Sunday, 6 October 2024

காத்திருக்கும் காதல் 

பெண்களுக்கு பாலியல் சார்ந்த அறிவும், பாலியல் திறமையையும், பாலியல் இன்பம் அனுபவிப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் உலக முழுவதும் கிரேக்க, ரோமானிய, இந்திய பெண்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சான்றுகள் மூலம் அறியமுடிகிறது 

ஆண்களை பொறுத்தவரை ஒரு ஆணின் ஆசை, எதிர்பார்ப்பு, அன்பு, காதல் அனைத்தும் அந்த பெண்ணோடு சுற்றி சுற்றி காமவயப்படுவதில், அவளுடன் எவ்வாறு உடல் உறவு கொள்ளவது என்று தான் இருக்கும்

ஆனால் பெண்ணின் காமவயப்படுத்தல் உடலை தழுவுதல் என்ற நோக்கத்தோடு இருப்பது இல்லை 

பெண்ணின் காம வேட்கையானது வெவ்வேறு தளங்களில் சென்று கொண்டே போகும் தன்மை உடையது 

காதலன் வருகையை காத்துஇருப்பது, வேலை முடிந்து வரும் கணவனுக்காக காத்து இருந்து பார்த்தால் போதும் அந்த பெண்ணிற்கு இன்பம் கிடைத்துவிடும் 

தன் கணவன் அல்லது காதலன் மார்பில் சாய்வது, அவனுடைய தலை முடிகளை கோதிவிடுவது, அவனுக்கு ருசியாக சமைத்து போடவேண்டும் அதை அவன் உண்ணும் போது அவள் இன்பத்தை அடைகிறாள் 

இவ்வாறு ஒரு பெண்ணின் காம ஆசை வெறும் கலவியில் மட்டும் நிறைவேறுவது இல்லை 

ஆனால் ஆணின் மனது காமத்தில் மட்டுமே இருக்கும், அவள் இவனுக்காக செய்யும் எதுவும் அவன் கண்களுக்கும் மூளைக்கும் எட்டுவது இல்லை  

ஆனால் இதை புரிந்து கொண்டு அவன் உணரும் போது பெரும்பாலான ஆண்கள் தன் வாழ்நாளில் முக்கால் பாதியை கடந்து விடுவார்கள், ஒரு சில ஆண்கள் இளம் வயதில் புரிந்து கொள்பவர்களும் உண்டு  

மேலும் பெண் தன காம இன்பத்தை கூட பெரிது படுத்தாமல் தன் ஆணிற்கு இன்பத்தை கொடுத்து அவனின் சந்தோசத்தை தன் சந்தோசமாக கருதும் பெண்கள் ஏராளம் 

ஒரு பெண் எப்போதும் தன் ஆணை வசப்படுத்தவே நினைக்கிறாள்.

ஆனால் பெண்ணிற்கு மனம் என்று ஒன்று உள்ளது என்பதையே மறந்து அவள் உடலை மட்டும் அதிகாரம் செலுத்தி அனுபவிக்கவே நினைக்கிறான் 

காதலன் தன் இரவில் வருவான் என்று, கனவில் காதலனுடன் உறவு கொண்டு மயங்கி இரவில் தூக்கத்தில் தன் அருகில் தன் காதலன் படுத்து இருக்கிறானா என்று தடவி பார்க்கும் சங்ககால பாடல்கள் ஒரு காதலில் காமவயப்பட்ட பெண்ணின் ஆழ்மனதை விவரிக்கிறது 

பொருள் தேடி பிரிந்து சென்ற தன் தலைவனை எண்ணி பெண் வருந்துவதை பற்றி ஒளவையார் பாடலும் உள்ளது 

இந்த இரவி்ன் குளிரிலும் பெண்ணாகிய என்னிடம் என் மார்பகங்களுக்கு இடையே அவன் முகம் பதித்து படுத்து கொள்ளாமல் அவன் கொளுத்தும் வெயிலில் பணத்தை தேட சென்றுவிட்டானே என்று வேதனை அடைகிறாள் 

ஒரு ஆண் பெண் பிரிவு என்றாலே அது பாலியல் சார்ந்த விஷயமாகவே ஒவ்வொருவரின் மனதிலும் எழுகின்ற விஷயமாகவே உள்ளது என்பதை மறுக்கமுடியாத உன்மையாக இருக்கிறது 

No comments:

Post a Comment