Sunday, 6 October 2024

காமம் தீயதா அல்லது தெய்வீகமானதா

காமம் தீயதா  அல்லது  தெய்வீகமானதா

1960 களின் ஆரம்பத்தில் பிரான்ஸ் தன் கடைசி காலனிய போரை நடத்திக்கொண்டிருந்தபோது, ஒரு பாரீஸ்காரன் -

படைப்பிரிவில் சேராமல் ஏமாற்ற நினைத்தவன் - தரைப்படைக்கு ஆள் எடுக்கும் மையத்தில் நடந்த உடல் தகுதிச் சோதனைகளின்போது தன் கண்பார்வையில் குறைபாடு இருப்பதுபோல் நடித்தான்.

படைமருத்துவர் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு வாளிப்பான இளம் பெண்ணை அவன் முன் விட்டு, அவள் உடைகளைக் களையுமாறு சொன்னார்.

"என்ன தெரிகிறது தம்பீ?" என்று கேட்டார்.

"எல்லாம் ஒரே மங்கலாக காட்டுது, டாக்டர்" என்றான் அந்த சோம்பேறி.

படை மருத்துவர் அவனை ராணுவத்தில் சேர்க்க சொல்லி சான்றிதழ் கொடுத்தார். 

அந்த சோம்பேறி கேட்டான், "எப்படி கண்டுபிடித்தீர்கள் எனக்கு பார்வை தெரியும் என்று?

ராணுவ எம்.டி. சொன்னார். "உன் கண்கள் வேண்டுமானால் சரியாக காட்டாமல் இருக்கலாம்.

ஆனால் உன் குறி நேராக அல்ஜீரியாவை காட்டிக்கொண்டு நின்றதே!'.

----------------------------------------------------

காமம் தீயது என்று சொன்னாலும் அதை செய்யத்தான் போகிறீர்கள். காமம் தெய்வீகமானது என்று சொன்னாலும் அதை செய்யத்தான் போகிறீர்கள்.

அதைப் பேசுவதை மட்டும் ஏன் தவறு என்று சொல்கிறீர்கள்? தவறு காமத்தில் அல்ல. உங்களிடம் தான்.

No comments:

Post a Comment