மனம் என்னும் அற்புத ஓடை! பேசாலைதாஸ்
மனம் என்னும் அற்புத ஓடை! பேசாலைதாஸ்
நமக்குள் இருக்கும் அற்புத கருவி, நமது மனம். நாம் நம் மனதுடன் எப்போதும் ஒத்துப்போவதில்லை, எப்பொழுது பார்த்தாலும் நேர் எதிர் முரண்! மனதை நாம் அனுபவிக்கவேண்டும், மனது என்ன சொல்கின்றது என்பதை மெதுவாக, அமைதியாக கேளுங்கள்! மனம் போல் வாழ்வு என்பார்களே அது எதற்காக? மனதை நிறுத்த முயற்சி செய்யா தீர்கள். சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய் தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும்.
ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்து க்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், அதற்கு எதிராக மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப் பதுதான் முதன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.
மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையா ட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள். மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.
ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வரு கிறது. பின் நீ அங்கு , அவன் இல்லை. நண்பன் மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரை ப்பதில் ஆரம்பிக்கிறது.
கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார். எளிதாக எடுத்துக் கொள், விழிப்புணர்வுடன் இரு, உன் மன ஓட்டம் அடுத்தவனுக்கு துன் பம் தருமென்றால், அதன் ஓட்ட திசையை மாற்று, நாய் குரை ப்பதில் ஆரம்பித்த எண்ண ஓட்டம், உன் நண்பன் மனைவி யின் அழகில் நின்றுவிட அனுமதியாதே!
அந்த எண்ணம் எப்படியோ வந்துதான் போகும், சஞ்சலப்படாதே உன் நண்பணின் மனைவியின் அழகில் நின்றுவிட்டால் அங்குதான் ஆரம்பிக்கின்றது தொந்த ரவு! அது மறைமுகமாக வரும். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய்.
நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள். எல்லா பிளவுகளும் தற் கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது.
நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோ ஷத்துக்கு செலவிட வேண்டும். சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அழகியலில் இரசித்து, கவிதையாக எல்லாவற் றையும் இரசிக்க கற்றுக்கொள். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும். அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment