உள் முகம் மாற்றம் பேசாலைதாஸ்
உன்னைத்திருத்து உலகம் தானாக திருந்தும், மாற்றம் பற்றி பரவலாக எங்கும் பேசப்படுகின்றது. அரசியலில், இனப்பிரச்சனை தீர்வுகளில், பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் அதிகமாக பேசப்படுகின்றது. முதலில் தனிமனித எண்ணங்களில், சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால், ஏனையவை தானாக மாறும். அந்த மாற்றாம்
நீதி சார்ந்து இருந்தால் போதும். உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்.... அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!!
இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை கூடப்பிறந்தவர்களோ என்று யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!!
உங்களையே நீங்கள் அறியாத வரை, நீங்கள் மிகவும் ஆபத்தானவர் என்பதால், உங்கள் வழிகாட்டல் இங்கு யாருக்கும் தேவையில்லை!! உங்கள் வழிகாட்டுதல் படியும், உங்கள் யோசனைப்படியும் நீங்கள் மற்றவர்களை கட்டாயப் படுத்தலாம். மேலும் உங்கள் பேச்சின் படி நடக்காதவர்களிடம் கோபம் காட்டலாம். அவர்களை முடக்கலாம், கொல்லலாம், ஊனப்படுத்தலாம்!! ஆனால் அவர்களின் உண்மையான மாற்றத்திற்கு (உள்முக மாற்றத்திற்கு) உங்களால் ஒருபோதும் உதவ முடியாது!!
உங்களுக்குள் நீங்கள் மாற்றப்படாதவரை.... மற்றொருவரின் வாழ்க்கைக்கு செல்லாதீர்கள். நீங்கள் ஞானத்தின் ஒளியால் நிரப்பப்பட்டால், நீங்கள் உதவலாம்!! இன்னும் சொல்லப்போனால் உண்மையில் நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை!! ஏனெனில் விளக்கில் இருந்து ஒளி பாய்வது போலவோ, மலரிலிருந்து நறுமணம் பரவுவது போலவோ, இரவில் சந்திரன் பிரகாசிப்பது போலவோ உங்களிடமிருந்து உதவி அதுவாகவே பாய்கிறது!!
மலர் அதன் நறுமணத்தை பரப்புவதற்கு இந்த முயற்சியும் செய்வதில்லை!! சந்திரனின் அதன் ஒளியை எங்கும் பரப்புவதற்கு எந்த பிரயாசையும் எடுத்துக் கொள்வதில்லை!! அது - அதனின் இயல்பாகவே எங்கும் பாய்கிறது!!
உங்களுடைய உள் முகம் மாற்றத்தின் மூலம் நீங்கள் - உங்களுக்கு ஒளியாக மாறினால், நீங்கள் மற்றவர்களுக்கு வெளிச்சமாகி விடுகிறீர்கள்!! இதுவே உங்களின் இயல்பான நிலையாகி விடுகிறது!! இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்

No comments:
Post a Comment