நீரோடைகள்
நீங்கள் கோபத்தில் இருக்கும் பொழுது கோபத்தை புரிந்து கொள்ள முடியாது. காதல் வயப்பட்டு இருக்கும் பொழுது காதலை புரிந்து கொள்ள முடியாது. தீவிரமான சிந்தனையின் மூலம் உங்கள் மனக்குழப்பத்திற்கு தீர்வு காண முடியாது. நீங்கள் செய்ய வேண்டியது, உடனடியாக அதை விட்டு வெளியே வந்து ஒரு பார்வையாளராக மாறிவிடுங்கள்.உடனேயோ அல்லது தாமதித்தோ நீங்கள் அதற்குரிய தீர்வை பெற்றுவிடுவீர்கள
அழகான முகத்தை உருவாக்குவது நீங்கள்தான்,🌹
அழகான முகம் உங்கள் விளக்கம்.
இது உண்மையானது அல்ல, ஏனென்றால் உண்மை அசிங்கமானதாகவோ அல்லது அழகாகவோ இல்லை.
மனிதன் இந்த பூமியில் இருந்து மறைந்தால் என்ன நடக்கும்?
மலைகள் அழகாக இருக்குமா, பூக்கள் அழகாக இருக்குமா, முட்கள் அசிங்கமாக இருக்குமா? - என்ன நடக்கும்?
மனிதன் மறைந்தால் அழகும் அசிங்கமும் மறையும்.
பூமி அப்படியே இருக்கும்.
சூரியன் உதிக்கும், சந்திரன் இரவில் இருக்கும், வானம் ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களால் நிறைந்திருக்கும்.
பூக்கள் மலரும், மரங்கள் பூக்கும், மலைகள் அப்படியே இருக்கும்.
எல்லாம் அப்படியே இருக்கும், ஆனால் அழகும் இருக்காது, அசிங்கமும் இருக்காது.
மனிதனின் மறைவுடன் அவனது அனைத்து விளக்கங்களும் மறைந்துவிடும்.
🌹யதார்த்தம் அழகாகவோ அசிங்கமாகவோ இல்லை - அது இருக்கிறது. அதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.🌹
எதை நேசித்தாலும் யாரை நேசித்தாலும்
உண்மையில் அது...
உங்களை நீங்களே நேசிப்பதாகும்.
எதை வெறுத்தாலும் யாரை வெறுத்தாலும்
உண்மையில் அது...
உங்களை நீங்களே வெறுப்பதாகும்.
பசியோடு இருக்கும் ஒரு ஏழை,
ஏன் MOZART இசையை கேட்பதில்லை,?"
பசியோடு இருப்பவன்,
ஏன் PICASO ஓவியங்களை இரசிப்பதில்லை?
என்று யாரும் என்னிடம் கேட்பதில்லை.
ஆனால், அதற்கு மாறாக,
செல்வந்தர்கள் மட்டும்,
ஏன் உங்களை தேடி வருகிறார்கள்?
என கேட்கிறார்கள்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்...
ஆன்மீகம் தான் உண்மையான ஆடம்பரம்.
உலகில் செல்வ செழிப்பு, சராம்சம், புத்திகூர்மை, மற்றும் கலாச்சாரத்தில் நாகரீகம் உள்ளவர் மட்டுமே என்னை நெருங்க முடியும்.
ஏன் என்றால்...
#மிகவும்_உன்னதமான_ஐஸ்வர்யம்,
#ஆன்மீகம்_மட்டுமே.
நேற்று ஓர் இடத்தில் பேசிக் கொண்டிருந்தேன்......
🌸நான் உங்களை திருப்தியற்ற தன்மைக்கு கொண்டு வர விரும்புகிறேன்..
🌸ஒரு தெய்வீக தாகம்...
ஓர் அற்புதமான அதிருப்தி...
அனைவரிலும் ஏற்படவேண்டும்...
இதுவே என் ஆசை...
🌸மனிதத் தன்மையின் எல்லையை மனிதன் மீற வேண்டும்...
🌸இந்த எல்லை மீறல்தான் அவனை தெய்வீகத்தில் நுழைய வைக்கும்...
🌸இந்த எல்லை மீறல் நடைபெறுவது எவ்வாறு?
🌹ஓர் அறிகுறியைத் தெரிந்து கொண்டால்...
🌹அந்த "எல்லை மீறலின் செயல்முறையையும்" புரிந்து கொள்ளலாம்...
🌻"மிருகத் தன்மை" எண்ணத்திற்கு முந்தைய நிலை...
🌻"மனிதத் தன்மை" எண்ணச் செயல்நிலை...
🌻"தெய்வீகத் தன்மை" எண்ணச் செயல்முறை தாண்டிய நிலை....
🌻எண்ணச் செயல்முறையின் சூழலைவிட்டு வெளியேறி விடுங்கள்...
"தெய்வீக உணர்வில் சென்றடைந்து விடுவீர்கள்..."
🌻எண்ணச் செயல்முறையைக் கடந்து விடுதல்...
மனிதத் தன்மையின் எல்லை
மீறலில் சென்று விடுவதாகும்.
எல்லா தோல்விகளையும்...
எல்லா விரக்திகளையும்...
எல்லா அவமானங்களையும்...
விட்டு விடலாம்
அதை சுமந்து கொண்டு இருந்தால்...
நீ தோல்விகளில் தான்
முட்டிக் கொள்ள வேண்டும்.
பொறுமை
பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை. பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு. எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.
நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.
பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.
காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.
உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை.
பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.
பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.
உன்னையே நிந்தித்து கொண்டிருக்காதே.
எவ்வளவு நிந்தித்தாயிற்று .உன்னை
எனவே நிந்தனையை நித்தமும் ஏற்றுக் கொள்ள பழகி போய்விட்டாய்
இப்போது நீயே உன்னை நிந்திக்க ஆரம்பித்து விட்டாய்.
யாரும் தம்மை மதிப்பு வாய்ந்தவராக எடுத்துக் கொள்வதில்லை.
யாரும் தம்மை ஆண்டவனின் அருமையான படைப்பு என்று எடுத்துக் கொள்வதில்லை .
யாரும் தம்மை ஒரு தேவை என்று எடுத்துக் கொள்வதில்லை.
இவை நச்சுத்தன்மை வாய்ந்த கொள்கைகள் .
ஆனால் நீயே ஏற்கனவே விஷம் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறாய் .
தாயின் பாலோடு விஷத்தையும் சேர்த்து புகட்டி இருக்கிறார்கள் .
இதுதான் உன் கடந்த காலத்தில் லட்சணம்.
சுய சிந்தனை எனும் கரு மேகத்தின் நிழலில் மானிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உன்னை நிந்தித்து கொண்டே இருந்தால்.
நீ வளர்வது எப்படி.
நீ பக்குவப்படுவது எப்படி .
உன்னை நிந்தித்து கொண்டே இருந்தால்,
ஜீவிதத்தை எப்படி போற்றி வணங்குவது.
உனக்குள் இருக்கும் ஜீவிதத்தை போற்றி வணங்க முடியவில்லை என்றால்.
பிறரிடம் இருக்கும் ஜீவிதத்தை போற்றி வணங்குவது எப்படி .
முடியவே முடியாது.
உனக்குள் இருக்கும் இறைவனை மதித்தால் தான் .
நீ முழுமையின் ஓர் அங்கமாக முடியும்.




No comments:
Post a Comment