Friday, 11 October 2024

வாழ்வே புனிதமாகி போகிறது

வாழ்வே புனிதமாகி போகிறது  

கடந்த காலத்தில் பாரத்தை இறக்கி வைத்து விடு .

கடந்த காலம் இனியும் இருக்கும் காலம் அல்ல.

 ஏற்கனவே பறந்து போய்விட்டது.

 இருப்பதல்ல .

இல்லாத பேய்களை பாரமாக சுமந்து கொண்டிருக்கிறாய் .

எதிர்காலத்தையும் பாரமாக்கி வைத்து சுமந்து கொண்டிருக்கிறது .

அது இன்னும் இருக்க வரவில்லை.

 அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

 அதைப்பற்றி இப்போதே எதற்கு திட்டங்கள் போட வேண்டும் ?

நீ எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்காலத்தை பற்றி திட்டமிடுகிறாயோ!

 அப்படி அது இருக்கப் போவதில்லை!

 உன்னுடைய திட்டங்கள் எல்லாம் மேலும் மேலும் பிரச்சினைகளைத் தான் கொண்டு வரப் போகின்றன .

ஏனென்றால் வருவதை எதிர்நோக்கி திட்டமிடும்போது.

 இயற்கையின் மேல் உன் திட்டங்களை திணித்ததாகி போகும் .

இயற்கை உன்னை தொடர்வது அல்ல .

நீ தான் இயற்கையை தொடர வேண்டும்.

 நீ தான் நன்றி உடையவனாக இருக்க வேண்டும்.

 எனவே வித்தியாசமான ஒரு வாழ்வை.

 ஒத்திப் போடுதல் இல்லாத வாழ்வை. வாழும் போது.

 இயற்கை அருமையானதாகி போகிறது வாழ்வே புனிதமாகி போகிறது 

No comments:

Post a Comment