Wednesday, 22 November 2023

கடவுள் ஒரு குற்றவாளி! பேசாலைதாஸ்

 கடவுள் ஒரு குற்றவாளி!  பேசாலைதாஸ்

உன்னை சொல்லி குற்றமில்லை, என்னைச்சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, கவிஞன் சொல்வது போல கடவுள் குற்றவாளியா? நடைமுறை வாழ்வைப்பார்த்தால் அப்படித்தான் எண்ணத்           தோன்றுகின்றது. ஊரெல்லாம் பைத்தியக்காரன் என்று சொல்லப்பட்ட ஒரு புத்திசாலியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் பற்றி யாரும் சரியாக அறிந்ததில்லை. அவர் ஒரு பைத்தியக்காரன் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தார்.

அவர் ஒரு யூதன் யூதர்களில் உண்மையிலேயே பல புத்திசாலிகள் உருவாகி யிருக்கிறார்கள். அவர்களின் உள் உலகம் விசேஷத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. யூதர்கள் தம்மை கடவுளின் பிள்ளை என கருதினார்கள், விவிலிய மும் அதை ஆமோதிக்கின்றது, அது அப்படிச்சொல்வதற்கு காரணம் இயேசு நாதர் அவர்களிடையே பிறந்தார் என்பதே, ஆனால் அவரை அவர்கள் அங்கீ கரிக்கவில்லை அது வேறு ஒரு விடயம்

இந்தப் பைத்தியக்கார யூதனின்  நடவடிக்கைகள்  அந்த கிராமத்து மக்க ளையே மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கியது. ஏனெனில் ஒருவருக்கும் அவர் அடுத்தபடியாக என்ன செய்யப்போகிறார் என்று தெரியாது. ஒருமுறை இவர் நீதிமன்றத்தில் உள்ள அத்தனை நீதிபதிகளையும் அழைத்திருந்தார். ஒரு மதபோதகர் கூப்பிட்டுள்ளார் என்று நீதிபதிகள் அனைவரும் வந்தனர்.

இவர் அவர்களிடம் சொன்னார் "கடவுளுக்கு எதிராக என்னிடம் ஒரு குற்றச் சாட்டு உள்ளது ஆகவே இந்தக் கடவுளை ஒரு குற்றவாளி, ஒரு நியாயமற்றவர் என்பதை நிரூபிக்க என் வாதத்தை உங்களிடம் சொல்லுகிறேன்."என்றார்.

நீதிபதிகள் மிகவும் பயந்து போய்விட்டனர்; ஆனால் அவர்கள் இவர் பேச்சைக் கேட்டாக வேண்டியதிருக்கிறது. ஏனெனில் இவர் ஒரு மதபோதகராக இருந்து வருகிறார். அவர் நீதிமன்றத்தில் வாதாடுவதைப் போல அவர் தன் வாதங்களை இவ்விதம் எடுத்துரைத்தார்.

கடவுள் இவ்வுலகைப் படைத்தார். ஆனால் அதே கடவுளே இவ்வுலகிற்கு தீர்க்க தரிசிகளை அனுப்பி வைத்து எவ்விதம் இவ்வுலகை துறப்பது என்று போதித் தும் வருகிறார். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது. கடவுள் தான் ஆசை களை எங்களுக்குக் கொடுத்தார். அந்த ஆசைகளை கடவுளுக்கு எதிரானவன் அதாவது பிசாசு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, மக்களிடம் ஆசைகளை விதைக்கின்றான், ஆனால் இப்பொழுது அவரால் அனுப்பிவைக்கப்பட்ட சான் றோர்கள் சொல்லுகிறார்கள் 'ஆசையற்றவனாக இரு என்று. இப்பொழுது என்ன வகையான குற்றங்களைச் செய்தாலும் உண்மையில் அதன் குற்றவாளி கடவுள்தான். ஏனெனில் அவர்தான் இந்த ஆசைகளை உருவாக்கினார்."

நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் ? அவர் சொல்லுவது சரிதான். ஆனால் நீதி மன்றம் இவர் முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என்றும், இவரை மதபோதகர் ஸ்தானத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் முடிவெடுத்தனர். ஆனால் உண்மையிலேயே இந்த மனிதன் சொல்லுவது நிஜமாகும். அவர் கடவுளை மிகவும் நேசித்தார். தன்னுடைய நெருக்கமான நண்பனுடன் உறவாடுவதைப் போல் கடவுளிடம் உறவாடுகிறார்;

அவர் கடவுளிடம் கேட்கிறார்: "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? இனியும் எங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்காதே, நீ நாடகம் நடத்திக்கொண்டு இருக்கின்றாய், அதிலே ஆளுக்கொரு பாத்திரம் கொடுத்து நடிக்கச்சொல் கிறாய், ஆசைக்கடலில் மிதக்கவிட்டு அதை பார்த்துக்கொண்டு இருக்கின் றாய், இது போதுமானது."அவர் கடவுளை மிகவும் நேசித்தால் இம்மாதிரி அவர் நடந்து கொள்ளுகின்றார். கடவுளோடு பேசிக்கொள்கின்றார்.

இவருடைய பேச்சைக் கேட்டதும் கடவுள் உடனடியாக தான் செய்து கொண்டி ருந்தவைகளை அப்படியே நிறுத்திவிட்டு இவர் பேச்சைக் கவனிக்கத்தொட ங்கினார். கடவுள் அருகில் உள்ள தேவதூதன் கேட்டது : "என்ன ஏற்பட்டது. ஏன் அப்படியே நிறுத்தி விட்டீர்கள்?" என்று, கடவுள் சொன்னார்: "அந்தப் பைத்திய க்காரன் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். நான் அதைக் கேட்டாக வேண்டும். ஏனெனில் அவன் சொல்லுவதெல்லாம் முற்றிலும் உண்மையானது. அவன் என்னை மிகவும் நேசிப்பதால், அவன் என்னை எப்படி அழைத்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. எல்லாமே அனுமதிக்கப் படுகிறது. எல்லாமே ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றார்.

முழுமை அடைந்தவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும். மற்றவர் களின் பிரார்த்தனையை, மற்றவர்கள் உருவாக்கிய வழிபாடுகளை கிளிப் பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருப்பது பிரார்த்தனை அல்ல. அது மன்றாட் டும் அல்ல. கடவுள் என்பவர் ஒரு முதலாளி போலவும் நீங்கள் அவரது தொழிலா ளிகள் போலவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு நண்பனாக கூட இருக்கலாம்.  மிகவும் நெருக்கமானவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். கடவுள் கூட......... தொடரும்


No comments:

Post a Comment