சமாதி நிலை
பிறவிகள், கர்மா,முன்வினை,பாவம் இவைகளில் இருந்து இப்பொழுதே விடுதலை பெற ஸென் கூறும் வழி இதோ...
----------------------------------------------------------------
கர்மா தொலைக்க பலப்பல தடவைகள் நீங்கள் பிறந்தாக வேண்டும் என இந்துக்கள் கூறுகிறார்கள்.
அதன் பிறகுதான் நீங்கள் ஞானநிலை பெறமுடியும் என்கிறார்கள் ஏன்?
ஏனென்றால் உங்கள் கடந்த பிறவிகளில் நீங்கள் செய்திருக்கிற தீய கருமங்களை முதலில் நீங்கள் கட்டவிழ்க்க வேண்டி இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் கோடிக்கணக்கான பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். அந்த கருமங்களை எல்லாம் தொலைக்க இன்னும் எத்தனை பிறவிகள் எடுப்பது தேவை?
மேலும் அந்த பழைய கருமங்களை தொலைத்து வரும்போதே புதிய கருமங்களை கட்டிக் கொள்கிறீர்கள். எனவே மறுபடியும் தீய கருமங்கள் குவிந்துவிடும்.
இதன் பொருள். ஞானநிலைபேறடைவது என்பதற்கு சாத்தியமே இல்லை அல்லது அது அவ்வளவு அசாத்தியம் என்பதாகும்.
பிறகு என்ன தான் தீர்வு?
தீர்வை ஸென் கூறுகிறது: இதுவரை நீங்கள் செய்திருக்கிறது எல்லாம் ஒரு கனவில் செய்தவை.
விழித்தெழுந்தால் எல்லாம் தீர்ந்தது. நீங்கள் விழித்தெழுந்ததும் உங்கள் கனவில் நீங்கள் செய்தவற்றை முதலில் தொலைத்தாக வேண்டும் என்பதில்லை.
விழித்தெழுந்தாலே எல்லா கனவுகளும் தொலைந்து போகின்றன. அவை கனவுகள்தான் என அறிவதே அவற்றுக்கு முடிவுகட்டுவதாகும்.
பல பிறவிகளாக நீங்கள் உங்கள் தூக்கக் கலக்கமான வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் செய்தவை எல்லாம் உங்களின் தூக்கத்தில் செய்யப்பட்டவை.
அதில் பெரிய முக்கியத்துவம் ஒன்றும் இல்லை: கனவுகள் எதனால் ஆனவையோ அதனால்தான் அவையும் ஆக்கப்பட்டுள்ளன.
மேலும் எந்த கடவுளைத் தேடவும் தேவையில்லை. சட்டோரியை - சமாதியை - ஞானநிலைபேற்றைத் தேடவும் தேவையில்லை. தேடலே ஒரு தடங்கல்தான்.
நம் சீவனுக்குள் இல்லாத பொருள்களைத் தான் நாம் தேடுவோம் அவை நம் சீவனுக்குள்ளேயே இருக்கும்போது அவற்றைத் தேடி ஓட தேவையில்லை.
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே அமருங்கள். கண்களை மூடுங்கள். கவனத்தை உள் முகமாக திருப்பி உங்கள் சுய மையத்தில் இருங்கள்.
இப்பொழுது உங்களுடைய துன்பகரமான வெளி உலகத்தில் இருந்து உங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பி இருக்கிறீர்கள்.
சும்மா இளைப்பாறுங்கள்! அந்த இளைப் பாறுதலிலேயே அவற்றை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள்.
அருள்நிலை நம் இயல்புநிலை சமாதி நிலை நம் இயல்பு.
கடவுள் என்பது நம் இயற்கைத் தன்மை. உன்னை காக்க உனக்குள்ளேயே எப்பொழுதும் அது தயாராக உள்ளது.
எனவே ஸென் மனிதர் எங்கும் போவதில்லை. தன்னில்தான் அப்படியே இளைப்பாறுகிறார்.
தன் சொந்த வீட்டிற்குள் திரும்பி விட்டவனை வெளி உலக கர்மா எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.விழித்துக் கொள் இப்பொழுதே
No comments:
Post a Comment