Monday, 10 May 2021

சாட்சிநிலை தியானம்

 சாட்சிநிலை தியானம் :-

சாட்சிநிலை தியானத்தின் முக்கிய நிலை :-
நேரம் கிடக்கும் போது ஒரு தனி இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள் .
கண்களை மூடி சில நிமிடம் அமர்ந்து இருங்கள்.
மனதில் எண்ணங்கள் தோன்றஆரம்பிக்கும் .
நீங்கள் உங்கள் மனதை பார்க்க ஆரம்பியுங்கள்...
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்...
எந்த மதிப்பீடும் இடாமல்...
எவ்வித தீர்ப்பும் சொல்லாமல்...
இந்த எண்ணம் நல்லது , இந்த எண்ணம் கெட்டது ,
இந்த எண்ணம் வர வேண்டும் , இந்த எண்ணம் வரக் கூடாது என்று எதையும் கூறாதீர்கள் .
சாட்சிதியானத்தில் மனம் என்ன எண்ணங்களை உற்பத்தி செய்தாலும் , நீங்கள் அவற்றை வெறுமனே கவனியுங்கள் .
🌸சும்மா....அசிரத்தையாக...
சாலையோரத்தில் நின்று கொண்டு...
வாகனங்கள் சென்று கொண்டிருப்பதை
பார்ப்பது போல்...
ஒரு சாட்சியாக மட்டும் இருங்கள் .
உங்கள் எண்ணங்களை பார்க்கும்போது...
எண்ணங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
வரும் எண்ணங்களோடு ஈடுபட வேண்டாம் . வெறுமனே எண்ணங்களை வேடிக்கை பாருங்கள் .
ஒரு திரைப்படம் பார்ப்பது போல் .
இப்படி பார்க்கும் போது நீங்கள் ஒன்றை உணர முடியும் மனம் என்பது நீங்கள் இல்லை . நீங்கள் மனதை தாண்டியவர் என்று உணர முடியும் .
நீங்கள் சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள் .
அதாவது சலிப்பு. சோகம், துக்கம் , கவலை , பயம் எதுவாக இருந்தாலும் அது உங்களை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது.
உங்களுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற
எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது.
அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உங்களை சுற்றி நிலவுகிறது.
சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உங்களைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத தெய்வீக தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும்.
சாட்சி தன்மை அனுபவமானது தெய்வீக ஒளியால் நிறைந்துள்ளது.
சாட்சி தியானத்தின் ஒரு நிலை முற்றும் .
------------------------------------------------------------
சாட்சி தியானத்தின்நன்மைகள்
1. நீங்கள் எப்போது எல்லாம் சோர்வாக , கவலையாக , துன்பகமாக உணர்கிறீர்களோ அப்போது சாட்சிதியானம் செய்யும் போது அந்த சோகம் ,கவலை , துன்பத்தில் இருந்து முழுமையாக உங்களால் வெளி வரமுடியும் .
எப்போதும் ஒரு மகிழ்வான உணர்வோடு வாழ்வை வாழ முடியும் .
சாட்சி தியானத்தால் கவலைகள் அகன்றதும் நீங்கள் உங்கள் புற வேலைகளை சிறப்பாக , மகிழ்வாக செய்து புற வாழ்வில் வெற்றி அடைய முடியும் .
சாட்சி தியானத்தை ஒருவர் முழுமையாக செய்தார் என்றால் தான் யார் என்கிற சத்தியத்தை உணர முடியும் .
அனைத்து ஞானிகளின் முடிவான சூத்திரம் சாட்சி நிலை மட்டும் தான் .
சாட்சி தியானம் கவலையற்ற ஒரு வாழ்வை நீங்கள் வாழஉதவும் .
நேரம் : ஆரம்பத்தில் சாட்சி தியானம் 30 நிமிடம் போதுமானது.

No comments:

Post a Comment