Sunday, 11 April 2021

காதல் இன்பமான இம்சை

 காதல் இன்பமான இம்சை, பேசாலைதாஸ்


ஒருவனுடைய அறிவுகூர்மையின் ஆற்றல், ஆளுமையின் வெளிப்பாடுகள் பாலுணர்வில் இருந்தே வருகிறது, என உளவியலாளர்கள் சொல்கின்றார்கள். நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?!

ஒருவனுடைய காதல் உணர்வில் அவனுடைய திறமை அறிவுக்கூர்மை எல்லாம் மிக உச்சத்தில் இருக்கும். காதலியை வசீகரிக்க அவன் புதிது புதிகாக சிந்திப்பான். அப்போது அவன் சுடர்  போல பிரகாசிப்பான். அதைப்போல ஒரு பெண் காதல் உணர்வில் இருந்தால் அவள் முகத்தில் என்ன ஒரு பூரிப்பு! என்ன அழகு!  சாதாரண அழகுள்ள பெண்ணிடம் கூட காதல் உணர்வு அவளுக்கு பேரழகை கொடுக்கும். துடிக்கும் விழிகளும் அவளின் நாணமும் புன்சிரிப்பும் காதல் உணர்வால் அவளை அழகாக்குகிறது.

                                                        மரம் செடி விலங்கு என எல்லாமே பாலுணர்வு சக்தியில் பூத்து குலுங்குகிறது. திறமையானவர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்கள் மிகவும் பாலுணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் கவிஞர்களாக, இயற்கையின் உணர்வுகளை அறியும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். காதலின் உயிர் துடிப்பில்தான் உயிர்மை விழித்துக்கொள்கின்றது. அதனால் தான் பாரதி சொன்னான், காதல் செய்வீர் என்று, நானும் அதைத்தான் சொல்கின்றேன். தூய்மையான காதல், உண்மை அன்பில் மையம் கொள்கின்றது. அது சாதி மதம் நிறம் மொழி எல்லாம் கடந்து நிற்கின்றது.  ஆதித்தமிழன் வாழ்வில் காதலும் வீரமும் செழிப்புற்று இருந்தது. தொழில்கள் எல்லாம் உயரிய எண்ணத்தோடு இருந்தது, இராஜரீக சேவை என்ற பெயரில், மலம் அகற்றும் தொழில், இவை எல்லாமே இறாஜரீக அலுவல்களாகவே  என்ற போர்வையில் கவனிக்கப்பட்டன. பின் வந்த ஆரியம், அதன் வழி நுழைந்த  பார்ப்பனியம் தமது சுயநலத்தின் அடிப்படையில் தொழிலில் வேற்றுமையை புகுத்தினார்கள்.

சுருக்கமாக சொன்னால் இயற்கையானது இவ்வுலகத்தை பாலுணர்வு சக்தியால் ஆட்டிப்படைக்கிறது. அது மாத்திரம் இல்லாவிட்டால் இவ்வுலகம் என்றோ வறண்ட பாலைவனம் ஆகியிருக்கும்.

நீங்கள் காதலன் காதலியோடு இருக்கும் போது சொர்க்கம் இங்கேயே இருக்கிறது.

பிறகு நீங்கள் ஏன் சொர்க்கத்தை தேடி மதகுருமார்களிடம் பாதிரியார்களிடம் செல்ல வேண்டும்? அதற்கு என்ன அவசியம்?

ஆனால் காதலிக்க விடாமல் நீங்கள் தடுக்கப்பட்டால் இயல்பான பாலுணர்வு உங்களுக்கு தடுக்கப்பட்டால் பிறகு கவலையில் விரக்தியில் சோகத்தில் நரகத்தில் இருப்பீர்கள்.

மதகுருமார்களுக்கு பாதிரியார்களுக்கு வேலை வந்துவிடும். சொர்க்கம் எங்கே என்று மண்டியிட்டு நீங்கள் கேட்பீர்கள்.

அவர்கள் அதோ அங்கே என வானத்தை காட்டி பாருங்கள் என்பார். அன்பின் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment