நீ யார், என்று உனக்குத் தெரியாது. பேசாலைதாஸ்
'தான் , யார் என்று தெரியாமல் .
அவன் எங்கிருந்து வருகிறான் என்பது தெரியாமல் .
அவன் எங்கே போகிறான் என்பது தெரியாமல் .
ஒரு மனிதன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
இந்த அடிப்படை சுய அறியாமை காரணமாக ஆயிரத்தொரு பிரச்சனைகள் எழுகின்றன.
எல்லோருக்கும் உன்னை யார் என்று தெரிந்திருக்கலாம் .
ஆனால் உனக்கு
உன்னுடைய கடந்த தன்மையை பற்றி உன்னுடைய உண்மையான இயல்பை பற்றி
உனது உண்மையான இருப்பை பற்றி தெரியாது.
நீ முழுமையான அறியாமையில் இருக்கிறாய்.
வாழ்க்கையின் ஒரே சோகம் இதுதான்
நீ பல காரணங்கள் கண்டுபிடிக்கலாம்
ஆனால் உண்மையான சோகம் இதுதான்
நீ யார், என்று உனக்குத் தெரியாது.
உனக்கு நீயே ஒரு விளக்காகி விடு .
அந்த ஒளி உன் அக இரட்டைக் கலையட்டும்.
உன் அகபலவீனங்களை விரட்டியடிக்கட்டும்.
விரட்டி விடட்டும் .
அன்பு உன்னை ஒரு மாபெரும் சக்தியாக மாற்றட்டும்
ஓர் ஆன்மா சக்தியாக ,ஆன்மா சக்தி உடையதாகி போகும் போது.
#நீ_இறக்கப்_போவதில்லை என்பதை புரிந்து கொள்வாய் .
#நீ_ஒரு_சிரஞ்சீவி என்பதை தெரிந்து கொள்வாய்.
#நீ_நித்தியமானவன் என்பதை அறிந்து கொள்வாய் .
அன்புதான் நித்தியத்தின்
முதல் தரிசனத்தை உனக்குத் தருகிறது
காலத்தை கடந்த அனுபவம்
அன்பு மட்டுமே.
இந்த உலகத்திற்கு யாரும் பெயருடன் வருவதில்லை .
எல்லா விதமான பெயர்களும் தரப்பட்டதையே,
உன் மீது ஒட்டப்பட்ட அடையாளங்களே.
ஆனால் நீ அடையாளமாகவே மாறிவிடுகிறாய் ,
நீ எந்தப் பெயரும் இல்லாமல்,
எந்த புகழும் இல்லாமல் வந்தாய்.
என்பதை நீ முற்றிலும் மறந்து விடுகிறாய் ,
மேலும் அதே முறையில் தான்,
நீ இறந்தும் போகிறாய்.

No comments:
Post a Comment