மெளனம் எனது தாய்மொழி பேசாலைதாஸ்
இந்த வருடம் முழுவதும் மெளனி யாகி நிறைய எழுதவேண்டும் என நினைக்கின்றேன். கண் மூடி மெளனியாக இருப்பதற்கு எண்ணினேன். என் எண்ணமிது அறியாயோ சாமி நீ! சர்வ பரிபூரண இறைவனே!
மெளனம் ஒரு அழகிய மொழி, அது மனம் பேசும் குரல், வாய் பேசாமல் மெளனிக்கும் போது, உள் மனம் பேசத்தொடங்குகின்றது, அதுவே மெளன மொழி! எல்லோரும் பேசும் ஒரே மொழி மெளனம் மட்டுமே! அது சிந்திக்க துண்டுகின்றது, வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்கும் ஒரு புரிதல் மெளனம்! ஞானிகள், மேதைகள் கவிஞர்கள், கலைஞர்கள் இவர் களின் தாய்மொழி மெளனமாகின்றது, கலக் கத்தில் இருப்போருக்கு தெளிவை கொடுப்பது இந்த மெளனம் தான்! அது அழகானது, விலை மதிப்பற்றது, சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை!
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற் குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு என்று கூட நான் சொல்லத்துணிவேன். அந்த இருட்டுக்குள்ளேயும் ஞானம் வெளிச்சமாகி உள் ஒளி பரப்பும், அதில் நாம் இறைவனை கூட தரிசிக்க லாம். அந்த இறை இன்பம் பெறும் போது, எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிக ளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண் டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ் களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!” மெளனம் என்றவுடன் என் இதயத் தில் எங்கேயோ எப்போதோ வாசித்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஒரு நாள், நான்கு துறவிகளும், இரவு முழுவதும் மௌனமாக இருக்க தீர்மானித்து அமர்ந் தனர். சிறிது நேரம் கடந்தது, முதலா மவன், "குளிர்" கடுமையாக உள்ளது என்றான். இரண்டாமவன், நாம் மௌன மாக இருக்க முடிவெடுத்து அமர்ந்திருக்கிறோம், மறந்துவிட்டாயா? என்றான். கோபமடைந்த மூன்றாமவன், நீங்கள் இருவரும் கொஞ் சம் அமைதியாக இருக் கிறீர்களா? என்றான். நான்காமவன், சிரித்துக்கொண்டே, இங்கு மௌனமாக இருப்பவன் நான் மட்டும்தான் என்றான்.
நம்மில் பெரும்பாலோனர் இந்த துறவிகள் மாதிரித்தான், புது வருடம் பிறந் துவிட் டது, நல்லனவற்றை செய்வோம், முடிந்தவரை தருமம் செய்வோம் என துணிவா ர்கள், இடையில் அடுத்தவர்களின் செயல்களால் உந்தப்பட்டு தீர்மா னங்களையும், மெளனங்களியும் களைந்து கொள்கின்றார்கள். உங்களின் மௌனமும் இப்படிப் பட்டதுதான். நீங்கள் தியானத்தில் ஆழமாக செல்ல, செல்ல...மௌனமும் தொடர்ந்து வரும்...உள்ளும் - புறமும், பேசாமல் இருப்பது மேலானது... "மௌனம், நிகழ்வது" நீ உருவாக்குவதல்ல...ஆனால் ஒரு எச்சரி க்கை. மெளனமும் பேசும், பேசும், பேசும்... அப்படி பேசும்...மௌனம் அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியது. வார்த்தை கள் தம் ஆற்றலை இழந்து விடும்போது...மெளனம் பேசும்...மெளனத்தால் சொல்ல முடியாதது எதுவுமே இல்லை. சொற்கள் தோற்று போகும்போது...மெளனத்தின் அர்த்தம் ஆழமாக இருக்கும்.. வடிவங்கள் முடியும் இடத்தில்...வடிவமின்மை ஆரம்ப மாகிவிடுகிறது......
எனவேதான் நான் சொல்கின்றேன் அமைதியாக மெளனமாக இருக்க முயலுங் கள். நீங்கள் சீண்டப்படும்போது, உணர்ச்சிகளை கோபத்தை கொட்டிவிடாதீர் கள், பொறுமை கொள்ளுங்கள். முடிந்தால் வாய் மூடி மெளனியாகுங்கள், எல்லாமே அடங்கிவிடும். உள்ளம் மட்டும் அல்ல, நம் உடலும் இதனால் நன்மை அடையும், வீன் இரத்த அழுத்தம், மன உளச்சல் இவைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். புதிய வருட தீர்மானமாக இதனை கடைப்பிடியுங்கள். இந்த வருடம் முழுவதும் மெளனி யாகி நிறைய எழுதவேண்டும் என நினைக்கின்றேன். கண்மூடி மெளனியாக இருப்பதற்கு எண்ணினேன். என் எண்ணமிது அறியாயோ சாமி நீ! சர்வபரிபூரண இறைவனே! அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment