தன் வழியே போய், தவறுகளை கண்டுபிடி! பேசாலைதாஸ்
மனிதன் தளர்வான நிலையில் இருக்கும்போதுதான், ஞானத்தின் தெளிவை கண்டுகொள்கின்றான். இறுக்கமாக தன்னை வைத்தி ருப்ப தின் மூலம், ஞானத்தை அடைவதை, தெளிவை பெறுவதில் சிரமப்படுகி ன்றான். புத்தர் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட் டார், ஒரு கட்டத்தில் தன் முயற்ச்சி தோல்வியடைவதை உணர்ந்த அவர், ஞானத்தை தேடும் முயற்ச்சியை கைவிட்டு, சரணாகதி நிலைக்கு சென்றுவிட்டாராம், அப்போதுதான் அவர் ஞானம் பெற்றதாக புத்தர் விபரிக்கின்றார். ஞானிகளும், குருக்களும், யோகிகளும் அடைய முடியத ஞானத்தை சிலவேளைகளில், பாவவழியில் மூழ்கி இருந்த, விபச்சாரிகள், பாவிகள் ஞானத்தை தெய்வீகத்தை கண்டுகொள்கின்றார்கள். இயேசு தெளிவாக சொன்னார் ஞானம் ஞானிகளையும் மேதாவிகளையும் தேடிச் செல்வதில்லை, மாறாக பாவிகளையும் விபச்சாரிகளையுமே தேடிவருகின்றது என்று.
மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர். இரண்டு பேர் ஒரேவிதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை. உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே.
ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ – தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ – அதுவே உனது வழி.
ஆனால் யார் தன்னிச்சையாக இல்லையோ, யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ, யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ, அவர்கள் முழுமையான தீவிரத்தோடு வாழவேண்டும்,, முழு முயற்சியோடு இருக்கவேண்டும்
ஏனெனில் அதுதான் அவர்களுக்கு சுலபம். யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும்.
தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக, தளர்வாக இருப்பதன் மூலமாக, இயல்பாக இருப்பதன் மூலமாக அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் அப்போது அதுதான் சரியான வழி.
ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
ஆகவே எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் அதன் அடிஆழம் வரை செல், அதனுடன் செல், அது என்னவென்று உணர்ந்து கொள். அப்போது ஞானம் அருகில் வரக்கூடும்.
மனதை தளர்வாக வைத்திருப்பதற்கு ஒரே வழி! அன்பாக இருப்பது, எல்லோரிடமும் அன்பாக இருக்கப்பழகிக்கொண்டால் மனம் தளர்வான, மென்மையானதாக மாறும், அங்கே தெய்வீகம் குடி கொள்ள எத்தனிக்கும்.
நமக்குள் ஆணவத்தை, அகந்தையை, ஈகோவை வளர்த்துக் கொண்டு, எனது ஊர், எனது சாதி, எனது சொந்தம் என்ற சுயத்தை நாம் வளர்த்துகொள்வோமேயானல் அவர்கள் தோல்வியையே காண்பார்கள். கிறிஸ்தவமதத்தில் பெரும்பாலன அருட்பணியா ளர்கள், குருக்கள், க்ன்னியாஸ்திர்கள் இப்படிப்பட்ட சுயத்தில் இருப்பதினாலும், அதில் இருந்து விடுபட முடியாது இருப்பதி னாலுமே அவர்களால் ஞானம் பெறமுடிவதில்லை, நற்பணிகள் ஆற்றுவதில் தோல்வி கண்டுகொள்கின்றார்கள்.
இப்படிப்பட்ட அருட்பணியாளர்களை நீங்கள் சீண்டிப்பாருங்கள். அவர்கள் ஆற்றாமைகள், குப்பைகள் வெளியே வரும், ஏனெனில் அவர்கள் ஒருவிதமான இறுக்கமான மனிதர்களாக இருக்கின் றனர். நமது குடும்ப பெருமைக்காக, சமூகப்பெருமைக்காக அருட்பணி வாழ்வை தெரிவு செய்துவிட்டு, பின்னர் தமது ஊரையும், குடும்பத்தையும், தனது சாதியத்தையும் விட்டு வெளிவரமுடியாது, இரண்டும் கெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இறுக்கமான மனிதர்களாக வாழ்கின்றார்.
நான் முகநூலில் ஒரு வேடிக்கையான அருவருப்பான கதையை வாசிக்க நேர்ந்தது, பாவ மன்னிப்பு அறையில் ஒருவன் பாவமன்னிப்பு கோரி காத்திருந்தான் பாதிரியார் திரைக்கு மறுபுறம் வந்து அமர்ந்து செய்த பாவத்தைக் கூற சொன்னார்.
இவன் தான் அன்பாக வளர்த்த நாயோடு உடலுறவு கொண்டுவிட்டேன் ஆகவே எனக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டும் என்றான் பாதிரியாரும் இனி இது போன்ற பாவத்தை செய்யாதே எனக்கூறி 10 டாலர் அபராதம் விதித்தார்
மீண்டும் அடுத்தவாரம் அவனே வந்திருந்தான் மீண்டும் பாவமன்னிப்பு கேட்க இந்த வாரம் என்ன பாவம் செய்தாய் என்றார் பாதிரியார் இவன் மீண்டும் அதே பாவம்தான் மீண்டும் என் நாயுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்.
ஏனெனில் அது மிக சுகமாக இருந்தது என்றான் பாதிரியார் சற்று கோபத்துடன் இனி செய்யாதே எனக்கூறி 50 டாலர் அபராதம் விதித்தார் மூன்றாவது வாரமும் அவனே பாவமன்னிப்பு கேட்க வந்திருந்தான்
இப்ப என்ன பாவம் செய்தாய் என்றார் பாதிரியார் அவன் இப்பவும் அதே நாயோடு உடலுறவு செய்துவிட்டேன் அது மிக சுகமாக இருந்ததால் என்னால் விட முடியவில்லை என்றான்
உடனை கோபத்தின் உச்சத்துக்கே சென்ற பாதிரியார் முடியாது முடியவே முடியாது. நானும் முயற்சி செய்து செய்து பார்த்தேன் என்னை நகத்தால் பிராண்டி காயப்படுத்திவிட்டு சென்றுவிட்டது என்றார் வருத்தத்துடன்.
இந்த கதை அருவருப்பானதுதான், ஆனாலும் இதற்குள்ளும் சில உண்மை இருக்கின்றது, துறவறம் என்பது இலகுவான காரியம் அல்ல, என்னைப் பொறுத்தவரை, அது இயேசு சொன்னதை மீறும் செயலாகும்! இயேசு என்ன சொன்னார்? உன்னைப்போல உன் அயலவனை நேசி என்றார். முதலில் நமது உடலின் ஊணர்வு களை உணர்ச்சிகளை நாம் நேசிக்கவேண்டும். அப்படியானல் கிறிஸ்தவ துறவிகள் அறியாமல் செய்கின்றார்களா? இல்லை இது தவறான புரிதல், இயேசுவுக்காக சகல மக்களை அன்பு செய்யவே இவர்கள் துறவிகளானார்கள் அதுதான் உண்மை நோக்கம் இலக்கு, இயேசுவும் இதற்கு சான்று பகன்றார். என் பொருட்டு சகலவற்றையும் துறப்பவன், பாக்கியவான் என்று, அப்படிப்பட்ட துறவிகள் குருக்கள் கன்னியர்கள் தளர்வான தன்மை கொண்டிருப்பார்கள், சகலரையும் அன்பு செய்வார்கள், அவர்களை பார்க்கும் போது தெய்வீக வட்டம் தெரியும்.
ஆனால் எல்லா குருக்களும் துறவிகளும் அல்ல, சுயத்தை மறக்காதவர்கள், தனது ஊர், தனது சாதி, தனது ஊர் ஆலையம், தனது பங்கு என்று கட்டிக்கொண்டு, இறுக்கமாக தங்களை வைத்துக்கொள்வோர்களின் ஆழ்மனதில், மேலே சொன்ன அருவருப்பான கதையில் வரும் பாதிரியாராகவே இருப்பார். எனவே யாராக இருந்தாலும் எல்லோரையும் நேசித்து தன்னலம் மறந்து தளர்வான தயாள குணம் கொண்டவர்களாக இருந்தல் நாமும் ஞானம் பெறுவோம், இது எனது சிந்தனை . எனது மெய்ப்பொருள் தேடல் தொடரும் அன்புடன் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment