காமமும் பணமும்
காமமும் பணமும் வெறியாகி போகிறவை!
பணத்தை நோக்கி வெறியை திசை திருப்பி விடலாம்.
பணத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் அடையாளம் .
காதலை வாங்க முடியாது .
ஆனால் காமத்தை வாங்கலாம் .
காமம் ஒரு கடை சரக்கு.
காதல் அப்படி அல்ல.
பிரார்த்தனை விலை கொடுத்து வாங்க முடியாது.
ஆனால் பூசாரிகளை வாங்கிவிடலாம்.
பூசாரிகள் கடை சரக்கு .
பிரார்த்தனை கடை சரக்கு அல்ல.
வாங்க முடிந்ததெல்லாம் சாதாரணமானது.
வாங்க முடியாதது புனிதமானது.
கடை சரக்கு எப்போது வேண்டுமானாலும் வாங்க முடிவது .
வாங்க விற்கக் கூடியதை மட்டும் சார்ந்தது உன் வாழ்வு
என்றால் .அது ஒரு காளி பாத்திரம் .
கடை சரக்கோடு மட்டுமே உனக்கு பரீட்சையும் என்றால் .
உன் வாழ்வு பொருளற்றதாக தான் இருக்கும்.
No comments:
Post a Comment