Sunday, 13 October 2024

°இருப்பு° (existence)

 °இருப்பு° (existence) 


இந்த  °இருப்பு° (existence) பற்றிய 

உண்மை நிலையை,  முழுமையாக தெரிந்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்றே நான் உணர்கிறேன்!! இது மனதால் உணர முடியாத ஒரு மர்மமான மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது"...... 

என்று ஐன்ஸ்டின் கூறுகிறார்!! 

இவர்  20-ஆம் நூற்றாண்டின் மிகவும் தலைசிறந்த விஞ்ஞானி  என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!

இந்த இருப்புலகின் (வாழும் உலகின்) அடித்தளம் தெரிந்துக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது!!  மனிதன் என்பவன் அந்த முழுமையின் ஒரு பகுதிதான்!! எப்படி  ஒரு பகுதியாக  மட்டும் இருந்துக்கொண்டு, "பூரணமான முழுமையை"  பற்றி, தெரிந்துக்கொள்ள முடியும்?!

மனிதன் இந்த இருப்புலகை பொறுத்த மட்டில், மிகவும் துடிப்பாக இருக்கிறான்!!

என்றாலும்,  இந்த துடிப்பு மாத்திரமே முழுமையைத் தெரிந்துக்கொள்ள 

அவனுக்கு உதவுவதில்லை!!

ஏனெனில் ஒரு பகுதியாக இருந்து கொண்டு  முழுமையைத் தெரிந்துக்கொள்ள முடியாது!! மஹா சமுத்திரத்தின் கரையில் ஒரு ஓரமாக ஒதுங்கிக் கிடக்கும் ஒரு சிறிய கிளிஞ்சல் முழு சமுத்திரத்தையும் பற்றி எப்படி தெரிந்துக்கொள்ள முடியும்?!  முழுமை என்பது  அவ்வளவு மிகவும் பெரியது!! பிரம்மாண்டமானது!! எல்லையற்றது!!

விஞ்ஞானத்தினால் இந்த பிரபஞ்சத்துக்கு எவ்வித எல்லையையும் இதுவரை  கணிக்க முடியவில்லை!! "ஒன்றாக மட்டுமே"  விளங்கும் (ஏகம்) இந்த பிரபஞ்சத்துக்கு எல்லை என்பதே கிடையாது!!

"இருப்பு நிலை" (existence)  இங்கே ஆரம்பமாகிறது....  இங்கே முடிகிறது.... 

என்று சொல்லக் கூடிய ஒரு இடமெதுவும் வரவே வராது!! உங்களால் அளவற்றதை 

எல்லையற்றதை தெரிந்துக்கொள்ள முடியாது!! இந்த மர்மம் எப்போதும் இருந்துக்கொண்டுதான் இருக்கும்!!

இந்த முழுமையின் ஒரு பகுதியான மனிதன்  முழுமையைத் தெரிந்துக்கொள்ள....  அதை விட்டு விலகி இருக்க வேண்டும்!! அவன் தனியாக இருக்க வேண்டும்!! (ஏகாந்தமாக) தியானத்தில் இருக்க வேண்டும்!!

"தெரிந்துக்கொள்பவர்"....  "தெரிந்துக் கொள்ள வேண்டியதுடன்"  தனித்து இருக்க வேண்டும். அப்போதுதான் தெரிந்துக் கொள்வது சாத்தியம் ஆகிறது!!

ஆனால் தெரிந்துக்கொள்பவர் தனியாக 

இருக்கவே முடியாது!! ஏனெனில் இந்த இருப்பு நிலை உங்களில் பாய்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கிறது!! "அது இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது"!!

இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்!!

No comments:

Post a Comment