விட்டு விடுதலையாகி,,,,, பேசாலைதாஸ்
மனிதராகப் பிறந்து இந்த மண்ணில் கால் பதித்தவர்களில் மிகவும் தீட்சண்யமா ணவர் புத்தர்.எனக்கே தெரியாமல் நான் வைத்திருந்த ஆசைகள் தான் எனக்கு பல பிறவிகளை தந்தன. வேறு யாரும் இதற்கு காரணமல்ல என்கிறார்.
முழுப்பொறுப்பையும் தன் மீது சுமத்திக் கொள்கிறார். இதுதான் அசலான ஆத்திகத்தின் ஆரம்பம். பிறர் மீது பொறு ப்பை சுமத்தி கழிப்பதில்லை. விதி, கடவுள், இது அல்லது அது என்று எவர் மீதும் எதன் மீதும் பொறுப்பை ஏற்றி வைப்பதி ல்லை.
புத்தர். ' நீ வெற்றி பெறுகிறாய் என்றால் அந்த வெற்றிக்கான பொறுப்பு உன்னுடையது என்று இரு" என்கிறார். அவர் அவரு டைய ஆசைப்படும் மனதே அவரவர் வாழ்வை நிர்ணயிக்கிறது என்கிறார். வாழ்க்கை, மரணம் என்ற சுழற்சி அவரவர் உண் டாக்கிக் கொள்வது. நானே தான் காரணம் என்றால் இதை முழுக்க மாற்றிக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறாய்.. இதில் ஒரு கொண்டாட்டமே இருக்கிறது. இதைத்தான் புத்தர் நிர்வாணம் என்கிறார். பிறப்பு-இறப்பு சுழலிலிருந்து விடுபட்டிருத்தல் ஆசையிலிருந்து விடுபட்டி ருத்தல். எல்லா ஆசைகள் என்று சொல்கிறேன் என்பதை கவனி. ஆன்மீகம் பற்றிய ஆசைகள் கூட இதில் சேர்ந்ததுதான்.
ஒவ்வொரு ஆசையும் விரக்தி துயரம் சலிப்பு என்றிவற்றுக்கே கொண்டு போகின்றன என்பதால் எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். நிறைவேறும் போது சலிப்பு தோன்று கிறது. நிறைவேறாத போது துயரம் கவிகிறது. கடந்தகாலம் உன்னை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் எதிர்காலத்தை நோக்கிய எந்த நீட்டலும் இல்லாமல் நிகழ்கணத்தில் இருக்கும்போது பிறப்பில்லை, இறப்பில்லை.
உடல் மனம் என்ற இரண்டில் இருந்தும் விடுபட்டு விடுகிறாய். இப்படித்தான் ஆசையை அறுத்தேன் என்கிறார் புத்தர். இப்போது அதை விட்டு விடுதலையாகி விட்டேன் என்கிறார். அன்புடன் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment