இலக்கியம் மாறீயதொ
" இப்போது
உங்களது அனுபவம்
எப்படி இருக்கிறது ?
உங்கள் மனது
ஒரு நிலை பட்டு விட்டதா ?
நூற்றுக்கு மேற்பட்ட
தியான நிலைகள் இருக்கின்றன.
அதனை கற்று கொடுக்கும்
ஆசிரியர்களின்
மன நிலையும் வேறுபட்டிருக்கவே செய்யும்.
தியானத்தில்,
மனதின் உள்ளே - வெளியே என்று இரட்டை நிலை எதுவுமில்லை.
அங்கு
மனம் ஒரு நிலை படுவதற்கு
எதுவுமில்லை.
அலைகிற மனது அலைந்து கொண்டுதான் இருக்கும்.
அதை அடக்கி வைப்பதோ,
ஒரு நிலை படுத்த முயற்சிப்பதோ
தியானத்தின்
இறுதி நிலை அல்ல.
மனமில்லாத
ஒரு ஆனந்த நிலைக்கு உங்களை
அழைத்து வருவதே
' தியானம் '
தூசு தும்பை ( குப்பை ) இவற்றால்
மூட பட்ட ஒரு கண்ணாடியை போல உங்களது 'உள்ளுணர்வு ' இருக்கிறது.
அதை மூடி வைப்பதுதான்
உங்கள் மனதின் வேலை.
அது ஒரு நிலை படும்போது
அதன் வேலை
அதற்கு சுலபமாகி விடும்.
' உங்கள் மனம் என்பதே
நீங்கள்தான் '
என்ற சிந்தனையில்
நீங்கள் ஆழமாக
ஊறிப் போய் விட்டீர்கள்.
உங்கள் மனமில்லாமல்
நீங்கள் இல்லை என்பதில்
உறுதியாக இருக்கிறீர்கள்.
மனதை ஒரு நிலை படுத்துவதன் மூலமாக,
நீங்களும் ஆழமான
ஒரு நிலையை அடைந்து விடலாம் என்று நினைக்கிறீர்கள்.
அல்லது,
அப்படி உங்களுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது.
தியானத்தின்
உண்மை நிலை
அப்படி அல்ல.
' நான் வேறு,
என் மனம் வேறு ' என்ற
விழிப்புணர்வை
உங்களுக்குள்
மெல்ல மெல்ல ஏற்படுத்தி,
உங்களிடமிருந்து
அதனை பிரித்து,
நாளடைவில் மனதை ஒன்றுமில்லாமல் போக செய்வதுதான்
' தியானம். '
அதனால்தான்
80 சதவிகிதத்தினர்
' தியானம் ' செய்வதற்கு தயங்குகிறார்கள்.
மீதம் உள்ள 20 சதவிகித மக்கள்,
தியானத்தில் ஆர்வமாக இருந்தாலும்,
15% தியான ஆர்வளர்கள்
இது போன்ற
தவறான வழிகாட்டுதலுக்குள்
சென்று விடுகின்றனர்.
மனதை ஒரு நிலை படுத்த வேண்டும் என்று நினைத்து தியானிக்காமல்,
' நான்,
என் மனமல்ல ' என்று நினைத்து தியானத்தை துவங்குங்கள்.
அந்த நிலையில்,
மெளனமான கணங்களின்
அந்த இன்ப ஊற்று
நாளடைவில்
தானாகவே
உங்களை வந்தடையும்.
எப்படியென்றால்,
அந்த நிரந்தர இன்ப நிலை வேற எங்கேயும்
வெளியே இல்லை.
அதனோடு தான்
நாம் பிறந்தோம்.
இன்றும்
அந்த பேரின்பம்
நம்முடன் தான் இருக்கிறது.
ஆனால்,
அதை உணர்ந்து கொள்ள முயற்சிக்காமல்,
மனதுக்கு அடிமையாகி,
மனம் காட்டிய
' குப்பை கூளங்களை '
நாம் பழகிக் கொண்டோம்.
மனதை,
தியானத்தின் மூலம்
ஒரு நிலை படுத்தாமல்,
அதை விட்டு விலகி வாருங்கள்.
நிரந்தரமான
அந்த பேரின்ப
ஊற்றை கண்டு கொள்வீர்கள்.
தற்காலிகமான
ஒரு ' சிற்றின்பம் ' உடலுறவில்
உங்களுக்கு
எப்படி கிடைக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அந்த ஒரு நிமிட நேரத்தில்,
நீங்கள் உங்கள் மனதை
இழந்து விடுவதாலேயே
அது ஏற்படுகிறது.
அந்த ஒரு கண நேரத்தில்,
வேறு எதைபற்றியாவது
உங்களுக்கு சிந்தனை வருகிறதா ?
வராது.
வேறு எதையும்
சிந்திப்பதற்கு
உங்களது மனம்
அந்த நேரத்தில்
உங்களிடம் இருப்பதில்லை.
' தியானம் '
அதன் இறுதி நிலை,
அந்த இன்ப உணர்வை உங்களிடமே
நிரந்தரமாக இருக்க
செய்து விடும்.
No comments:
Post a Comment