Friday, 11 October 2024

இளமை லீலைகள்.

இளமை லீலைகள். 

ஜப்பானில் ஒரு இளம் தம்பதியர். திருமணமானதிலிருந்து ஒவ்வொரு நாளும் விதம் விதமாக தாம்பத்தியம் அனுபவித்தனர். ஆயகலைகள் 64ஐயும் படுக்கை அறையில் தாண்டிச் சென்றது அவர்களின் இளமை லீலைகள்.

திடீரென ஒருநாள் தாம்பத்ய இன்பத்தை இரவு முழுவதும் நீண்ட நேரம் அனுபவிக்க என்ன வழி என அவர்களுக்குள் காரசாரமாக பேச்சு எழுந்தது.

தான் படித்திருந்த பல பாலியல் நூல்களை நினைவில் கொண்டுவந்து இளம் மனைவியின் கன்னங்களை தடவிக் கொண்டே கணவன் உற்சாகமாக சொன்னான்,

"சுகிதாக்கி! மொஜிதாக்கா ..!"

சடாரென அவனின் கைகளை தட்டி விட்ட மனைவி வேகமாக தலையை ஆட்டி மறுத்து பேசினாள்,

"கோவானி நீ! மோவி ஜனக்பா"

அதைக் கேட்டதும் கணவனுக்கு சுரீரென கோபம் வந்தது. இருந்தாலும் கோபத்தை அடக்கி காமத்தோடு பதில் சொன்னான்,

"டோக்கா ஆ அஞ்சி ரோடி ரௌமி யாக்கோ"

இளம் மனைவி அவன் மேல் சாய்ந்து வெட்கப்பட்டுக் கொண்டே அவன் காதிற்குள் மெலிதாக காதலுடன் கிசுகிசுத்தாள்,

"நா மியாவோ கைனா டிம் கௌஜி...!"

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை நண்பர்களே!

ஜப்பான் மொழி தெரியாவிட்டாலும் தாம்பத்ய இன்பத்தை நீண்ட நேரம் நீட்டிப்பது குறித்து அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஒரு வரி விடாமல் நீங்கள் இந்தப் பதிவை படித்தது...

பாலியல் சிந்தனை வரும்போது மனிதன் தன்னிலை மறக்கிறான் என அந்தப் பாலியல் ஆய்வு சொன்னது சரிதான் என்பதை நிரூபித்திருக்கிறது.

பாலியல் எண்ணப் பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தியதற்கு நன்றி 

மற்றும் வாழ்த்துக்கள்! விசயம் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக்கோங்க!!

No comments:

Post a Comment