Wednesday, 22 November 2023

புல் தானாகவே வளர்கிறது. பேசாலைதாஸ்

 புல் தானாகவே வளர்கிறது. பேசாலைதாஸ்

நான் மிகவும் 

இறை நம்பிக்கை உள்ளவன்.

அவனின்றி ஒன்றும் நடக்காது என்று நம்புகிறவன்.

எப்போதும் அவன் சிந்தனையிலேயே இருப்பவன்.

எனது எண்ணங்கள்,

செயல்கள் அனைத்தும் அவனது அருளே என்று

ஆழமாக நம்புகிறவன்.

இதைதான் சரணாகதி என்று நம்புகிறேன்.

அது,

உண்மைதானே ?

வேறு எண்ண வேண்டும் ?

ஓஷோ :

தர்மா,

நீ அடைந்தது ஒருவிதத்தில் 

சரணாகதி தான்.

உன் மதத்தில்,

அதன் கோட்பாடுகளில்,

அவை வழி காட்டும் பக்தி நெறிகளில் நீ சரணாகதி ஆகிவிட்டாய்.

நீ சொல்பவை எல்லாம்

இறைவனிடம் சரணடைவது ஆகாது.

நீ வேறு,

இறைவன் வேறு என்று நினைக்கும் வரையில், சரணாகதி என்பதன் அர்த்தம் 

வேறு விதமாக மாறிப்போகும்.

அவனிடம் சரணாகதி அடைவது என்றால்,

அவனுடனே கலப்பது.

அதற்கு ஒரு குழந்தையின் மனது வேண்டும்.

ஒரு குழந்தையை போல 

நீ மாறுவது ஒன்றே,

சரணாகதி யின் முதல்படி.

நீ என்ன ஒரு பைத்தியமா ?

உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ? ' என்று உன்னை பார்த்து அனைவரும் கேட்க வேண்டும்.

ஒரு வேத புத்தகத்தில் உள்ள கதையை சொல்கிறேன்.

இது உண்மையில் நடந்தது என்று அந்த மதத்தை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

நாம் அதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.

கதையை மட்டும் சொல்கிறேன்.

' தனது ஐந்து வயது மகனை

தானே கொன்று 

பலியிடும் படி இறைவன் தனது கனவில் வந்து சொன்னதாக ஒருவன் நம்பினான்.

அதற்கான நாளில்,

தனது ஐந்து வயது மகனை காட்டிற்குள் அழைத்து சென்று,

 அங்கு அவனை

இறைவனுக்கு பலி கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தான்.

காட்டுக்கு அழைத்து செல்வது குறித்து தனது மகனிடமும் சொன்னான்.

எதற்காக ? என்ற காரணத்தை மட்டும் சொல்லவில்லை.

அந்த குழந்தைக்கு ஒரே ஆச்சர்யம்.

அன்று இரவு தனது தந்தையை எழுப்பி,

' அப்பா, நாம் எப்போது காட்டுக்குள் செல்ல வேண்டும் ? ' என்று ஆவலுடன் கேட்டான்.

அவனுக்கு தர்மசங்கடமாக போய்விட்டது‌.

தனது அன்பு மகனை பார்த்தபடி

தனக்குள் சொல்லிக் கொண்டான்,

' நான் இவனை கொல்வதற்காக காட்டுக்கு அழைத்து செல்ல இருக்கிறேன்.

அது தெரியாமல் இவன் இப்படி கேட்கிறானே ?

என்னுடன் காட்டிற்கு வருவதற்கு மிக ஆர்வமாக இருக்கிறான்.

இவனுக்கு நான் என்ன 

பதில் சொல்வது ?' என்று சிந்தித்த படியே,

' நாளை அதிகாலையில் செல்லயிருக்கிறோம்.

இப்போது நன்றாகத் தூங்கு.'

என்று குழந்தையை தூங்க வைத்தான்.

விடியற்காலையில் தனது அப்பாவிற்கு முன்பாகவே எழுந்து குளித்து விட்டு,

உடைகளை அணிந்து கொண்டு காட்டுக்கு செல்ல தயாராகி விட்டான் மகன்.

அங்கு என்ன 

நடக்கப் போகிறது என்று குழந்தைக்கு தெரியவில்லை.

ஆனால்,

அந்த குழந்தை தனது அப்பாவை நம்புகிறது.

அவர் பின்னால் செல்வதில் ஒரு பாதுகாப்பை உணர்கிறது.

மறுநாள் காலையில், 

தனக்கு முன் கிளம்பி தயாராக இருந்த

தனது மகனை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்.

ஓரிடத்தில் தனது மகனை அமர வைத்து விட்டு,

தன் கையிலிருந்த கத்தியை கூர் தீட்ட ஆரம்பித்தான்.

அவர் அருகில் வந்து குழந்தை கேட்டது,

' எதற்காக இந்த கத்தியை தீட்டுகிறீர்கள் ? '

' நான் இந்த கத்தியால் உனது தலையை வெட்டப் போகிறேன் ' என்று கனத்த மனதோடு சொன்னான் அவன்.

' அதற்கு நான் தயாராக இருக்கிறேன், அப்பா.

கத்தியை தீட்ட நான் 

உங்களுக்கு

உதவி செய்யட்டுமா ? என்றது குழந்தை.

அழுத கண்களோடும்,

கனமாகிப்போன இதயத்தோடும்,

தனது மகனை இழுத்து 

கத்தியை ஓங்கினான்.

வானத்தில் இறைவனது குரல்,

' நிறுத்து ! போதும்.

இந்த பலி எனக்கு

தேவையில்லை.

நீ உன் மகனுடன் வீட்டிற்கு செல்லலாம் ' என்றது.

அந்த குழந்தையை கவனி.

அதற்கு கத்தியை பற்றி தெரிய வில்லை.

கழுத்தை வெட்டுவது என்றால் என்ன என்று தெரியவில்லை.

அது எப்படி வலிக்கும் ?

உயிர்பலி என்றால் என்ன ?

எதுவுமே தெரிய வில்லை.

அந்த குழந்தைக்கு தெரிந்தது எல்லாம்,

அவனது ' அப்பா '.

அவர்மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை

மட்டுமே.

தர்மா....!

நீ இறைவனை சரணடைவது என்றால்,

அதன் அர்த்தம்,

இந்த குழந்தையை போல ஒரு முழுமையான

 மன நம்பிக்கையை அடைவது.

இயற்கை உன்னை எங்கு அழைத்து செல்கிறதோ,

அதை நம்பி

அதன் போக்கிலேயே 

மிக ஓய்வாக அதன் பின்னால் நீ செல்ல வேண்டும்.

அதன் மீது,

உனது வாழ்க்கையின் மீது,

உனது ஆக்கிரமிப்பை வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது.

இயற்கை உன்னை முழுவதும் ஆக்கிரமிக்க

மனப்பூர்வமாக நீ சம்மதிக்க வேண்டும்.

அதுவே சரணாகதி.

                           ***

' புல் தானாகவே வளர்கிறது.'    

No comments:

Post a Comment