Saturday, 1 May 2021

பெண்னே ஒரு தவம்!

பெண்னே ஒரு தவம்!  பேசாலைதாஸ்


                      ஆறு அது ஆழம் இல்லை, அது சேறும் கடலும் ஆழம் இல்லை. ஆழம் எது ஐயா? அது பொம்பள மனசு தான் ஐயா. 
 இந்த பிறவியிலே புரிந்து கொள்ளமுடியாதா ஒரு புதி எது என்றால் அது பெண்களின் மனம் என்பது எனது புரிதல், அதனை நீங்கள் ஒத்துக்கொள்வீ ர்கள் என நினைக்கின்
றேன்.   பெண்ணும், வாழ்க்கையும் ஒன்று, புரிந்து கொள்ளவே முடியாது என் பதை புரிந்து கொண்டவன் ஞானி

                           ஒருமுறை முல்லாவிடம் ஒரு குடும்பஸ்தன் வந்து பெண்ணை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார்.  அதற்கு முல்லா பெண், வாழ்க்கையை போல புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று என சொல்லி, அவனை அனுப்பி வைத்தார்.

                                                          பிறகு ஒரு சந்நியாசி வந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார். அவரிடம் முல்லா, வாழ்க்கை பெண்ணை போன்றது, புரிந்து கொள்ளவே முடியாது என்று கூறி அனுப்பி வைத்தார். 

                                                           முல்லாவின் இந்த பதிலால், நீங்கள் சற்று குழப்பிப்ப்போயிருப்பீர்கள். முல்லாவின் பதில், புரிதலை மேலும் சிக் கலாக்கு கின்றதல்லவா!  அது சரிதான், புரிந்து கொள்ள நினைப்பதே தவறு. 

                                                          புரிந்து கொள்ள முயற்சியை கைவிட்டு, அதை நீங்கள், ஏற்றுக்கொள்ளப்பாருங்கள், எல்லையில்லாத ஒன்றை உணர்ந்து நீங்கள் அனுபவிப்பீர்கள். கடவுளின் விடயத்திலும் இது அப்படியே. கடவுள் யார் எது என்ற புரிதல் முயற்ச்சியில், அல்லது அறியும் விடயத்தில், நீங்கள் இறங்கிவிட்டால் நீங்கள் தோற்றுத்தான் போவீர்கள். புத்தர் தோற்றுப் போன அந்த கனத்தில் ஞானத்தை உணர்ந்தது போல நீங்களும் உணர்வீ ர்கள் என சொல்கின்றேன். சத்தியமா நான் ஒரு ஞான சூனியம், இது என்னைப்பற்றி நான் கொண்டுள்ள பெறுமானம்,

                                                                      பெண்ணோ.... வாழ்வோ.... அதோடு இசை ந்து சென்றால் அதன் ரகசியத்தை அடியாழத்தில் உணர்ந்து கொள்ள லாம்ஆனால் அப்போதும் நேரடியாக புரியாது. ஆனால் புரியாது என்று புரிந்து கொள்ளலாம் ஏன் இயற்கை பெண்ணை புரியாத ஒரு புதிராக வைத்திருக்கிறது.....?செய்யாமல் செய்து முடிப்பது பெண்மனம். அது துறவு வழி. சற்று விளக்க முயற்ச்சி க்கின்றேன். பெண் தான் ஒருவ னை காதலித்தால்  அதை அவளாக சென்று சொல்ல மாட்டாள் ஆனால் அவனே வந்து தன்னிடம் சொல்லவேண்டும் என காத்திருப்பாள். செய்யாமல் செய்து முடிப்பவள் தானே பெண்.

                                                                 பெண் அவள் இயற்கையின் அம்சம். இய ற்கை தன்னை போலவே பெண்ணை  வைத்திருக்கிறது. ஆனால் ஆண் இனமோ, பெண்ணை இயற்கை, தனக்கு அளித்திருக்கும், சீதனப்பரிசாக சொந்தம் கொண்டாடி, அவளை ஒரு சொத்தாக மாற்றி, அவளை அடிமை யாக்கி ஆதிக்கம் செய்கின்றான், என்பதே எனது வாதம்! 

                                                             ஆண் ஏற்படுத்திய இந்த ஆதிக்கத்தால், அவள் மேலும் மர்மமாகி விட்டாள். இயற்கை தன்னுடைய குணத்தை பெண்ணு க்கு தான் கொடுத்து இருக்கிறது, இன விருத்திக்கு பெண்ணை தான் தேர்ந் தெடுத்து இருக்கிறது. அதனால் இயற்கையின்  மர்மம்  பெண்ணிடமும்  உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் இயற்கையின் பிரதிநிதி. இயற்கையே பூரண பெண்மைதான், பூரண பெண்மை பிரபஞ்சம், அது சக்தியின் இயக்கம்.

                                                   ஒன்றை செய்யும் போதும் செய்யாமல் இருப்பது ஆண்மனம்.  யோக வழி என்பார்கள்.  பூரண ஆண்மை ஆதாரம்  சுத்த சூன் யமும்  அதன் தூய விழிப்புணர்வும் ஆகும், சமஸ்க்ருதத்தில் ப்ரஹ்ருதி - புருஷன் என்று சொல்வார்கள். இந்து மதத்தில் சக்தி - சிவன் என்று சொல் வார்கள்.  சும்மா சிவனே என்றிருந்தேன் என்பார்களே , அதன் உள்ளர்த்தம் புரிகின்றதா? அதுவே ஒன்றை செய்யும் போதும் செய்யாமல் இருப்பது ஆண்மனம்.  யோக வழி என்பார்கள். பிரபஞ்ச ஆதாரமாக ஆண்வடிவம் இருந்து கொண்டு , சக்தி பெண்ணின் வழியாக செயல்படுகின்றது இய ற்கை அதுவே கடவுளின் அம்சம்.   சக்தி பிரபஞ்ச இயக்கம். சிவன் ஆதாரம். தூய உள்ளுணர்வு, அறிவு நாம் பெண்ணை ஆணை விட்டு மனித சமுதாயத்தை விட்டு பிரி த்து பார்த்ததால் தான் . இவ்வளவு புதிரான தன்மை பெண்மையிடம் பார்க்கிறோம். ஆனால் பெண்ணை ஆணை விட்டு பிரிக்காமல்  சாதா ரணமாக பார்த்தால் ஒரே மனிதகுலமாக பார்த்தால்  எந்த புதிரும் அவளிடம் இல்லை,,,,,,தொடரும்   அன்புடன் பேசாலைதாஸ் 

No comments:

Post a Comment