தெரிந்ததும் தெரியாததும்
தெரிந்ததற்கும் தெரியாததற்கும் இடையே ஒரு பாலம் தான் மனிதன் .
தெரிந்ததில் அடங்கி போய் கிடப்பது அறிவீனம் !
தெரியாததை தேடி போவது ஞானத்தின் ஆரம்பம்.
தெரியாததோடு ஐக்கியமாகப் போவது ஞானி ஆகி போவது.
புத்தன் ஆகி போவது.
மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்து மனிதன் இருப்பவன் அல்ல.
மாறிக்கொண்டிருப்பவன் .
அவன் மனிதனாகும் பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறவன்.
ஒரு யாத்திரிகன்.
ஒரு வழிப்போக்கன்.
இன்னும் வீட்டுக்கு போய் சேராதவன் .
தன் வீட்டை தேடிக் கொண்டிருக்கிறவன்.
வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவன் !அஞ்சானி.
ஏனென்றால் அத்தோடு தேடுதல் முடிந்து விடும் .
தேடுதலை நிறுத்திய அந்தக் கணமே தேங்கி போன குட்டையாகி போகிறாய் .
உன் சக்திகள் அனைத்தும் தேங்கி போக உடை மாற்றம் தான் வீசும்.
பிறகு நீ இறந்து போனவன் உயிரோடு இருப்பவன் அல்ல.
தான் யார் என்ற தேடலை முடித்தவனே உயிரோடு இருப்பவன் .
No comments:
Post a Comment