் கீழான படிகள், அவ்வளவுதான் 

அதையே தந்திரா மூலம் மேலான நிலைக்குக் கொண்டு செல்லலாம் 

தேவை , மிகுந்த விழிப்புணர்வு   

நான் என்னை தேடுகின்றேன்

நான் என்னை தேடுகின்றேன் பேசாலைதாஸ் 


நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது. 

ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்சனைகள் அல்ல; 

உங்களின் பலவீனம் தான் பிரச்சனை. நீங்கள் உங்களுக்குள் இருப்பதை -- நான் இருக்கிறேன் -- என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன. கெட்டிப்படுகின்றன. 

மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு 'ஆன்மா' பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்பு அல்ல என்றும், 

ஆனால், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். 

நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். 

அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா -- நீங்கள், ஆன்மாவாக ஆகவில்லை, என்றாலும்கூட, நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

               சத்யத்தைத் தேடுபவரான மௌலிங்கப்புத்திரர்  என்பவர் புத்தரிடம் வந்தார். புத்தர் அவரிடம், "நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

              அதற்கு மௌலிங்கப்புத்திரர், "நான் எனது ஆன்மாவைத் தேடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்!" என்றார்.

              தான் சொல்வதையெல்லாம் செய்வேன் என்று ஒரு வாக்குறுதி   அளிக்கும்படி மௌலிங்கப்புத்திரரிடம் புத்தர் கேட்டார். அதைக் கேட்ட மௌலிங்கப்புத்திரர் அழுதார்.

 அவர் புத்தரிடம், "என்னால் எப்படி வாக்கு கொடுக்க முடியும்? நான் என்பவன் இன்னமும் இல்லையே, எப்படி என்னால் வாக்குறுதி அளிக்கமுடியும்? நாளை நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாக்குறுதி அளிக்கக்கூடிய அந்த ஆன்மாவை நான் பெற்றிருக்கவில்லை. எனவே, நீங்கள் முடியாத ஒன்றை என்னிடம் கேட்காதீர்கள்.  நான் முயற்சி செய்கிறேன். அதிகபட்சம் நான் இதைத்தான் கூற முடியும். நீங்கள் இதைச் சொன்னாலும், அதை நான் செய்கிறேன் என்று என்னால் கூற முடியாது; ஏனெனில், அதைச் செய்வது யார்? வாக்குறுதி கொடுக்கின்றதையும், வாக்குறுதியை நிறைவேற்றுகின்றதுமாகிய அந்த ஒன்றினைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் அதைப் பெறவில்லை". என்றார்.

                 அதைக் கேட்ட புத்தர், "மௌலிங்கப்புத்ரா, உன்னிடம் இந்த பதிலைக் கேட்பதற்காகத் தான் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். நீ என்னிடம் வாக்குறுதி அளித்திருந்தால், நான் உன்னை திருப்பி அனுப்பி இருப்பேன். நீ என்னிடம், "நான், நீங்கள் கூறுவதைச் செய்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்," என்று நீ கூறியிருந்தால், உண்மையிலேயே நீ ஆன்மாவைத் தேடுபவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பேன். 

ஏனெனில், சாதகன் ஒருவன், எப்போதும் தான் இன்னும் அதை அடையவில்லை என்று அறிய வேண்டும். இல்லையெனில், தேடுதலின் நோக்கம் என்ன? நீ ஏற்கனவே அதுவாக இருந்தால், அதற்கு அவசியமே இல்லையே. நீ அதுவாக இல்லை!  மேலும், ஒருவர் இதை உணர்ந்து கொண்டால், அதன்பிறகு அவரது ஆணவம் ஆவியாகிப் போய்விடும்", என்று பதில் கூறினார். 

Wednesday, 28 April 2021

வாழ்வின் மையம்

 வாழ்வின் மையம் பேசாலைதாஸ்

வாழ்க்கை பரந்து விரிந்த தத்துவம். அது இந்த உலகத்தோடு மட்டும் நின்று விடப்போவதில்லை, இறப்பிற்குப்பின்னர் அது பிரபஞ்சத்தை சார்ந்திருக்கும்,  பிறப்புக்கும் முன்னரும் பிரபஞ்சத்தில் தான் இருந்தது. இது மனிதர்களுக்கு புரிவதில்லை, அதனால்தான் பிறப்புக்கு முன்னே இருந்தது உனக்கும் புரியாது, இறந்த பின்னாளே நடப்பது என்ன எனக்கும் தெரியாது என கவிஞன் கண்ண தாசன் பாடினான். வாழ்வே கடவுளின் இயக்கம், வாழ்வே கடவுளின் மையம் என்பது என் சிறுமதியின் புரிதல்!

 ஒருசமயம் பாக்தாத்தின் மன்னன் சுல்தான், ஒரு சிறந்த ஏற்பாடு செய்தான். அதாவது தன்னிடம் உள்ள கலைப்பொருள்களையும் நகைகள் மற்றும் விலை யுயர்ந்த உடைகள் போன்றவற்றை ஒரு கண்காட்சி போல நடத்தினான் . மக்கள் திரண்டு ரசித்தார்கள் .அப்பொழுது அந்த சுல்தான் திடீரென்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை செய்தான் . அதாவது யார் யார் தான் விரும்பிய பொருள்களைத் தொடுகிறார்களோ , அது அவர்களுக்குச் சொந்தமாகும் என்பதுதான் !

மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தொட்டு எடுத்துக்கொண்டார்கள் .அப்பொழுது அரச பீடத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அடிமைப்பெண் சிறிது சிந்தித்தவாறு நின்றி ருந்தாள். அப்பொழுது அந்த சுல்தான் தன் அரச பீடத்தில் வந்து உட்கார்ந்தான் . உடனே அந்த அடிமைப்பெண் அந்த சுல்தானைத் தொட்டுவிட்டாள் ! அந்தப் பெண்ணின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்த அந்த அரசன் , " நீ இந்த நாட்டுக்கு அரசனான என்னையே தொட்டுவிட்டாய் . இனிமேல் இந்த நாடே உனக்குச் சொந்தம் ! என்றான் . இந்தக் கதையில் நீங்கள் எதை புரிந்து கொண்டீர்கள்?

 வாழ்வு என்பது மிகப்பெரியது அதன் வெளிச்சுற்று மிக ஆடம்பரமானது .நீங்கள் இந்த வெளிச்சுற்றில் உள்ள ஒவ்வொரு ஆடம்பரப் பொருள்களையும் தொட்டு அடையப்போகிறீர்களா? அல்லது அந்த வாழ்வுக்கு ஆதாரமான அதன் மையத்தில் இயங்கும் கடவுளைத் தொட விரும்புகிறீர்களா ? என்னைப் பொறு த்தவரையில் , வாழ்வேதான் கடவுள் . 

ஆனால் அந்த வாழ்வில் இயேசு வர்ணித்த ஆடம்பர செல்வந்தனும் இருக்கின்றான் , ஏழை லாசரும் இருக்கின்றார், வாழ்விலே இராஜபோகம் துறந்த புத்தரும் இருக்கிறார். பெரும்பாலோர் வாழ்வு என்றால் வியாபாரம் , பணம் , அதிகாரம் , கௌரவம் , அரசியல் , குடும்பம் , பெண் இன்பம் என்று தான் நினைக்கிறார்கள். இவையெல்லாம் வாழ்வின் மிக மேலோட்டமான அம்சங்கள் என நான் நினைக்கின்றேன்.

 இவைகளெல்லாம் கடவுள் என்ற அரண்மனையின் வாசல்கள் . இவைகள் எல்லாம் சலிப்பை உண்டு பண்ணக்கூடியவை . சிற்றின்பத்தில் சேர்ந்தவை . மாறாகப் பேரின்பம் என்பது அந்த அரண்மனைக்குள் இருக்கிறது . அங்கு உண்மையான வாழ்வு இருக்கிறது .நீங்கள் வெறுமனே சாப்பிட்டுக் கொண்டும் , குடித்துக் கொண்டும் , திருமணம் செய்துகொண்டும் , பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும் , இருப்பது மிகவும் மேலோட்டமான வாழ்வு . 

இவர்கள் தங்கள் ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவது இல்லை . மாறாக இன்னொரு சாரார் , கடவுளைப் பற்றியும் , அடுத்த உலகத்தைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டு , சாப்பிடுவது , குடிப்பது மற்றும் சந்தோஷமாக இருப் பதில் அலட்சியம் காட்டுகின்றனர் .நீங்கள் எல்லா செயல்களிலும் உங்களுடைய பிரக்ஞைத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் . 

அப்படிச் செய்தால் , சாப்பிடுவது குடிப்பது பெண் இன்பம் அனுபவிப்பதுகூட தியானமாகிவிடும் . 

எதையும் தேர்ந்தெடுக்காதீர்கள் . 

ஒருசமயம் வாழ்வின் வெளிச் சுற்றில் இருக்கவும் . மறுசமயம் வாழ்வின் உள் மையத்தில் இருக்கவும் .

 உலகத்திலும்/கடவுளிடமும்/வாழ்விலும் ஒருங்கே இருக்க முயற்சி செய்யுங்கள் "

Monday, 26 April 2021

மணவாட்டி

 ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி

எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள்

அவள் எங்கிருந்து வந்தாள்

அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை 

ஆனால், அவள் பேரழகி 

ஊரே ஒன்று கூடி அவளைப் பார்த்துத் திகைத்தது 

ஊரில் இருந்த அத்தனை இளைஞர்களும் 

சுமார் 300 பேர் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள் 

அவள் அவர்களை அழைத்தாள் 

"நானோ ஒருத்தி 

நீங்களோ 300 பேர்

நான் ஒருவரைத்தானே மணக்க  முடியும்..???

அதனால் ஒன்று செய்யுங்கள் 

நான் நாளைக்கு வருகிறேன் 

உங்களுக்கு 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன்

உங்களில் யார் புத்தரின் தாமரைச் சூத்திரத்தை மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்களோ

அவரை நான் மணந்து கொள்கிறேன் என்றாள் 

இளைஞர்கள் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடினார்கள்

உண்ணவில்லை; உறங்கவில்லை.

இரவும் பகலுமாய் அதை மனப்பாடம் செய்வதில் முனைந்தார்கள் 

அடுத்த நாள் காலையில் அவள் வந்தாள்

பத்து இளைஞர்கள் அதை ஒப்புவித்து விட்டார்கள் 

"சரி... நானோ ஒருத்தி

எப்படி 10 பேரை மணப்பது ....??? 

இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன்

யார் அதன் பொருளைச் சரியாக விளக்குகிறார்களோ 

அவரை நான் மணக்கிறேன்  நான் சொல்வதை புரிந்துகொள்ளுங்கள் 

ஒப்புவித்தல் எளிய காரியம்  

புரிந்து கொள்ளாமலே கூட ஒப்புவித்து விட முடியுமே," என்றாள் 

நேரமே இல்லை

ஒரு பகலும், ஓர் இரவுமே இருக்கிறது

தாமரை சூத்திரமோ நீளமானது

போதை வந்துவிட்டால் வேறு வழி ஏது..??? 

எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள்

திரும்பி ஓடினார்கள்  

கடுமையாக அதை புரிந்துகொள்ள முயன்றார்கள் 

மறுநாள் மூன்று பேர் மட்டுமே வந்து நின்றார்கள்

அவர்களுக்கு பொருள் விளங்கிவிட்டது 

அழகி சொன்னாள்

" மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு விட்டதே

எண்ணிக்கை என்னவோ குறையத்தான் செய்கிறது

ஆனால், சிக்கல் அப்படியே தான் இருக்கிறது 

300லிருந்து 3 என்பது பெரிய வளர்ச்சிதான்

ஆனால், மூவரை நான் எவ்வாறு மணப்பது..??? 

ஒருவரைத் தானே மணக்க முடியும்

ஆகவே, இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன் 

சூத்திரத்தைப் புரிந்து கொண்டதோடு நில்லாமல் 

அதன் சுவையை யார் உணர்ந்திருக்கிறார்களோ 

அவரை நான் மணக்கிறேன்  

நீங்கள் நன்றாகவே விளக்கினீர்கள்

விளக்கம் அறிவுபூர்வமானது  

நேற்றைவிடச் சிறப்புதான் 

ஆனால், விளக்கம் அறிவுபூர்வமானதாயிற்றே..!!!

தியானச் சுவை, சுவையின் மணம் இருக்க வேண்டாமா..???

அந்த தாமரை உங்களுக்குள் பிரவேசித்திருக்க வேண்டும்  

நீங்கள் தாமரையாக மாறியிருக்க வேண்டும்

அதன் நறுமணத்தை நான் அனுபவிக்க வேண்டும்

ஆகவே, நாளைக்கு பார்க்கலாம்: என்றாள் 

மறுநாள் ஒருவன் மட்டுமே வந்தான் 

அவன் சாதித்து விட்டான் 

அவள், அவனை ஊருக்கு வெளியில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் 

அந்த வீட்டை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை 

மிக அழகான வீடு அது 

கனவு மாளிகை 

அவளுடைய பெற்றோர் அவனை 

வாசலில் வரவேற்றார்கள்   

நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் 

என்றும் சொன்னார்கள்  

அந்தப் பெண் உள்ளே போய்விட்டாள்  

இளைஞன் அவளுடைய பெற்றோரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்   

பிறகு அவர்கள் 

"அவள் உனக்காக உள்ளே காத்துக் கொண்டிருப்பாள்   

இது தான் அவள் அறை," என்று ஒன்றைச் சுட்டிக் காட்டினார்கள் 

அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்   

அங்கே யாருமே இல்லை  

அவன் அங்குமிங்கும் பார்த்தான் 

ஆனால் , ஒரு கதவு, தோட்டத்திற்குச் செல்வது திறந்து கிடந்தது 

ஒருவேளை அவள் தோட்டத்திற்குச் சென்றிருக்கலாம் என்று 

அதன் வழியாகப் பின்பக்கம் சென்றான் 

அங்கே , பாதையில் அவளது காலடிச் சுவடுகள் தென்பட்டன   

அவற்றைப் பின்பற்றி நெடுந்தூரம் போனான் 

ஒரு மைல் நடந்த பிறகும் அவளைக் காணவில்லை  

தோட்டத்தின் எல்லையில் ஓர் ஆறு காணப்பட்டது 

அவளது காலடிச் சுவடிகளும் மறைந்து விட்டன 

இரண்டு தங்க மிதியடிகள் மட்டுமே காணப் பட்டன 

அவை அவளுடைய காலணிகள்  

அவன் திகப்படைந்தான்   

என்ன நேர்ந்தது...??? 

அவன் திரும்பிப் பார்த்தான்  

தோட்டமும் இல்லை 

வீடும் இல்லை 

பெற்றார்களும் இல்லை   

ஒன்றுமே இல்லை 

மறுபடியும் ஆற்றுப் பக்கம் திரும்பினான் 

ஆற்றையும் காணோம் 

அந்த மிதியடிகளும் காணோம்   

அவன் வெட்ட வெளி வெறுமையில் நின்று கொண்டிருந்தான் 

அப்போது ஒரு சிரிப்புக் குரல் கேட்டது 

அதைக் கேட்டதும் அவனும் சிரித்தான் 

அவனுக்குத் திருமணம் நடந்து விட்டது 

அழகான பௌத்தக் கதை இது   

அவன் வெறுமையை மணந்து கொண்டு விட்டான்

அதாவது , சூனியத்தை

இந்தத் திருமணத்தைத்தான் எல்லா ஞானிகளும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் 

இயேசு கிறிஸ்துவின் 

'மணவாட்டி' ஆகும் கணம் இதுதான் 

அல்லது கண்ணனின் ஒரு 'கோபி ' ஆதல் 

எல்லாம் மறைந்து போகும்   

பாதை, தோட்டம், வீடு, பெண்,  காலடிச் சுவடுகள் கூட 

எல்லாம் எல்லாம் காணாமற் போய்விடும் 

மிஞ்சுவது சிரிப்பு மட்டுமே  

பிரபஞ்சத்தின் அடி வயிற்றிலிருந்து பிறக்கும் சிரிப்பு அது

நிகோட்

 உலகில் ஜைன மதத்தினர் அதிக அளவில் இல்லை. 

சுமார் 3.5 கோடி பேர் தான் இருப்பார்கள்.

 அவர்களும் இந்தியாவில் மட்டுமே வசிப்பவர்கள். 

ஒரு ஜைனன் கேட்கும் கேள்வியை உலகில் வேறு எவரும் கேட்க முடியாது.

 அவர்கள் கேட்கும் கேள்வி உண்மையாக இருந்தால் இயற்கையாக இருந்தால் அது எல்லா மதத்தினர் மத்தியிலும் எழும். 

 அவனுக்கு வினோதமான  கேள்வியைத் தருவது அவனது மதப்புத்தகங்கள்.

 எடுத்துக்காட்டாக ''நிகோட்'' என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

 ஜைன மதத்தின் உண்மையான கேள்வி ''நிகோட்'' என்றால் என்ன என்பது.

 ஜைனன் தான் அந்த கேள்வியை கேட்பான்.

 ''நிகோட்'' என்றால் என்ன?

பொதுவாக ஜைனர்கள் கடவுளை நம்புவதில்லை. 

நீங்கள் கேட்பீர்கள்.. ''இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது?.. 

மக்கள் எப்படி உருவாகிறார்கள்?'' என.

 கடவுளுக்கு மாற்றாக ஜைனர்கள் உருவாக்கியது தான் ''நிகோட்''.

 ஜைனர்கள் அறிவியல் ரீதியான பதிலை சொல்வார்கள்.. 

பிரபஞ்சம் எப்போதும் இங்கே தான் இருக்கிறது என. 

ஆனால் மக்கள் எப்படி உருவாகிறார்கள்..? 

மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது.. 

இந்த மக்களை யாரும் உருவாக்கவில்லையாயின்.. 

அவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள்?

போன்ற கேள்விகள் வருமல்லவா

 அதை எதிர்கொள்ள தான் ''நிகோட்'' எனும் சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள். 

மகாவீரரின் காலத்தில் இந்தியாவில் வெறும் இரண்டு கோடி மக்கள் தான் வாழ்ந்துவந்தார்கள். 

ஆனால் இன்றோ நூறு கோடியை இந்தியா தாண்டிவிட்டது. 

புதிதாக உருவாகும் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?. 

இத்தனை நாள் எங்கே ஒளிந்திருந்தார்கள்?. 

இவர்களின் பிறப்பு இறப்பு செயல்பாட்டை கண்காணிப்பவர் யார்?.

 எப்போது அவர்கள் பிறக்க வேண்டும்?.

 எப்போது அவர்கள் பிறக்கக் கூடாது?.

 போன்ற கேள்விகள் எழுமல்லவா?

 அதனால் ஜைனர்கள் அதற்கென்று ஒரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டி வந்தது. 

அதற்கு ''நிகோட்'' எனப் பெயர் வைத்தார்கள். 

நிகோட் என்பது மனித ஆத்மாக்கள் உறக்க நிலையில் வானில் இருப்பவை.

 பலகோடி ஆத்மாக்கள் காலமற்ற நிலையில் தன் பிறப்பிற்காக உறக்கத்தில் காத்திருக்கின்றன. 

இந்த உறங்கும் ஆத்மாக்களில் சில விழிப்புணர்வு பெற்று பிறப்பெடுக்கின்றன. 

உறக்க நிலையிலுள்ள பல ஆத்மாக்களின் சங்கமத்தைத் தான் ''நிகோட்'' என ஜைனர்கள் சொல்கிறார்கள். 

கடவுளுக்கெதிராக அவர்கள் உருவாக்கிய நிகோட் சித்தாந்தமும் கேள்விக்குறியது தான்.

 எல்லா ஆத்மாக்களும் விழித்துக் கொண்டால் நிகோட் காலியாகும் அல்லவா?.

தேனீக்கள் தேன் கூட்டை காலி செய்வதைப் போல ஒரு  நாள் மாறுமல்லவா?. 

அன்று கருத்தடையே தேவையில்லாமல் போகும். 

திருமணமானாலும் குழந்தைபிறக்காது.

 ஏனெனில் நிகோட் காலியாகிவிட்டதே.

சில ஜைன குருமார்களிடம் இது குறித்து நான் கேட்டேன். 

எல்லா ஆத்மாக்களும் விழிப்புற்று நிகோட் காலியானால் புதிய பிறப்பு ஏற்படாதா? என. 

அவர்களிடம் அதற்கான சரியான பதிலில்லை. 

அவர்கள் '' முடிவற்ற நிலையிலான ஆத்மாக்கள் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பதாக எங்கள் வேதப்புத்தகங்கள் சொல்கின்றன'' என சொல்கிறார்கள்.

 எண்ணிக்கை என்றாலே எண்ணப்பட்டிருக்க வேண்டும். 

அப்படி எண்ணப்பட்டிருந்தால் அவை முடிவற்றவையாக இருக்க  முடியாது.

 எண்ணப்படவில்லை என்றாலும் முடிவற்றவை என்று சொல்ல முடியாது.

 ''நிகோட்'' என்றால் என்ன என இந்த உலகம் கேட்கப் போவதில்லை. 

இந்த கேள்வி எப்போதும் புத்தகரீதியான கேள்வியாகவே இருக்கப்போகிறது.

மலை நகர்ந்து போனால்,,,,?

 விவேகானந்தர் அமெரிக்காவின் ஒரு நகரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் பைபிளில் கூறப்பட்டுள்ள ஒரு கருத்தை, அதாவது நம்பிக்கை ஒரு மலையைக்கூட அசைத்து விடும் என்கிற இயேசுவின் வாக்கியத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.

அப்போது அங்கு முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி மிகவும் சந்தோஷப்பட்டாள்

. ஏனென்றால் அவளுக்கு அவள் வீட்டின் அருகில் இருந்த ஒரு சிறு குன்று இடையூறாக இருந்தது.

எனவே அவள் தனக்குள், "நம்பிக்கை என்பது மலையையே நகர்த்திவிடும் என்கிற போது இந்த சிறு குன்று எம்மாத்திரம்?" என்று நினைத்தாள்.

அவள் வீட்டிற்கு ஓடினாள். அவள் ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

கடைசி முறையாக அந்தக் குன்றினைப் பார்த்தாள். ஏனெனில் இப்போது அந்தக் குன்று மறைந்துவிடப் போகிறது.

அதன் பிறகு அவள் ஜன்னலை மூடிவிட்டு

"கடவுளே, நான் உன்னை நம்புகிறேன். இங்கிருந்து இந்தக் குன்றினை அகற்றி விடும்." என்று மூன்று முறை கூறினாள்.

மூன்று முறை கூறிய பின்னர் அந்தக் குன்று இன்னும் அங்கு உள்ளதா என்று பார்ப்பதற்கு ஜன்னலைத் திறந்து பார்த்தாள்.

ஆனால் அந்தக் குன்று அப்படியே இருந்தது.

எனவே அவள், "எதுவும் அசையாது என்று முன்பே எனக்குத் தெரியும். இது முட்டாள்தனமானது என்பதை நான் ஏற்கனவே அறிவேன்"என்று கூறினாள்.

எனவே நீ ஏற்கனவே இது ஒரு முட்டாள்தனம் என்று அறிந்திருந்தால், அதன் பிறகு நம்பிக்கை என்பது எதையும் நகர்த்தாது.

அதன் பின்னர் எதுவானாலும் அது மலைதான்.

ஏனெனில் அந்த மலை நகர்ந்துவிடும் என்று நீ அறிவதுதான் நம்பிக்கை என்பதன் அர்த்தம்.

Monday, 19 April 2021

காதலால் கனிந்துருகி,,,,,,,,

காதலால் கனிந்துருகி ,,,,,,,பேசாலைதாஸ் 


காதலால் கனிந்துருகி கடவுளை கானுங்கள். கண்ணனுக்காக மீரா ஏங்கி உருகவில்லையா? கடவுளு க்காக துன்பங்களை அனுபவித்து மடிந்தவர் கள்,கடவுள் மீது கொண்ட காதலால் அன்றி வேறு என்னவாக இருக்கமுடி யும்?  ஒருமுறை முனிவரைப் பார்க்க ஒரு துறவி வருகை தந்தார். அப்பொ ழுது முனிவர், தனது தவ வனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பல மலர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன. அழகாய் சிரித்துக்கொண்டிரு ந்தன, முனிவரோ அந்த அழகில் இறைவனின் சிரிப்பை தியானித்து க்கொண்டிருந்தார்.

துறவியின் பார்வையில் அது அசூயையாக தென்பட்டது. அவர் முனிவரி டம் கேட்டார் - "இந்த மலர்களை நீங்கள் விரும்புகிறீர்களா? தோட்ட வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவருடைய தொனியில் கண்டனம். நிராகரிப்பு தெரிந்தது. துறவறத்தில் ஈடுபட்டவர்கள், வாழ்வை இரசிக்கும் காரியங்களில் பற்றுதல் செய்யக் கூடாது என்ற தொனி இருந்தது.

முனிவர் பதில் சொன்னார், நான் புறக்கணிப்பவனில்லை. புறக்கணிப்பு என்பது எதிர்மறை நடை. தற்கொலை செய்து கொள்ளும் மனம் கொண்ட வனின் செயல். எதையும் உதாசீனம் செய்யமுடியாது, எல்லாமே இயற்கை என்ற கடவுளின் பிரதிபிம்பம். உதாசீனம் செய்பவனை எதுவும் பாதிக் காது. அன்பு கூட அவனை ஆட்கொள்ளாது. அவன் தன் வாழ்க்கையை புறக்கணிப்பு என்ற பிரச்னைகளுக்குள் சிக்கித்தவிக்கும் , தப்பித்து ஓடும் வழியில் நடத்திச் செல்கிறான். எதுவுமே - எந்த ஒரு நிகழ்வுமே - அவனை அதிரச் செய்யாது; கவனத்தைப் பிசகச் செய்யாது. அவன் நினைப்பு, அவன் கொள்கையாக மாறி, அதில் தீவிரவாதம் புரிவான். இது இயல்பான நிலை அல்ல, அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

எதற்குமே அசைந்து கொடுக்காத நிலை எதற்கு? அது தேவையில்லாத ஒன்று. மனம் இந்த நிலையில், எப்பொழுதுமே மகிழ்ச்சியையும், பொங்கி வழியும் ஆற்றலையும் பெறாது. புறக்கணிப்பை, மதங்கள் பரிந்துரைக்கும் வாழ்வுமுறையாக - பயணம் செல்லும் பாதையாகத் தேர்வு செய்ய சொல் கின்றது. கிறிஸ்தவ துறவு நிலை பற்றிய எனது புரிதல், அனுபவம் சற்று வித்தியாசமானது. கீழ்படிதல் என்பதை முதன்மைப்டுத்துகின்றது. சரியோ பிழையோ குரு முதல்வர் இட்ட பணியை கேள்விக்கு உட்படுத்த முடியாது.

பற்றற்ற நிலையை வலியுறுத்துகின்றது கிறிஸ்தவ துறவறம். இறைவன் நம்மை ஆட்கொள் ளும் போது, அல்லது இறை உன்னதத்தை உணரும் போது, மற்ற இன்பம், பற்று எல்லாமே குப்பையாக மாறிவிடும், இதுவே சரியான பற்றற்ற நிலை என்பது எனது புரிதல். பலர் இந்த துறவற வாழ்வை விரும்பி செல்கின்றர்கள். பயணிக்க முடிகிறதோ இல்லையோ! முடிந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகவும், சாதித்தவர்களா கவும் கொண்டாடப்ப்டுகின்றார்கள். இவர்களில் எத்தனைபேர் அந்த வாழ்கையை சுமையாக கருதுகின்றார்கள். சிலர் இடைநடுவே விட்டுச் செல்கின்றார்கள். வேறு சிலர் சமுதாயம், குடும்ப கெளரவம் என்பதற்காக தொடர்கின்றார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்? அவர்களால் கனி கொடுக்கமுடிகின்றதா? குறைந்த பட்சம் அருளாளர்களாக எத்தனைபேர் உருவாகி உள்ளனர். மத அனுஸ்டானங்களுக்கு முதன்மை கொடுக்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து புனிதர்கள் அறிவிக்கப் படுவது அரிதாகவே இருக்கின்றது.

வாழ்வின் நேசமான பகுதிகளை, பிற மனிதர்களைப் பற்றுதலோடு நோக்கும் பண்பை இழந்து, விதைத்தது முளைத்தது என்ற கணக்கில் வாழ்ந்து, பிரச்னைகளைச் சந்திக்கும் முயற்சியை விடுத்து ஓடிய வாழ்வா கொண்டாடப் பட வேண்டியது? சாதிப்பது, நிகழ்த்திக் காட்டுவது, பரிபூர  ணமாக உணர்வது இவையே இயற்கையுடன் ஒன்றிய நேர்முறை வழி முறை (Positive attidue)

அறிவு  எப்போதும் "காதலைத்  தவிர்த்து விடு " என்று  கூறுகிறது.அதனால் தான்  உலகில்  குறைவான அளவே  அன்பைக்  காண  முடிகிறது! குழந்தை  பருவம் முதல், மழலையர் பள்ளி  தொடங்கி பல்கலைக்கழகம் வரையில்  நாம்  அறிவு  பற்றிப்  போதிககிறோம். இதயத்தை  மறந்து விடுகிறோம் .   அன்பை புறவழிச்சாலையில் செல்ல  அனுமதிக்கிறோம். காரணம் அன்பு தான் விந்தைகளுக்கான  நுழைவு  வாயிலாக  உள்ளது. அங்கு  ஏன்  என்ற  கேள்விகளுக்கு விடை  கிடையாது.

ஏன்  என்ற  கேள்வியை  உதறித்  தள்ளுங்கள்.நீங்கள்  காதலில்  விழுந்து  விட்டால் மேலும் ...!மேலும். .!அதில்  ஆழ்ந்து விடுங்கள்.அதன் பிறகு  வாழ் க்கை கவிதையாகி விடுகிறது.!உரைநடையாக  இருப்பதில்லை. .!அதன் பிறகு வாழ்க்கை ஒரு  ஓசையாக  இருப்பதில்லை..!இனிய  மெல்லிசை யாக  மாறுகிறது..! அதன் பிறகு  வாழ்க்கை பொருளாக இல்லாமல் தெய்வீகமான  ஒன்றாக  மாறுகிறது..!

 கடவுள் இதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. அவன் துறவறம் பூண்டிரு ந்தால், இந்த பிரபஞ்சத்தையும், கோள்களையும், விலங்குகளையும், பறவைகளையும், புழுக்களையும், பூச்சிகளையும், இன்னபிறவற்றையும் படைத்திருக்க முடியுமா? பச்சைக்கிளியின் வண்ணம் தான் எத்தனை அழகு? உணர்ச்சியற்ற ஜடமாக இறைவன் இருந்திருந்தால், இத்தனை ரசிப்புடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியுமா?

ஒவ்வொரு படைப்பிலும் உயிர்ப்புடன், ரசனையுடன், பற்றுதலுடன் செய்த இறைவனை பற்றற்ற வாழ்வுமுறைப் பாதையில் சென்றடைய முடியுமா? காந்தியைப் படைத்த அதே அக்கறையுடன் தான், அவன் ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் வண்ணம் தெளிவித்தான்.

இறைவன் அன்பானவன்.(LOVE). இறைவன் முழுமையானவன். அந்த முழுமையில் ஒன்றாகிப் போக நீங்கள் விரும்புவீர்களேயானால், நீங்களும் காதலில் ஈடுபடுங்கள்.அன்பு செய்தலில். அதை விடுத்து, விரதமிருந்து, பற்றுதலைப் போக்கி, இறைவனை நோக்கி செல்வோமென்பது சுயமாக மெல்லச் சாகும் வழியாகும்.

காதல் செய்யுங்கள்; ஆழ்ந்த காதல் செய்யுங்கள்; முழுமையாக உங்கள் காதலில் மூழ்குங்கள்; அந்தக் காதலிலே உள்ளமும் உடலும் கரைந்து செல்லும் அளவிற்குக் காதல் செய்யுங்கள். அப்பழுக்கற்ற படைக்கும் சக்தியாக வழிந்தோடும் நிலை எய்துங்கள்; அந்த நிலையில் தான் உங்களால் கடவுளின் உயிர்ப்பு சக்தியில் பங்கேற்றுக் கொள்ளவும், கடவுளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லவும் இயலும். அன்புடன் பேசாலைதாஸ்


மனதை தூய்மையாக வைத்திருப்பது எப்படி. ?

 மனதை தூய்மையாக வைத்திருப்பது எப்படி. ?

மனிதர்களில் சிலர் நல்லவர்களாகவும்,  சிலர் கேடு நினைப்பவர்களாகவும் இருப்பது எதனால் ? 

எல்லோரும் ஒரே சமூகத்தில்,  அதே கல்வி முறையில், அதே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அதே சூழலில் , கண்டும் கற்றும் வாழும் போது, அவர்களின் குணங்களும் எண்ணங்களும் ஒரே மாதிரி அல்லவா இருக்க வேண்டும்.  இந்த வேறுபாடு எதனால் ஏற்படுகின்றது ? 

ஒருவனது குணத்தை தீர்மானிப்பது அவனது மனம் தான். 

மனம் என்பது நம்மை சுற்றி நடப்பதை எல்லாம்,  நாம் பார்த்ததும்,  கேட்டதும், உணர்ந்ததும், என அனைத்தையும்  தன்னுள் பதிவு செய்து வைத்து கொள்ளும்.

அதன் பின்,   மனம் எடுக்கும் முடிவுகளில் இந்த பதிவுகளின் தாக்கத்தை காண முடியும்.  

 ஒருவன் பிறந்த சூழ்நிலை, அவன் கடந்து வந்த பாதை, அவன் சுற்றம் அவனை எதிர்கொண்டு நடத்திய விதம், அவனிடமிருந்து எதிர்பார்ப்பு, அவனை அதிகம் பாதித்த விஷயங்கள்,  அவன் தனக்கென்று உருவாக்கி கொண்டுள்ள “நான்” என்ற பிம்பம்,  என இவை எல்லாம் அவனுள் எண்ண ஓட்டங்களாக, அவன் எடுக்கும் முடிவுகளில் பிரதிபலிக்கும். 

மனதில் உள்ள பதிவுகள் நல்லவைகளாக இருந்தால், எண்ணங்கள் நல்லவைகளாக இருக்கும், அவன் எடுக்கும் முடிவுகள் நல்லவைகளாக இருக்கும்.  

அறிந்தோ அறியாமலோ மனதில் ஏறிய குப்பைகளை களைவது எப்படி ? 

கணினியாக இருந்தால் மொத்தமாக அழித்துவிட்டு (format) ரீ-ப்ரோக்ராம் செய்து விடலாம்.  

ஆனால் இது மனம். இதில் பதிவேறிய எதிர்மறை எண்ணங்களை நீக்கம் செய்ய, இரண்டு கட்டங்களான முயற்சி தேவை.  

முதலில் எது எது தேவையற்ற, எதிர்மறையான, பயனற்ற பதிவுகள் என்பதை கண்டறிய வேண்டும்.   

இது சுலபமான காரியமல்ல.  

முதற்கட்டமாக நமது மனதை ஆராய்து, அதிலுள்ள பதிவுகளை பாகுபடுத்துதல். 

சில பதிவுகள் ஆழ்மனதின் ஆழத்தில் சென்று பதுங்கி இருக்கும். அத்தகைய பதிவுகள் நம் மனதில் உள்ளதே நமக்கு தெரியாது.    

சில பதிவுகள் நம் மனதில் திரும்ப திரும்ப வந்து அசை போட்டுக் கொண்டே இருக்கும்.  சில பதிவுகள் நம்மை வைராக்கியத்துடன் செயல்பட வைக்கும்,  சில பதிவுகள் நம்மை ஆழ்ந்த துயரத்திற்கு அழைத்து செல்லும், சில பதிவுகள் நமது நிம்மதியை கெடுத்து உறங்க விடாமல் செய்யும், சில பதிவுகளை நாமே திரும்ப திரும்ப நினைத்து பார்த்து மகிழும் படி இருக்கும். 

இப்படி பதிவுகளின் கூட்டு கவலையாக உள்ள நம் மனதை, ஆராய்ந்து,  பாகுபடுத்தி,  நல்ல பதிவுகள், தேவையற்ற பதிவுகள் என எப்படி வேறுபடுத்திக் பார்ப்பது  ?  மனதை ரீ-ப்ரோக்ராம் செய்வது சாத்தியமா ? 

இரண்டாம் கட்டமாக, இப்படி நம் மனதையும் அதன் எண்ண ஓட்டங்களையும் அறிந்து கொண்டபின் செய்ய வேண்டியது என்ன ? 

நம் முன்னோர்களான ஞானிகள் இதற்கு தியானத்தில் மூலம் வழி கண்டு  உள்ளனர்.  

மேற்கத்திய நாடுகளில் அவர்கள் கண்டுள்ள வழி மனோவசியம் எனப்படும் Hypnotism .  அதில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் மட்டுமே இதை கையாள முடியும்.  சுயவசியம் (self hypnosis) செய்வது மற்ற சிறு சிறு செயல்களுக்கு வேண்டுமானால் உபயோகப்படும்.  இதை சரியாக செய்யாவிட்டால் பக்க விளைவுகள் பெரும் பாதிப்பை உண்டாக்கும். 

ஆனால், எந்த வித பாதிப்புமின்றி, நமது மனதை ஒருநிலை படுத்தி, எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி, தேவையற்ற குப்பைகளை களைந்து, மனதை சுத்தப்படுத்த உள்ள மிக சிறந்த வழி தியானம் மட்டுமே.   தியானமும் ஒரு விதத்தில் சுயவசியம் போன்றது தான் என்றாலும், இங்கு நாம் நமது மனதின் எல்லா பரிணாமங்களையும் ஆராய்ந்து பார்த்து, உள்ளிருந்து சீர் செய்வதால், இதன் பலன் அதிகமானது. 

தியானம் மனதை அமைதிப்படுத்த மட்டுமல்ல, நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து, அடக்கம், பணிவு, நன்றியுணர்வு, அன்பு,  கனிவு என நம்மை மொத்தமாக மாற்றக்கூடிய ஆற்றல்  கொண்டது.  

தீய எண்ணங்களை அடையாளம் கண்டு, பகை, பொறாமை,  வஞ்சனை,  பழிவாங்குதல்,  பேராசை,  சுயநலம், போதை வஸ்துக்களில் அடிமைபடுதல், ஆகியவைகளில் இருந்து மீண்டு,  அவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தி,  நீக்கவும், மாற்றவும், செய்து,  தியானத்தின் மூலம், தன்னை முழுமையாக உணர்ந்து, நல்ல எண்ணங்களை மட்டுமே பிரதிபலிக்கும் தூய மனதாக மாற்ற இயலும்.  

தியானம் ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும், தன்னை நேர் வழி படுத்தவும், முழுமையாக தன்னை உணருவதற்கும், தனது மனதை நற்சிந்தனைகள் பூக்கும், நல்லெண்ணங்கள் மட்டுமே பிரதிபலிக்கும் தூய மனதாக மாற்ற முடியும். இது வயது வித்தியாசமின்றி அனைவராலும் மேற்கொள்ள இயலும்.  

தியானம் செய்து, மனதை தூய்மைபடுத்தி, தன்னை உணருதலால் உள்ள ஒரே பக்கவிளைவு, அது தானாகவே நம்மை இறைதன்மைக்கு அழைத்து சென்று விடும்.  

தூய மனதானது    இந்த இயற்கையை, அதன் உண்மையான பரிமாணத்தில் காண தொடங்கும். அதன் படைப்பாற்றலை கண்டு வியக்கும். இயற்கையினிடத்தில் சரணடைந்து விடும். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் சக்தியையும் உணர்ந்து, அதை உள்வாங்கிக் கொள்ளவும், அதனுடன் உறவாடவும் முடியும்.  

தூய மனமே இறைவன் வசிக்கும் கோவில்.  தூய மனம் கொண்டோர் இறைவனுக்கு ஒப்பானவர்.

மறுபிறவி எப்படி எப்பொழுது ஏற்படுகிறது

 மறுபிறவி எப்படி எப்பொழுது ஏற்படுகிறது...உருவ வழிபாடு மறையாதா?... பாவ புண்ணியம் சொர்க்கம் நரகம் உண்டா? பேய் உண்டா?

கேள்விகளுக்கு செல்லும் முன் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் எவ்வளவுதான் சுய சிந்தனையாளனாக மிகுந்த பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் ஞானம் அடைந்தவராக இருந்தாலும் இயற்கை சில விசயங்களை மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கிறது!

இந்த உலகம் அழியும் வரையில்

அறிந்தது Known 

அறியக்கூடியது Knowable 

அறியவே முடியாதது Unknowable

என்ற மூன்று விசய ஞானங்கள் இருந்தே தீரும்.

இதில் நீங்கள் கேட்ட கேள்விகள் மூன்றாம் ரகத்தை சேர்ந்தது.

இவையெல்லாம் தர்க்கத்திற்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டது. மனம் என்றாலே தர்க்கம்தான் தத்துவம் தான். 

புத்தர் ஒரு அறிவிப்பை எங்கு சென்றாலும் வெளியிடுவார். யாரும் தன்னிடம் இந்த பத்து கேள்விகளை கேட்க கூடாது என்று. அதில் நீங்கள் கேட்க கேள்வியும் அடக்கம். ஏனெனில் இந்த கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக பதில் அளிக்க முடியாது.

ஆகவே இந்த கேள்விகளை எண்ணி வீணாக மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளாமல் தியானத்தில் ஈடுபடுங்கள்.

இவையெல்லாம் இயற்கையின் ரகசியங்கள். அவைகளை இயற்கை பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் அதன் போக்கில் வாழுங்கள். பற்றற்று அனுபவியுங்கள். ஆனந்தமாக இருங்கள்.

வாழ்க்கையின் ரகசியங்களை அறிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்?

எனக்கு எல்லாம் தெரியும் என அகங்காரமாக கூறுவதற்கா?  இந்த கேள்விகளுக்கு பதில் தெரியும் என மற்றவர்களுடம் கூறி பெருமை படுவதற்கா?

ஏன்? எப்படி? என்ற கேள்விகளை உங்களிடம் இருந்து ஒருகட்டத்தில் முடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அமைதி! அமைதி! அமைதிதான். தியானம் தான்!

இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

அந்த இரண்டு சுவாசமும் ஒன்றாகும்போது

 அந்த இரண்டு சுவாசமும் ஒன்றாகும்போது. ❤

.

நீங்கள் நேசிக்கும் தருணத்தை அதிகமாக கவனியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் சுவாசம் எப்படி மாறுகிறது என்பதை கவனியுங்கள்

. உங்கள் உடல் எப்படி அதிர்கிறது என்பதை பாருங்கள்.

உங்கள் பெண் அல்லது உங்கள் ஆணை அணைத்தபடி .அதை ஒரு சோதனையாக செய்யுங்கள், நீங்கள் வியந்து போவீர்கள். ஒருநாள், அப்படி அணைத்தபடியே, ஒருவருக்குள் ஒருவர் உருகி, ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தால், நீங்கள் வியந்து போவீர்கள்; அது ஒரு வண்ண ஒளிமயமான அனுபவமாயிருக்கும்.

.

ஒருமணிநேரம், எதுவுமே செய்யாமல், இருவருமே அணைத்தபடி, ஒருவருக்குள் ஒருவர் விழுந்து, இணைந்து, ஒருவருக்குள் ஒருவர் உருகி, மெதுவாக ஒரு சுவாசம் வரும்.

ஈருடல் ஒரு இதயம் போல் நீங்கள் சுவாசிப்பீர்கள். நீங்கள் சேர்ந்தே சுவாசிப்பீர்கள்.

நீங்கள் ஒன்றா கசுவாசிக்கும்போது – அது உங்களின் எந்த முயற்சியினாலும் அல்ல, நீங்கள் அத்தனை நேசிப்பதாக உணர்கிறீர்கள் சுவாசம் தொடர்கிறது அதுதான் சிறந்த தருணங்கள்,

மிகஉயர்ந்தது, அது உலகத்தினுடையதல்ல.

ஆனால் அதையெல்லாம் தாண்டி ``தொலைதூரம்’’ சார்ந்தது.

.

அந்த தருணத்தில் தியானசக்தியின் முதல் கணநேரக்காட்சி உங்களுக்கு கிடைக்கும்.

அந்தநேரத்தில் இலக்கணம் இழந்துவிடும் மொழிசெத்துவிடும். அதைசொல்லப்போனால், மொழி மறைந்துவிடும்,

அந்த ஆழமான கணங்களை என்னவென்று சொல்லமுடியாது.

பெண் ஒரு தெய்வம்

 பெண்  ❤ 


ஒரு பெண் ஒரு ஆணை விட மையம் கொண்டவளாக  இருக்கிறாள்.

  அவள் மிகவும் அமைதியானவள், மிகவும் அன்பானவள், பொறுமையான தன்மையை பெற்று இருக்கிறாள். 

ஒரு பெண் உலகின் மிக அழகான நிகழ்வுகளில் ஒன்றாகும். பெண்ணை வேறு எதனோடும்  ஒப்பிடக்கூடாது. பெண் கடவுளின் தலைசிறந்த படைப்பு.

நின்னை சரணடைந்தேன்

 மனதிடம் ஒரு விஷமம் இருக்கிறது

நீங்கள் கோபமடைந்தால் 

அந்த நிமிடமே கோபமடைவீர்கள் 

ஆனால் நீங்கள் சரணடைய வேண்டும் போல் உணரும்போது 

நீங்கள் அதைப்பற்றி யோசிப்பீர்கள் 

நீங்கள் அதைப்பற்றி திட்டம் தீட்டுவீர்கள் 

நீங்கள் காத்திருப்பீர்கள் 

மனம் எப்போதும் ஏதோ ஒரு வினாடியில்தான் எல்லையில் இருக்கும்

அதனால் உடனடியாக தெய்வத்திடமோ, எதனிடமோ சரணடைந்துவிடுங்கள்  

அது ஒரு மரமாகக்கூட இருக்கலாம் 

ஏனெனில் 

உண்மையானது நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பதில்லை 

உண்மையானது, உங்கள் சரணடைதல் தான்

ஒரு மரத்திடம் சரணடைந்தால் 

மரம் உங்களுக்கு ஆசானாகிவிடும்  

வேதநூல்களால் வெளிப்படுத்தமுடியாத பல விஷயங்களைப்பற்றி அந்த மரம் உங்களுக்கு வெளிப்படுத்தும்

ஒரு கல்லிடம் சரணடைந்தால் 

கல் கடவுளாகிவிடும்

கடவுள் வெளிப்படுத்தாத பல விஷயங்களை அந்த கல் வெளிப்படுத்தும்

உண்மையானது சரணடைதல் தான் 

எப்போதெல்லாம் சரணடைதல் இருக்கிறதோ 

அப்போதெல்லாம் ஒருவர் தோன்றி உங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்

தீக்ஷை வழங்குதல் என்றால் இது தான்

ஒரு இத்தாலியனின் மனைவி

 ஒரு இத்தாலியனின் மனைவி இறந்து விட்டாள்.. 

புதைப்பதற்காக சவப்பெட்டியை ஒரு வேனில் எடுத்துச் சென்றார்கள்..

வழியில் வேன் ஒரு பெரிய கம்பத்தில் பயங்கரமாக இடித்து விட்டது. 

உடனே சவப்பெட்டி உள்ளே இருந்து ஒரு அலறல் கேட்டது.

அவசர அவசரமாக பெட்டியை கழற்றி திறந்து பார்த்ததில் 

அவன் மனைவி உள்ளே உயிருடன் இருப்பது தெரிந்தது.

பின்னர் அவள் மூன்று வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாள்..

ஒரு நாள் மீண்டும் செத்துப் போனாள்.

இந்த முறையும் சவப்பெட்டி..

அதே பாதை..அதே வேன்..

இத்தாலிய கணவன் வண்டி ஓட்டும் டிரைவரைப் பார்த்து 

"அந்த கம்பத்து கிட்ட மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையாப்

பார்த்து ஓட்டுப்பா

 இடிச்சிடபோகுது"😏😏😏😏 என்றான்.!!!.

Friday, 16 April 2021

நம்முள் இருக்கும் திருடன்

 நம்முள் இருக்கும் திருடன் 

பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே 

நாம் வெளியே காட்டுகிறோம் 

இதுதான் நமக்குள் இருக்கும் திருடன் 

அந்தத் திருடனோடு 

நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது 

திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் 

அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால் 

நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம் 

ஏனெனில் 

நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான் 

அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம் 

ஆனால் முடியவில்லை 

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் 

உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம் 

நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம் 

திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம் 

புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது 

ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர் 

குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள் 

நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும் 

''ஒருவன், 'திருடன், திருடன், விடாதே பிடி,' என்று கத்தினால் 

அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்'' 

என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார் 

நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம் 

எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும்போது நம்மை நாமே 

வெளிப்படுத்திக் கொள்கிறோம் 

நமக்குள் ஏற்படும் போராட்டமே

இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது 

நமக்குள் முரண்பாடு தோன்றாத போது 

போராட்டம் இல்லாதபோது

இன்னொருவர் மீது பழிபோடுதல் 

என்பது முற்றிலும் நின்று விடுகிறது 

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது 

அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது 

ஆனந்த நடனமே அமையும் 

மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது

Tuesday, 13 April 2021

நட்ட கல்லு பேசுமோ?,,,,,,,பேசாலைதாஸ்

நட்ட கல்லு பேசுமோ? பேசாலைதாஸ்


இந்த உலகத்தில் தீமைகள் பிரவேசிக்க யார் காரனம்? கடவுளா, மனிதனா? எல் லோருமே கடவுள்தான் காரனம் என்கி ன்றார்கள், கடவுளை ஒரு நபராக பார் க்கின்றார்கள். கடவுள் மகா பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச அனைத்தும் கடவுள், நாம் இலகுவாக புரிந்து கொள்ள, ஞானிகள், மெய்வல்லுணர்கள் அதனை ஒற்றை வடிவமாக்கினார்கள். இறுதியில் ஆண்பால் வல்லமையின் எதிரொலியாக கடவுள் அவனாகின்றான். இறுதியில் அவனா இவன்? என வியக்கின்றோம். கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. இதுவே என் புரிதல். அவனா இவன்? என்று கேட்கின்றது என் மனம்.
அப்படியானால் மனிதன் யார்? இன்னொரு முறையில் சொன்னால், மனிதன் தான் கடவுள். மனிதன் கடவுளின் இன்னொரு அம்சம் வடிவம். இயற்கையின் சக்தி வடிவமாக கடவுள் செயல்படுகின்றார், அதுபோல மானிட சக்தி மூலமாக வெளிப்படுகின்றது கடவுள் அம்சம். நன்மை தீமை, குளிர் வெப்பம், இன்பம் துன்பம், நல்லது கெட்டது என்று இயற்கை தொடர்கின்றது, இதனை யாரும் படைக்கவில்லை. கடவுளை யாரும் படைக்கமுடியாது. வேதம் தெளிவாக சொல்கின்றது. மனிதன் முதலில் கடவுள் யார்? எது என்று தன் மனதில் கேட்ட பொழுது, அவர்களுக்கு சொல்லப்பட்டது இதுவே! இருக்கின்றவராய் இருப்பவர் தாமே! என்று இறைவன் உணர்த்தியதாக சொல்கின்றார்கள்.

நாம் கடவுளை நம்புகின்றோமோ இல்லையோ நம் அடிமன நிலையில் இறைவன் உறைந்துள்ளார். இதுவும் எனது இன்னொரு புரிதல்! மனதர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களுக்கு கடவுள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆன்மாக்கள் தானே இறைவன். எனவே தான் ஆன்மாக்காள் துன்புறும் நிலையில் கடவுளும் துன்புகின்றார். இன்பம் துண்ப உணர்வுகள் கடவுளுக்கு இல்லை என்பதை நீங்கள் ஆமோதிக்கின்றீர்களா? என்னைக்கேட்டால் இல்லை என்றே சொல்வேன்.

நமக்கு துன்பம் விளைவிப்பவை நமக்குள் நாமே இடம் கொடுத்துவிட்ட தீய எண்ணஙக்ள் நமக்கு துன்பம் விளைவிக்கின்றன. எண்ணங்கள் அழகாய் இருந்தால் வாழ்வும்அழகாக இருக்கும். பிறருக்கு நாம் செய்யும் நன்மைகளின் பிரதிபலன் மீண்டும் கிடைக்கும் போது அது இரட்டிப்பாக கிடைக்கும். அது தீமையாக இருக்கும் பட்சத்தில் பன்மடங்கு திரும்பி கிடைக்கும். ஆக நன்மையும் தீமையும் எப்படி வருகிறது என்ப தை விளக்கத்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா? என்று ஒருவரியிலேயே சொல்லிவிடலாம். இதை எல்லாம் விட்டுவிட்டு துன்பங்கள் கடவுளால் வருகின்றது, அவர் தண்டிக்கின்றார் என்றி பிழையான கற்பிதங்களை கற்றுக்கொள்கின்றோம். துன்பத்தில் இருப்பவன் இறைவனை தேடுவதற்கு, அவனே அதற்கு பொறுப்புக்கூறும், சர்வதேச முறைப்பாட்டை ஆண்டவன் முன் வைக்கின்றோம்.

இதற்கு முக்கிய காரணம் பழங்காலந்தொட்டே இந்த மனித இனத்தை ஆக்கிரமித்த மூடக் கொள்கைகளும் பிரக்ஞை அற்ற செயல்களும் தான்.
இதற்கு எல்லா மதங்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த மதங்கள் எல்லாம் இவ்வுலகத்தை கடவுள் என்ற ஒரு நபர் தான் ஏற்படுத்தினார் என்று கூறுகின்றன. துன்பத்தில்மிருக்கும் மனிதனை இலகுவாக தமது மதத்துக்குள் இழுத்துப்போட சில மதவாதிகள் முனைகின்றார்கள். வருந்தி சுமை சுமப்பவர்கள் வாருங்கள் என்னிடம் என ஆண்டவர் அழைத்தது உண்மையே, சுமையின் பழுவை எப்படி குறைக்கலாம், அல்லது அறவே நீக்கக்கூடிய வழிகளை நாமே கண்டுபிடித்து நீக்குவதற்கான வழிவகைகளை நம்மைக்கொண்டே கிரிகை செய்வார், ஏனெனில் நம் நம்பிக்கை இல்லாமல் எதுவுமே நடக்காது, இதுவும் எனது இன்னொரு புரிதல்! இறுதியில் செயலாற்றுவது மனிதனே, கடவுள் எங்கும் நிறைந்தவர் எல்லாம் தெரிந்தவர் என்று அவை கூறுகின்றன. இதனால் நாம் கடவுளை விட புத்திசாலி இல்லை என்று நம்பி நாம், ஏதோ வாழ்ந்து மடிகிறோம். இயேசு சும்மாவா சொன்னார், என்னை நம்புபவன் என்னைவிட பெரிய பெரிய காரியங்களை செய்வான் என்று.
தன்னுடைய பகுத்தறிவு, சுய சிந்தனை, தன் மீதும், தன் படைப்பின் ஆதாரம் மீதும், நம்பிக்கை எல்லாம் இழந்து போய் இயந்திரம் போல வாழ்கிறான் மனிதன். இதுதான் உலகத்தின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம். இந்த உலகத்தை எந்த ஒரு தனி நபரும் ஏதோ ஒரு காரணம் கருதி படைத்திருக்க முடியாது. இந்த மிகப்பெரிய பொறுப்பை இல்லாத தனிநபரிடம் ஒப்படைக்காதீர்கள்.
நாம் இந்த பூமியில் இருக்கிறோம். இதன் அழகிற்கும் ஆனந்தத்திற்கும் அழிவிற்கும் நாம் தான் காரணம். நாம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
நாம் இங்குள்ள சந்தர்பங்களை மிக திறமையாக பயன்படுத்த வேண்டும். ஆகவே கடவுள் என்று பொய்யாக கூறித்திரியாமல், மொத்த மனித வர்க்கமும் கடவுள் என்று எண்ணிக்கொண்டு, கடவுள் என்ற உங்கள் கற்பனை வடிவத்தை அகற்றி விட்டு அங்கு மனிதனை அமர செய்யுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு இந்த உலகத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உலகத்து துன்பங்கள் மறையும்.
ஆனால், எல்லா மதங்களும் என்ன சொல்கின்றன? பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுங்கள் என்று கூறுகின்றன. இது உங்களிடம் ஆழமான தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. உங்களை சோம்பேறி ஆக்குகிறது. நீங்கள் உங்கள் முழு சக்தியை நம்பிக்கை பயன்படுத்துவதில்லை. எது நடக்குமோ அது தான் நடக்கும் எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று பேசி திரியாதீர்கள்.
உங்கள் தோல்விக்கு காரணம் உங்களின் சக்தியை, உங்கள் நம்பிக்கையை, மானுட அன்பின் சக்தியை நீங்கள் முழுமையாக உபயோகிக்கவில்லை என்பது தான். உங்கள் ஒவ்வொருவரிடமும் சக்தி, நம்பிக்கை இருக்கின்றது, அன்பு ஆழத்தில் இருக்கிறது. அதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். இதுவே எனது இன்னொரு புரிதல்.
அதற்கு ஒரே வழி, நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் பழைய கடவுள்களை தைரியமாக தூக்கி எறிய வேண்டும். அவற்றை உங்கள் வாழ்வில் இருந்து துடைத்து எறிய வேண்டும். இதற்கு மிகுந்த தைரியமும் சுய சிந்தனையும் தேவை. பிறகு நீங்கள் ஒரு வெறுமையை உணருவீர்கள். ஒருவித பயம் உங்களிடம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் இதுவரை நம்பி வந்த அனைத்தும் பொய் கற்பனை. இந்த வெறுமை நிலை உங்களுடைய உண்மையான இருப்பிடம். இந்த உணர்வு ஏற்படுவது நன்மைக்கு தான்.
இதுவரை நம்பி வந்த கடவுள்கள் உங்களுக்கு பொய்யான ஆறுதலை ஏற்படுத்தி இருக்கலாம். பொய்யான நம்பிக்கைகளை ஊட்டி இருக்கலாம். எல்லாமே அந்த கற்பனை கடவுள்களை போல பொய்தான். இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய துன்பங்களுக்கு அடுத்தவர்கள் தான் காரணம் என்ற முட்டாள்தனமான மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். உங்கள் துன்பங்களை உருவாக்கிக் கொள்வது நீங்களே. உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடையதே. அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உலகத்தில் வாழும் போது, உங்கள் அடிமனத்தில் ஆழபுதையுண்டு போயுள்ள அன்பின் ஊற்றை அனுபவியுங்கள், அதன் உந்தலில் வாழுங்கள், அந்த அன்பின் உந்தல்தான் ஆண்டவனின் அசைவாக நமக்குள் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள். “நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’ சிவ வாக்கியர் பாடல்-520

நமக்குள்தான் நாதனாகிய இறைவன் இருக்கின்றான், நம்மை நாம் உய்த்தறிய துணிவதில்லை, நீங்கள் அதில் இருந்து தப்பி செல்லவே விரும்புகிறீர்கள். அதுதான் உங்கள் சகல துன்பத்திற்கும் காரணம். அந்த துன்பங்களை தீர்க்க முயலும் போது மேலும் பத்து துன்பங்களை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். துன்பம் துன்பத்தையே உற்பத்தி செய்கிறது. பிறகு இவ்வளவு துன்பங்களா என கதறுகிறீர்கள். ஆனால் அதை தவிர்க்க முடியும்.
நீங்கள் உங்களை மறக்க பொதுநல தொண்டில் ஈடுபடலாம் போதையில் மிதக் கலாம் பெண்களுடன் சுற்றலாம். அதனால் என்ன பிரயோஜனம்? அது உங்களது பிரச்சனைகளை ஒருபோதும் தீர்க்காது. இதனால் நீங்கள் உங்கள் தனிமையில் இருந்து தப்பி செல்லுகிறீர்கள். உங்களை மறக்கிறீர்கள். உங்கள் தியானத் தன்மையை இழக்கிறீர்கள். இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்குள் வாசம் செய்கின்றார். உங்களோடு இருக்கின்றார், உணர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


Monday, 12 April 2021

மனமே நீ சாட்சி! பேசாலைதாஸ்

 மனமே நீ சாட்சி! பேசாலைதாஸ்


"அங்கிள் எப்படி சுகம்" என்று சுகன்யா என் கண் களை பார்த்து கேட்டபோது, என் மனம் குறுகி, நாணத்தால் நெளிந்தது, முக நூலில் அவள் வனப்பான அழகு கண்டு, என் மனம் தவித்த அந்த கணங்கள் சட்டெ ன்று வந்து போனது. ஏன் எனக்கு மட்டும் இப்படி கெட்ட எண்ணங்கள் வருகிறது, என நான் என்னையே நொந்து கொண்ட சந்த ர்ப்பங்கள் நிறையவே உண்டு. மேகங்கள் என்னை உரசிப்போனது ண்டு. சில மின் னல்கள் என்னை தாக்கிப் போன துண்டு. அப்பொழு தெல்லாம்  ஏன் கெட்ட எண்ண ங்கள் எனக்கு வருகின்றது என என் மனம் கேள்வி கேட் டதுண்டு. உங்களுக்கும் அந்த உள்ளுணர்வுகள் வந்திருக்கக்கூடும், அந்த நேரங்களில்  நம் மீது நாம் வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதில் மட் டும் நான் திடமாக இருந்தேன்...

                                           எண்ணங்கள் நமக்கு சொந்தமானது அல்ல....! அவை நமது படைப்புகள் அல்ல...! அவை நாம் பிறப்பதற்கு முன்பே இந்த பிரபஞ்சத்தில் மேகங்கள் போல் உலவிக் கொண்டி ருப்பவை....இப்போது அவை மனித மனதின் வழியாகவும் வந்து செல்கிறது... அவ்வளவுதான்...! எண்ணங்கள் எப்படி வந்ததோ, அப்படியே சென்றுவிடும். அது நல்ல எண்ணமா கெட்ட எண்ணமா என்ற பிரதிவாதங்கள் தேவையற்ற ஒன்று. அதில் நிலைத்து நிற் கவேண்டிய அவசிய மில்லை. 

                                       அழகுப்பெண் ஒருத்தி குணிந்து மலர் பறிக்கி ன்றாள். மாரப்பு கொஞ்சம் கீழே சரிகிறது. சட்டென்று அந்த வதன மார்புகள் ஒரு ஆடவன் கண்களில் படுகின்றது. தன் காதலியின் அழகு மார்பு அதில் அவனுக்கு பளிச்சிடுகின்றது. இன்னொ ருவனுக்கு தாயின் பாலுண்ட கொங்கை சட்டென்று நினைவுக்கு வருகின்றது.இந்த எண்ணப்பிரதிபலிப்பில் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் நுண்ணாற்றல் பக்குவம் நமக்கில்லை. பிறகு எதற்கு எண்ணங்களை பிரித்தாயும் விசப்பரீட்சை? வந்த எண்ணங்களுக்கு நமது மனதில் நிலக்க இடம் கொடுத்தால் விபரீதமாகிவிடும்!

                                                             எண்ணத்தை நல்லது கெட்டது என பிரித்து பார்க்க வேண்டாம்...தீர்மானம் வேண்டாம்...உபசரிக்க வேண்டாம்.....அவற்றை உதாசீனப்ப டுத்து...தலையிடாதே. அவ ற்றை சாட்சியாக இருந்து பார். சற்று நேரம் கழித்து அவை வந்தது போலவே சென்றுவிடும். உபசரித்தால் தங்கிவிடும். பிறகு அவை உன்னை ஆதிக்கம் செலுத்தும். வெறுத்தாலும் அதனுடன் சண்டை யிட்டாலும் அவை உன் கவனத்தை உணவாகக் கொண்டு  வளர் ந்து அவை உன்னை அழிக்கும்...!!

நீ மனம் அல்ல...!!! அதை "வெறுமனே" கவனிக்கும் கண்ணாடி.  நீ "சாட்சி". அன்புடன் பேசாலைதாஸ் 

Sunday, 11 April 2021

காதல் இன்பமான இம்சை

 காதல் இன்பமான இம்சை, பேசாலைதாஸ்


ஒருவனுடைய அறிவுகூர்மையின் ஆற்றல், ஆளுமையின் வெளிப்பாடுகள் பாலுணர்வில் இருந்தே வருகிறது, என உளவியலாளர்கள் சொல்கின்றார்கள். நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?!

ஒருவனுடைய காதல் உணர்வில் அவனுடைய திறமை அறிவுக்கூர்மை எல்லாம் மிக உச்சத்தில் இருக்கும். காதலியை வசீகரிக்க அவன் புதிது புதிகாக சிந்திப்பான். அப்போது அவன் சுடர்  போல பிரகாசிப்பான். அதைப்போல ஒரு பெண் காதல் உணர்வில் இருந்தால் அவள் முகத்தில் என்ன ஒரு பூரிப்பு! என்ன அழகு!  சாதாரண அழகுள்ள பெண்ணிடம் கூட காதல் உணர்வு அவளுக்கு பேரழகை கொடுக்கும். துடிக்கும் விழிகளும் அவளின் நாணமும் புன்சிரிப்பும் காதல் உணர்வால் அவளை அழகாக்குகிறது.

                                                        மரம் செடி விலங்கு என எல்லாமே பாலுணர்வு சக்தியில் பூத்து குலுங்குகிறது. திறமையானவர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்கள் மிகவும் பாலுணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் கவிஞர்களாக, இயற்கையின் உணர்வுகளை அறியும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். காதலின் உயிர் துடிப்பில்தான் உயிர்மை விழித்துக்கொள்கின்றது. அதனால் தான் பாரதி சொன்னான், காதல் செய்வீர் என்று, நானும் அதைத்தான் சொல்கின்றேன். தூய்மையான காதல், உண்மை அன்பில் மையம் கொள்கின்றது. அது சாதி மதம் நிறம் மொழி எல்லாம் கடந்து நிற்கின்றது.  ஆதித்தமிழன் வாழ்வில் காதலும் வீரமும் செழிப்புற்று இருந்தது. தொழில்கள் எல்லாம் உயரிய எண்ணத்தோடு இருந்தது, இராஜரீக சேவை என்ற பெயரில், மலம் அகற்றும் தொழில், இவை எல்லாமே இறாஜரீக அலுவல்களாகவே  என்ற போர்வையில் கவனிக்கப்பட்டன. பின் வந்த ஆரியம், அதன் வழி நுழைந்த  பார்ப்பனியம் தமது சுயநலத்தின் அடிப்படையில் தொழிலில் வேற்றுமையை புகுத்தினார்கள்.

சுருக்கமாக சொன்னால் இயற்கையானது இவ்வுலகத்தை பாலுணர்வு சக்தியால் ஆட்டிப்படைக்கிறது. அது மாத்திரம் இல்லாவிட்டால் இவ்வுலகம் என்றோ வறண்ட பாலைவனம் ஆகியிருக்கும்.

நீங்கள் காதலன் காதலியோடு இருக்கும் போது சொர்க்கம் இங்கேயே இருக்கிறது.

பிறகு நீங்கள் ஏன் சொர்க்கத்தை தேடி மதகுருமார்களிடம் பாதிரியார்களிடம் செல்ல வேண்டும்? அதற்கு என்ன அவசியம்?

ஆனால் காதலிக்க விடாமல் நீங்கள் தடுக்கப்பட்டால் இயல்பான பாலுணர்வு உங்களுக்கு தடுக்கப்பட்டால் பிறகு கவலையில் விரக்தியில் சோகத்தில் நரகத்தில் இருப்பீர்கள்.

மதகுருமார்களுக்கு பாதிரியார்களுக்கு வேலை வந்துவிடும். சொர்க்கம் எங்கே என்று மண்டியிட்டு நீங்கள் கேட்பீர்கள்.

அவர்கள் அதோ அங்கே என வானத்தை காட்டி பாருங்கள் என்பார். அன்பின் பேசாலைதாஸ்