புத்தகப்பாவை
அவளை ஆடைகளின்றிப் பார்த்து விட்டதால் அவளை முழுமையாகப் பார்த்து விட்டதாக நம்புகிறாயா?
எங்கே... அவள் கனவுகளைப் பற்றிச் சொல் பார்ப்போம்!
அவள் இதயத்தை நொறுக்குவது எது, சொல்?
அவளைப் பரவசப்படுத்துவது என்ன?
நெஞ்சுருகி அழ வைப்பது என்ன?
அவள் குழந்தைப் பருவத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்.
அது கூட வேண்டாம். நீ இல்லாத அவள் வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியைப் பற்றிச் சொல்?
அவள் சருமத்தை நீ பார்த்திருக்கலாம்;
நிர்வாண உடலையும் தொட்டிருக்கலாம்.
ஆனால் நீ ஒரு முறை கூடத் திறந்து பார்க்காமல் சற்று நேரம் கையில் வைத்திருந்த அந்தப் புத்தகத்தைப் போலத் தான் அவளும்.

No comments:
Post a Comment