கவனித்தல்
பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப
கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம்.
கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய்.
கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.
அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது.
மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.
ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன.
கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே
எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே
இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.
அதனால்தான் பல மதஙகளும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக,
மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.
மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்…………………
வெறும் காதுகளாக மாறிவிடு – என்ற ஜென் குரு – வெறுமனே கவனி – வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏன் என்றோ என்ன
நடக்கிறது என்றோ எந்த கருத்தும் இன்றி கவனித்துக் கொண்டிரு.
மனதை அடக்க நினைக்காதீர்கள். அதை கவனிக்க பழகுங்கள். அது எது சொன்னாலும் கவனியுங்கள். அதனோடு இணைந்து விடாதீர்கள். இணைந்தால் அதனுடைய உணர்ச்சிகளுக்கு உடனடியாக அடிமையாகி விடுவீர்கள். ஆகவே கவனிக்க மட்டும் செய்யுங்கள். கவனிக்கும் நீங்கள் தான் மிக முக்கியமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த எண்ணமும் நிற்காது ஓடிக் கொண்டே இருக்கும். ஓடட்டும். நீங்கள் கவனித்த எண்ணங்கள் மீண்டும் வருவதில்லை. புதிய எண்ணம் தான் வரும். அதையும் கவனியுங்கள். கவனிக்கப்படும் எண்ணங்கள் கரைந்து விடும் தன்மை உள்ளவை. ஒருநாள் நீங்கள் மட்டும் கவனமாக காத்திருப்பீர்கள். ஆனால் எண்ணங்கள் கவனிப்பதற்கு இல்லாமல் வெறுமையாய் ஒன்றுமற்று விழிப்பாய் இருப்பீர்கள். அதையும் தீவிரமாக கவனியுங்கள். நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றாய் அடையாளப்பட்டு இருப்பீர்கள். நீங்களும் சூட்சுமமாய், பிரபஞ்சமும் சூட்சுமமாய் இருப்பதை உணர்வீர்கள். இங்கு அனைத்துமே உணர்வு பூர்வமாக இருப்பதை உணர்வீர்கள். அவ்வளவு தான். பின் நீங்கள் கடவுளை தேட மாட்டீர்கள். கடவுளோடு இருப்பீர்கள். பின் சகஜ வாழ்விலும், பிரபஞ்ச உணர்விலும் மாறி மாறி இருப்பீர்கள்.
தத்வமஸி, அகம்பிரம்மாஸ்மி என்பது இதுதான்.
உங்களின் பொறுமையும், உங்களின் கவனமும் தான் இறையுணர்விற்கான ஒரே டானிக் ஆகும்..
No comments:
Post a Comment