சொல்லாதே யாரும் கேட்டால்,,,, பேசாலைதாஸ்
முல்லா தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் என்ன விசயம்? எதற்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் ? எனக்கேட்டார்.
அந்த சாமியார் நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்.அதைச் சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது. அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் என்றார்.
உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு . சரி பரவாயில்லை என்னுடன் வா என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் ஏறினார்.
அந்தச் சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலைக் கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு முல்லாவைத் தொடர்ந்தார்
சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.
சாமியார், எனக்கு என்ன தருகிறீர்கள் ? எனக் கேட்டார். சற்று பொறுமை இழந்தவராக
முல்லா என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை, "sorry “ என்றார்
சாமியார், முட்டாள் இதைக் கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ?
முல்லா , என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான். அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்கமாக இருந்தது அதான்.மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்.ஹீ ஹி… “ என்றார்.
“அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது”
No comments:
Post a Comment