Sunday, 13 October 2024

உடலும் உடலும் இணையும் வாழ்வை உலகம் இழ்ந்தால் என்ன?

 உடலும் உடலும் இணையும் வாழ்வை உலகம் இழ்ந்தால் என்ன?

நீ எத்தனை பேரிடம்,

எத்தனை முறை உடலுறவு கொண்டாலும்,

திருப்தியின்மை என்பதையே,

அதிருப்தியை மட்டுமே

நீ அடைவதை கவனித்திருக்கிறாயா?

"காமம்தான் வாழ்க்கை" என்று

நீ வாழ்கிறாய்.

காமத்தைச் சுற்றியே

உன் சிந்தனையும்,

உன் செயல்களும்,

இந்த விளையாட்டின்

முட்டாள்தனத்தை, நீ கவனித்தால்...

அடுத்த நிலை நோக்கி நகரலாம்...

இல்லையென்றால் இறுதிவரை

தலையில் அதை சுமந்தும் அலையலாம்.

🌸 செக்ஸ் ஒன்றுதான்,

மிகவும் தேர்ந்த ஆற்றல்.

உன்னிடமுள்ள ஒரே ஆற்றல் அதுதான், என்று கூட, நான் சொல்வேன்.

அதனுடன் சண்டையிடாதே.

அது உன் வாழ்நாளையும்,

காலத்தையும் வீணடிக்கிற காரியம்.

🌸 காமத்தை முழுமையாக

நீ ஏற்றுக் கொண்டாலே தவிர,

அதை ஒழிக்க முடியாது.

அதை அடக்குவதின் மூலம் அல்ல.

அதை உருமாற்றுவதின் மூலம்

மாற்ற முடியும்.

அதை உருமாற்று.

🌸 எப்படி?

எப்படி அதை உருமாற்ற முடியும்?

நாம் என்ன செய்ய முடியும்?

அதன் மீதான பயத்தை

நீ புரிந்து கொண்டால்,

உனக்கு அதன் 'க்ளூ'

கிடைக்கும்.

என்ன செய்ய முடியும்

என்பது தெரிந்து விடும்.

             

No comments:

Post a Comment