Friday, 11 October 2024

உயிரொளி

உயிரொளி 


இந்த உயிரொளியானது 
நிறைந்து இருக்கின்றன் ,அருள் சக்தியால், பஞ்ச  பூத அணு அண்டத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றது .பூதஅண்டத்திற்கு வந்த உயிர் ஒளியானது பல ஆயிரம் ஆண்டுகள் உருவம் எடுக்காமல் அஞ்சான இருளில் ஒன்றும்தெரியாது இருந்தது .அந்த இருளை விட்டு நீங்கிய காலத்தே ,இவ்வுலகனிடத்து புல்,நெல் ,மரம் ,செடி ,பூண்டு,

முதலியவாகவும்,கல், மலை,குன்று முதலியவாகவும்,

பிறந்து ,பிறந்து ,களையுண்டல்,அறுபபுண்டல்,வெட்டுண்டல்,

கிள்ளுண்டல்,உலர்ப்புண்டல்,உடைப்புண்டல்  ,வெடிப்புண்டல் ,

முதலிய பல்வேறு உருவங்கள் எடுத்து ,அத்தாபர யோனி

வர்க்கங்களேல்லாம்,சென்று ,சென்று ,உழன்று ,உழன்று,

அலுப்படைகின்றன .

         பின்னர் ,எறும்பு ,செல் ,புழு ,பாம்பு ,உடும்பு ,பல்லி

முதலியவாகவும் ,தவளை ,சிறுமீன் ,முதலை ,சுறா ,

திமிங்கலம் முதலியவாகவும் ;பிறந்து ,பிறந்து ,

தேய்ப்புண்டல்,நசுக்குண்டல் ,அடியுண்டல் ,பிடியுண்டல் ,

முதலிய பல்வேறு உருவங்களாகவும் ,பின் இறந்திறந்து,

அவ்வூர்வன ,நீர்வாழ்வன ,முதலிய யோனி வர்க்கங்கள்

எல்லாம் சென்று ,சென்று ,உழன்று ,உழன்று ,

அலுப்படைகின்றது .

        பின்னர் ஈ ,வண்டு ,தும்பி ,குருவி ,காக்கை ,பருந்து ,

கழுகு முதலியவாகப் பிறந்து ,பிறந்து ,அடியுண்டல் ,

பிடியுண்டல் ,அலைப்புண்டல் ,உலைப்புண்டல்

முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து ,இறந்து,

அப்பறவை யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று ,

சென்று ,உழன்று ,உழன்று அலுப்பு அடைகின்றது .

       பின்னர் அணில் ,குரங்கு ,நாய் ,பன்றி ,பூனை,

ஆடு ,மாடு,யானை ,குதிரை ,புலி ,கரடி முதலியவாக

பிறந்து ,பிறந்து ,பிடியுண்டல் ,அடியுண்டல் ,

குத்துண்டல் ,வெட்டுண்டல் ,தாக்குண்டல் ,

கட்டுண்டல் ,தட்டுண்டல் ,முதலிய பல்வேறு

அவத்தைகளால் இறந்து ,இறந்து ,அவ்விலங்கு

யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று ,சென்று ,

உழன்று ,உழன்று அலுப்படைகின்றன .

        பின்னர் பசாசர் ,பூதர்,இராக்கதர் ,அசுரர் ,சுரர் ,

முதலியவாகப் பிறந்து ,பிறந்து ,அலைப்படுதல் ,

அகப்படுதல் ,அகங்கரித்தல் ,அதிகரித்தல் ,

மறந்துநிற்றல் ,நினைந்து நிற்றல் ,மயக்குறுதல் ,

திகைப்புருதல்,போரிடுதல் ,கொலைப்படுதல் ,

முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து ,இறந்து ,

அத்தேவ யோனி வர்கங்கள் எல்லாம் சென்று ,சென்று ,

உழன்று ,உழன்று அலுப்பு அடைகின்றன .

         பின்னர் ,காட்டகத்தார் ,கரவுசெவார் ,கொலைசெய்வார் ,

முதலியராகப் பிறந்து ,பிறந்து ,பயப்படல் ,சிறைப்படல்,

சிதைப்படல் ,முதலிய அவத்தைகளால் இறந்து ,இறந்து ,

அன்நரக யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று ,சென்று ,

உழன்று ,உழன்று அலுப்படைகின்றன .அங்கனம்

அப்பிறவிகள் தோறும அடைந்த அலுப்பும் அச்சமும் ,

அவலமும் ,களைப்பும் ,துன்பமும் அடைந்து ,

அவதிப்பட்ட [ஆன்மா வாகிய ]உயிர்ஒளியானது ,

மேலே கண்ட பிறவிகள் எடுத்த,  கணக்கை சொல்லி

அளவிடமுடியாது .பலகோடி ஆண்டுகளாகும்

No comments:

Post a Comment