காதலால் கனிந்துருகி ,,,,,,,பேசாலைதாஸ்
காதலால் கனிந்துருகி கடவுளை கானுங்கள். கண்ணனுக்காக மீரா ஏங்கி உருகவில்லையா? கடவுளு க்காக துன்பங்களை அனுபவித்து மடிந்தவர் கள்,கடவுள் மீது கொண்ட காதலால் அன்றி வேறு என்னவாக இருக்கமுடி யும்? ஒருமுறை முனிவரைப் பார்க்க ஒரு துறவி வருகை தந்தார். அப்பொ ழுது முனிவர், தனது தவ வனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பல மலர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன. அழகாய் சிரித்துக்கொண்டிரு ந்தன, முனிவரோ அந்த அழகில் இறைவனின் சிரிப்பை தியானித்து க்கொண்டிருந்தார்.
துறவியின் பார்வையில் அது அசூயையாக தென்பட்டது. அவர் முனிவரி டம் கேட்டார் - "இந்த மலர்களை நீங்கள் விரும்புகிறீர்களா? தோட்ட வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவருடைய தொனியில் கண்டனம். நிராகரிப்பு தெரிந்தது. துறவறத்தில் ஈடுபட்டவர்கள், வாழ்வை இரசிக்கும் காரியங்களில் பற்றுதல் செய்யக் கூடாது என்ற தொனி இருந்தது.
முனிவர் பதில் சொன்னார், நான் புறக்கணிப்பவனில்லை. புறக்கணிப்பு என்பது எதிர்மறை நடை. தற்கொலை செய்து கொள்ளும் மனம் கொண்ட வனின் செயல். எதையும் உதாசீனம் செய்யமுடியாது, எல்லாமே இயற்கை என்ற கடவுளின் பிரதிபிம்பம். உதாசீனம் செய்பவனை எதுவும் பாதிக் காது. அன்பு கூட அவனை ஆட்கொள்ளாது. அவன் தன் வாழ்க்கையை புறக்கணிப்பு என்ற பிரச்னைகளுக்குள் சிக்கித்தவிக்கும் , தப்பித்து ஓடும் வழியில் நடத்திச் செல்கிறான். எதுவுமே - எந்த ஒரு நிகழ்வுமே - அவனை அதிரச் செய்யாது; கவனத்தைப் பிசகச் செய்யாது. அவன் நினைப்பு, அவன் கொள்கையாக மாறி, அதில் தீவிரவாதம் புரிவான். இது இயல்பான நிலை அல்ல, அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.
எதற்குமே அசைந்து கொடுக்காத நிலை எதற்கு? அது தேவையில்லாத ஒன்று. மனம் இந்த நிலையில், எப்பொழுதுமே மகிழ்ச்சியையும், பொங்கி வழியும் ஆற்றலையும் பெறாது. புறக்கணிப்பை, மதங்கள் பரிந்துரைக்கும் வாழ்வுமுறையாக - பயணம் செல்லும் பாதையாகத் தேர்வு செய்ய சொல் கின்றது. கிறிஸ்தவ துறவு நிலை பற்றிய எனது புரிதல், அனுபவம் சற்று வித்தியாசமானது. கீழ்படிதல் என்பதை முதன்மைப்டுத்துகின்றது. சரியோ பிழையோ குரு முதல்வர் இட்ட பணியை கேள்விக்கு உட்படுத்த முடியாது.
பற்றற்ற நிலையை வலியுறுத்துகின்றது கிறிஸ்தவ துறவறம். இறைவன் நம்மை ஆட்கொள் ளும் போது, அல்லது இறை உன்னதத்தை உணரும் போது, மற்ற இன்பம், பற்று எல்லாமே குப்பையாக மாறிவிடும், இதுவே சரியான பற்றற்ற நிலை என்பது எனது புரிதல். பலர் இந்த துறவற வாழ்வை விரும்பி செல்கின்றர்கள். பயணிக்க முடிகிறதோ இல்லையோ! முடிந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகவும், சாதித்தவர்களா கவும் கொண்டாடப்ப்டுகின்றார்கள். இவர்களில் எத்தனைபேர் அந்த வாழ்கையை சுமையாக கருதுகின்றார்கள். சிலர் இடைநடுவே விட்டுச் செல்கின்றார்கள். வேறு சிலர் சமுதாயம், குடும்ப கெளரவம் என்பதற்காக தொடர்கின்றார்கள். அவர்கள் எதை சாதித்தார்கள்? அவர்களால் கனி கொடுக்கமுடிகின்றதா? குறைந்த பட்சம் அருளாளர்களாக எத்தனைபேர் உருவாகி உள்ளனர். மத அனுஸ்டானங்களுக்கு முதன்மை கொடுக்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து புனிதர்கள் அறிவிக்கப் படுவது அரிதாகவே இருக்கின்றது.
வாழ்வின் நேசமான பகுதிகளை, பிற மனிதர்களைப் பற்றுதலோடு நோக்கும் பண்பை இழந்து, விதைத்தது முளைத்தது என்ற கணக்கில் வாழ்ந்து, பிரச்னைகளைச் சந்திக்கும் முயற்சியை விடுத்து ஓடிய வாழ்வா கொண்டாடப் பட வேண்டியது? சாதிப்பது, நிகழ்த்திக் காட்டுவது, பரிபூர ணமாக உணர்வது இவையே இயற்கையுடன் ஒன்றிய நேர்முறை வழி முறை (Positive attidue)
அறிவு எப்போதும் "காதலைத் தவிர்த்து விடு " என்று கூறுகிறது.அதனால் தான் உலகில் குறைவான அளவே அன்பைக் காண முடிகிறது! குழந்தை பருவம் முதல், மழலையர் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரையில் நாம் அறிவு பற்றிப் போதிககிறோம். இதயத்தை மறந்து விடுகிறோம் . அன்பை புறவழிச்சாலையில் செல்ல அனுமதிக்கிறோம். காரணம் அன்பு தான் விந்தைகளுக்கான நுழைவு வாயிலாக உள்ளது. அங்கு ஏன் என்ற கேள்விகளுக்கு விடை கிடையாது.
ஏன் என்ற கேள்வியை உதறித் தள்ளுங்கள்.நீங்கள் காதலில் விழுந்து விட்டால் மேலும் ...!மேலும். .!அதில் ஆழ்ந்து விடுங்கள்.அதன் பிறகு வாழ் க்கை கவிதையாகி விடுகிறது.!உரைநடையாக இருப்பதில்லை. .!அதன் பிறகு வாழ்க்கை ஒரு ஓசையாக இருப்பதில்லை..!இனிய மெல்லிசை யாக மாறுகிறது..! அதன் பிறகு வாழ்க்கை பொருளாக இல்லாமல் தெய்வீகமான ஒன்றாக மாறுகிறது..!
கடவுள் இதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. அவன் துறவறம் பூண்டிரு ந்தால், இந்த பிரபஞ்சத்தையும், கோள்களையும், விலங்குகளையும், பறவைகளையும், புழுக்களையும், பூச்சிகளையும், இன்னபிறவற்றையும் படைத்திருக்க முடியுமா? பச்சைக்கிளியின் வண்ணம் தான் எத்தனை அழகு? உணர்ச்சியற்ற ஜடமாக இறைவன் இருந்திருந்தால், இத்தனை ரசிப்புடன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியுமா?
ஒவ்வொரு படைப்பிலும் உயிர்ப்புடன், ரசனையுடன், பற்றுதலுடன் செய்த இறைவனை பற்றற்ற வாழ்வுமுறைப் பாதையில் சென்றடைய முடியுமா? காந்தியைப் படைத்த அதே அக்கறையுடன் தான், அவன் ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகுகளில் வண்ணம் தெளிவித்தான்.
இறைவன் அன்பானவன்.(LOVE). இறைவன் முழுமையானவன். அந்த முழுமையில் ஒன்றாகிப் போக நீங்கள் விரும்புவீர்களேயானால், நீங்களும் காதலில் ஈடுபடுங்கள்.அன்பு செய்தலில். அதை விடுத்து, விரதமிருந்து, பற்றுதலைப் போக்கி, இறைவனை நோக்கி செல்வோமென்பது சுயமாக மெல்லச் சாகும் வழியாகும்.
காதல் செய்யுங்கள்; ஆழ்ந்த காதல் செய்யுங்கள்; முழுமையாக உங்கள் காதலில் மூழ்குங்கள்; அந்தக் காதலிலே உள்ளமும் உடலும் கரைந்து செல்லும் அளவிற்குக் காதல் செய்யுங்கள். அப்பழுக்கற்ற படைக்கும் சக்தியாக வழிந்தோடும் நிலை எய்துங்கள்; அந்த நிலையில் தான் உங்களால் கடவுளின் உயிர்ப்பு சக்தியில் பங்கேற்றுக் கொள்ளவும், கடவுளுடன் கைகோர்த்துக் கொண்டு நடந்து செல்லவும் இயலும். அன்புடன் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment