Sunday, 13 October 2024

மனிதர்களின் பயம்

மனிதர்களின் பயம்

 பம்பாயில் இந்தி திரையுலகை சேர்ந்த ஒரு பிரபல நடிகர் வீட்டில் ஒரு முறை 

 நான் ( ஓஷோ )

தங்கியிருக்க நேர்ந்தது.

அவர் எனது 

புனே ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருப்பவர்.

என் மீது மிகுந்த நம்பிக்கையும், பக்தியும்

உடையவர்.

அதனால்,

அவர் அழைத்தான் பேரில்

அவரது இல்லத்தில் தங்கியிருந்தேன்.

திரையுலகை சேர்ந்த 

பலரை அழைத்து 

என்னை சந்திக்க செய்தார்.

அதில் ஒரு பிரபல நடிகையும் இருந்தார்.

வந்தவர்கள் அனைவரும்,

என் அருகில் வந்து 

வணங்கி விட்டு 

திரும்பி சென்று கொண்டிருந்தார்கள்.

இந்த நடிகை மட்டும் எனது அருகில் உள்ள 

ஒரு இருக்கையில் 

அமர்ந்து விட்டார்.

அந்த நடிகரால் தான்,

 அவர் திரையுலகில் பிரபலம் அடைந்ததை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த நடிகை.

வலது கை மணிக்கட்டில்

அழகான, விலை உயர்ந்த ஒரு கை கடிகாரத்தை அணிந்திருந்தார்.

பெரும்பாலும்,

பெண்களின் கை கடிகாரம்

அளவில் சின்னதாக இருக்கும்.

அப்போதுதான் 

அது 

பெண்களின் கைக்கு அழகாக இருக்கும்.

இந்த நடிகை அணிந்திருந்த  கை கடிகாரம்,

ஆண்கள் அணிந்து கொள்ளும் 

கை கடிகாரத்தை விட பெரியதாக இருந்தது.

ஒரு ஓய்வு நேரத்தில்,

என் அருகில் வந்து அமர்ந்த அந்த நடிகர்,

நடிகையின் அந்த 

 கை கடிகாரத்தில்

 மனம் கவரப்பட்டவராய்,

அது பற்றி அவரிடம் கேட்டுக் கொண்டே 

அந்த நடிகையிடம்

தனது  கை யை நீட்டி  

அந்த கை கடிகாரத்தை கேட்டார்.

அந்த நடிகை அதை சற்றும் எதிர்பார்க்காத தால்,

மிகவும் தயக்கத்துடன் அந்த கை கடிகாரத்தை கழட்டி,

அந்த நடிகரிடம் கொடுத்தார்.

குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும்,

அந்த நடிகைக்கு வியர்க்க ஆரம்பித்தது.

உடனே,

தனது இடது உள்ளங்கையால்,

கடிகாரம் கட்டியிருந்த இடத்தை மூடிக் கொண்டார்.

அந்த நடிகையின் பரிதவிப்பிற்கான காரணம் எனக்குப் புரிந்தது.

வலது மணிக்கட்டில்,

ஒரு இடத்தில் அவரது

  ' தோலின் ' நிறம் மாறி 

சற்று விகாரமாக இருந்தது.

அது ,

ஒரு குறிப்பிட்ட காரணத்தால் 

தோலின் நிறத்தில் மாற்றம்

ஏற்பட்டு,

உடலெங்கும் பரவுகிற 

ஒரு வித சாதாரண 

தோல் நோய்.

அதை மறைப்பதற்காக தான் 

அவ்வளவு பெரிய 

கை கடிகாரத்தை கட்டியிருந்தார் அந்த நடிகை.

எவ்வளவு பெரிய புத்திசாலி

பாருங்கள்.

எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும் 

எனது நினைவுகள்,

அப்போது

சற்று சிந்தனை வயப்பட்டது.

' மனிதர்களின்

 " பயம் ' என்ற

உணர்வும்  அது போல 

விகாரமானது தான்.

அசட்டுத் துணிச்சல் அல்லது

அகந்தை என்ற 

கை கடிகாரத்தின் மூலம் அதை மறைத்து வைத்துக் கொள்கிறார்கள்.

ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர்,

நேரிடையாக உங்களிடமோ,

அல்லது

உங்கள் முன்னால்,

அவருக்கு கடமைபட்ட அவரது மனைவி, வேலையாட்கள்,

மற்றும் உறவினர்களிடம்

ஒரு வீரனைப் போல்,

வீர ஆவேசமாகப் பேசினால்,

அவர் உண்மையில் 

ஒரு  ' கோழை ' தனமானவர்.

அந்த வீரம்,

உண்மையானது அல்ல.

அது,

அவரது பயத்தை மறைக்கும் ஒரு சாதாரண கவசம்.

ஏன் அதை மறைக்க வேண்டும் ?

அவர் பயந்த சுபாவம் உள்ளவர் என்று வெளியே தெரிந்து விட்டால்,

உங்களாலோ அல்லது மற்றவர்களாலோ அவருக்கு

அவமானம் நேரிடலாம்.

அடிபணிய நேரிடலாம்.

அதனால் தான் இந்த

' ஓவர் ஆக்டிங் '

உண்மையில் மன தைரியம் உள்ளவர்கள்,

இயல்பாக, 

அமைதியாகவே இருப்பார்கள்.

தேவையிவ்லாமல்,

வெறுமனே 

தன்னை பாது காத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல்,

' வருவது வரட்டும் 

பார்த்துக் கொள்ளலாம் ' என்ற சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.

உண்மையில்

நீங்களும் நெஞ்சில் பயம்

நிறைந்தவர்கள்,

வீரனைப் போல்

ஒரு தற்காப்பிற்காக வெளியே நாடகம் ஆடுபவர்கள் என்றால்,

அந்த பயத்திலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும்.

நாடகம் அதிக நாட்கள் உங்களை பாது காக்காது.

அதற்கு

பயத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும்.

அது,

ஆரம்ப நிலையில்

 மிகவும் கடினம்.

பயம் உங்களுக்குத்

 தேவை இல்லை என்று நினைக்கிறீர்கள்.

ஆனால்,

அது உங்களுள் இருக்கிறது.

அதை வெளி படுத்திக் கொண்டு,

கடந்து வருவதைத தவிர,

அதை வெல்வதற்கு

 ஒரு சிறந்த வழி 

வேறு ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment